Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 20 June 2017

வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA

🌺 *நேற்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்  ( ARGTA for BRTEs )* சார்பில்

✳ *தலைவர்  மா.ராஜ்குமார்*

✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*

✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*

ஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது

✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*

✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*

ஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.

✅  *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம்  கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்

✅ *திண்டுக்கள்       ₹53,500*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*

✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏

🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏

🙏 *STATE & DISTRICT  LEAVEL BEARERS,ARGTA.

அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் பட்டியல்


அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் திங்கட்கிழமை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்துசில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.தமிழகத்தில் மேல்நிலை முதலாமாண்டிற்கும் பொதுத்தேர்வு, இரண்டாண்டுகளுக்கும் சேர்த்து (600 + 600) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி, 1-ம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாமாண்டு வரை பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அடிப்படையில் மாற்றுவது உள்ளிட்ட கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது.

கற்றலின் இனிமையை உறுதி செய்வது, கற்றலை மனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் வைப்பது, புதுமையான கற்றல் - கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர் கையேடுகளையும், மாணவர்களுக்கான செய்முறை கையேடுகளையும் வழங்கிடுவது, இணைய வழி கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவிக்க புதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதுமைப்பள்ளி விருது, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை, நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்குவது, கனவு ஆசிரியர் விருது, ஒரு பகுதி பணியிடங்களை பூர்த்தி செய்திட ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்கள் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்திருப்பது சரியான நடவடிக்கைகள்.இருப்பினும், பள்ளிக்கல்வி - உயர்கல்வி துறையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் அரசு தீர்வு காணவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கொள்கையினால் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டன.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக தனியார்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.தனியார் பள்ளிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையோடு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு மேல் வசூல் செய்வதை கண்காணித்து தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தாய்மொழி பயிற்று மொழியாக தொடர ஊக்குவித்திட வேண்டும்; ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு தேவை; அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும் (அ) அங்கன்வாடி மையங்களை அரசுப்பள்ளிகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் சேருவதை உறுதிப்படுத்திட வேண்டும்.மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்; கல்வித்தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்; வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும். ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட வேண்டும்.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும். மத்திய கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும். இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்ப்பந்தித்து பெற வேண்டும்.மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து அரசுப்பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CRC : PRIMARY & UPPER PRIMARY CRC - REG PROCEEDINGS..

UPPER PRIMARY CRC ON 01.07.2017

PRIMARY CRC ON 24.06.2017

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.

 
 *(அரசாணை எண். 351, நாள்: 19.06.2017)

 *தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்.

28/06/2017 முதல் 1-8 வகுப்புகளுக்கு அடிப்படை அடைவுத்தேர்வு-திமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!!

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் படித்து எழுதி பழக உதவும் வார்த்தைகள். .

நன்றி

ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு இந்த மாதம்மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்(தட்கல் உட்பட) நாளை(புதன்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணான 15–க்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத்தேர்வுக்கும் வருகை புரியவேண்டும்.நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு வருகைபுரியாதோர், நடைபெறவுள்ள துணைத்தேர்வில் அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதுவதோடு, அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் மீண்டும் கண்டிப்பாக எழுத வேண்டும்.

செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குதேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே வருகிற 22–ந் தேதி மற்றும் 23–ந் தேதி செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.எனவே, இத்தேர்வர்கள் விவரம் பெற தங்களுக்கு உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரை மேற்படி நாட்களில் அணுகி கொள்ளலாம். ஹால் டிக்கெட் இன்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..


2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்

ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்

ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்

ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்

ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்

ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்

ஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்

ஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்

M.Phil Admission ( Part Time ) Notification | 2017 - 18

63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு !!

பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு உட்பட, 63 பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. வகுப்பு செயல்திட்டம், நடைமுறைகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட 
முதன்மை கல்வி அலுவலர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ளும் போது, அனைத்து பதிவேடுகளையும் பார்வையிடுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டார்.இதன்படி, பள்ளி விபர பதிவேடு, ஆசிரியர்- மாணவர் வருகை, தலைமையாசிரியர்கள் கூட்ட விபர பதிவேடு, அன்னையர் குழு, கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மை குழு உட்பட, 63 பதிவேடுகள் முறையாக பின்பற்றவும், மன்ற செயல்பாடுகள் நடந்த பின், அறிக்கை எழுதவும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

How to Send Noon Meal Sms? - Regarding Proceedings

கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?

பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரியர்களின் விடுமுறைபற்றி விளக்கம் தர வேண்டும் என ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும், விடுமுறை எப்போது ஆரம்பிக்கும்? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு மே மாதம் 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், மே மாதம் 7, 8, 9, 10, 11, 21 ,22, 24, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால், அதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? அப்படி கலந்து கொண்டால் ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறை என்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தலைமை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!