Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 27 June 2017

புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017

அன்பு நிறை ஆசிரியத் தோழமைகளே…
கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.

இந்த ஆண்டிற்கான ‘ஆசிரியர் விருது’ குறித்த அறிவிப்பு, இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில் வெளியாகியுள்ளது. திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் மகிழ்வோடு விண்ணப்பிக்கலாம்…

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2017.

முழுவிவரங்கள் இந்தவார கல்வி இதழில்…

(விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறும். இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஒளிபரப்பாகும்…)

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: 
கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

20 ஆண்டாக சுற்றுச்சூழல் கல்வியை போதித்து வரும் பள்ளி தலைமை ஆசிரியைக்கு ‘கர்மவீரர் காமராஜர்’ விருது


இருபது ஆண்டுகளாக மாணவர் களுக்கு கல்வியுடன் கூடவே சுற்றுச் சூழலையும் போதித்து வருகிறார் பள்ளி தலைமை ஆசிரியையான கண்ணகி பிரபாகரன். 
இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர் வைப் பெற்றுள்ளனர். சுற்றுச்சூழ லைப் பாதுகாக்க இவர் மேற் கொண்டுவரும் அயராத பணியைப் பாராட்டி தமிழக அரசு இந்த ஆண்டுக்கான கர்மவீரர் காமராஜர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.சென்னை, தி.நகரில் உள்ள  ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாடல் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வரும் கண்ணகி பிரபாகரன், கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தான் ஆற்றிவரும் பணிகள் குறித்த அனுபவங்களைப் பற்றி  கூறியதாவது:‘‘நான் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தேன். இந்தியாவின் அரிசிக் கிண்ணம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த தால் இளம்வயதிலேயே அதி காலையில் எழுவது, வீட்டை சுத்த மாகப் பராமரிப்பது, இயற்கை வழிபாடு, மரங்களை வளர்த்தல் உள்ளிட்டவற்றை எனது பெற்றோ ரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் விலங்கியல் பாடத் தைத் தேர்வு செய்தேன். அப் போதே இயற்கைமீது இருந்த ஆர்வம் காரணமாக முதன்மைப் பாடமாக தாவரவியலைத் தேர்வு செய்து படித்தேன். பின்னர் அண் ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் கல்விப் பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.1988-ம் ஆண்டு பள்ளியில் உயிரியல் பாடப் பிரிவு ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன்.அப்போதே மாணவர்கள் மன தில் சுற்றுச்சூழல் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானித்தேன். இதன்மூலம், அவர்கள் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த முடியும் என நம்பினேன். இதற்காக, பள்ளியில் 2000-ம் ஆண்டில் ‘ஈகோ கிளப்’ ஒன் றைத் தொடங்கினேன். அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான், சுற்றுச்சூழல் குறித்து பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன்.

இதன் மூலம், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். குறிப்பாக, குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகி றேன். இதற்காக பல்வேறு அமைப்பு கள் எனக்கு விருது வழங்கியுள்ளன.தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் அறிவியல் சங்க கூட்டமைப்பு, சி.பி.ராமசாமி சுற்றுச்சூழல் கல்வி மையம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளு டன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். மேலும், தமிழக அரசு தயாரித்த சுற்றுச்சூழல் கல்வி குறித்த புத்த கத்தின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளேன்.தற்போது நான் திடக்கழிவு மேலாண்மையைப் பயன்படுத்தி எனது பள்ளியில் மாடித் தோட்டம், மூலிகைத் தோட்டம் மற்றும் சமை யலறைத் தோட்டம் ஆகியவற்றை அமைத்து செடிகளை வளர்த்து வருகிறேன்.

இதற்காக, ‘சுற்றுச் சூழல் போராளிகள்’ என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலம் இந்தத் தோட்டங்களைப் பராமரித்து வருகிறேன்.கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச் சூழல் குறித்து தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருவதைப் பாராட்டி தமிழக அரசின் சுற்றுச் சூழல் துறை இந்த ஆண்டுக்கான கர்மவீரர் காமராஜர் விருது வழங்கி யுள்ளது.இந்த விருது கிடைத்திருப் பதன் மூலம் சுற்றுச்சூழல் குறித்து மேலும் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி   2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்    தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி...   ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? - சென்னை உயர்நீதிமன்றம்...  2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்   பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? - சென்னை உயர்நீதிமன்றம்...    அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது- நீதிபதி கிருபாகரன்

NEET - MBBS Reservation 85% G.O


குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..

FLASH NEWS:-
 
குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..

TRB PG EXAM | 02.07.2017 - CHIEF- ADL CHIEF - DEPT - ADL - DEPT DUTY ORDER MEETING - 28.07.2017

மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு

சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்காக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தலைவராகவும், அவரால் நியமனம் செய்யப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலரை செயலராகவும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய இருவரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்க வேண்டும்.

சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்க, குறைந்தபட்சம் ஐந்து காரணங்களுடன், எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காத வகையில், மாவட்டத்துக்கு, மூன்று பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பட்டியலை ஜூலை 5ம், தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த பள்ளிகளுக்கான தரக்குறியீடுகளின் மொத்த மதிப்பெண்ணான, 100ல் 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பீடு பெற்ற பள்ளிகளையே, ஆய்வுக்குழுவினர் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். 

மேலும், ஆய்வுக்குழுவினர் ஒரு நாளில், இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை பார்வையிட்டு, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 

2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் 

அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று

 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில்

 (www.tndalu.ac.in) வெளியிடப்படுகிறது.

இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் 

சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார் 

தெரிவித்தார்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை


சென்னை காவல்துறை அதிகாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும், இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன. 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால், இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

பெற்றோருக்கு வேலைவாய்ப்பு

இப்படிப்பட்ட நிலையில், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுபற்றி அவர் ‘ கூறியதாவது:சென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்புஇருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது. இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது. எனவே, அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன். கல்விமூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம்.

30 மாணவருக்கு ஒரு போலீஸ்:

அதில், அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம். அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம். நோட்டு, புத்தகம், பேக், எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம். மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த, அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும்என்றார்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!