Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 29 June 2017

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
 
 அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.

முக்கியக் குறிப்பு:
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.

 இணையதளம்:
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தம்:
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.

 சரிபார்ப்பு:
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

செயற்கைக்கோள் வடிவமைத்து சாதனை படைத்த கரூர் மாணவனுக்கும், அவனது குழுவுக்கும் ரூ.10 லட்சம் ஊக்கப்பரிசு தமிழக முதல்வர் அறிவிப்பு...

ஜூலை மாத பள்ளி நாட்காட்டி

PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 

இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8-ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - அதிகாரி தகவல்

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறுகையில், “1, 6,9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிறஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்” என்றார்.

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?

சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.

தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்.

தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம். ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

M.Phil Admission Notification Part Time /Full Time Periyar University  Programe 2017 - 18

Periyar university Admission Notification for M.phil Programe 2017 - 18


CPS - MISSING CREDIT UPDATION & SETTLEMENT OF CPS FINAL SETTLEMENT CLAIMS WITHOUT ANY DELAY - REGARDING CIRCULAR...


தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?
அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.
சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன.
அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி
ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம்.
அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.
இவ்வாறு விவாதம்
நடந்தது.

7th Pay Commission - ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு ஏற்றது...

புதுடெல்லி - மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் பெரும்பாலும் படிகள் தொடர்பானவையாகும். அறிக்கையின் ஏற்பு சுமார் 48 இலட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மையளிக்கும் என்று கூறப்படுகிறது.உயர்த்தப்பட்டுள்ள படிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ30,748 கோடிகள் செலவாகும். படிகளின் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் கூடுதலாக ரூ. 1,448 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

DEE - அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் சார்ந்து - செயல்முறைகள்!


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!