Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 4 July 2017

தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டம் மாறுகிறது: 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் ரேங்க் முறை ரத்து என தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவினர் விவரம்:

குழுவில், முனைவர் ஆர்.ராமானுஜம், பேராசிரியர், கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை, முனைவர் ஈ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முனைவர்.கு.ராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, சு.தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆய்வாளர், பெங்களூரு, முனைவர் சுல்தான் அஹமது இஸ்மாயில், முன்னாள் துறைத் தலைவர், உயிர் தொழில்நுட்பவியல் துறை, புதுக் கல்லூரி, முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர், சென்னை, கலாவிஜயகுமார், கல்வியாளர், சென்னை,டிராட்ஸ்கி - மருது, ஓவியர் அகியோர் உறுப்பினர்களாகவும்.சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாணை விவரம்:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:"கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்காக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.தரமான கல்வி என்னும் இலக்கு நோக்கி உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதாலும், தொழிற்கல்விப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லவும், ஏற்ற வேலைவாய்ப்பினைப் பெறவும், வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் / கணினிப் பாடத்தை அறிவியல் பாடத்திடன் இணைத்துக் கற்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தங்களைப் புதிதாக உருவாக்கவும் அவ்வாறு உருவாக்கும்போது கற்றல், படைப்பின் பாதையில் இனிமையாக அமையவும் தமிழர்தம் தொன்மை, வரலாறு பண்பாடு மற்றும் கலை இலக்கிய உணர்வுடன் அறிவுத் தேடலுக்கு வழிவகுப்பதாக புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அமையவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்துக: ஸ்டாலின்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால். எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்; இரண்டாம் தாள் எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வுசெய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்' தேர்வு அறிமுகமான போது 7.14 லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன் துணை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62 லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில், தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

NEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

"NO NEET EXEMPTION FOR TAMILNADU - SUPREME COURT"

'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  முருகவேல் என்பவர், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு கடினமாக இருந்தது., எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக்கூறியுள்ளது.

நோட்டீஸ்:

இதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது

பள்ளிக்கல்வி - கல்வித்துறை கலைத்திட்டத்தை மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு

அரசாணை எண் 147 நாள்:30/6/17-கல்வித்துறை கலைத்திட்டத்தை மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு!!

 

வைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவன் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ!

"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"

‘என் மகன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ஆனால், தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியல' இப்படிக் கூறும் பெற்றோரைச் நாம் பார்த்திருப்போம். எட்டு வருடங்கள் படித்தும் தாய்மொழியான தமிழில் படிக்கவும் எழுதவும் முடியவில்லை என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துவதான் இல்லையா? சமீபத்தில், அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருதுவின் எழுதும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர நம்மைச் சூழந்துகொள்கின்றன. அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமா? பள்ளி நோட்புக்கில் மூன்று கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.


1. பசு எங்கு மேய்ந்தது?

2. கன்றுக்குட்டி என்னவெல்லாம் செய்தது?

3. பசு, கன்றுக்குட்டியிடம் எவ்வாறு அன்பு காட்டியது?

இவைதாம் அந்தக் கேள்விகள். இதற்கான பதிலை, ஓர் இடத்திலும் தவறு இல்லாமல் எழுதுகிறார் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருது. அதுவும் வார்த்தைகளை ராகம்போட்டுக்கொண்டு படிப்பது கொள்ளை அழகு. எந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் எனத் தேடினோம்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், பாதிரி எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மாணவர்தான் அவர். அப்பள்ளியின் ஆசிரியர் கணபதியிடம் பேசினோம்.

கணபதி“பெரியமருது மட்டுமல்ல, எங்கள் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் வகுப்புப் படிக்கும் அனைத்து மாணவர்களும் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் செய்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி எல்லாம் படித்தவர்கள் அல்ல. நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள்தாம். இதற்குக் காரணம், இருவர்தாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒலக்கூர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற வகுப்பில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை கனகலெட்சுமி என்பவர் புதிய முறையில் தமிழைக் கற்பிக்கப் பயிற்சி அளித்தார்.


‘தொல்காப்பியரின் சொற்பிப்பு’ என்று அதற்கான பெயரைக் கூறினார். அவர்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணம். அடுத்தது, அந்தப் பயிற்சியை வகுப்பில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள். நீங்கள் பார்த்த பெரியமருதுவின் ஆசிரியர் கிறைஷ்டியன் நிஷா. அவர், வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே சிறப்பான பயிற்சி அளித்துவருகிறார். வழக்கமாகக் கற்பிப்பதை விட, தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை எளிமையானதாக இருக்கிறது. மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியவும் உதவுகிறது" என்கிறார் கணபதி.


'தொல்காப்பியரின் சொற்பிப்பு' முறை என்றால் என்னவென்ற கேள்வி எழுந்ததும் பயிற்சி அளித்த ஆசிரியை கனகலெட்சுமியிடமே கேட்டோம். இவர் சென்னை, ஷெனாய் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்.

“தமிழைத் தமிழாகக் கற்பிப்பதுதான் தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை. உதாரணமாக, 'அ' எனும் எழுத்தை எழுதவதற்கு கனக லெட்சுமிமாணவர்களிடம் இப்படிக் கூற வேண்டும். முதலில், சுழியை எழுதிகொள்ளுங்கள். பின் கீழ்ப் பிறை, அடுத்து, படுக்கைக் கீற்று, இறுதியாக மேலிருந்து இறங்கும் கீற்று எழுதினால் 'அ' எழுதிவிடலாம். இப்படிச் சொன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புரியுமா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. முட்டைப் போடு, பக்கத்துல கோடு போடு, குறுக்குக் கோடு போடு என்றால் பிள்ளைகளுக்குப் புரியும் என்றால் அவற்றையே திருத்தமாகச் சொன்னாலும் புரியும். இதை ஒரு தொடர்ப்பயிற்சியாகச் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளதால் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். சின்ன வயது பிள்ளைகளுக்கு மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில், இந்த முறை பயிற்சி நிச்சயம் பலன் அளிக்கும். அதற்கு நல்ல உதாரணம் பெரிய மருது எழுதியதைப் பார்க்கிறீர்கள்.


பதினேழு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஒரு கையேடு தந்திருந்தார்கள். அதில் கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி முறைதான் இது. (நன்னூல் விருச்சிகத்தில் இது உள்ளது.) அந்தப் பயிற்சியை இன்னும் எளிமையாக்கி, மாணவர்களிடையே கொண்டுசேர்க்கிறேன். ஒலக்கூர் ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததன் பலன் இப்போது நன்றாகத் தெரிகிறது. தொடக்க வகுப்புகளிலேயே மொழியைச் சரியாகக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவும்." எனக் கூறும் கனகலெட்சுமியின் குரல்களில் வழிகிறது நம்பிக்கை.

"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"

Children's Science Academy Award Directer proceeding


திருப்பூர் பாண்டியன்நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் தொடுதிரை கணினி அறை திறப்பு விழா

திருப்பூர் *பாண்டியன்நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில்*  (29.6.17) காலை 11 மணியளவில் *குளிரூட்டும் பெட்டியுடன்* கூடிய *தொடுதிரை கணினி  (SSS திட்டத்தில் வாங்கப்பெற்றது )*  மற்றும் *கணினி அறையை* திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு *கு.பெ.கனகமணி* அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் பின் *தலைமை ஆசிரியர் திரு.ஜோசப்* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு *கு.பெ.கனகமணி* அவர்கள் பாராட்டினார்.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் *திரு.விஸ்வநாதன்* அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பின் தொடுதிரை கணினி, AC ஆகியவை வாங்க *நன்கொடை செய்தவர்களை* மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களால் கெளரவிக்கப்பட்டது.

பின் பள்ளி *ஆசிரியர் திரு.லிவிங்ஸ்டன்* அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

RMSA - Inservice Training 5 Days Schedule for Graduate Teachers

RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - மாவட்ட அளவில் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான RMSA திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 03.07.2017)

RMSA ஐந்து நாள் பயிற்சி - பாட வாரியாக அட்டவணை வெளியீடு..

பள்ளிக்கு உள்ளேயும், வெளியிலும் ஏராளமான மாற்றங்கள்: ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற கஞ்சனூர் நடுநிலைப்பள்ளி!!

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் சுவரில்கூட கல்வி தொடர்பான ஓவியங்களுடன் காணப்படும் வகுப்பறை.

 சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் கல்வி என்பது மிகச் சிறந்த ஆயுதம். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், கஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேருந்து வசதிகூட இல்லாத மலைக்குன்றுகள் கொண்ட குக்கிராமம் கஞ்சனூர். இங்கு வசிக்கும் அருந்ததி இன மக்களின் வாழ்வாதாரம் உயர 1963-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.

வறுமை காரணமாக குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர், குறிப்பிட்ட வயது வந்த வுடன் பெண் குழந்தைகளை திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல் படும் நூற்பாலைகளுக்கும், ஆண் குழந்தைகளை செங்கல் சூளை களுக்கும் வேலைக்கு அனுப்பினர். குத்தகை அடிப்படையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு தோட்ட வேலைக்கும் குழந்தைகளை அனுப்பிவைத்தனர். பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவு நேரத்தில் மட்டும் கிழிந்த ஆடை களுடன் மாணவர்கள் கையில் தட்டை வைத்துக்கொண்டு, குச்சியால் தட்டிக் கொண்டு வருவார்கள். சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த தொடக்கப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள பலரும் தயக்கம் காட்டினர். இதெல்லாம் நடந்தது 9 ஆண்டுகளுக்கு முன்பு.

ஆனால் இன்று.. அந்த பள்ளிக் கூடம்தான் சமூக மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதாரணமாக விளங்கு கிறது. ஐஎஸ்ஓ தரச்சான்றுடன் பல்வேறு விருதுகளைப் பெற்ற நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந் துள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு ஊர் பொதுமக்கள், பெற்றோர், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள், முன்னாள் மாண வர்கள், இளைஞர்களின் கூட்டு முயற்சியே முக்கிய காரணம். தவிர, இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்த சாதனையின் பின்னணியில் இருப்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.வீரமணி.


கிருஷ்ணகிரி மாவட்டம், கஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பரந்து விரிந்த வளாகம்.

கஞ்சனூர் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 2007 ஜூலை மாதம் தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றார் வீரமணி. அப்போது பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 28 மட்டுமே. இடைநிற்றல், நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. கிராம மக்களும், தலைமை ஆசிரியரும் இணைந்து மாலை, இரவு நேரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தினர். பள்ளியின் வளர்ச்சி, சமூக மாற்றத் துக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்தனர்.

முதல்கட்டமாக பள்ளிக்கான புதிய அமைவிட சூழல் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் மலையடிவாரத்தில் பள்ளிக்கான புதிய கட்டிடம் கடந்த 2008-09ல் கட்டப்பட்டது. எஸ்எஸ்ஏ திட்டம் மூலம் பள்ளிக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திய பிறகு, மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரிக்கத் தொடங்கியது. சுற்றுவட்டார கிராம மக்களும் கஞ்சனூர் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டத் தொடங்கினர். ‘எஸ்எஸ்ஏ கல்வி நகர்’ என்ற பெயரில் புதிய நகர் உருவானது.

தற்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட பள்ளியின் வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் வீரமணி கூறியதாவது:

பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இப்போது மாணவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 மாண வர்கள் கயிற்றுக்காரன் கொட்டாய், படப்பள்ளி, புதுகாடு, ராசிகாடு, குரும்பர்தெரு, கூராக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வருகின்றனர். பேருந்து வசதி இல்லாததால் பெற்றோர் ஒன்றிணைந்து அவர்களாகவே தனியாக வேன் வசதி ஏற்படுத்தி, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையும் வண்ணமயமான தோற்றத்துடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நூலகம், கணினி, யோகா, தொலைக்காட்சி, எல்சிடி அரங்கு, கேரம், சதுரங்கம், புத்தகப் பூங்கொத்து அரங்குகள் போன்றவை செயல்பாட்டில் உள்ளன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார மான கழிவறைகள், சோலார் சிஸ்டம் மூலம் மின்வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மூலிகை தோட்டம் போன்ற வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒவ்வொரு மாணவரது பெயரைச் சூட்டி, அவரவர் தங்கள் மரக்கன்றுகளைப் பராமரித்து வளர்க்க, ஊக்கமளித்து பரிசுகள் வழங்கி வருகிறோம்.

இப்பள்ளியில் 2013-14 முதல் ஆங்கில வழிக் கல்வி பிரிவு தொடங்கப்பட்டது. தொடக்கப் பள்ளி 2015-16ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராம மக்கள், பெற்றோர், இளைஞர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சந்தோஷ், கவுரி, கலையரசி, உதவி ஆசிரியர்கள் லட்சுமி, கார்த்திக் ஆகியோரது அக்கறையும், ஆர்வமும்தான் பள்ளி, மாணவர்களின் வளர்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்

மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, யுனிசெப் தங்கப்பதக்கம், முன்னு தாரணப் பள்ளி, பசுமைப் பள்ளி உட்பட 6 விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது. 2014-15ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ், கல்வித் தரத்தில் ‘ஏ’ கிரேடு, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு, 2015-16ல் காமராஜர் விருது என இந்தப் பள்ளிக்கு பல விருதுகள், பரிசுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. 2016-17ல் குழந்தை நேயப் பள்ளியாக இப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


விசாலமான வகுப்பறையில் கணினி கல்வி பயிலும் மாணவர்கள்.

முதல் தலைமுறையினர்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை யிலும், இவ்வூரில் இருந்து ஒரு மாணவர்கூட கல்லூரிக்குச் சென்ற தில்லை. அரசுப் பணியிலும் யாரும் இல்லை. இந்நிலையில் இப்பள்ளி சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப் புணர்வு தொடர் நடவடிக்கைகளால், இடைநின்றவர்கள் நேரடியாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள் ளனர். பலர் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். எம்பிஏ போன்ற தொழில்சார் படிப்புகளையும் தற்போது இந்த ஊர் மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்த கிராமத்தினர் முதல் தலைமுறை பட்டதாரிகளைப் பார்க்கின்றனர்.

இதற்கிடையே, இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் விரும்புகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த கிராம மக்கள், ‘‘8-ம் வகுப்புக்கு பிறகு 9, 10 வகுப்புகளுக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள கல்லாவி அல்லது கெரிகேப்பள்ளி, 12 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்தங்கரைக்குச் செல்லவேண்டி உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்’’ என்றனர்.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94430 57376.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!