Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 12 July 2017

TPF / GPF ACCOUNT SLIP 2016-17


 TPF ACCOUNT SLIP 2016-17 PUBLISHED | CLICK HERE TO DOWNLOAD

தொடக்கக்கல்வி - பள்ளிக்கல்வி மூலம் நடத்தப்படும் மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் இனி உயர் தொடக்கக்கல்வி மாணவர்களும் பங்கேற்கலாம் - இயக்குனர் செயல்முறைகள்

பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
உடனடி பணப்பரிமாற்ற சேவை எனப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத் துவக்கத்தில், வங்கிப் பணியில் தனது 62வது ஆண்டினை நிறைவு செய்திருக்கும் எஸ்பிஐ, ரூ.1000 வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.

அதே சமயம், ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரிக்கு அப்பாற்பட்டது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்பிஎஸ் முறையில் 24X7 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே சமயம், பணப்பரிமாற்றத்துக்கான கோரிக்கை செல்போன் அல்லது இணையதளம் மூலமாக வைக்கப்பட்டதுமே, உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம் - தினமணி தலையங்கம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்துத் தரப்பினரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் என்பது பழைய செய்தி.

கல்வியாளர்களின் சமூகச் செயற்பாட்டாளர்களின் பன்னெடுங்கால விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கி பள்ளிக் கல்வித்துறை இம்மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.

இம்மாற்றங்களை எதிர்கொள்வதிலும் அதற்குத்தக வினையாற்றுவதிலும் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது.

"தனி மரம் தோப்பாகாது' என்பார்கள். நெடுங்கால வடிவத்தில், பாடத்திட்டத்தில், செயல்முறையில் பழக்கப்பட்டுவிட்ட ஓர் அமைப்பில் புதிய மாற்றங்கள் என்பது கடுமையான முயற்சியாகவே அமையும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. கல்வித்துறை இதற்கு ரத்தமும் சதையுமான எடுத்துக்காட்டு.

"சிஸ்டம் சரியில்லை' என்ற விமர்சனமே புதிய சோதனை முயற்சிகளை எதிர்த்துத் தள்ளி விடுகிறது. எனவேதான் துடிப்போடு கல்விச்சாலைகளில் அடியெடுத்து வைக்கும் இளம் ஆசிரியர்கள், தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்படுவதும், பிறகு அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கிச் சிதைந்து, அமைப்பின் வடிவத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு விதிவிலக்குகள் இல்லாமலில்லை.

பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களிலும் துடிப்போடு, அயராது பரிசோதனை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது வரலாறு புரண்டு படுத்திருக்கிறது. கல்வித்துறை அமைப்பே பல புதிய மாற்றங்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகிறார்கள் என்பது ஆர்வமூட்டும் வினாவாக உள்ளது. இவ்வினாவுக்கான தேடுதலில் விடைகாணும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

பள்ளிக் கல்வித்துறை இடைநிலை கற்றல், பயிற்சி முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடத்தியது. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கும் திட்டம் அது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி முகாம்களில் கல்வியாளர்கள், சமூக நோக்கர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு உரையாடவும் உறவாடவும் ஒரு வாய்ப்பைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தியிருந்தது.

திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழாசிரியர்களுக்கான முகாமிலும் நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான முகாமிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு வேறுபட்ட கருத்தியல் மனோபாவம் சார்ந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது, பள்ளிக்கல்வியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விசாலமாகியது.

தமிழர் கலை வரலாறு குறித்துத் தமிழாசிரியர்கள் மத்தியிலும் போலி அறிவியலும் நம்பிக்கையும் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாடியபோது அவர்கள் காட்டிய உற்சாகம் கருத்துரைக்கும் நம்மையும் தொற்றியது.

குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்கள் எழுப்பிய வினாக்கள் வழியாக வெளிப்பட்டது.

புதியனவற்றை அறியும் தேடலும் அதைத் தங்களது வகுப்பறைகளில் சோதித்துப் பார்க்கும் ஆர்வமும் மிகுந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகிழ்வளித்தது. இளம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களும் உற்சாகத்தோடு இருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்கும் மாற்றங்கள் குறித்த பெருமிதம் அவர்களில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

தனியார் பள்ளிகளுக்குச் சவால்விட தங்களால் முடியும் என்றும் இனி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு திரும்பும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடனான தனிப்பட்ட உரையாடலில் வெளிப்பட்டது.

தமிழகமெங்கும் இப்பயிற்சி முகாம்களில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்ட பல எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் உற்சாகமாக இந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டனர். "கல்வித்துறையின் உத்தரவால் கட்டாயம் உட்கார வேண்டியதாகிவிட்டது' என்ற கசப்பான உணர்வு அங்கு வெளிப்படவில்லை.

உரையாடலுக்குப் பிறகும் அரங்கினுள்ளும் அரங்கிற்கு வெளியிலும் கருத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு கலைய மனமின்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் முகங்கள், எதிர்காலக் கல்விக் கனவைத் தேக்கி வைத்திருந்தன.

அமைப்பே கெட்டிதட்டிப் போய் இருக்கிறது என்ற பன்னெடுங்காலக் கருத்து சிதைவுற்று அமைப்பே நெகிழ்வுத் தன்மையோடு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்கிறது என்பதை ஆசிரியர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளனர்.

அமைப்பின் அழுத்தத்தால் வீழ்த்தப்பட்டுச் சோர்வுற்றிருந்தாலும் மனசாட்சியின்படி சிறு சிறு ஆக்க முயற்சிகளைச் செய்துவந்த ஆசிரியர்கள் புது உற்சாகத்தோடு வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் இதுபோன்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியினைப் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும்.

கல்விசார் பரிசோதனை முயற்சிகளின் படிப்பினைகளை எடைபோட்டுப் பார்க்கும் இடமாகவும் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அம்முயற்சிகளை முன்னெடுத்துப் போகும் மேடையாகவும் இப்பயிற்சி முகாம்கள் வடிவெடுக்க வேண்டும்

JACTO-GEO குழுவில் மேற்கொண்ட முடிவுகள் - பத்திரிக்கை அறிக்கை வெளியீடு

அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

மாணவர்களையும் இளைஞர்களையும் கனவு காணச் சொல்லி, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக்க நினைத்தவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரின் ஊக்கமூட்டும் வார்த்தைகளால், பொது விஷயங்களில் அக்கறையுடன் களமாடி வருகிறவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், தனபால். அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றையே ஆவணப்படமாக்கி, இரண்டரை லட்சம் மாணவர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்த எல்லோருமே மாணவர்கள் என்பது மற்றொரு சிறப்பு.


கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர், தனபால். தனது ஆவணப்படத்தில், அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தது, படிக்கும்போதே பேப்பர் போடும் வேலைக்குச் சென்றது, கல்லூரி படிப்பு, பைலைட் முயற்சி, விஞ்ஞானி, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தது, இறுதி உரை என எல்லா விஷயங்களையும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கி இருக்கிறார். இடையிடையே அப்துல் கலாம் உரைகள், பொன்மொழிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஆவணப்படத்தை எடுக்க ஒரு லட்சம் ஆகியிருக்கிறது. எல்லாமே இவரது சொந்தச் செலவு என்பது குறிப்பிடத்தக்கது. "அறிவியல் ரீதியாக, ஆற்றல் ரீதியாக, அக்கறை ரீதியாக என எப்படிப் பார்த்தாலும் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த அற்புத பொக்கிஷம், அப்துல் கலாம். அவரின் கனவுகள், லட்சியங்களைச் செயல்படுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியும். அவர் வழியே மாணவர்களிடம் ஓர் உந்துதல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது தோன்றியதுதான் ஆவணப்படம் எண்ணம். அதை எடுத்து, எல்லாப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இலவசமா கொடுக்க முடிவுசெய்தேன். அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், உரைகள், பொன்மொழிகளைச் சேகரித்தேன். என் பள்ளி மாணவர்கள் 250 பேரை நடிக்கவைத்து, இரண்டாயிரம் சி.டி-க்கள் எடுத்தேன். தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறேன். டெல்லியில் நடந்த நேஷனல் சயின்ஸ் கான்பிரன்ஸ் மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சில இடங்களுக்கும் அனுப்பினேன். இதுவரை இரண்டரை லட்சம் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அதில், இரண்டு லட்சம் பேர் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்'' என்று பூரிப்புடன் தொடர்கிறார் தனபால்.

''தங்கள் பள்ளி மாணவர்களை ஆவணப்படத்தைப் பார்க்கவைக்கும் ஆசிரியர்கள், அதுகுறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு, கடிதமாக அனுப்புகிறார்கள். மாணவர்களில் பலரும் நேரடியாக, 'இந்தப் படத்தைப் பார்த்ததும் எங்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கு. அப்துல் கலாம் அய்யா கனவை நனவாக்கும் முயற்சியில் எங்களால் முடிந்ததைச் செய்வோம்' எனச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில், ஈரோடு செங்குந்தர் கல்லூரியில் நடந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் இந்த ஆவணப்பட சி.டியைக் கொடுத்தேன். அப்போது, அங்கே வந்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் உதயச்சந்திரன், 'இது நல்ல முயற்சி. இதில் உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொடர்புகொள்ளுங்கள்' எனச் சொல்லி, படத்தின் பிரதியை வாங்கிச் சென்றார். இந்தப் படத்தை குறைந்தது ஒரு கோடி மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது என் லட்சியம்'' என்கிறார் தனபால்.

ஆசிரியர் பயிலரங்கம், தனிப்பட்ட பயணங்கள் எனச் செல்லும் இடங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இந்த ஆவணப்படத்தைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தியா முழுவதும் இந்த ஆவணப்படத்தைப் பரவலாக்க இது தமிழில் இருப்பது தடையா இருக்கிறது என நினைக்கும் தனபால், அடுத்த முயற்சியிலும் இறங்குகிறார்.

''இன்னும் ஒரு ஐயாயிரம் சி.டிக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாம்ன்னு இருக்கேன். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதற்கான அத்தனை திட்டங்களையும் அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றினாலே போதும். அதற்கு மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான சிறு தூண்டுதலாக இந்த ஆவணப்படம் இருக்கு

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பு

செயல்பாடுகள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!


தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்..

NGC / ECO CLUBS ANNUAL PLAN 2017 - 18

தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்..


SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

Science Festival - 2017

Scientific awareness program for students...


ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவிப்பு

ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளின் முதல் கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை, மாநில கல்லுாரி வளாகத்தில், நேற்று பிற்பகலில் நடந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 63 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முடிவுகள் குறித்து, கூட்டமைப்பு செயலர் கணேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக வரும், 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தாவிட்டால், ஆக., 5ல், சென்னையில் கோட்டையை நோக்கி, மிகப்பெரிய பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு, எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும். காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்

தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்களாக, 2,500 பேர் பணிபுரிகின்றனர். மேலும், 5,166 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,188 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 19ல், போட்டித் தேர்வு நடக்க உள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நிபந்தனைகளால், சிறப்பாசிரியர் தேர்வை, இளம் பட்டதாரிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலசங்கத்தின் மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 5,000 கலை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும். சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது.

ஆனால், போட்டி தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதியான, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பு, 2007 முதல் நடத்தப்படவில்லை.எனவே, இளம் தலைமுறை மாணவர்கள், தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை முடிக்காததால், போட்டி தேர்வில் பங்கேற்று, அரசு பணியில் சேர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இளம் தலைமுறை பட்டதாரிகள், சிறப்பாசிரியர்களாக அதிகம் இடம் பெற்றால், கற்பித்தலிலும், தரத்திலும் மாற்றம் வரும். எனவே, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, தாமதமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் 

கூறினார்.

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும் வரலாற்றை நாங்கள் மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் மிக நம்பிக்கையாக உணர்கிறோம். அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ- வை நோக்கி திரும்பி இருக்கிறது.

அரசு இதையும் அலட்சியம் காட்டினால் தமிழ்நாட்டின் அரசு அலுவல்கள் ஒட்டுமொத்தமாய் முடங்கிப்போய் தமிழ்நாடே அல்லோலகல்லோலப் படவிருக்கிறது இதுவெல்லாம் ஜாக்டோ ஜியோ- வின் கடந்த கால சாதனைகளை வைத்து நிச்சயம் நடக்கும் என நம்பலாம். இம்மாபெரும் அமைப்பான ஜாக்டோ ஜியோ முத்தாய்ப்பான மூன்று கோரிக்கைகளை முன் வைக்கிறது

1) பழைய பென்ஷனை அமல்படுத்த வேண்டும்

2) உடனடியாக ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது

( தமிழ்கத்தில் எட்டாவது)

3) 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளாக கருதி இம்மூன்று கோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து முன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்பு கோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை  ஜாக்டோ ஜியோவிற்கு ஆசிரியர்கள் சார்பாக வைக்கிறோம்.

இன்னுமொரு கோரிக்கையை மிக  சங்கடத்தோடு  மன்றாடி கெஞ்சி ஜாக்டோ ஜியோவிடம் கேட்கிறோம்.

இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால் தயவுசெய்து

*இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்கும் ஒரே கோரிக்கையான ஊதிய முரண்பாடு கலைதல்* ( 2009 பிறகான இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு) என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

 ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..


*நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் இடைநிலை ஆசிரியர்கள்*

10 ஆயிரம் கழிப்பறைகள் பள்ளிகளில் கட்ட திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

''பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, தில்லை விடங்கன் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படுமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டடங்கள் கட்டப்படும்.

பாண்டியன்: இப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தான் உள்ளன. அவற்றை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். சிதம்பரத்தில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில், கிளை நுாலகம் உள்ளது. அதற்கும், புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நுாலகத்திற்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நிதி ஒதுக்குங்கள். பள்ளிக்கு கட்டடம் கட்டப்படும்.

அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: குன்னம் தொகுதி, முள்ளிகுறிச்சியில், உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதி மாணவ, மாணவியர், மேல்நிலை கல்வி படிக்க, 20 கி.மீ., செல்ல வேண்டி உள்ளது. எனவே, அப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: முள்ளிகுறிச்சி முல்லை மலராகும்.

தி.மு.க., - கிரி: செங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இட நெருக்கடி அதிகமாக உள்ளது. இறை வணக்க கூட்டம் நடத்த இடமில்லை; கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை இல்லாத பள்ளிகள் சில உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நடப்பாண்டு, பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். 

பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில், அமைச்சு பணியாளர்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு நிலைகளில் தரப்படும் பதவி உயர்வு, சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களின் சம்பளம், நியமனம், அதற்கான விதிகளை பின்பற்றுதல், கோப்பு தயாரித்தல், நீதிமன்ற வழக்குகளுக்கு பதில் தயாரித்தல், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளை கவனித்தல், நலத்திட்ட உதவிகள் வினியோக கணக்கு பராமரித்தல் என, பல பணிகளை பார்க்கிறோம். ஆனால், பல மாவட்டங் களில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எங்களை மிரட்டி, அவர்களுக்கு சாதகமாக பணியாற்ற அழுத்தம் தருகின்றனர். இது தொடர்பாக, சில இடங்களில் போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பதவி உயர்வு கோப்புகளை, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுஉள்ளதால், காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து, நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ல், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.

இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். 

பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தொலைநிலையில் பி.இ., படிக்க தடை

'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!