Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 16 July 2017

தமிழகத்தில் ISO அங்கீகாரம் பெற்ற ஒரே அரசுப்பள்ளி கீச்சாம் குப்பம்

தமிழகத்தில் ஐஎஸ்ஓ அங்கீகாரம் பெற்ற ஒரே அரசு பள்ளி நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் அரசு பள்ளியாகும். சுனாமியால் 80 குழந்தைகளை இழந்த பிறகு சோகம் மற்றும் சோதனையில்  இருந்து மீண்டெழுந்துள்ளது. 


கடந்த 2004 டிசம்பர் 24ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் நாகை வட்டம் கீச்சாம்குப்பம் மீனவ கிராமத்தில் 600 ேபர் பலியாயினர். அப்போது கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 80 குழந்தைகள் இறந்தனர். நாகை மாவட்ட சரித்திரத்தில் பெரும் கரும்புள்ளியாக குழந்தைகளின் மரணம் பதிவானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சுனாமியால் சிதலமடைந்த பள்ளி தற்போது பிரம்மாண்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

சுனாமி பேரழிவில் சிக்கிய பின் இப்பள்ளி சால்டு ரோட்டில் உள்ள சேவா பாரதி சுனாமி குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது. 2008ல் பி.டி.ஏ. என்ற தொண்டு நிறுவனம் கீச்சாம்குப்பத்திலேயே ₹65 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தது. ஆனால் ஆறாத வடுவாக மனதில் படிந்துபோன சுனாமி நினைவலைகளால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சினா். 

190 மாணவர்களின் பெற்றோர் மட்டுமே அச்சத்தை தொலைத்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். ஆனாலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ந்து 2013ம் ஆண்டு 92 ஆக சுருங்கியது. இதனால் 11 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு 4 ஆசிரியர் பணியிடங்களை அரசு ரத்து செய்தது. 

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் தலைமை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியருமான பாலு தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி திட்டமிட்டு ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்தினர். அதன்படி ஒரு வகுப்பறையில் எல்.சி.டி. ப்ரொஜக்டர், தொடு திரை, லேப்டாப், ஸ்பீக்கர், இணையதள இணைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்காக வந்த  பெற்றோர்களிடம்  ஸ்மார்ட் கிளாஸ் வசதி பற்றி  கூறி அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தனர்.  

இதனால் மாணவர் சேர்க்கை பல்கி பெருகிறது. தற்போது முன்பருவ மழலையர் முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 448 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து தற்போது ஆசிரியர்கள் எண்ணிக்கையும்  15 ஆனது.  இன்றைக்கு பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பார்த்த  ஐ.எஸ்.ஓ. (9001:2015) நிறுவனம், கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. சான்று வழங்கி கவுரவித்தது. 

இதன் மூலம் தமிழகத்தில் ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்றுள்ள ஒரே அரசு பள்ளி என்ற கவுரவத்ைத ெபற்றது.உடனடியாக பெற்றோர்கள் ஒன்று திரண்டு  2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசை அளிப்பதைப்போன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து  ஒப்படைத்தனர். பள்ளி மாடியில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

30 லட்சம் மதிப்பில் இப்பள்ளியில், அறிவியல் ஆய்வகம், கணிணி ஆய்வகம், டிஜிட்டல் நூலகம், அனைத்து வகுப்புகளிலும் இணையத்தள வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 220 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் நேரில் வந்து பள்ளியை பார்வையிட்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்க கல்வி அலுவலகம் மூலம் காமராஜர் விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இப்பள்ளி தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விருது வழங்கப்பட உள்ளது. 

சுனாமி எச்சரிக்கை அலாரம்
கீச்சாம்குப்பம் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் என்பதால், இப்பள்ளியில் சுனாமி எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மணி ஒலித்தால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியின் மேல் தரைத் தளத்திற்கு சென்று சேர்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

திறமைகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி: அசத்தி வியப்பில் ஆழ்த்தும் மாணவர்கள்


மழலை பேசி மயக்கும் பிஞ்சு குழந்தைகளின் கல்விப்பயணம், துவக்கப்பள்ளிகளில் தான் துவங்குகிறது. துவக்க கல்வி நன்றாக அமைந்து விட்டால், அவர்களது பயணம் சரியான பாதையில் செல்லும்.
மாணவர்களுக்கு துவக்க கல்வியோடு, அவர்களது ஒழுக்கம், திறமைகள் போன்றவற்றை வளர்ப்பதும் ஒரு கடமை தான் என எண்ணி செய்து வருகின்றனர் பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.

பொள்ளாச்சி அருகே போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. முற்றிலும் கிராமப்புறத்தை சேர்ந்த இந்த பள்ளியில், 104 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.தமிழ் வழி கல்வியோடு, ஆங்கில வழி கல்வியும் இப்பள்ளியில் உள்ளது. கல்வியோடு, மாணவர்களது மற்ற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டதால், கூட்டு முயற்சியாக செயல்பட்டு அவர்களது செயல்களை ஊக்குவித்து வருகின்றனர்.தமிழ் இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஓவியம் வரைதலுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுமட்டுமின்றி நாட்டுப்புற கலைகள் என அவர்களது திறமைகளுக்கு உரமிட்டு வருகின்றனர் ஆசிரியர்கள்.கணினி வழிக்கல்வியில் அசத்தும் மாணவர்கள், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

தோட்டக்கலை பயிற்சி:சிறுவயதில் கல்வியோடு, இயற்கை விவசாயம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தோட்டம் அமைக்கப்பட்டு, அதனை பராமரித்து வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள். தோட்டத்தில், மூலிகைச்செடிகளும் அமைத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.இதன் தாக்கமாக, கண்காட்சி போட்டிகளில், 'பல்லடுக்கு பயிர் தோட்டம்' அமைப்பு குறித்து விளக்கும் வகையில், மாதிரி தயாரித்து பரிசுகளையும் வென்று குவித்துள்ளனர்.

களப்பயணம்

ஆண்டுதோறும் மாணவர்களை களப்பயணமாக அழைத்துச் சென்று, வரலாற்று சிறப்புகளை எடுத்து கூறி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இவ்வாறு பல்வேறு பணிகளை செய்து வரும் ஆசிரியர்கள், அவர்களது உடல் ஆரோக்கியத்திற்காக யோகா கலையை சொல்லி கொடுத்து வருகின்றனர்.யோகா..யோகா கலை சிறப்பு ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், நன்றாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சக மாணவர்களுக்கு அதனை ஆசிரியர்கள் உதவியுடன் சொல்லி கொடுத்து அசத்துகின்றனர். வாரந்தோறும் புதன் கிழமையில், தியான வகுப்பு, வெள்ளிக்கிழமைகளில் கூட்டு உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தினசரி பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு முறையான பயிற்சி பெற்ற மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்வதில்லை. பஸ்கிமோத்தாசனம், புஜபீடாசனம், சலபாஷனம், பாதஉட்கட்டஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சர்வசாதாரணமாக செய்து காண்பிக்கின்றனர்.கடந்த மாதம் நடந்த சர்வதேச யோகா தினத்தில், மாணவர்கள் மண்பானை மீது யோகா செய்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இவர்களது யோகா திறமையை கண்ட பலரும் பாராட்டதவறவில்லை.'உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் யோகா கலையை கற்க ஆர்வம் உள்ளது. இந்த கலையை கற்றுக்கொள்ளும் போது, கடினமாக இருந்தாலும், பழக பழக எளிதாக இருந்தது. இது படிப்பிற்கும் மிகுந்த உதவிகரமாக உள்ளது,' என மாணவர்கள் தெரிவித்தனர்.

இசையிலும் ஆர்வம்

பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி கூறியதாவது:யோகா கலை மாணவர்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. யோகா பயிற்சி மாணவர்களிடையே அமைதி, நல்லொழுக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் கூட்டு முயற்சி ஈடுபாடு தான் மாணவர்கள் திறமைகள் வெளிப்படுத்த காரணமாகஅமைந்துள்ளது.மாணவர்கள் யோகா கலை மட்டுமின்றி, நாட்டுப்புற கலைகளையும் நன்றாக பயின்று வருகின்றனர். இசையிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மாணவர்கள் முதல் படியான துவக்க கல்வியிலேயே அவர்களுக்கு கல்வியோடு இதுபோன்ற திறமைகளை வளர்ப்பது அவர்களது உதவிகரமாக இருக்கும் என எண்ணினோம். அதனை ஆசிரியர்கள் உதவியோடு செயல்படுத்தி வருகிறோம்.பள்ளியிலிருந்து செல்லும் மாணவர்கள் அனைத்து திறமைகளோடு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இது சிறு முயற்சிதான். வெற்றி கிட்டும்என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால், தனியார் பள்ளிகளிலிருந்து கூட மாணவர்கள்எங்களது பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டன. அதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 3.66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதத்தை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் அழைப்புக் கடிதத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம்

குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017

பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

 பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017

1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.

குறிப்பாணை தேர்வரால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி இரு நகல்களில் கொண்டுவரவேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (attested) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

2.கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் சுய மேலொப்பம் (Self attested) செய்யப்பட்ட இரண்டு ஒளிநகல்கள் (Photocopy).

i.பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book / Mark Sheet).

ii.PUC / மேல்நிலைக்கல்வி (+2) மதிப்பெண் பட்டியல் / 3 ஆண்டு பட்டயப்படிப்பு (3 years Diploma Course).

iii.இளங்கலைப்பட்டம் (B.A., B.Sc.,/B.Lit.,).

iv.இளங்கலைப்பட்டம் மதிப்பெண் சான்றிதழ்கள் (UG Degree Mark Statement for all semesters) மற்றும் இளங்கலைப்பட்டம் தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Statement).

v.இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் (D.T.Ed.,/D.E.Ed.) (தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்).

vi.கிரேடு / கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஆதாரமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப்பட்டியல்கள் இணைக்கப்படவேண்டும்.

vii.தொழிற்கல்விப் (கல்வியியல்) பட்டம் பி.எட்., / தமிழ்ப்புலவர் பயிற்சி (TPT) / சிறப்புக் கல்வியியல் பட்டம் (Special B.Ed.).

viii.கல்வியியல் பட்டம் / சிறப்புக் கல்வியியல் பட்டம் / தமிழ்ப்புலவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்.

ix.தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் U.G.degree, B.Ed., / Spl B.Ed / D.T.Ed., படிப்பினை தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் (பயின்ற கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து சான்று) பெறப்பட வேண்டும்.

x.இனச்சான்றிதழ் (Community Certificate) (1. நிரந்தர சான்றிதழாக இருத்தல் வேண்டும். 2. திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயரில் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்).

xi.நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate).

xii.மாற்றுத் திறனாளிகள் எனில் உரிய சான்றிதழ் (அரசு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்).

3.அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், இரு ஒளிநகல்கள் படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக்கொண்டுவரவேண்டும்.

4.சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

5.ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது.

6.பணிநாடுநர் குறிப்பிட்ட நேரம் / தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால் அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

7.பணிநாடுநரின் தகுதி (Eligibility) பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.

8.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!