Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 21 July 2017

ஆகஸ்ட் 31க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு.


ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை தயார் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Jio அதிரடி... 4G மொபைல் இலவசமாக வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

Jio அதிரடி...

4G மொபைல் இலவசமாக வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 
 
இதற்காக ஆகஸ்ட் 24க்கு பிறகு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு 1500ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும், அது 3 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்ப தரப்படும் என்றும் கூறியுள்ளார்...

*அறிமுகமானது 4ஜி ஜியோ செல்ஃபோன்.*

*4ஜி ஜியோ போன் 100 கோடி பேருக்கு இலவசம் - முகேஷ் அம்பானி அறிவிப்பு.*

*9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் பங்குகளின் விலை உச்சத்தில் உள்ளது- முகேஷ் அம்பானி.*

*ஜியோ போனுக்கு ஆகஸ்ட் 24 முதல் முன்பதிவு - முகேஷ் அம்பானி.*

*ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் போன் விற்பனைக்கு வரும் - முகேஷ் அம்பானி

TAMIL FLASH CARDS FOR - PRIMARY STUDENTS!!

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்களுக்கு கம்ப்யூட்டர்வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவித்துள்ளார். 
மேலும் தலா ரூ.2 லட்சம் செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து படிப்படியாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:கல்வித் துறையில் இந்தியாவி லேயே தமிழகத்தைமுதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் தமிழக மாணவர் கள் எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் வினா-விடைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரித்து விரைவில் வழங்க உள்ளோம்.தமிழகத்தில் 40 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு அளிக்கப்படும் கல்வித்தரத்துக்கு மேலாக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீருடை மாற்றம், தலா ரூ.2 லட்சம் செலவில் 3 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்குகம்ப்யூட்டர், பள்ளி வளாகத்தில் வை-பை வசதி போன்ற திட்டங் களைச் செயல்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும். மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு இணையாகவும் அதேநேரத்தில் தமிழர்களின் பாரம் பரியம், கலாச்சாரம், பண்பாடு தொன்மை முதலான அம்சங் களுடனும் தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.

மு.அனந்தகிருஷ்ணன்

புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான மு.அனந்த கிருஷ்ணன் பேசும்போது, “இன்னும் 10 ஆண்டுகளில் கல்வித் துறையில் மட்டுமல்லாமல் பொருளாதாரம், சமூகம், அறிவுத் திறன் என அனைத்து துறை களிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களையும் புதிய சவால்களையும் தமிழக மாண வர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக சென்னை, கோவை, திருநெல்வேலியில் கல்வியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற உள்ளோம்” என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி செயற்கைக்கோள் மைய இயக்கு நர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேசும்போது, “மாணவர்கள் தங்கள் பாடப்புத்தங்களையும் தாண்டி படிக்கக்கூடியவகுப் பறைச்சூழல் இருக்க வேண்டும். எதைச் செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற மனோபாவம் மாணவர் களிடம் உருவாக வேண்டும். அப் போதுதான், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உரு வாகும். ஆசிரியர்கள் பாடங்களு டன் கூடுதல் தகவல்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தற்போது வினா-வங்கி கொடுக்கப்பட்டு அதி லிருந்து கேள்விகள் கேட்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதுபோன்ற தேர்வுமுறையை மாற்ற வேண்டும்” என்றார்.

த.உதயச்சந்திரன்

முன்னதாக, பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வரவேற்றார். நிறைவாக மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஜி.அறி வொளி நன்றி கூறினார். கருத்தரங்க தொடக்க விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், செயலாளர் எம்.பழனிச்சாமி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம், ஆர்எம்எஸ்ஏ திட்ட மாநில இயக்குநர் எஸ்.கண்ணப்பன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உட்பட ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

எந்த போட்டித் தேர்வுகளையும் சந்திக்க தமிழக மாணவர்கள் தயார்" - செங்கோட்டையன் அதிரடி பேட்டி....

நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில்  தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 
மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொழில்நுட்ப அடிப்படையில் பாடங்களை மாற்றி அமைத்தல், நீட் போன்ற தேசிய அளவிளான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல், தமிழக வரலாறு, கலாச்சாரம் போன்ற மரபு சார்ந்த அம்சங்களை இடம்பெறச் செய்தல் ஆகியன குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில்  தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இனி ஏ.டி.எம். கார்டுகளில் பின் நம்பர் தேவையில்லை

இனி வரும்காலங்களில் இதற்கு அவசியமிருக்காது.

பணம் எடுப்பதற்காக ஏ டி எம் சென்றாலோ, ஹோட்டலிலோ அல்லது வேறு வர்த்தக நிறுவனங்களில் பொருள்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்தும்போதோ அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை
செய்யப்படும்போது ‘பின்’ எண் எனப்படும் இரகசியக் குறியீட்டு எண்ணை அழுத்துவோம். அந்த தனிப்பட்ட எண்ணின் சரியான உள்ளீட்டிற்குப் பிறகே பரிவர்த்தனை முடிவுக்கு வரும்.
இடையில் அந்த எண் களவாடப்படுவதாகவும், பாதுகாப்பு மிகவும் குறைவு என்றும் பேசப்பட்டு வந்தது. ஆகவே சில வங்கிகளின் ஏ டி எம் இயந்திரங்களில் எண்களை மூடி மறைக்கும் படியாக மூடிகள் போடப்பட்டிருக்கும். (இதில் சிரமமும் இருக்கும்).
இதற்கிடையில் ஒரு வெளிநாட்டு சர்வே சொல்கிறது பத்தில் எட்டு பேர் ஒரே மாதிரியான எண்களைக் கொண்ட ‘பின்’ பயன்படுத்துகிறோமாம்.  ????

இன்னும் எல்லாம் டிஜிட்டல் மாயம் ஆகிவருவதால் 2020 ஆண்டிற்குள் சராசரியாக ஒரு மனிதன் நூற்றுக்கணக்கான ‘பாஸ்வேர்ட்’ அல்லது ‘பின்’ எண்ணை நினைவில் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகவேண்டியிருக்குமாம்.
இதனை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு அட்டை பரிவர்த்தனையில் முன்னோடியாகத் திகழும் ‘விஸா’ நிறுவனம் இனி பணப்பரிவர்த்தனைகளுக்கு ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
‘பின்’ எண்களுக்குப் பதிலாக விரல்ரேகை, கருவிழிப்படலம், குரல் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவைகளின் மூலம் பரிவர்த்தனைகளை முடிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே இந்த உயரிய தொழில்நுட்பம் நம்மை மகிழ்விக்கும் !

அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக்றிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 2ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
 
இந்த தேர்வில், 16 வகை பாடங்கள் இடம் பெற்றன.அதற்கான, தோராய விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. விடைக்குறிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்

வரும் 2030-ஆம் ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.


         சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:
தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.
பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.
ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட உயர்வானதா மாநில பாடத்திட்டம்? அலசும் கல்வியாளர்கள்!

நீட் தேர்வுகுறித்த பிரச்னையே இன்னும் தீரவில்லை... நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அகில இந்திய தேர்வைக் கண்டு தமிழக மாணவர்கள் பயப்படுகிறார்களா அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா? அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலம் படித்தால்தான், நீட் போன்ற அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியுமா? மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாதா? என்பதுகுறித்து அறிய, கல்வியாளர்களின் கருத்தறிந்தோம்.

கல்வியாளரும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராஜன்:

"அகில இந்திய அளவில் கல்வியாளர்கள் ஒன்றுகூடி பாடத்திட்டங்களை வடிமைப்பதற்காக சில வரையறைகளை வகுத்திருக்கிறார்கள். இந்த வரையறைகளைப் பின்பற்றித்தான் சி.பி.எஸ்.இ-யும் மாநில அரசுகளும் பாடத்திட்டத்தைத் தயாரிக்கின்றன. என்.சி.ஆர்.டி-யில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்களில் 37 சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் பல விஷயங்களைச் சாதித்தவர்களாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஆனால், தமிழ்நாட்டில் நம்முடைய பாடத்திட்டங்களை உடனுக்குடன் மேம்படுத்தத் தவறிவிட்டோம்.தமிழக பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புப் பாடங்களை மேம்படுத்தி, பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பாடத்திட்டங்களை உடனுக்குடனே மேம்படுத்தவேண்டியது அவசியம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மேம்படுத்தி ஏழு வருடங்களாகின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்கள் சிறப்பானது எனச் சொல்லி, ஏழு வருடங்களாக மேம்படுத்தாமல் இருக்கும் பாடத்திட்டத்தை நாமும் கடைப்பிடிக்கக் கூடாது.

தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் போட்டிபோடுவதற்கு, பாடத்திட்டத்தையும் பாடம் கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும்; அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும்வகையில் தரமாக அமைக்க வேண்டும். ஆந்திராவில், பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன; பாடப்புத்தகத்தை வழங்குவதில்லை. ரெஃபரன்ஸ் புத்தகங்களில் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களுக்குப் பதிலாகப் பாடப்புத்தகத்தை வழங்கிவிடுகிறோம்.

பாடப்புத்தகத்திலிருந்துதான் கேள்வி கேட்பார்கள் என மாணவர்களிடம் சொல்லிவைத்திருக்கிறோம். பாடப்புத்தகங்களை நகல் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றிவைத்திருக்கிறோம். இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பதிலளிக்கும் திறனை மழுங்கடிக்கிறோம். இந்த முறை மாற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தமிழகப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் நவநீதகிருஷ்ணன்:

சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், தமிழக பாடத்திட்டமும், பாடம் நடத்தும் முறையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேர்வு நடத்தும் முறையில்தான் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

பொதுத்தேர்வில் எல்லாவற்றையும் பாடப்புத்தகத்திலிருந்தே கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறோம். புத்தகத்தில் இல்லாத சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டால், பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என போனஸ் மதிப்பெண் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதற்குப் பள்ளியை நடத்துபவர்களும் ஆசிரியர்களும் துணைக்கு வருகிறார்கள். இதனால் மாணவர்கள் எதையும் சுயமாகச் சிந்திக்க முடியாதபடி செய்துவிட்டோம்.

புத்தகத்தில் இருப்பது மாதிரியான வினாக்களில் இருந்துதான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு. இந்த வினாக்களுக்கு மட்டும் பதிலைத் தெரிந்துகொண்டு தேர்வு எழுதி 200-க்கு 200 மதிப்பெண் வாங்குகிறார்கள். புரிதலே இல்லாமல் மனப்பாடம் செய்வதே சரி என்று தயார்செய்துவிட்டோம். இதை மாற்றினால் மட்டுமே அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும்.

சி.பி.எஸ்.இ தேர்வின் கேள்வித்தாள்கள், தமிழக தேர்வுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். கேள்விகள், புத்தகத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பதில்களுக்கான பகுதிகள் மட்டும் புத்தகத்தில் இருந்தால் போதுமானது. 2006-ம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்திவந்தோம். அதைத் தொடர்ந்து வந்திருந்தால் இன்றைக்கு அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளில் நம் மாணவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பார்கள்" என்கிறார் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:

"சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பீடும்போது தமிழக பாடத்திட்டமே சிறப்பாகத்தான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளியில், நடுத்தர மக்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னரே திட்டமிட்டு கோச்சிங் சென்டர்களுக்குச் செல்கிறார்கள். பெற்றோர் செலவுசெய்து பயிற்சி வகுப்பில் சேர்க்கிறார்கள். இரண்டு வருடங்களில் இருந்து நான்கு வருடங்கள் வரை பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள். நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை செலவுசெய்கிறார்கள். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களாலோ தமிழகப் பாடத்திட்டங்களாலோ அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதுதான் அடிப்படை காரணம். அறிவாற்றல் அடிப்படையில் பார்க்கும்போது மாணவர்களிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை. 95 சதவிகித பேரின் அறிவாற்றல், ஒரே மாதிரிதான் இருக்கும். வாய்ப்புகள் மட்டுமே வேறுபடுகின்றன. வாய்ப்புகள் இல்லாததால் அறிவை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல்போகிறது. அதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் அறிவு குறைந்தவர்கள் எனச் சொல்ல முடியாது.

வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் சமுதாயத்தில் நாம் இல்லை. ஒரே இடத்துக்குத்தான் எல்லோரும் போட்டிபோடுகிறார்கள். போட்டிமுறை கல்வியாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை பொதுப் பள்ளி கல்வி முறையில் படித்தவர்கள்தான் அனைத்து இடங்களையும் பெற்றுவந்தார்கள். இவர்கள், பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை; நீட் தேர்வையும் எழுதியதில்லை. நீட் தேர்வு, சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. மருத்துவக் கல்லூரிகள்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டங்கள், அவ்வப்போது மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும். முன்பு, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டிருப்போம். ஆனால், இப்போது பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக மாற்றியமைக்கவில்லை. பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும் பாடத்தை எப்படி வகுப்பறையில் நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். அதுதான் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

பாடப்புத்தகத்தைத் தாண்டி எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை மாற்றி அமைக்க, தேர்வு சீர்திருத்தத்தை உடனே கொண்டு வர வேண்டும். ப்ளூபிரின்ட் முறையை ஒழிக்க வேண்டும். எந்தக் கேள்வி கேட்பார்கள் என்ற அனுமானத்தை ஒழித்தாலே விரிவாகப் படிப்பார்கள். அனைத்து தேர்விலும் வெற்றி பெறுவார்கள்" என்கிறார் ராஜகோபாலன்.

நம் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கவைக்க முடியவில்லையே என நினைக்கும் பெற்றோர்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் தேர்வில் அதிகளவில் தேர்ச்சிபெறுகிறார்கள் என வாதிடுபவர்களும், கல்வியாளர்கள் சொல்லும் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!