Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 26 July 2017

05.08.2017 CRC ரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி துறை செயலாளர் அவர்களுக்கு JACTTO -GEO கடிதம்

Trb - Special Teachers Recruitment - Notification Published Now

Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016.

Click here for Notification

        

Dated:26-07-2017

Chairman

Click here - G.O MS - 21

Click here - G.O MS - 68

Click here - Online Application form for Special Teachers

உயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்டார அளவில் பட்டதாரிகளை ஈர்க்க கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறைமூலம் 28.07.2017 -வெள்ளிக்கிழமையே சிறப்பு விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் !!

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தற்போது பணியாற்றிவரும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்(HIGH SCHOOL HM) வரும் 28.07.2017 -வெள்ளிக்கிழமையே  சிறப்பு விருப்ப மாறுதல் கலந்தாய்வு.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு... நாளை அறிவிப்பாரா பிரதமர்?

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் 15 நிமிடங்கள் தனியாகப் பேசினார் முதல்வர்.
இந்தச் சந்திப்பின் போது நடந்த விவரத்தை டெல்லி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர், '' 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்திச் சொன்னாராம். அதற்கு பிரதமர், 'என்ன பழனிசாமி, ரொம்ப பிரஸர் கொடுக்கிறீர்களே' என்று சிரித்தபடி கேட்டாராம். 'தமிழகத்தில் இந்த பிரச்னையில் தி.மு.க அரசியலாக்கப்பார்க்கிறது. கடந்தசில வருடங்களாக தமிழக கல்வித்துறையில் பெரிய மாற்றம்ஏதும் கொண்டுவரவில்லை. இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வு எழுத எங்கள் மாநில மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு ஆண்டு விலக்கு கொடுத்தால் போதும்! அதற்குள் மாணவர்கள் சுதாரித்துவிடுவார்கள்' என்று சொன்னாராம்.உடனே, பிரதமர் அவரது கேபினில் உள்ள அதிகாரிகளை அழைத்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தாராம்.

பிரதமர் - முதல்வர் சந்திப்பு முடிந்ததும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அவசரமாகக் கூடி விவாதித்தார்களாம். பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேட்ட சில விவரங்களை கிரிஜா வைத்தியநாதன், சென்னை தலைமைச் செயலகத்துடன் தொடர்புகொண்டு போனில் வாங்கி ஃபைல் ரெடி பண்ணி கொடுத்தாராம்" என்றார் அவர்.தலைமைச் செயலாளர் கொடுத்த ஃபைல் விவரங்களை பிரதமர் கவனத்துக்கு உடனே கொண்டு சென்றார்களாம். இதையடுத்துதான், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நேரத்தில், தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விசிட் செய்யும் நாளும் வந்தது. நாளை (27.7.17) அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினம்.

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வருகிறார். இதற்காகத் தனி விமானத்தில் நாளை காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.விழாவில் பேசும்போது, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று பி.ஜே.பி. வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அதே நேரம், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில், "மத்திய அரசின் ஆலோசனைபடி, மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக சட்டசபையில் கொண்டு வர தீவிர ஆலோசனை நடக்கிறது. இதற்கு மத்திய அரசு பச்சை சிக்னல் காட்ட இருக்கிறது. அதனால், ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது விஷயமாக ஒரு தகவலை பிரதமர் ராமேஸ்வரத்தில் அறிவிப்பார் என்று நம்புகிறோம். எப்படியோ, பிரதமர் விசிட்டால் தமிழக மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது என்று சொல்லலாம்" என்றனர்.

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.


ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. 
இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல்கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.


இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.பிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 28.07.2017 அன்று இணையதளம் வழியாக நடத்துதல் சார்ந்து - இயக்கநரின் செயல்முறைகள்

ஆகஸ்டு  2017 மாத நாள்காட்டி

30.06.2017- ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரம்

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் விரைவில் அறிமுகம்!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவதற்கான முயற்சியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுத்துவருகிறது.

இதுகுறித்து, தமிழக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், சேலம் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டமாக பல்கலைக்கழகங்களில் கொண்டுவருவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இதர வேலைகளைத் தவிர்த்து, கல்விசார் பணிகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.

இதற்காகவே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நிர்வாகச் சுமைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், இனி வரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் ஆகியவை இணைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. தற்போது, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின் தேர்வுக் காலம் 40 முதல் 45 நாள்களாக உள்ளது. இதை 30 நாள்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’ என்றார்.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது.*

*வார்டுகள் வரையறை செய்ய 6 மாதம் ஆகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி நாடோடி மாணவர் சாதித்தது என்ன?

காஞ்சிபுரம் தியாகிகள் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார், சக்தி. நண்பர்களுடன் பாசிமணி விற்றுக்கொண்டிருந்த சக்தி, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 

அவருடன்  பகவதி, மதுரவேல், மருதமலை ஆகியோரையும் அந்தத் தொண்டு நிறுவனம் பள்ளியில் சேர்ந்தது. தன்னைப்போல தனது சமூகமும் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்தார் சக்தி.

விடுமுறை நாளில் ஊசிமணி விற்கச் செல்லும்போது, தங்கள் சமூகக் குழந்தைகளைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அப்போது, “நீங்களும் பள்ளியில் படிச்சா, சமுதாயத்துல பெரிய ஆளா வரலாம். நான் உங்களை பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கிறேன்” என ஆர்வமூட்டியிருக்கிறார். 

அந்த மாணவர்களின் பெற்றோரிடமும் இதுகுறித்து பேசுவார். சக்தி மற்றும் அவரின் நண்பர்களின் முயற்சியால், சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து 25 சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். சக்தியின் இந்தச் செயலால், அவரின் சமூகத்தை சார்ந்த சிறுவர்கள் அதிகம் பேர் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். 

நாடோடி சமூதாயச் சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிறுவன் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், 'ஹாண்ட் இன் ஹாண்ட்' நிறுவனம், ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.

வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிப்  பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாணை எண் 727 (போ.வ.7) உள்துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நடப்பாண்டில் 28,615 பள்ளிப் பேருந்துகள் மாவட்டக் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்சி கேப் மற்றும் மோட்டார் கேப் வாகனங்களில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் நலனை முன்னிட்டு, அவ்வகை வாகனங்களுக்கு சில ஒழுங்குமுறைகள் போக்குவரத்துத்துறையில் சுற்றறிக்கை எண் 31/2012 நாள் 10.10.2012 வாயிலாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்ஸிகேப் மோட்டார் கேப் போன்ற வாகனங்கள் உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களால் பதிவுசெய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில், உரிய பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

* இவ்வாகனங்களில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது, அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவைவிட 1.5 மடங்குக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

* வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ‘On School Duty’ என ஆங்கிலத்திலும் "பள்ளிப் பணிக்காக" எனத் தமிழிலும் எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்துசெல்வதற்கு உதவிட வேண்டும்.

மேற்படி அறிவுரைகள், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களால் செயலாக்கம் செய்யப்பட்டும் தவறு நடக்கும் பட்சத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி முதல்வர்கள், பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்திட, மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

10 ஆயிரம் சதுர அடியில் எம்ஜிஆர் உருவத்தை ஓவியமாக வரைந்த அரசுப் பள்ளி மாணவிகள்


பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் 100 பேர் சேர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் எம்.ஜி.ஆர் உருவத்தை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 100 பேர், ஓவிய ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எம்ஜிஆர் உருவத்தை தத்ரூபமாக வரைந்து சாதனை படைத்தனர். இந்த ஓவியத்தை பார்த்து ரசித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகளை பாராட்டினர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி ஆகியோரும் ஓவியம் வரைந்த மாணவிகளைப் பாராட்டினர்.

தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது?


(பள்ளிக்கு ஓர் கணினி ஆசியர் அவசியம் அல்லவா)

கோவை : தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார் பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பழைய கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக, புதிய கம்ப்யூட்டர்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபையில் தெரிவித்தார். இது, தலைமையாசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், தொடக்கப் பள்ளிகளுக்கு அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. தனியார் பிரவுசிங் சென்டர்களில், கல்வித்துறை கோரும் விபரங்கள் அனுப்புவதால், தகவல்களின் ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளது.ஈராசிரியர் பள்ளிகளில், கணினிசார் அலுவலக பணிகள் மேற்கொள்ள ஒருவர் செல்வதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளின் நிலையை, வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு, மோசமாக உள்ளது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில், புதிய மாணவர்களின் விபரங்களை பதிவு செய்தல், நலத்திட்ட பொருட்களின் விபரங்கள், உதவித்தொகை திட்டங்கள் என, கல்வித்துறை சார்பில், புள்ளிவிபரங்கள் அளிக்குமாறு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இ-மெயில் அனுப்பப்படுகிறது. இதற்கு, பதிலளிக்க கம்ப்யூட்டரோ, இணையதள வசதியோ இல்லாததால், தலைமையாசிரியர்கள் பெரிதும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:கல்வித்துறை திட்டங்களால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. இதை தக்க வைத்து கொள்ள, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.தமிழகத்தில், 70 சதவீத தொடக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கிடையாது. இரு வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், அனைத்து வகுப்பு மாணவர்களையும் அருகருகே அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. இதை அறிந்தும், கல்வித்துறை அனைத்து விபரங்களை இ-மெயில் அனுப்புமாறு உத்தரவிடுவது கேலிக்கூத்தாக உள்ளது.தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு செலவழிக்கப்படும் பணத்திற்கு, ரசீது சமர்ப்பித்தாலும், திருப்பியளிப்பதில்லை. டிஜிட்டல்மயத்தை நோக்கி, அனைத்து துறைகளும் வேகமாக நகர்கின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், இணையதள வசதி ஏற்படுத்தி தர, கல்வித்துறை முன்வர வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!