Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 28 July 2017

TNPSC GROUP-2A HALL-TICKET PUBLISHED (EXAM DATE : 06/08/2017)


CLICK HERE - TO DOWNLOAD HALL-TICKET

+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

11ம் வகுப்பு பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்  என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகளின் புதிய பட்டியல் !!TNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு 
அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திவெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 4413 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-IV தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

The Written Examination for the post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Science Subordinate Service was held on 16.10.2016 FN& AN. Totally 4413 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, followingthe rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 15 candidates (List-IV) those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 04.08.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியான பணிநாடுநர்களிடமிருந்து இன்று 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.05/2017
தேதி: 26.07.2017

பணி: சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்)

காலியிடங்கள்: 1325

பதவிக்குறியீடு 17ST

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: அரசாணை எண் 242 உயர்கல்வி (பி1) துறை நாள்.18.12.2012 ன்படி 10+2+3+2/10+3+3+2/ 11+2+3+2 என்ற முறையில் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு இறுதி நாளுக்கு (18.08.2017) முன்னதாகவே அனைத்து தகுதிகளுக்கான சான்றிதழ்களும் கண்டிப்பாக பெறப்பட்டிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ,500. (எஸ்சி,எஸ்ஏ,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.250) இதனை கடன் அட்டை, பற்று அட்டை, இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இதற்குரிய trbonlineexams.in/spl/ என்ற இணைப்பினை பயன்படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வானது 2 மணி மற்றும் 30 நிமிடங்கள் நேரத்திற்கு, 95 கொள்குறி வினாக்களைக் கொண்டு (ஒரு தாள்) நடத்தப்படும். 95 மதிப்பெண்கள் கொண்டது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.09.2017

மேலும் பணிநாடுநர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான முழுமையான விளக்கம் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/SPL2017/26072017/TNotification.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம்:உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறைசெயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம்அண்மையில் ஓர் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது.

அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம்பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது.ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.

இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதிவரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்தனர்.இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு, ஜூலை, 31, ஆக., 1 என, இரண்டு நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE ?

தமிழ் நாட்டின் அனைத்து  அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஏன் CBSE பாட திட்டத்தை நடைமுறை படுத்தக் கூடாது?-

மதுரை உயர் நீதி மன்றக் கிளை கேள்வி?

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்திய அரசு ஒப்புதல்!

மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளை பகுத்து, ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்காக மத்திய மனித வளத்துறைஅமைச்சகம் வகுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிரதமர் மோடி, பள்ளிக் கல்வி துறைக்கு கட்டளைகள் பிறப்பித்துஇருந்தார்.அதன்படி, சில பள்ளிகளை உருவாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டநிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தேவைக்கு அதிகமான இருக்கும்பள்ளிகள், தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் என பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, அருகருகே பள்ளிள் இருக்கின்றன, இதனால்,சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமலே செயல்பட்டு வருகிறது, சில பள்ளிகளில் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதனால் பள்ளிகளை கண்காணிப்பதிலும், மேற்பார்வையிடுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.இதைப் போக்கும் வகையிலும், மனித வளத்தைசிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைக்க மத்தியமனித வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2.04 லட்சம் தொடக்கப்பள்ளிகளும்,1.59 லட்சம் உயர் தொடக்கப்பள்ளிகளும் 2015-16ம் ஆண்டுவரை தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350.

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமானகட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

‘அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்’ மூலம் மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே அறிவியல் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்துள்ள நிலையில், கடந்த 24-ந் தேதி முதல் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் பெற்று வருகின்றனர். பயிற்சிகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு கல்வித்திறனை வளர்ப்பது குறித்து சில ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். இதுபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) இருந்து 3 ஆண்டுகளுக்குள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பாடத்திட்டங்களை மாற்ற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 20-ந் தேதி புதிய பாடத்திட்டங்கள் வடிவமைப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2 நாட்கள் ஆலோசனையும் நடந்தது.

இந்த நிலையில் புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களினால் மாணவர்கள் எந்த வகையிலும் குழப்பம் அடைந்துவிடாதபடி, மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் பாடத்தை புகட்டுவது எப்படி? என்பது குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

முன்பெல்லாம் பாடத்திட்டங்களை மட்டும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் போதும் என்று இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. அந்த வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு என்ன? என்பது குறித்து இந்த சிறப்பு பயிற்சியில் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் திறன் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது குறித்தும் சிறப்பு பயிற்சியில் ஆசிரியர்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.

ஏற்கனவே அறிவியல், கணித பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிவடைந்துவிட்டது. தற்போது ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும், வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழ் பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது

மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!!

மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!!
ஊதியக் குழு விபரம்

மத்திய அரசு:-

1வது ஊதியக்குழு . 1947 முதல் ..

2வது ஊதியக்குழு -1959 முதல் ..

3வது ஊதியக்குழு -1973 முதல் ..

4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..

5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..

6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..

7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..

தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-

1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...

2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...

3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...

4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...

5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...

6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...

7வது ஊதியக்குழு - 1. 1. 2006 முதல் ...

8வது ஊதியக்குழு  எப்போது ???

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!