Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 7 August 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்பு!!

மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை. இனி, அவர்கள் ஓய்வு பெறும் அன்றே, ஓய்வூதிய கணக்குக்கான உத்தரவை வழங்கப்படும் என்று மத்திய அரசின் பணியாள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், 53 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதிலும், அதன் உத்தரவு நகல் கிடைப்பதிலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அரசிடம் கவலைத் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, மத்தியஅரசு கடந்த 1-ந்தேதி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், பணியாளர் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :
மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்கள் ஓய்வூதியக் கணக்கை தொடங்குதவற்காக வங்கிகக்கு அலையவிடக் கூடாது. அவர்கள் ஓய்வுபெறும் நாளுக்கு முன்ப வங்கிக்கு அனைத்து விதமான ஆவணங்களையும் அளிக்க வேண்டும். அதன்பின், வங்கியில் இருந்து அளிக்கப்படும் ‘பென்ஷன் பேமென்ட் காப்பி’(பி.பி.ஓ.) ஊழியர் ஓய்வூதியம் பெறும் நாள்அன்று அளிக்கப்பட வேண்டும்.
ஒரு ஊழியர் தனது தலைமை அலுவலகத்தில் இருந்து வௌி ஊர்களில் பணியாற்றி வந்தால், அவர் சில காரணங்களால், தான் வங்கியில் இருந்தே அந்த பென்ஷன் பேமென்ட் காப்பியை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினால், அது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்திக்கொள்ளலாம் . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நேரங்களில் ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களின் முதல் பென்ஷன் பேமெண்ட் காப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், நேரடியாக வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பல நேரங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இதைத் தவிர்க்கும் வகையில் ஓய்வூதியம் பெறும் நாள் அன்றே பேமெண்ட் காப்பி நகல் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த உத்தரவை மத்திய அரசின் அனைத்து துறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய பணியாளர் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?

மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.
 ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், 

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click  செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆகஸ்ட் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் பணி நிரவல் நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை, தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய கல்வி ஆண்டின் (2016}17) மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நிரவல் நிகழாண்டில் நடத்தப்பட்டது.

பள்ளிக் கல்வியில் மாவட்டத்திற்குள்ளும், தொடக்க கல்வித்துறையில் வட்டார அளவிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2017}18 ஆம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை என்பது சில பள்ளிகளில் அதிகரித்தும், பல பள்ளிகளில் குறைந்தும் உள்ளது.
இதனை கருத்தில் கொள்ளாமல், முன்னதாக ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றதன் காரணமாக 2017}18 ஆம் கல்வி ஆண்டில், பல பள்ளிகளிலும் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் வரை பணிபுரியும் நிலை உள்ளது. அதே நேரத்தில், அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

160 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் 5 ஆசிரியர்களும், 160க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் பணிபுரியும் வகையில், பணி நிரவல் அமைய வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாக உள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மே மாதமே பணி நிரவல் நடைபெற்றதால், தற்போது பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகின்றனர். இதனிடையே, 2017 மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர் ஓய்வுப் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களும் தற்போது கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிவதால் அரசு சார்பில் ஊதியத்திற்காக செலவிடப்படும் பணமும் பயனில்லாமல் போவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், மீண்டும் பணி நிரவல் நடத்தி, உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டின் தொடக்கத்திலோ, இடைப்பட்ட காலத்திலோ ஆசிரியர்கள் பணி ஓய்வு நாள் வந்தாலும், அவருக்கு அந்த கல்வியாண்டின் இறுதி ( மே 31ஆம் தேதி) வரை பணி புரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நிகழாண்டில் மே மாதமே பணி நிரவல் நடத்தப்பட்டதால், அதற்கு பின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பட்டியல் கணக்கிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் முதல் நாளிலேயே மாணவர் சேர்க்கை விவரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பணி நிரவல் நடத்தப்பட்டதால், தற்போது உபரி பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை பிரச்னை எழுந்துள்ளது.

மே மாதம் நடைபெற்ற பணி நிரவலின் போதும், மாவட்ட வாரியாக ஒரு பாடத்திற்கு 10க்கும் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே பணி நிரவல் நடைபெற்றன. வட மாவட்டங்களில் குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீண்டும் முறையாக பணி நிரவல் நடைபெற்றால் மட்டுமே, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்றார்.

உதயசந்திரன் சாரை நீக்கக் கூடாது!' - வலுக்கும் ஆசிரியர்களின் குரல்!!

#SupportUdhayaChandran


 

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீதும், பள்ளிக் கல்வி மீதும் ஆர்வம் கொண்ட உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையில் பொறுப்பேற்றிருப்பதைப் பலரும் வரவேற்றார்கள். கல்வித் துறையில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உதயசந்திரனின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார். பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறைக்கு விடை கொடுத்தார். பாடத்திட்டங்களை உருவாக்குவதில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார். இப்படியாகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். 

உதயசந்திரன் கல்வித் துறையில் செய்துவரும் நடவடிக்கைகள் கல்வியாளர்ளிடமிருந்து மட்டுமல்ல எதிர்க்கட்சியினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக, கல்வித் துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வெளிப்படைத் தன்மை ஆட்சியில் உள்ள சிலருக்குப் பிடிக்க வில்லை என்றும் அதனால், உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பணி மாற்றம் செய்யப்படலாம் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இரு வாரங்களாக இந்தச் செய்தி உலவி வந்தாலும் கடந்த இரு நாள்களாக இது ஆசிரியர்களிடையே பேசும் பொருளாகி உள்ளது. பல ஆசிரியர்கள் வெளிப்படையாக உதயசந்திரனை மாற்றக்கூடாது எனச் சமூக ஊடகங்கள் வழியே வலியுறுத்தி வருகின்றனர். இதற்கென ஒரு ஹேஷ் டேக்கை (#stand_with_Udayachandran_IAS) உருவாக்கி, பகிர்ந்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை செயலாளரை ஏன் மாற்றக்கூடாது என நினைக்கிறீர்கள்? என, சில ஆசிரியர்களிடம் கேட்டோம்.

 வசந்த், ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீரனூர்: "உதயசந்திரன் சார் பணி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இவ்வளவு நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவர் நீடித்தால் இன்னும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். முதல் இடம், இரண்டாம் இடம் என அறிவிப்பை ரத்து செய்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பள்ளியிலும் வகுப்பிலும் மாணவர்களோடு பழகுவதில் மாற்றங்களைக் கொண்டு வர முயலும் ஆசிரியர்களுக்குப் பல தடைகள் இருந்தன. வட்ட, மாவட்ட அளவிலான அதிகாரிகளையே நாங்கள் தொடர்புகொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், உதயசந்திரன் சாரை எளிதாகத் தொடர்புகொள்ள முடிவதும் எங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. அவர் கூறும் வழிகாட்டலை எங்கள் வகுப்பறையில் செயல்படுத்தினோம். அதனால், வகுப்பறையின் இறுக்கம் தளர்ந்தது. இந்த நல்ல போக்கு நீடிக்க வேண்டும் என்பதாலே அவர் இந்தப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறோம். இதைக் கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்களிடம் நேரில் சென்றுகூட வலியுறுத்த தயாராக இருக்கிறோம். "

ஶ்ரீ.திலீப், ஆசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்: "என்னைப் பொறுத்தவரை முதல் விஷயமாகச் சொல்வது, எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உதயசந்திரன் சார் தன்னை வைத்துக்கொண்டார். ஜனநாகயத் தன்மையுள்ள அதிகாரியாக அவர் நடந்துகொள்வதே எங்களுக்கு வழிகாட்டலாக இருக்கிறது. அப்படியான அதிகாரி முன்நின்று வழிநடத்தும்போது அவர் கீழ் பணிபுரிபவர்கள் மகிழ்ச்சியோடும் உளபூர்வமாகவும் அந்தச் செயலில் ஈடுபடுவார்கள். நான் தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்குக் கொண்டுச்சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவன். அதற்காகப் பல இடங்களிலும் தகவல் சேகரித்து வருகிறேன். அந்தத் தகவல்களை உதயசந்திரன் சாரிடம் கூறும்போது நான் கூறுவதை விடவும் அட்வான்ஸான விஷயங்களைக் கூறுவார். அது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். பாடங்களைப் புதிதாக எழுதும் பணிக்கு அவர் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கக்கூடியது. சுமார் 1500 பேரின் கருத்துகள் அறியப்பட்டன. மத்திய அளவிலான சிலபஸைப் பின்பற்றலாம் எனச் சிலர் கூறியபோது, தமிழகத்தில் நாம் உருவாக்கும் பாடத்திட்டம் உலக அளவில் வியக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதை மற்றவர்கள் பின்பற்றுவார்கள் எனும் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பார். அந்தளவு உழைக்கவும் செய்கிறார். இப்படியான ஓர் அதிகாரி நீடிக்க வேண்டும் என நாங்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?"

மகாலட்சுமி: ஆசிரியர், ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளி, ஜவ்வாது மலை, திருவண்ணாமலை: "உதயசந்திரன் சார், பொறுப்பேற்றுச் செய்த நடவடிக்கைகளே புத்தகங்களை மகிழ்ச்சியோடு படிக்கிற நிலையை மாணவர்களுக்குத் தந்திருக்கிறது. மாற்றங்களைச் செய்ய விரும்புகிற ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். அவர்களை ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டினாலும் அவர்களின் சிந்தனை மற்றவர்களுக்குப் பயன்தரும் விதத்தில் கடத்தப்பட வில்லை. இந்நிலையில் கல்வித் துறை செயலளாரால் எங்களுக்குள் ஓர் உரையாடல் நடைபெற்றது. அப்போது, பலவித கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வகுப்பறையில் அவை பிரதிபலிக்கவும் செய்கின்றன. இது உயிர்ப்புடன் இயங்கும் ஆசிரியர்களின் ஓட்டத்தை இன்னும் வேகமெடுக்க வைத்திருக்கிறது. முதல் இடங்களை அறிவிப்பதை ஒழித்து மூலம் அதையே விளம்பரம் செய்து மாணவர்களை ஈர்க்கும் பள்ளிகள் எரிச்சலடைந்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது கூடுதல் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கியுள்ளனர்.  இந்த நம்பிக்கை பயணம் தொடர வேண்டும் எனில் உதயசந்திரன் சார் இந்தப் பணியில் குறிப்பிட்ட வருடங்களுக்கு நீடிக்க வேண்டும்."

சி.சதீஷ்குமார், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்பனைக்காடு, புதுக்கோட்டை மாவட்டம்: "உதயசந்திரன் சார் பொறுப்பேற்றதும்தான் கல்வித் துறை மீது பொதுமக்களுக்கு நல்ல மதிப்பு வந்திருக்கிறது. அதன் நீட்சியாக ஆசிரியர்கள் மீது கணிவும் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம் எனும் நம்பிக்கையும் வந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மகிழ்ச்சியோடு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இந்த ஆரோக்கியமான போக்கு நீடிக்க வேண்டுமெனில், இவர் இந்தப் பொறுப்பில் தொடர வேண்டும். உதயசந்திரன் சார் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் எனும் செய்தி வதந்தி என்றால் அரசுப் பொறுப்பில் உள்ளவர் தக்க பதிலளித்து, சந்தேகத்தைப் போக்க வேண்டும். ஒருவேளை, இவர் பணி மாறுதல் செய்யப்பட்டால், அதற்கு எதிராக வரும் முதல் குரலாக என்னுடையதுதான் இருக்கும். இதற்காக ஒரு துளி தயக்கம்கூட எனக்கு இல்லை."கல்வித்துறையின் மாற்றங்கள் முழுமையடைய அரசு உதவ வேண்டும்.

DEE -தொடக்கக்கல்வி உதவிபெறுபவை- சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்,ஆசிரியர் விவரங்களை 11|08|2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு!

DSE - 15.08.2017 செவ்வாய் கிழமையன்று சுதந்திர தின விழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பு - இயக்குனர் செயல்முறைகள்!

500க்கும் மேற்பட்ட வீடியோக்களால் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை


கணக்கு என்றாலே பலருக்கு வேப்பங்காய் போல கசக்கும். ஆனால், கணக்குப் பாடத்தையே சுவையாக நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. நாமக்கல், திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ரூபி கேத்தரின் தெரசா. கணித ஆசிரியரான இவர், கணிதத்தில் கடினமான பகுதிகளையும் எளிமையாக நடத்துவதில் கைதேர்ந்தவர். இவரைப் பற்றி இன்னொரு வியப்பூட்டும் செய்தி இருக்கிறது! பாடங்களை வீடியோக்களாக நடத்துகிறாராம். அது குறித்து அவரிடம் கேட்டோம். 


"அரசு வேலைக்கு வருவதற்கு முன் சுமார் 18 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். 2007 ஆம் ஆண்டுதான் அரசுப் பணி கிடைத்தது. சேலத்திலும் பின் முளைச்சூரில் பணியாற்றி இப்போது இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகள் மிகவும் எளிமையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள். அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் கல்விதான் அடித்தளம். அந்தப் பொறுப்புஉணர்வை நான் மனதளவில் உணர்ந்துகொண்டேன். 

மாணவர்கள் பாடத்தின் எந்தப் பகுதியைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவார்களோ அந்தப் பகுதியை எளிமையாக்க வேண்டும் என்பதாக என் பணியை அமைத்துக்கொண்டேன். உதாரணமாக, பல மாணவர்களுக்கு வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யமுடியாமல் கஷ்டப்படுவர். அவர்களுக்காக புதுவிதத்தில் வாய்ப்பாட்டைக் கற்பித்தேன். என் மாணவர்கள் செய்யும் எஃப் ஏ செயல்பாட்டை வீடியோவாக எடுத்துக்கொள்வேன். முரளிதரன் எனும் ஆசிரியர் வாட்ஸ் அப்பில் கணிதக் குழு வைத்திருப்பதாக நண்பர்கள் வழியே கேள்விப்பட்டேன். அதில் என்னையும் இணைத்துக்கொண்டார்கள். அதில் என் வீடியோக்களைப் பதிந்தபோது பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டுகள் வந்தன. எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது. 

இதற்கு முன் நான் பணியாற்றிய பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கரும்பலகைகள் இல்லை. அதனால், ஒரு வகுப்பில் நான் நடத்தும் பாடங்களை வீடியோ எடுத்து, அடுத்த வகுப்பில் போட்டுக்காட்டுவேன். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் இது சாத்தியமானது. அந்த வீடியோக்களை வாட்ஸ் அப் குரூபில் பதியவும் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் பல குரூப்களிலும் சேர்த்துவிட்டார்கள். இப்போது 30க்கும் மேற்பட்ட குரூப்களில் வீடியோக்களைப் பதிந்துவருகிறேன். 

யூ டியூப்பில் சேனல் ஆரம்பித்து, அதில் வீடியோக்களைப் பதிந்தால் இன்னும் அதிகமானவர்களைச் சென்றடையும் என்றனர். அதனால், என் பிள்ளையின் உதவியுடன் யூ டியூப் சேனல் ஆரம்பித்தேன். இப்போது உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிக்கின்றன. எனக்குப் பெரிய அளவில் தொழில்நுட்பம் எல்லாம் தெரியாது. நான் பாடம் நடத்தும் என் மாணவிகள்தாம் எனது செல்போனில் வீடியோ எடுப்பார்கள். அதிலும் சென்ற வருடத்தில் ரம்யா எனும் மாணவி ரொம்பவே ஆர்வமாக வீடியோ எடுத்தாள். பள்ளியில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதால் சிம் இல்லாத மொபைலையே பள்ளியில் வீடியோ எடுக்கப் பயன்படுத்துகிறேன். சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் தொடர்புகொண்டு சந்தேகங்களைக் கேட்கின்றனர். அயன் கார்த்திகேயன் என்பவர் ஒரு ஆப் தயார் செய்யலாம் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

என் நோக்கம், பாடம் எளிமையாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இந்த வீடியோக்களைப் பார்த்து அதில் கூறப்படும் முறையில் தங்கள் பள்ளியில் பாடம் நடத்துவதாகப் பல ஆசிரியர்கள் கூறும்போது நான் செல்லும் பாதை சரியானதாக இருக்கிறது என்கிற மகிழ்ச்சி. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் என்னைச் சென்னைக்கு அழைத்துப் பாராட்டினர். 

என்னைப் பொறுத்தவரை என் குழந்தைகளைப் போலத்தான் என்னிடம் படிக்க வருகிற மாணவர்களைப் பார்க்கிறேன். அப்படித்தான் ஆசிரியர்கள் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்த எண்ணமே மாணவர்களை உயர்த்துவதற்கான வேலைகளைச் செய்ய வைத்துவிடும்." என்று மாணவர்களின் மீது அக்கறையோடு கூறுகிறார் ஆசிரியை ரூபி. 

இவர், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்ககாவே தனி வலைப்பூ வைத்திருக்கிறார். இதுவரை 520 வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்து வருகிறார். அவற்றில் சில ஒரு லெட்சம் வியூஸைத் தொட்டிருக்கின்றன.

 மாற்றம் விதைக்கும் ஆசிரியர்களின் பணிக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

சேலம் மாவட்டம் 09.08.2017 அன்று உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி தகுதிக்கு பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!

பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் !!


http://dse.tnschools.gov.in/என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இயக்குனரக இணையதளத்தில் இருந்து 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல

http://dse.tnschools.gov.in/districtnameஎன்ற URL பயன்படுத்தலாம். District name  டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண்  ஆகும். இணையதளத்தில் தெரிய வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து பதிவெற்றிக்கொள்ளலாம். இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
http://dee.tnschools.gov.in/ என்ற URL பயன்படுத்தலாம்.

பள்ளிக்கு வெளியிலும் உள்ளது வகுப்பறை - கற்பித்தலில் புதுமை அரசுப்பள்ளி ஆசிரியர்..........


சுதந்திர தின சிறப்பு கவிதைகள் நமது மாணவர்களுக்காக



சுதந்திர தின சிறப்புகவிதைகள்    1

துயரின்றி நாம் வாழ

துன்பம் பலகண்டவர்களுக்கும்

ஒய்யாரமாக நாம் வாழ

உயிர் விட்டசிங்கங்களுக்கும்

மானத்தோடு நாம் வாழ

செக்கிழுத்தசெம்மல்களுக்கும்

சுதந்திரமாக நாம் வாழ

சண்டையிட்டமறவர்களுக்கும்

சுதந்திர நாளில்

இதய அஞ்சலியைசெலுத்துவோம்.

திக்கு கால்

முளைத்து சாதி ஆனதோ

மதத்திற்கு மதம் பிடித்து

மரணம் ஆகின்றதோ?

இதுவா சுதந்திரம்?

சாதியா நம்

ஒருமைப்பாடு?

மதமா நம்

ஒற்றுமை?

உண்மை தான்

நம் பண்பு..!

உழைப்பு தான்

நம் தெம்பு..!

அன்பு ஒன்று தான்

நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தினவாழ்த்துக்கள்..!

-------------------------------------------------------------

சுதந்திர தின சிறப்பு கவிதைகள்  2

விடியலை நோக்கி

நள்ளிரவில் சுதந்திரம்பெற்றொம்;

விடியலை நோக்கிசெல்கின்றோம்;

வேகம் கொஞ்சம்குறைவுதான்;

தடைகளும் கொஞ்சம்அதிகம்தான்;

ஆனாலும் தளர்ச்சிகண்டதில்லை;

தயங்கி நிற்கவும்போவதில்லை;

பயணம் என்றும்தொடரும்;

விடியலை வென்றும்காண்போம்.

-------------------------------------------------------------

சுதந்திர தின சிறப்பு கவிதைகள்   3

சூரியனுக்கு இரவில்சுதந்திரமில்லை

சந்திரனுக்கு பகலில்சுதந்திரமில்லை

பளிச்சென்ற பகலிலும்பனிவிழும்

இரவிலும்முப்பொழுதிலும்எப்பொழுதிலும்

இந்தியனுக்கு சுதந்திரம்உண்டு !!!

ஆங்கிலேயனிடம்அடிமையானதுஅறியாமையினால்

வளமையை விட்டதுபுரியாமையினால்

மிஞ்சியவற்றைஅந்நியனுக்குவிற்காமல்

இநதிய வளர்ச்சிக்குஇயற்கையை

அழைத்து மரியாதைசெய்து

வளம் பெருக்கிவானுலகம்

போற்ற வல்லரசாக்கிஇந்தியாவை

இமயமெனத் தூக்கிநிறுத்துவோம்

பெற்ற சுதந்திரத்தைப்போற்றுவோம்

அனைவருக்கும்பயனுள்ளதாய்மாற்றுவோம் !!!

Independence Day

India got independence on 15th of august in 1947, so people of India celebrate this special day every year as the Independence Day on 15th of august. In the event celebration, organized in the National Capital, New Delhi, the Prime Minister of India unfurled the National Flag in the early morning at the Red fort where millions of people participate in the Independence Day ceremony.

During the celebration at Red Fort, New Delhi many tasks including March past are performed by the Indian army and cultural events by the school students are performed. After the national Flag hosting and national Anthem (JANA GANA MANA) recitation, the prime minister of India gives his annual speech.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!