Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 10 August 2017

ஆசிரியர்-பெற்றோர் கூட்டு முயற்சியால் சாதனை படைக்கும் 'ஸ்மார்ட்' ஊராட்சி பள்ளி

மதுரை: மிக மிக சாதாரண ஊராட்சி ஒன்றிய பள்ளியும் கூட மாணவர்களுக்காக மிக ஸ்மார்ட்டாகவும், முன்னுதாரணமாகவும் இயங்க முடியும் என்பதற்கு இந்தப் பள்ளியே நல்ல சான்று. தரம் வாய்ந்தவையாகக் கருதப்படும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக எப்படி இந்த ஊராட்சி பள்ளி மட்டும் செயல்படக்கூடும்?மதுரை அருகே உள்ளது ஒத்தக்கடை என்ற சிற்றூர். இங்குள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிதான் அந்தப் பெருமைக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. பொதுவாக செலவானாலும் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற மனோபாவம் பெற்றோர்களுக்கு அதிகரித்து வரும் இந்நாளில், ஊராட்சியால் நடத்தப்படும் இந்தப் பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு தங்களது குழந்தைகளைச் சேர்க்கிறார்கள் என்றால், இங்கு ஏதோ விசேஷமிருக்கிறதுதானே...

மிக நேர்த்தியான கட்டடங்கள்... உள்ளே நுழைந்ததும் 'பேவர் பிளாக்' சிவப்புக் கம்பளம் விரித்தது போன்று நம்மை வரவேற்கிறது. வெளியே உள்ள கரும்பலகையில், தமிழகத்தின் அன்றைய முக்கிய செய்திகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் வேப்ப மரங்கள் பிள்ளைகளுக்கு நிழல் தந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு வகுப்பறையின் வெளியே குழந்தைகள் தங்களது காலணிகளை நேர்த்தியாக கழட்டிவிட்டு, உள்ளே அறிவுப்பசியைப் போக்க பயின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு வகுப்பிலிருந்து திருக்குறள் கேட்கிறது. மற்றொரு வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் ரைம்ஸ் கேட்கிறது. வகுப்பறைக்கு வெளியே கழற்றிவிட்டுச் செல்லும் காலணியில் தெரிகிறது, இந்தப் பள்ளியின் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது...

மிக சரளமாக ஆங்கிலம் வாசிக்கிறார்கள். வருகின்ற 70ஆவது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவதற்கான திட்டமிடலிலும் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கல்வி போதிக்கப்படுகிறது என்றாலும் கூட, அக்குழந்தைகளின் பண்பு மேம்படுவதற்கான ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது இப்பள்ளியின் சிறப்பு. இது அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது.

தமிழ்மொழியின் பெருமையை இசையால் பயில்கிறார்கள். தொடைகளில் தாளம் தட்டி... தலைகளை இசைக்கேற்றவாறு ஆட்டிக்கொண்டே உடன் பாடி மகிழ்கிறார்கள். மனதின் இருக்கும் கொஞ்ச நஞ்ச இறுக்கங்களும் பறந்தோடிவிடுகின்றன.

கணினி வகுப்பறை இங்குள்ள பிள்ளைகளின் கனவாக உள்ளது. பறந்தோடி வருகிறார்கள். கணினி முன் அமர்ந்து உலகத்தை வாசிக்கிறார்கள். வேர்டு, பெயிண்ட், கூகுள் என அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். கணினியை அனைத்து குழந்தைகளும் முழுவதுமாகக் கையாளும் அறிவைப் பெற்றுத் திகழ்கிறார்கள்.

பொதுவாகவே அரசு பள்ளிக்கூடங்களில் கழிவறையின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. ஆனால் இங்கு அந்நிலையும் தலைகீழ்... மிக நேர்த்தியாக கழிவறை பயன்படுத்தும் விதம் அறிவுறுத்தப்பட்டிருப்பதால், தூய்மை இந்தியாவை இங்கு மட்டுமல்ல பள்ளி வளாகம் முழுவதும் பரவலாகக் காண முடிகிறது.

'தற்போது இந்தப் பள்ளியில் 502 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். மதுரை மாவட்டத்திலேயே மிகப் பெரிய தொடக்கப்பள்ளி இதுவாகும். மாணவ, மாணவியரை இரண்டு பிரிவாகப் பிரித்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி என்ற பெயரால் இரண்டு குழுக்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு குழுக்கள் இந்தப் பள்ளியை முழுமையாக செயல்படுத்துகின்றன.

பள்ளி வளாகத்தில் நாங்கள் மேற்கொண்டுள்ள கட்டமைப்பு மேம்பாடுகள் அனைத்திற்கும் காரணம் பெற்றோர்கள்தான். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பெற்றோர்கள் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் பள்ளி வளாகம் குறித்து பேசுகிறோம். செய்ய வேண்டியவற்றை உடனடியாகச் செய்தும் விடுகிறோம். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறும் பள்ளியாக இதனை மாற்றியிருக்கிறோம்' என்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் தென்னவன்.

இடைநிலைக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் மோசஸ் மங்கலராஜ் கூறுகையில், 'எங்கள் பள்ளியில் கணினி வகுப்பறையை மேம்படுத்த, பல தன்னார்வலர்களைச் சந்தித்து நன்கொடை பெற்று இதனை உருவாக்கினோம். இதன் செயல்பாட்டை உணர்ந்து கிராமசபையில் தீர்மானம் இயற்றி 15 கணினி, 3 எல்இடி டிவிக்கள், மூன்று ஹோம் தியேட்டர்கள் பெற்றுத் தரப்பட்டது. இதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சி வழங்கி வருகிறோம்' என்கிறார்,

பெற்றோர் தரப்பில் பேசிய ராதா, 'கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற எந்தவித மாற்றமும் இல்லாமல் சாதாரண பள்ளியாகத்தான் இருந்தது. இங்குள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் இன்று மிகச் சிறந்த தொடக்கப்பள்ளியாக விளங்குகிறது. எனது குழந்தைகள் இங்கு பயில்வது எனக்கு மிகப் பெருமையாக உள்ளது. 5ஆம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர வேண்டும் என்பது என்னைப் போன்ற பெற்றோர்களின் விருப்பம்' என்கிறார்.

இப்படியும் ஒரு அரசுப்பள்ளி இயங்குகிறதா என்று புருவம் நெரிப்பவர்களுக்கு மத்தியில்... இப்படித்தான் இயங்க வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது மதுரை கிழக்கு ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளி...

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: சமையல்காரரைத் தவிர மற்ற அனைவரும் விடுதலை

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 
சம்பவத்தில், சமையல்காரரைத் தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட  தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளியின் சமையலறையில் பற்றிய தீயே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பள்ளி தாளாளர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், மனைவி சரஸ்வதி சமையல் செய்த வசந்தி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்யக் கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சமையல்காரர் வசந்தியின் தண்டனையை உறுதி செய்தும், மற்ற 9 பேரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளது

JACTO GEO இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். ..


NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி

நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். 

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP | நாளை (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

CPS அன்பர்கள் 2016-17 ஆம் ஆண்டின் கணக்கீட்டுத்தாளை கீழ்கண்ட link ல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்!!

CLICK HERE TO DOWNLOAD | CPS ACCOUNT STATEMENT

DSE : 765 computer teacher post only TRB Exam |Government order issued: GO NO 176 Date 21.07.2017


Tn govt |Dr.Radhakrishnan state award 2016-17 | Forms (4 pages)
பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் - மத்திய அமைச்சர் விஜய்கோயல்

'பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் கட்டாயமாக்கட்டுள்ளன. இவற்றைக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கக்பட்டுள்ளதாக' மாநிலங்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் அறிவித்துள்ளார்.

'சிபிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளைப் போன்றே மாநில கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட வேண்டும். அனைத்துப் பள்ளியிலும் மைதானங்கள், விளையாட்டுக்கான உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டிருக்க வேண்டும், உடற்கல்வி போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக'த் தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய்கோயல், 'ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 45 நிமிடங்கள் விளையாட்டு அல்லது உடற்கல்வி என்று நேரம் ஒதுக்க வேண்டும். இதைப்போலவே, யோகா, நீச்சல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட எட்டு அம்சங்களில் இரண்டு அம்சங்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கட்டாயம்' என்றும் அறிவித்திருக்கிறார்.

பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் நேரம் தவறாமை மிக அவசியம். ஒழுங்கு முறையின் கீழ் வரும் இந்தப் பழக்கம் உயர்ப் பணிகளிலும் நம்மை அமர வைக்கும். அது பள்ளிகளிலிருந்தே தொடங்கினால் வாழ் முழுக்க அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். 

 

பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை முடித்தப் பிறகு அவர்கள் செல்லும் பணிகளிலும் அவர்கள் சரியான நேரத்திற்காக பாராட்டுக்களைப் பெறுவதோடு, பதவியுயர்வும் பெற முடியும். இந்த காலம் தவறாமை மற்றும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கும் வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியை பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளது.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் லிஸ்டினை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் (தொழிற்கல்வி) முகவரிக்கு மெயில் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி குரூப்2 ஏ விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு !!

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைத்தாள் இன்று (ஆக 9 )வெளியிடப்பட்டது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த 6-ம் தேதி நடைபெற்ற குரூப்2 
ஏவுக்கான தேர்வு நடைபெற்றது உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைத்தாள் www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கறப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள் வாங்க தொகை உயர்த்தி அரசாணை வெளியீடு !அரசாணை எண்:79.நாள்14.7.17.

அரசு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்உதயசந்திரனை மாற்ற முயல்வது சரியா? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனை,மாற்றப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம்  உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இதற்கு, மக்கள் கீழ் உள்ள சர்வேயில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.  

DEAR FRIENDS CLICK HERE | TO VOTE FOR OUR EDUCATION SECRETARY SIR...

மாணவர்களின் மன அழுத்ததுக்கு நாங்களும் ஒரு காரணம்'' - சொல்கிறார்கள் ஆசிரியர்கள்

வீட்டில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்லும் பிள்ளைகளை வியந்து பார்ப்போம். நம் கருத்தை எதிர்த்து 'இப்படிதான் எங்க ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க சொல்றதுதான் கரெக்ட்''  என சொல்லி பூரிப்படைவார்கள் குழந்தைகள். குழந்தைகள் அதிகம் நம்புவது அவர்களுடைய ஆசிரியர்களைதான்.


முன்னரெல்லாம் ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர் ''கண்ணு தலையைத் தவிற மத்த எடத்துல எங்க வேணும்னாலும் அடி பின்னி எடுங்க சார்'' என்பார்கள். ஆனால் தற்போது 'ஏன் என் குழந்தையை அடிச்சீங்க'' என்கிற அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. இதற்கு யார் காரணம்? யாரிடத்தில் தவறு? பேசினோம் ஆசிரியர்களிடம்.

சேலம் அரிசிபாளையம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையான விமலா அப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வீடு வரை சென்று பேசக் கூடியவர். தொடக்க நிலை ஆசிரியர் விமலாவகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உள்ள அழுத்தம் குறித்து பேசுகிறார்....

‘‘தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் துறுதுறு குழந்தைகளைச் சாமளிக்க ஒரு தாயின் மனநிலை வேண்டும். ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டாலே பிரச்னைகள் குறைந்துவிடும். வகுப்பறைக்குள் நுழையும் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை  வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் குழந்தைகள் படிக்க வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். ஒரு சிலர் வீட்டுப் பிரச்னை காரணமாக பள்ளிக்கு வருவதே நின்று விடும். அப்பா அம்மாவுக்குள் நடக்கும் பிரச்னைகளால் குடும்பம் பிரிந்து விடுகிறது. குழந்தைகள் தாயுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விடுகின்றனர். 

அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அவர்களை பின் தொடர்ந்து மீண்டும் பள்ளி வர ஊக்குவிக்கிறோம். அப்படி வந்தால் மீண்டும் முதலில் இருந்து பாடம் நடத்த வேண்டும். வீட்டுப் பிரச்னைகளால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. பாடம் நடத்துவதோடு அவர்களிடம் பர்சனலாகப் பேசி தன்னம்பிக்கை அளிக்கவும் கவுன்சிலிங் கொடுக்கிறோம். தொடக்கப் பள்ளி ஆசிரியையின் பணி தேர்ச்சி அடைய வைப்பதோடு நின்று விடுவதில்லை. அந்தக் குழந்தை தொடர்ந்து படிக்க பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுப்பது வரை நடக்கிறது’’ என்கிறார் விமலா. 

உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரியும் முரளி இது குறித்துக் கூறுகையில், ‘‘ஆசிரியர்களின் ஆயுட்காலத்தைப் பற்றி ஒருவர் ஆய்வு செய்துள்ளார். பணியில் இருக்கும் போதே இறக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். பணி ஓய்வு பெற்றாலும் ஆசிரியரின் ஆயுட் காலம் குறைவாகவே உள்ளது. காரணம் அவர்கள் தங்களது பணி நாட்கள் முழுவதும் பேசிக் கொண்டே இருக்க ஆரிரியர் முரளிவேண்டும். 

இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் அதிகம். கற்பித்தல் என்பது குறிப்பிட்ட பாடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதாக இருந்தகாலத்தில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிந்தது. இப்போது குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக் கொண்டால் அதை ஒரு மதிப்பெண் கேள்வி, பொருத்துக அல்லது விரிவான விடை என்று மதிப்பெண் அடிப்படையில் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 எல்லோரையும் தேர்ச்சி சதவீதம் துரத்துகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சென்ற ஒரு மாணவனிடம் தேர்வு அறைக்குள் நுழையும் நேரத்தில் (9.55 மணிக்கு) அவனது பிளட் பிரஷ்ஷர் செக் செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்கு கண்காணிப்புப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் பிளர் பிரஷர் செய்யப்பட்டது. மாணவரை விட அதிகளவு பிளட் பிரஷர் ஆசிரியரிடம் காணப்பட்டதாம்.  இன்றைய ஆசிரியர்களின் நிலைமை இப்படிதான் உள்ளது. ஆசிரியர்கள் வேலையை விரும்பிச் செய்யும் சூழல் இல்லை. மதிப்பெண்கள் மட்டுமின்றி கல்வி அறிவுத் தேடலாக மாறும் போது தான் பிரஷர் குறையும்,’’ என்கிறார் முரளி. 

ஆசிரியர் பிரவீன்குமார்ஆசிரியர்கள் வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார் கூறுகையில், 'வீட்டிலிருந்து கிளம்பும்போது என்ன பிரச்னைகளை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால் மாணவர்களே நலனே முதன்மையாக இருக்க வேண்டும். 

முன்பெல்லாம் மாணவர்கள் 13 வயதைத் தொட்டால் அதை அடசலன்ட் என்பார்கள். தற்போது அதை 10 வயதிலிருந்தே அடசலன்ட் என்று சொல்லப்படுகிறது. இந்த வயதில் ஈகோ பார்க்கத் தொடங்கும் மாணவர்களிடம் கண்டிப்பையோ, தண்டனையையோ பொதுவெளியில் ஆசிரியர்கள் காட்டக் கூடாது. 

தவறு செய்த மாணவனை தனியாக அழைத்துப் போய் தான் நடந்த தவறை விளக்க வேண்டும். சாதியைச் சொல்லி திட்டுவது, நிறத்தை காராணம் காட்டி திட்டுவது, மற்றவர்களுடன் கம்பேர் செய்வதை மாணவர்கள் துளியும் விரும்புவதில்லை. அப்படி செய்வதாலேயே மாணவர் தற்கொலை, தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமே அவர்களுடைய வேலையில்லை. மாணவர்களுக்கு புரியும்படி கற்பிக்கப்படும்போதுதான் ஆசிரியர் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!