Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 13 August 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு விவரம்.

RTE - ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்!!


 தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக்

கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.மாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில்துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.இதில், அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கணினி அறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்றஅம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம்
பெற்றுள்ளன.இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும்மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், இன்ஜி., அடிப்படை பாடத்தை தெரிந்து
கொள்ள வாய்ப்புள்ளது.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள்: கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்களை இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர் களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மாற்றப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-ல், அதிமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஒய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 2016-ல் அதிமுக, மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது.

குழுவின் புதிய தலைவர்

குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிசாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், சாந்த ஷீலா நாயர் பதவி விலகிவிட, தற்போது அந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பங்களிப்புஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகளை அறிந்து,அதன்படி குழுவின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பங்களிப்புஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றுவோர், தங்கள் கணக்குத் தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொகுப்புவிவர மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2016-17-ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத் தாள்களை ‘http://cps.tn.gov.in’ என்ற இணையதள முகவரியிலும், சந்தாதாரர்கள் ‘http://cps.tn.gov.in/public’ என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்தவர்கள் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர் எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மை தேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் முதல் 6 இடங்களை பெருநகர சென் னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

 அவர்களின் பெயர் விவரங் கள் வருமாறு:- 1. காயத்ரி சுப்பிரமணியன், மாங்காடு. 2. பி. மணிராஜ், திருவொற்றியூர். 3. டி.தனப்பிரியா, நாமக் கல். 4. சுரேந்திரன், தேனி. 5. ஸ்ரீதேவி, நாமக்கல். 6. ஜெகதீசுவரன், டி.கல்லுப்பட்டி. இவர், செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன் தம்பி ஆவார். ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

DGE-பள்ளி மாணாக்கர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்துதலைமையாசியர்களுக்கு அறிவுரை அரசு தேர்வு இயக்ககம் வழங்கி உத்தரவு!!

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களைந்திடுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை-நாள் : 11.8.2016 !!

Senior Junior Pay Anomaly | Reg Director Proceeding


DEE PROCEEDINGS-டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது- தகுதியானவர்களை 20.08.2017 க்குள் தேர்வு செய்து அனுப்ப இயக்குனர் உத்திரவு!PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?


PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால்  தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை. 75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.

1) மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை

2) பயோ கெமிஸ்ட்ரி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை

3) அரசியல் அறிவியல் பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை

4) வணிகவியல், புவியியல், தாவரவியல், ஆங்கிலம் பாடத்திற்கு மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது

5) பொருளியல் பாடத்தில் 319 காலியிடத்தில் 50 மட்டுமே நிரம்புகிறது

6) வரலாறு பாடத்தில் 314 காலியிடத்தில் 212 மட்டுமே நிரம்புகிறது

7) விலங்கியல் பொருளியல் பாடத்தில் 7 பணியிடத்திற்கு ஆல் இல்லை187 நிரம்பும்

8) வேதியியல் பாடத்தில் 388 காலியிடத்தில் 97 மட்டுமே நிரம்புகிறது

9) இயற்பியல் பாடத்தில் 10 பணியிடத்திற்கு ஆல் இல்லை369 நிரம்பும்

10) கணிதம் பாடத்தில் 8 பணியிடத்திற்கு ஆல் இல்லை353 நிரம்பும்

11) தமிழ் 421 பணியிடங்களுள் 150 பணியிடங்களுக்கு தகுதியான ஆள் இல்லை ஆள் இல்லை.

(குறிப்பு-  ஒன்றிரண்டு வேறுபடலாம்)

PG தேர்ச்சி சதவீதம்

TAM - 62.5%,

ENG - 99.5%,

MAT - 97.5 %,

PHY - 97.5 %,

CHE - 28.5 %,

BOT - 100 %,

ZOO - 96 %,

HIS - 68 %,

GEO - 100 %,

ECO - 19 %,

Commerce - 100 %,

PET - 96 %.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!