Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 14 August 2017

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU:

 

This time we got all the three awards. 

1. Nesamani Vengatachalam
2. Sakthivel Murugan 
3. Kalpana

Wishes to all the Three Awardees.. 

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் SMS அனுப்ப உதவும் MOBILE  APP

Click here

அரசு பள்ளியை மேம்படுத்த முகநூல் மூலம் வெற்றி கண்ட ஆசிரியர்

மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி!

"மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி,         ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப கற்பித்து வருவதால் இவருடைய கற்பித்தல் செயல்பாடுகளைப் பார்த்து அவ்வூரில் தனியார் பள்ளிக்குச் சென்ற பல மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். மக்கள்தொகை 440 பேர் மட்டுமே கொண்ட இவ்வூர் பள்ளியில் 26 மாணவர்கள் பயின்று வந்தனர். அதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்க்கும் வண்ணம் "மெல்ல கற்கும் மாணவர்களையும் படிக்க வைக்கும் பள்ளி" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்கினார். அதை முகநூலிலும் பதிவேற்றினார். அதைப் பார்த்து சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு பெற்றோர் இவரை தொடர்புகொண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் மூத்த மகன் கற்றலில் பின்தங்கி உள்ளதாகவும், இதுவரை மூன்று தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தும் கற்றலில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முகநூலில் பார்த்த துண்டு பிரசுரம் தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். பின்பு அப்பெற்றோரையும் அவர்களின் மகன்களையும் பள்ளிக்கு வரவழைத்து, மூத்த மகனின் கற்றல் நிலையை சோதித்தபோது அம்மாணவனுக்கு ABCD மட்டுமே தெரிந்திருந்தது. தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.

 

      கணக்கில் ஓரிலக்க கூட்டல் கணக்கு கூட தெரியாமலிருந்ததை அறிந்துகொண்ட ஆசிரியர் குருமூர்த்தி, மூன்று மாதங்களில் தங்கள்  மகனை படிக்க வைத்துவிடுவேன் என உறுதியளித்தபோது அப்பெற்றோர் அகமகிழ்ந்தனர். தற்போது அவர்களுடைய மகன்கள்  இருவருமே தாத்தா , பாட்டியுடன் அவ்வூரிலேயே தங்கி அப்பள்ளியில் படித்து வருகிறார்கள். ( மூத்த மகன் நான்காம் வகுப்பிலும் , இளைய மகன் மூன்றாம் வகுப்பிலும் படிக்கிறார்கள் ). இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுடைய மகன்களின் கற்றலில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு அப்பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அம்மகிழ்ச்சியை முகநூலிலும் பகிர்ந்துள்ளனர்.

       மேலும் எம். களத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரியும் "பேபி" என்ற உதவியாளர் இப்பள்ளிக்கு தபால் கொடுக்க செல்லும்போதெல்லாம் இப்பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்து , தன் மகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்காகவே இவ்வூருக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

       கற்றல் - கற்பித்தல் மட்டுமல்லாமல் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தன்னார்வலர்கள் மூலம் பள்ளிக்கு தரை ஓடு பதித்தல், வட்டமேசை மற்றும் நாற்காலிகள், 32' LED TV, ஒலி பெருக்கி, நூலகம் ஆகியவற்றை 

அமைத்துள்ளனர். 

        இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். திருமதி. சித்ரா அவர்களும் , உதவி ஆசிரியர் குருமூர்த்தியும் பள்ளியின் வளர்ச்சிக்கும் , மாணவர்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்

நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!!

தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது. 

இதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்'  தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசரசட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.

இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.

'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார். இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.

இதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.

பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது;மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

எனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார். 

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;பல பள்ளிகளில் இதற்கு ஆசிரியர்கள் இல்லை.

தற்போது இப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுனர் (கம்ப்யூட்டர் அறிவியல்) மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., பி.எட்., - பி.சி.ஏ., பி.எட்.,- பி.இ., பி.எட்., என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். இதுவரை கம்ப்யூட்டர் பாடப்பிரிவு வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மூன்று வகை சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிளஸ் 1 தேர்வை பொறுத்த வரை, மாணவர்களுக்கு சிலசந்தேகங்கள் இருக்கும். இரண்டரை மணி நேரம் தேர்வு எழுவதற்கு ஏற்ப, வினாத்தாள் தயாரித்து இருக்கிறோம். இதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களை கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் அனைவருமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்

நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், தேர்வு செய்யப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான, நல்லாசிரியர் விருதுக்கான மாநில பட்டியல் தயாரிப்பு, ஒரு வாரத்திற்கு முன் துவங்கியுள்ளது. மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்யவும், விண்ணப்பிக்காத சிறப்பு ஆசிரியர்களைக் கண்டுபிடித்தும், பட்டியலில் சேர்க்க, தேர்வு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி துறை இயக்குனர், இளங்கோவன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதில், ஆறு வகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செய்தவராக இருக்க வேண்டும்

 வேலை நாட்களில் விடுமுறை எடுக்காமலும், பள்ளிக்கு தாமதமாக வராதவராகவும் இருக்க வேண்டும்

 பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறைகளின் துாய்மை பேண நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

 மரக்கன்றுகள், தோட்டம் ஆகியவற்றை பராமரிப்பதில், அக்கறை கொண்ட வராக இருக்க வேண்டும்

 மாணவர்களின் கல்வித்திறனுடன், தனித்திறன் வளர்க்க உதவி இருக்க வேண்டும்

 அரசு விழாக்களில், பள்ளி மாணவர்களை பங்கேற்க செய்திருக்க வேண்டும்

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில்HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு விவரம்.

ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு!!!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் அன்புச்சுவரில் மலைபோல் குவிந்த ஆடைகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட அன்புச் சுவர் பகுதியில், எடுத்துக்கொள்ள

ஆட்களின்றி மலைபோல் ஆடைகள் குவிந்துள்ளன. புத்தகங்களை பரிமாறிக்கொண்டால் அறிவுப் பசிக்கும் களமாக அன்புச் சுவர் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பலரது வீடுகளில் பழைய புத்தகங்கள், ஆடைகள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் நல்ல நிலையில் இருந்தாலும், பயனின்றி குவிந்து கிடக்கும். இவற்றை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க மனமுள்ள நபர்கள் பலர் உள்ளனர்.

அதேவேளை, இதுபோன்ற பொருட்களை புதிதாக வாங்க முடியாத மக்கள் பழைய பொருட் களாவது கிடைக்குமா என்று உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், தன்மானம் கருதி பிறரிடம் கேட்காமல் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாலமாக ‘அன்புச் சுவர்’ திட்டத்தை, தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த மாதம் 24-ம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கினார்.

நல்ல வரவேற்பு

ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் பகுதியில் இதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புத்தகங்கள், ஆடைகள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இவை யாருக்காவது தேவைப் பட்டால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான பொதுமக்கள் தங்களிடம் உள்ள நல்ல நிலையில் உள்ள தேவையற்ற பொருட்களை இங்கு கொண்டுவந்து வைத்துச் செல்கின்றனர். இவற்றை தேவைப்படும் நபர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

குவியும் ஆடைகள்

இதில், பழைய ஆடைகள் மட்டுமே அதிக அளவில் குவிகின்றன. மலைபோல் குவிந்து கிடக்கும் துணிகளை எடுத்துச் செல்ல பலர் கூச்சப்பட்டு அருகில் செல்லவே தயங்குகின்றனர். குப்பைக்கூளம்போல் குவிந்து கிடக்கும் துணிகளை அவ்வப்போது தன்னார்வலர்கள் வந்து, மடித்து வைக்கின்றனர்.

மலைபோல் கிடக்கும் ஆடைகளால் இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போகிறது. துணி இல்லாமல் இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். பழைய துணிகளை அணிவதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பு வதில்லை.

அதனால், அன்புச் சுவரை குப்பைத்தொட்டிபோல் கருதி, பழைய கந்தல் துணிகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நூல்கள் தேவை

நூலாடைகள் மிகவும் பழையதாக இருந்தால் அவற்றை அணிந்து செல்வது கவுரவமான தோற்றத்தை அளிக்காது. ஆனால், நூல்கள் எவ்வளவுதான் பழையதாக இருந்தாலும் அவை அறிவுப் பசிக்கு தீனி கொடுத்துக்கொண்டே இருக்கும். படித்து முடித்த புத்தகங்களை இங்கு வைத்தால் அவற்றை எடுத்துச் சென்று படிக்கலாம். எடுத்துச் செல்பவர் படித்ததும் மீண்டும் இங்கு கொண்டுவந்து வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும். அறிவை வளர்த்துக் கொள்ளவும் வழிவகுக்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களை வைத்தாலும் ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மக்களின் அறிவுப் பசிக்கு தீனி அளிக்கும் களமாகவும் அன்புச் சுவர் மாற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அன்புச் சுவரை குப்பைத் தொட்டியாக மாற்றாமல் நல்ல நிலையில் உள்ள ஆடைகளை மட்டுமே வைக்க வேண்டும். பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட் களையும் வைக்கலாம். திட்டத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக கொண்டுசெல்வது மக்களிடம்தான் உள்ளது. மக்களிடம் மாற்றம் வந்தால் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

உள்ளூர் மக்கள் தரும் ஊக்கத்தால் உயர்ந்து வரும் உறங்கான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

காலை நேரத்தில் பள்ளி வாசலில் வந்து நிற்கும் வாகனங்கள்; வண்ணமயமான சீருடைகளுடன் பள்ளிக்குள் நுழையும் மழலைகள்; வகுப்பறைகளில் டைல்ஸ் பதிக்கப்பட்ட தரைகள்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டி

கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் காட்சிகள் இவை. ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட இந்தப் பள்ளியின் வகுப்பறைகளை முதலில் பார்ப்பவர்களுக்கு இது அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், உள்ளூர் மக்களும் இந்த அரசுப் பள்ளியை மேம்படுத்த ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிப்பதற்காக தனியார் ஆங்கிலப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அரசு தொடக்கப் பள்ளிக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, இந்த ஊர் மக்கள் தங்கள் சொந்த செலவில் ஆசிரியர்களை நியமித்து எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான வண்ணமயமான சீருடை, அடையாள அட்டை, புத்தகங்கள், நோட்டுகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி கிடைக்கும் மழலையர் கல்வி, இங்கு இலவசமாகவே கிடைப்பதால், ஏராளமான குழந்தைகள் இந்த மழலையர் வகுப்புகளில் சேருகிறார்கள். அந்தக் குழந்தைகள் அத்தனை பேரும் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்து விடுவதால் உறங்கான்பட்டி பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

“உள்ளூர் பள்ளியில் வசதிகள் இல்லை என்பதால் தரமான கல்வி கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது என்பதில் இந்த ஊர் மக்கள் உறுதியாக உள்ளனர். தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்கும் எல்லா வசதிகளும் இந்த அரசுப் பள்ளியிலும் கிடைக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். இந்த நோக்கில் பள்ளி மேம்பாட்டுக்காக பல உதவிகளை கிராம மக்கள் செய்துள்ளனர்” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜி.விஜயகுமாரி.

பள்ளி வளர்ந்து வரும் விதம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:

ஜி.விஜயகுமாரி

நான் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக 2009-ம் ஆண்டில் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டில் 108 மாணவர்கள் பயின்றனர். அதன் பிறகு தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு அதிக அளவிலான மாணவர்கள் சென்றதால் எங்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இதனையடுத்து, ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்குவது என முடிவெடுத்து, 2012-2013-ம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கினோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ஊர் மக்களின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டில் யோகா, கராத்தே பயிற்சிகளை தொடங்கினோம்.

மாணவர்களின் ஆங்கில கையெழுத்துகளை மேம்படுத்துவதற்காக, அதற்காகவே பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியரை கிராம மக்கள் நியமித்தனர். ஆங்கில உரையாடல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சறுக்குப் பலகைகள் உட்பட மாணவர்கள் விளையாடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன் டிஜிட்டல் போர்டு, புரொஜக்டர் கருவிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை வசதியை ஏற்படுத்தித் தந்தார். பரதநாட்டிய பயிற்சி தொடங்கப்பட்டது. கணித அறிவை மேம்படுத்த அபாகஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண், ரத்த வகை, செல்போன் எண் போன்ற விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தகவல் தொடர்புக்காக மாணவர்களுக்கு டைரி விநியோகிக்கப்பட்டது.

இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் பா.தெய்வேந்திரன். இவர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தன்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் பலரை இணைத்து சமூக மையம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அந்த அமைப்பின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை பள்ளிக்கு செய்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சி பற்றி கருத்து தெரிவித்த அவர், “நான் இந்தப் பள்ளியில் படித்த போது எனக்கு கிடைக்காத பல வசதிகள், இப்போது படிக்கும் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும். அது மட்டுமல்ல; சிங்கப்பூரில் படிக்கும் எனது குழந்தைக்கு கிடைக்கும் தரமான கல்வி, எங்கள் கிராமத்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த நோக்கில் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம்” என்றார்.

மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

பள்ளி வளாகத்தில் விளையாடி மகிழும் குழந்தைகள்.   -  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கிராம மக்களும், ஆசிரியர்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மாணவர்களின் கற்றல் திறன் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி, சுற்றியுள்ள 6 வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், சொந்த ஏற்பாட்டில் வாகனங்களை ஏற்பாடு செய்து, தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாக வளர்ந்து வரும் உறங்கான்பட்டி பள்ளி, 2014-2015-ம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றது. தமிழக அரசு வெளியிட்ட ‘தாயெனப்படுவது தமிழ்’ என்ற குறுந்தகடு எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ளது. தமிழ் செய்யுள் பாடல்களை இன்னிசை, நடனத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் இந்த காணொலித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘யானை வருது.. யானை வருது..’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் அனைவரும் உறங்கான்பட்டி பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இவர்களைத் தவிர எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 40 பேர் பயின்று வருகிறார்கள். ‘யானை வருது’ பாடலைப் போலவே உறங்கான்பட்டி பள்ளியும் பிரபலமடைந்து வருவதே இந்த வளர்ச்சிக்கு காரணம்.

தலைமை ஆசிரியரை தொடர்புகொள்ள: 99444 99761.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!