Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 August 2017

தொடக்ககல்வி பட்டயப்படிப்பு கலந்தாய்வு ஆக 31வரை நீட்டிப்பு

கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (எஸ்இஆர்டி) க.அறிவொறி புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஒற்றைச் சாளரமுறை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதால் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தைகள் இந்தப் பயிற்சியில் சேர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறத் தக்க வகையில் மீண்டும் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இது ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தங்களது உண்மைச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உரிய கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை ஆணை பெறலாம்

DEE PROCEEDINGS- Child Friendly Toilet- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு!

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை நான்கு முறை சந்தித்திருக்கிறோம்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் வரையறைப்படி, உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாடத்திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறினார்.

ஆசிரியர் பற்றாக்குறை இல்லை

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம்.கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை’’என்று அமைச்சர் தெரிவித்தார்.

JACTTO GEO : 22.08.2017 STRIKE - TEACHERS INDIVIDUAL LETTER FORMAT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

முடியாது:

‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தடை:

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்

மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆகஸ்ட் 18&19 ஆம் தேதி நடைபெறும்!!

NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update)

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின்  அவசர சட்டவரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அவசர சட்டவரைவு சரியானதே என்று தலைமை வக்கீல் வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக நீட் அவசர சட்ட வரைவு 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

1605 அங்கன்வாடி காலி பணியிடங்கள்: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

திருநெல்வேலி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1,605 அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி உடையவர்கள் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 21 வட்டாரங்களில் காலியாகவுள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கும், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கும்  நேர்முகத் தேர்வு,  இன சுழற்சி முறையில் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இப்பணியிடங்களுக்கு பெண்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2017 அன்று 25 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 38 வயது, விதவை மற்றும் ஆதரவற்றோர் 40வயதுக்குள்பட்டவராகவும் இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளரைப் பொருத்தவரை விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும்,1.7.2017 அன்று 20 முதல் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 43 வயது, விதவை மற்றும் ஆதரவற்றோர் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கலாம்.

விண்ணப்பதாரர் காலியாகவுள்ள மையம் உள்ள ஊரில் வசிப்பவராகவோ அல்லது 10 கி.மீ.தொலைவிற்குள் வசிப்பவராகவோ இருக்கலாம். இந்த தொலைவிற்குள் இருந்து யாரும் விண்ணப்பிக்காவிட்டால், அவ்வூராட்சியை ஒட்டி 10 கி.மீ.க்கு மிகாமல் உள்ள ஊரில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர். நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டு, இல்லையெனில் அதே மண்டலத்துக்குள்பட்டவர் தகுதி உடையவராவர்.

இதற்கான விவரங்கள் w‌w‌w.‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌n‌i​c.‌i‌n  என்ற திருநெல்வேலி மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று,வயதுச்சான்று, இருப்பிடச் சான்றுக்கான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் நேரிலோ, பதிவு தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் ஒப்புதல் ரசீது பெற்று செல்ல வேண்டும்.

DEE PROCEEDINGS- TANII-தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு.

PGTRB- CV INDIVIDUAL CALL LETTER PUBLISHED


CLICK HERE - PGTRB INDIVIDUAL CALL LETTER

கிராமத்தின் அடையாளத்தை மாற்றிய அரசுப் பள்ளி மாணவர்கள்

கிராமப்புறம் என்றாலே திறந்தவெளிக் கழிப்பிடமும் இருக்கும் என்ற பொதுவான சிந்தனையிலிருந்து

மாறுபட்டுள்ளது கோவை மலுமிச்சம்பட்டி கிராமம். ‘எங்கள் ஊரில் திறந்தவெளிக் கழிப்பிடங் கள் இல்லை, அதனால் நோய்த் தொற்றுகளும் இல்லை’ என மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு சுகாதாரமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த பணியைச் செய்தது, அரசு தொடக்கப் பள்ளி யில் பயிலும் சின்னஞ்சிறு சிறுவர்கள் என்பது தான் வியப்பான செய்தி.

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மலுமிச்சம்பட்டி. கோவை மாநகரை ஒட்டிய, கிராமப்புறம் என்பதால் வளர்ச்சிக் குறியீடுகள் இங்கு அதிகம். அதேசமயம் கிராம ஊராட்சி என்பதால் அடிப்படை வசதிகள் சற்று குறைவு. ஆனால், கல்விக்கு மட்டும் இங்கு எந்தக் குறையும் இல்லை. தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்களின் உதவியால் அரசுப் பள்ளிகளே இங்கு மாதிரிப் பள்ளிகளைப் போல மிளிர்கின்றன. அதன் பலனாக சிறுவயதிலேயே கல்வியோடு, சமூகநலனையும் இங்குள்ள மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வருகிறார்கள்.

தடையில்லா கல்வி கற்க சுகாதாரமான சூழலும் அவசியம் என்பதை உணர்ந்து தங்களது கிராமத்தை திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமமாக மாற்றியுள்ளனர் இங்குள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள். இந்த பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விருதையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.

கமாண்டோ படை

‘மொத்தம் 10 மாணவர்கள். குட்டி கமாண்டோ படை’ என்பது அவர்களது குழுவின் பெயர். முக்கிய நோக்கம் கிராமத்தைக் காப்பது. அதாவது, திறந்தவெளியில் மலம் கழித்து கிராமத்தை அசுத்தப்படுத்த நினைப்பவர்களை விரட்டுவது. அதற்காக இவர்கள் எடுத்த ஆயுதம் விசில்.

‘அதிகாலை நேரத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்க யாராவது ஒதுங்குகிறார்களா என கண்காணித்து, விசில் அடித்து அவர்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 மாதமாக இந்தப் பணி தொடர்கிறது. இதனால் கிராமமே சுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலைக்கு மாறியுள்ளது’ என்கின்றனர் பொதுமக்கள்.

மாணவர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு பதாகை. (அடுத்த படம்) சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற மலுமிச்சம்பட்டி தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள்.

பள்ளித் தலைமையாசிரியை ஆர்.சதி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை நம் கிராமத்திலிருந்து தொடங்கலாம் என மாணவர்கள் ஆலோசனை கூறினார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் தாங்களே ஒரு குழுவை உருவாக்கி திறந்தவெளியில் யாரையும் இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூடாது என முடிவு செய்தனர். மீறுவோரை விசில் அடித்து விரட்டுகிறார்கள்.

அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை இவர்களது கண்காணிப்புப் பணி இருக்கும். இதனால் கிராமத்தின் சூழலே மாறிவிட்டது. பலரும் வீடுகளிலேயே கழிப்பிடம் கட்டிவிட்டனர். வசதி இல்லாதவர்கள் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்துகிறார்கள்.

இடையே, பொதுக்கழிப்பிடத்திலும் தண்ணீர் வருவதில்லை, மின் இணைப்பும் இல்லை என பிரச்சினை வந்தது. அதையும் இந்த மாணவர்களே ஊராட்சி மன்றத்தில் தெரிவித்து சரிசெய்துவிட்டனர்.

இந்த முயற்சியால் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் குறைந்து, இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை 150-ல் இருந்து 280 ஆக உயர்ந்துள்ளது’ என்றார்.

ஒரு பள்ளி, நல்ல மாணவர்களை உருவாக்கினால்தான், அந்த மாணவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள். அதற்கு மலுமிச்சம்பட்டி கிராமம் ஓர் உதாரணம்.

ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து செல்ல கோரிக்கைக்கு முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட பதில்.

National Achievement Survey - Model Question Papers

National Achievement Survey - Model Question Papers

Tamil 1

Tamil 2

Science 1

Science 2

Science 3

Science 4

Maths 1

Maths 2

பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு

பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு

பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் ஆறு ஆண்டுகள் பழமையான, ஒன்றாம் வகுப்பு முதல்,

10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், விரைவில் மாற்றப்பட உள்ளன. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திட்ட வடிவமைப்பு குழு மற்றும் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்,அனந்தகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழுவினர், பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம், கல்வியாளர்களின் பாடத்திட்ட பங்களிப்பு கூட்டம், கருத்தரங்கம், பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு போன்ற நிகழ்வுகளை, நடத்தி வருகின்றனர்.இது குறித்து, பல மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது.அடுத்தகட்டமாக, கருத்தாய்வு கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது. இதில், கலைத்திட்ட உறுப்பினர்கள் பங்கேற்று, கருத்துக்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய உள்ளனர்.

DEE,DSE-தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் - வழிமுறைகள்

DEE,DSE-தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் - வழிமுறைகள்

http://dee.tnschools.gov.in/Touch it

USER NAME: DISE CODE

PASSWORD: EMIS PASSWORD


http://dee.tnschools.gov.in/accounts/login/

Direct to login page👆

உங்கள் பள்ளியின் இணையதள பக்கத்தில் காண்பிக்கப்படவேண்டிய படங்கள் மற்றும் செய்திகளை பதிவேற்றலாம்.

பதிவேற்றிய படங்கள் மற்றும் செய்திகள் சரியாக உள்ளனவா என்பதை உங்கள் பள்ளியின் முகப்பு பக்கத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

பதிவேற்றிய படங்கள் மற்றும் செய்திகள் சரியாக உள்ளனவா என்பதை Reports பக்கத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதால் கவனத்துடன் பதிவேற்றம் செய்யவும்.பதிவேற்றப்படும் தகவல்கள் தமிழில் பதிவேற்றவும்

முக்கிய குறிப்புகள்

1.அனைத்து வகை புகைப்படங்களும் 50kb க்கு குறைவாக இருக்கவேண்டும்.

2.Gallery Images இல் 20 புகைப்படங்களுக்கு மேல் பதிவேற்ற வேண்டாம்.

2.Gallery Video இல் 1 வீடியோ மட்டும் பதிவேற்றவும் 3MB-க்குள் இருக்க வேண்டும் .

3.Address ஒருமுறை பதிவு செய்யவும். தவறு ஏற்படின் மீண்டும் புதியதாக பதிவு செய்யவும்.

4.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:

அ) S.மகேஷ் -9444322538

ஆ) S.தாமரைச்செல்வன்- 9444414417

இ) M.ரவிக்குமார்- 9788268911

TRB : சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு -- ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்குஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் அரசுப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஓவிய ஆசிரியர், உடற்கல்வி, இசை, தையல் உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 20-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் தொழிற்கல்வி இயக்குநரகம் அளித்து வரும் கவின்கலை டிப்ளமோ படிப்பு அல்லது சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அளித்து வரும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு இந்த கல்வித்தகுதி அதிகபட்சமானது. பள்ளிக்கல்வித் துறை சிறப்பு விதிக்கு புறம்பாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள என்னைப் போன்றவர்கள் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கும் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்ரமணியம், இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை 4 வாரத்தில் பதிலளிக்கஉத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!