Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 19 August 2017

இயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்!'

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் இப்போது கடைவீதிகளில் கண்ணைப்பறிக்க துவக்கிவிட்டன. இனி, 'ஸ்பீக்கர்' சத்தம் முழங்க, மூன்று நாட்களுக்கு வீதியெங்கும் ஒரே ஆரவாரம்தான்.

அதே சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அருகிலுள்ள குளம், குட்டைகளில் கரைத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கி அனைவரும் நகரத்துவங்கி விடுவர். ஆனால், அதன்பிறகு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.

கவர்ச்சிக்காக, பல கெமிக்கல்கள் சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர் மாசைத் தவிர்க்கும் வகையில், 'கிரீன் கணபதி' எனும் விதை விநாயகர் சிலையை தயாரித்து அசத்தியுள்ளனர் கோவையை சேர்ந்த, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தினர்.

சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத, அதேசமயம் வருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, விதைகளை அவர்கள் கையால் விதைக்கும் வகையில், இயற்கை விதைகளை இணைத்து வடிவமைத்த விதம் அட்டகாசம்.தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றியபடியே இந்த தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் சுவரஜித் நம்மிடம் பகிர்ந்தவை...

அனைத்து விதமான சமூகத்தாக்கத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து துவங்கினோம். இதன்மூலம், கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.

தற்போது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ரசாயன சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் தீமைகள் எடுத்துக்கூறும் விதமாக, பசுமை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக்
கொண்டு இந்த விநாயகர் சிலைகளை வடிவமைக்கிறோம்.

கூடவே, இயற்கை விதைகளையும் சிலைகளில் நடுவில் இணைந்து தயாரித்து வருகிறோம். இதில், இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மென்ட்டில் வாழும் நகர வாசிகளுக்கு ஏற்ப, சிலையில், தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய், முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகளை இணைத்துள்ளோம்.

இதுபோன்று இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் தயாரிக்கப்படும் சிலையைக் கரைப்பதற்கு நீர் நிலைகளைத் தேடி அலைந்து சிரமப்படத் தேவையில்லை. சதுர்த்தி முடிந்தவுடன் வீட்டின் வெளியே வாலி அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வைத்தால் மட்டும் போதும்.அதில் இருக்கும் களி மண் கரைந்து விடும். பின் அதனைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் போதும் ஒரு வாரத்திலேயே அதனுள் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம்.

ஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காக பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைத்துள்ளோம்.

பளீச்சிடும் வண்ணங்களில் இந்த விநாயகர் சிலைகள் இருக்காது. இயற்கை களிமண் நிறத்திலே கலைநுட்பத்துடன் வடிவமைத்துள்ள சிலைகள், 3 இன்ச் முதல், 2 அடி வரையில் உள்ளன. குறைந்தது, 24 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரையில் விற்பனைக்கு கிடைக்கும்.பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கையை தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு பலதரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

விரும்புவோர் 96556 67775 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாழ்த்துக்கள் .

தமிழ் மண்ணே வணக்கம்.

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி!

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும்சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள்பெற்று இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் lசெய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற,எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

  செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.

 செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்

21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.

தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில், அரசும், ஊழியர்களும், ஓய்வூதிய தொகையை பங்கிட்டுச் செலுத்த வேண்டும்.ஆனால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, 14 ஆண்டுகளான நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியருக்கான முழுப் பலன் வழங்கப்படவில்லை.
'இது, பாதுகாப்பில்லாத திட்டம்' எனக் கூறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2016 பிப்ரவரியில், தொடர் போராட்டமும் நடத்தினர். அதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, வல்லுனர் குழுவை அரசு அமைத்தது.இக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைமையில், வல்லுனர் குழுவினர், 21ம் தேதி முதல், மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினரின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்


திருவண்ணாமலை: புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு
கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

-திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் மைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த்
எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருப்பது, இதுவே முதல்முறை.


TNSET -2017 Result Will be Published On 21st August 2017 at 5 pm | Mother Teresa Women's University

புதிய பாடத்திட்டம் குறித்த கருத்து கேட்பு மனு

புதிய பாடத்திட்டம் உருவாக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு நிகழ்வினை அரசு நடத்தியுள்ளமை வரவேற்க்கத் தக்க நிகழ்வாகும்.

நான் அரசுப் பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டிலுருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றுகிறேன்.இந்த 3 ஆண்டுக்கான என் அனுபவத்தில் விளைந்த,  புதிய தமிழ்ப் பாடத்திட்டம் குறித்தான கருத்துக்கள்.
பாடத்திட்டம் எவற்றையெலாம் கொண்டிருக்க வேண்டும்?

6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் காந்தியைப் பற்றியப் பாடம் கட்டாயம் உண்டு. ஆனால் பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் எத்தனை உள்ளன?

இந்தியாவிற்கு காந்தியடிகள் முக்கியம்தான், அவரைப் பற்றிய பாடம் வைப்பதில் எங்களுக்கு விருப்போ வெறுப்போ அல்ல. ஆனால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் காந்தியை விட பாரதி மிக முக்கியம்.

ஆகவே, பாரதியின் தனிச் சிறப்பை விளக்கும் வகையிலும் பாரதியின் புதுக்கவிதையின் நடையை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும்  பாரதியின் சுதந்திர, பெண்ணடிமைக்கு எதிரான,சாதியத்திற்கு எதிரான,சமுதாய மறுமலர்ச்சி பாடல்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

இன்று எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அறமின்மை, கையூட்டு, சமுதாய சீரழிவு போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.அதற்கு யார் காரணம் என ஊடகங்களில் விவாதிக்கப் படுகிறது.

 இறுதியில் அக்குற்றத்தை செய்த குற்றவாளியை விட பெருங்குற்றவாளியாக பள்ளிகளும் ஆசிரியர்களும் சித்தரிக்கப்படுகின்றனர்.பள்ளியில் அவனுக்கு ஒழுக்கம் கற்பிக்கப்பட்டிருந்தால் அவன் குற்றவாளியாக உருவாகியிருக்க மாட்டான் என்பது அவர்களது வாதம்.உண்மைதான் அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

 ஒரு மனிதனை உருவாக்குவதில் மரபுக் காரணியான ஜீன்களை விட புறச்சூழல் என்பது மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.ஆனால் புறச் சூழலான பள்ளிக்கு வரும்போதே அவன் சமூக குற்றவாளியாகத்தான் வருகிறான் என்பதே உண்மை.இது ஏதோ சப்பைக் கட்டு கட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.மிக முக்கியமான உண்மை.களத்தில் உள்ளவர்களுக்கு இது புரியும்.

 அவன் குற்றவாளியாக மாறுவதற்கான உபயம் திரைப்படங்கள்.திருடன், அயோக்கியன், கொலைகாரன், கொள்ளைக்காரன், கல்வியில் பின்தங்கியவன், கற்பழிப்பவன்தானே இன்றையத் திரைப்படத்தின் ஹீரோ(நாயகன்). அவன் நாயகனே அப்படியானால் அவனும் அப்படித்தானே இருப்பான்.

மாணவனின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவனுக்கு ஹீரோவாக ((நாயகன்) இருந்ததெல்லாம் அந்த காலம். இது வெர்சன்(பதிப்பு) 2.0.இப்பொழுது இவர்கள் அவனுக்கு வில்லன்கள்.எனவே இந்த வேறுபாட்டை களைய எவ்வகையிலேயினும் உதவி புரிய முடியுமா என்று பாருங்கள்.

ஒவ்வொரு பாடம் முடியும் பொழுதும் அப்படத்தினால் அம்மாணவனுக்கு ஏற்படக்கூடிய நல்விளைவு குறித்த செய்தியைப் பாடத்தின் இறுதியில் குறிப்பிடுங்கள். ஏதோ ஒரு நற்பன்பை பெறுவதற்காகத்தானே அவன் கற்கிறான்.

எனவே அந்த நற்பண்பு(கற்றல் விளைவு) எதுவென்று பாடப்புத்தகத்திலேயே குறிப்பிடுங்கள். அவ்வாறு விவரிப்பது ஆசிரியரின் கடமையென்று நீங்கள் கூறினால் அனைத்து ஆசிரியர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

திருக்குறளுக்கான விளக்கவுரை மாணவன் படித்து வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் இல்லை. மனப்பாடம் செய்யும் வகையில் மட்டுமே உள்ளது.அதனால் விளக்கவுரைக்கான மொழிமுறையை மாற்றி அமையுங்கள்.

தமிழ் மொழியின் மீதான பற்றையும், தேசத்தின் மீதான அக்கறையும், நாம் உலகிற்கே முன்னோடியான வாழ்க்கைமுறை கொண்டவர்கள் என்பதையும் விளக்கும் பாடப்பகுதிகள் இருக்குமாறு அமையுங்கள்.

மாணவனுக்கு தத்துவம் சார்ந்த செய்திகளை அறிமுகப்படுத்துங்கள்.அவனது சூழ்நிலைக்கும் வயதிற்கும் ஏற்ற தத்துவப் பாடங்களை இடம் பெற செய்யுங்கள்.

 பாடத்திட்டம் எவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது! 

தயவுசெய்து ஒரு வகுப்பில் அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுங்கள். மாணவனின் பார்வையில் ஒரு பாடம் எளிமையாகவும் மற்றொரு பாடம் கடினமாகவும் இருக்காத வகையில் பாடத்திட்டத்தை அமையுங்கள்.

ஒவ்வொரு மாணவனின் பார்வையிலும் பாடங்களின் மீதான கண்ணோட்டத்தில் சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால் தற்பொழுது உள்ள பாடத்திட்டத்தில் அவனுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.

அதாவது ஒரு படத்திற்கு 75 மதிப்பெண்களுக்கும் வேறொரு பாடத்திற்கு 200 மதிப்பெண்களுக்கும் அவன் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும் பொழுது,  75 மதிப்பெண் பாடம் மற்றும் ஆசிரியர் மீது விருப்பும் 200 மதிப்பெண் பாடம் மற்றும் ஆசிரியர் மீது வெறுப்பும் உருவாவது இயல்பே. இதில் பாடவேளை சிக்கல் வேறு எழுகிறது. எனவே அதைத் தவிருங்கள்.

 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 'திரைப்படக் கலை உருவான கதை' என்ற தலைப்பில் ஒரு பாடம் உண்டு.அந்த பாடத்தின் மூலம் மாணவர்கள் எந்தவிதமான அறிவுத்திறனை வளர்த்து கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. திரைப்படத்தால்  தமிழ்ச் சமுதாயம் எவ்வளவு சீர் கெட்டு உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே அது போன்ற பாடங்கள் இடம் பெற கூடாது.

நீதிக் கதைகள் எங்கே போனது பாடத்திட்டத்தை உருவாக்கும் நீதிமான்களே! நீதி கற்பிக்கப்படாமலேயே அவனிடம் நீதியையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

துணைப்பாடம் என்ற பெயரில் உள்ள எதுவேனும் நீதியைப் போதிக்கின்றனவா? அப்படியிருந்தால் ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டுங்கள்.தமிழில் துணைப்பாடத்திற்கு பொருந்த கூடிய நூல்களுக்காப் பஞ்சம்!

பின்பு ஏன் நமது சமூக சூழலுக்குப் பொருந்தாத அயல் நாட்டு மொழிபெயர்ப்பு கதைகள்.உதாரணம்:அடித்தளம்- 10ஆம் வகுப்பு. எனவே துணைப்பாடத்தில் நேரடியாக நீதியைப் போதிக்கும்  தமிழ் மரபு சார்ந்த துணைப்பாடங்களை இடம்பெற செய்யுங்கள். 

இறுதியாக,  பாடப்புத்தகத்தில் கருத்துகளை விளக்கப் பயன்படும் வாக்கியங்கள் மாணவனுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணும் வகையில் அமையுங்கள்.அதாவது மேடையில் அறிஞர் அண்ணா பேசுவதற்கும் கல்வியறிவற்ற சுப்பன் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு.அதேபோல்தான் எழுத்து நடையிலும். அதை கவனத்தில் கொள்ளுங்கள்!

அன்புடன்....
மணியரசன் ரங்கநாதன் (8489306424)

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன.

உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.
தொழிற்கல்வியில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கும் விடுதி  மாணவர்களுக்கு, மாதம் 700 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு, மாதம் 400 ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது வேறு எந்த முறையிலும் உதவித்தொகை பெறக் கூடாது. பெற்றோர் மாத வருமானம் 15,000 ரூபாய்கு மேல் இருக்கக் கூடாது.

தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அத்துடன் கல்வி சான்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான சான்று, வருமான சான்று, விடுதியில் சேர்ந்து படிப்பதற்கான சான்று அகியவற்றை இணைத்து, National Handicapped Finance and Development, Corporation (NHFDC), Red Cross Bhawan, Sector12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு ஆக.,31க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://nhfdc.nic.in என்ற இணையதள முகவரி அல்லது 0129 - 2226 910, 2287 512, 2287 513 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் -தொலைநிலைக்கல்வி- 2018-19 நாட்காட்டியாண்டி BEd சேர்க்கை. விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2017

பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017 இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில திட்ட இயக்குநரின் குறிப்பாணை!!

பள்ளிக்கல்வி - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீட்டு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் - ஆணை வெளியீடு.எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!