எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Monday, 21 August 2017
ஆசிரியர் தினம்" எப்படி கொண்டாடாடுவது என எங்களுக்கு தெரியும் - மத்திய அரசின் சுற்றறிக்கையயை நிராகரித்தது மேற்குவங்க அரசு
ஆசிரியர் தினம் தொடர்பாக சுற்றறிக்கை மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் எதிர்ப்பு
ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஆசிரியர் தினம் தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையை எங்களால் பின்பற்ற முடியாது.
ஒரு குறிப்பிட்ட அம்சம் தொடர்பாக கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளை ஆசிரியர் தினத்தன்று நடத்த வேண்டும் என்று அந்த அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பது நகைப்புக்குரியது.
ஆசிரியர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பது மேற்கு வங்க அரசுக்குத் தெரியதா? இத்தனை ஆண்டுகளாக அந்த தினம் எப்படி கொண்டாடப்பட்டு வந்ததோ அதைப் போலவே கொண்டாடுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு ஏற்கெனவே சுற்றறிக்கையை அனுப்பிவிட்டது. ஆசிரியர் தினமான, முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது மேற்கு வங்க அரசுக்குத் தெரியும் என்று பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய சுற்றறிக்கையில், "தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை ஆசிரியர் தினத்தில் நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐஐடியில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை 70,000 ரூபாய்
இந்தியா முழுவதும் அமைந்துள்ள 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் (ஐஐடி) , பெங்களூரூவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கல்வி உதவித்தொகையாக 70,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் மனித வளத்துறை அறிவித்துள்ளது.
'இந்திய தொழில்நுட்ப கழகங்களிலும், இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர்கள் ஒவ்வொரு மாதமும் 25,000 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இனி,இவர்களுக்கு ஆராய்ச்சி கல்வி உதவித்தொகையாக ஐந்து ஆண்டுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 70,000 ரூபாய் வழங்கப்படும்' என்று மனித வளத்துறையின் உயர்கல்வி துறை செயலர் கெவல் குமார் சர்மா தெரிவித்து இருக்கிறார்.
இவர் 'தகுந்த உதவித்தொகை வழங்கப்படாததால் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இனி, தகுந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலம் இந்தியாவிலேயே ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். இதன்மூலம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மேம்பாடு அடையும். இந்த உதவித்தொகை பிரதமர் நரேந்திர மோடி ஆராய்ச்சி உதவித்தொகை என்ற பெயரில் வழங்கப்படும். இதற்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்' என்று தெரிவித்து இருக்கிறார் கெவல் குமார் சர்மா.
பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை
கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், 'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ICT AWARD FOR TEACHERS
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை, சிறப்பான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விருதுக்கு ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து தேர்வு செய்ய மாநில தேர்வுக்குழு கூட்டம், சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து இறுதித்தேர்வு வரும் 24ல் நடக்கிறது.
68 ஆண்டுகள் பாலம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு!
சூளகிரி ஒன்றியம் செக்காருலு உள்ளிட்ட நான்கு கிராமங்களில்
60 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே பாலம் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி பஞ்., உள்ள செக்காருலு மற்றும் செம்பரசனப்பள்ளி பஞ்., சின்னபாப்பனப்பள்ளி, பெரியபாப்பனப்பள்ளி, ராமசந்திரபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செக்காருலு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதனால், நான்கு கிராம மாணவர்களும், மூன்று கிலோ மீட்டர் தூரம், பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சாலை வசதியும் இல்லை. பேருந்தில் செல்வதற்கும் கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேல்நிலை கல்வி கற்க சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து சுளுரில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லவேண்டியுள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாமல் வேலை நிமித்தமாக செல்லும் மக்களும், செக்காருலு அருகே உள்ள சின்னாற்றை கடந்து, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக, சூளகிரி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால், சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளாக, சாலை மற்றும் பாலம் வசதி கேட்டு, பலமுறை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மக்களுக்கு அந்த வசதிகள் ஏற்படுத்தவில்லை. அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை !!
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
முக்கிய தகவல் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.
பதிவுதாரர்கள் இந்த ஆண்டு தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்துள்ளார்.
Renewal செய்ய தவறிய நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இருப்பின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்.
என்றாவது எம்ப்ளாயிமெண்ட் கார்டு தேவைப்படும் . அதனால் இதை பயன்படுத்தி கொள்ளவும்.
One Day Strike - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் காலை 09.30 மணிக்குள் அனுப்பிட உத்தரவு!! பள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!!
இன்று வெளியாகிறது Android ‘O’ இயங்குதளம்!!!
ஸ்மார்ட்ஃபோன் இயங்குதளமான ஆன்ட்ராய்ட் தமது அடுத்த பதிப்பை ஆன்ட்ராய்ட் ஓ என்ற பெயரில் வெளியிடுகிறது.
ஆன்ட்ராய்ட் தனது இயங்குதளப் பதிப்புக்களுக்கு ஜிஞ்சர் பிரெட், கப்கேக், டோனட், எக்லெய்ர்ஸ், ஐஸ் கிரீம் சேண்ட்விச், ஜெல்லி பீன், லாலி பாப், கிட்கேட், மார்ஸ்மல்லோ, நோகட் என்று உணவுப் பொருட்களின் பெயரையே வைத்துள்ளது.
புதிய பதிப்புக்கு ஓரியோ, ஆக்டோபஸ், ஆர்பிட் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய இயங்குதளத்தில் வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே பிற ஆப்களை இயக்கும் வசதியும், பின்னணியில் இயங்கிக் கொண்டு பேட்டரியைக் குறைக்கும் ஆப்களை நீக்கும் வசதியும் உள்ளது. கூகுள் பிக்ஸல், நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களில் முதலாவதாக அறிமுகமாவதாகவும், பிற ஸ்மார்ட்போன்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆன்ட்ராய்ட் அறிவித்துள்ளது
30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு
நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது.
மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.
இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.