Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 August 2017

செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை, 
உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார். “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40% எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை  உருவாக்க  தொடங்கிவிட்டது. 
 ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ.  ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.

ஜியோ ஸ்மார்ட் போன்

ஜியோ தற்போது ,  INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை  அறிமுகம் செய்துள்ளது.  அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான  முன்பதிவு  நாளை  முதல்  தொடங்குகிறது

ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )

ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை  இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட  வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.

இந்த அறிய வாய்ப்பை  பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம்  தேதி  முதல் (நாளை ) முதல் முன்பதிவு  செய்யலாம் என  இஷா  அம்பானி  அவர்கள்  தன்  ட்விட்டர் பக்கத்தில்   தெரிவித்து  இருந்தார்.

எப்படி  முன்பதிவு செய்வது ?

ஜியோவின்  அதிகாரபூர்வ  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து ,  ஜியோவின் இலவச  போனை  பெறலாம்.

அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ   ரூம்  சென்று ,  உங்கள் முன் பதிவை  உறுதி  செய்யலாம்  அல்லது  my jio app  மூலமாகவும்   முன்பதிவை செய்யலாம்  என்பது  குறிப்பிடத்தக்கது .

JACTTO - GEO அறிக்கை வெளியீடு !!!

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது

SCERT - 2 DAYS TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS - DIR PROC

DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை.750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -கல்வித்துறை முதன்மைசெயலர்

அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம்

ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை  செயலர் உதயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தகவல்*

*2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம்*

*2018 ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்*

*2019 ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும்*

*2020 ம் ஆண்டுக்குள் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்-அரசு*


NEET தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் நீட் தேர்வில் ஒசூரைச் சேர்ந்த CBSE பாடத்திட்டத்தில் பயின்ற சந்தோஷ் என்ற மாணவன் 656 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர். கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா இரண்டாவது இடத்தையும்,   திருச்சியை சேர்ந்த  சையத் அபி்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என தெரிகிறது. 13 பேர் CBSE பாடத்திட்டத்திலும், 2 பேர் ISCE பாடத்திட்டத்திலும் படித்தவர்கள். கலந்தாய்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலிங்க குறித்து மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இணையத்தை தொடர்நது பார்த்து வருவதன் மூலமும் தகவல் தெரிந்து பின் கலந்தாய்விற்காக சென்னை புறப்பட்டு வரலாம் என்றார்.

தமிழகத்தில் நீண்ட குழப்பத்திற்கு பின்னர் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு அடிப்படையில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 4,567 இடங்கள் உள்ளன. அத்துடன் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பாமல் திருப்பி கொடுக்கப்பட்ட 57 இடங்கள் என மொத்தம் 4,624 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இதற்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. நாளை மாற்று திறனாளிகளுக்கும், நாளை மறுநாள் முதல் பொதுகலந்தாய்வும் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி செப்டம்பர் 4-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க முடியாமல் போனால் கூடுதல் அவகாசம் கோர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல் மருத்துவத்திற்கு செப்டம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

EMIS - புதிய PASSWORD விரைவில்.

அனைத்து பள்ளிகளுக்கும் PASSWORD முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய PASSWORD செப்டம்பர் முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும்.

அதன் பின்னரே முதல் வகுப்பு மாணவர்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்ய இயலும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்காய் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம்

தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ மதிப்பை தமிழகத்தில் பெற்ற முதல் பல்கலைக்கழகமான *அழகப்பா பல்கலைக்கழகம்* முதன்முதலாக *அரசுப்பள்ளி ஆசிரியர்களால்* நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வரும் *கல்வியாளர்கள் சங்கமம்* அமைப்புடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை நடத்த முன்வந்திருப்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களான நமக்கு கிடைத்த பெரும் கௌரவம். அத்தகைய சிறப்பு வாய்ந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அதிக ஆசிரியர்களைப் பங்கெடுக்க செய்து, ஆசிரியர்களின் திறமையை பல்நாட்டு சான்றோர்கள் அறியும் வண்ணமும், தமிழின் வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள நாம் தயாராவோம்.

பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க வாருங்கள்.....

பங்கேற்றுச் சிறப்பிப்போர்....

*முனைவர்.சுப்பையா*
துணை வேந்தர்
தமிழ்த்திரு.
*பொன்னம்பல அடிகளார்*
*திரு.அன்பரசு இராசேந்திரன்*
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
*முனைவர்.விமலன்*
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
*திரு.வாசுதேவன் லெட்சுமணன்*
மலேசியா
*முனைவர்.*
*இரா.ஆசிர்ஜூலியஸ்* SCERTசென்னை
*கவிஞர்.தங்கம் மூர்த்தி*
மேனாள் சாகித்ய அகாடமி உறுப்பினர்
பைந்தமிழ்ப்பாவலர்
*சி.துரைமாணிக்கம்*
நல்லாசிரியர் *

*செப்டம்பர் 8 மற்றும் 9* ஆகிய தினங்களில் *காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்* நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பிக்க வருகை தாருங்கள்...

*பங்கேற்போருக்கு*
இருநாள் மதிய உணவு, தேநீர்,ஆய்வுக்கோவை நூல்களடங்கிய பரிசுப்பை, கருத்தரங்கச் சான்றிதழ்,குறிப்பேடு, பேனா,தங்குமிட வசதி ,பண்பாட்டு மைய அருங்காட்சியகம் காணும் வாய்ப்பு ஆகியன வழங்கப்பெறும்.

*பங்கேற்புக் கட்டணம்* ரூ.700*

இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!
ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய 
உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.  

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், போலீஸார் நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட தகவல் உண்மைதானா என சரி பார்த்து பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
இந்த நடைமுறையால் காலதாமதம் அதிக அளவில் ஏற்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. எனவே, இதை சரி செய்ய ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சிஸ்டம் கொண்டுவரபடவுள்ளது.  
உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS) இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும். இந்த சிஸ்டம் அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது


சென்னைக்குப் பிறந்தநாள்: ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் பள்ளி

பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் கல்விக் கட்டணம் வசூலித்தாலும் சுருங்கிப்போன வளாகமும் காற்றோட்டமற்ற வகுப்பறையுமாகத்தான் இருக்கின்றன சென்னையில் உள்ள பெரும்பாலான


தனியார் பள்ளிக்கூடங்கள். அவற்றுக்கு மத்தியில் பசுமையான மரங்களோடும் பரந்துவிரிந்த வளாகத்தோடும் 120 ஆண்டுகளுக்கும் மேலாக விளிம்புநிலையினரின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை இலவசமாக வழங்கிவருகிறது சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி.

சாந்தமும் கம்பீரமும் ஒருசேரப் பொருந்திய இப்பள்ளி சென்னை கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல். 1894-ல் இப்பள்ளிக்குச் சூடப்பட்ட ‘ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி’ என்கிற பெயரே அதன் பின்னணியைச் சொல்லும்.

      1832-ல் நியூ ஜெர்சியில் பிறந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். மேடம் பிளாவஸ்கியுடனான சந்திப்பு அவருக்குள் இருந்த தத்துவார்த்தத் தேடலுக்கு விடை அளிக்க இருவரும் இணைந்து பிரம்மஞான சபையை 1875-ல் நியூயார்க் நகரில் நிறுவினர். 

 

மதச்சார்பற்ற கல்வி

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ‘பம்பாய் கல்விக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி ஐரோப்பிய முறையிலான கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு. இந்தியவாழ் ஐரோப்பியக் குழந்தைகளின் கல்வி வசதிக்காக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் நாடெங்கும் அப்போது திறக்கப்பட்டன. அதில் உயர் சாதி இந்தியக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், 1892-ல் அன்றைய அரசாங்கச் செயலாளர் சி.ஏ.கால்டன் பதிவிட்டதுபோல, ‘1855 வரை ஆங்கிலேயரின் இந்தியக் கல்வித் திட்டமானது தலித் மக்கள் பள்ளிக் கூடங்களை நெருங்கவிடாமலும் கல்வியில் அவர்களுக்குரிய பங்களிப்பை வழங்காமலும்தான் வைத்திருந்தது”.

 

தமிழக தலித் வரலாற்றில் பெரும் ஆளுமைகளான இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்ற சிலர் அன்றே கவனம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான தலித் மக்கள் கல்வி மறுக்கப்பட்டு சிதறிக்கிடந்தனர். ஆங்காங்கே சில கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் தலித் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாகக் கல்வி அளித்தாலும், அதனுள் மதமாற்றம் என்கிற போக்கும் ஊடுருவியிருந்தது.

அந்நிலையில் மதச்சார்பின்மையோடு சென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாரிசுகளுக்குக் கல்விக் கதவைத் திறந்துவைத்தது, ‘ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி’. அதை நிறுவியது இந்தியரோ ஆங்கிலேயரோ அல்ல. அமெரிக்கரான ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். அடையாறில் உள்ள பிரம்மஞான சபையை (Theosophical Society) மேடம் பிளாவட்ஸ்கியுடன் இணைந்து நிறுவியவர் இவரே.

முன்னாள் மாணவரே ஆசிரியர்

பள்ளியைத் தொடங்கியதைவிட அதை நடத்துவது சவால் மிகுந்ததாக இருந்தது. காரணம், கற்றுத் தேர்ந்த இந்திய ஆசிரியர்களே தலித் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தனர். அதனால் வேறுவழியின்றி கிறிஸ்தவ வேதாந்திகள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

லலிதா

ஆனாலும், 1907-ல் ஆல்காட் இறந்தபோது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஐயா கண்ணு அதில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படும் அளவுக்குப் பள்ளி நிலைபெற்றது. இன்றும் இந்தப் பண்பாடு ஆல்காட் பள்ளியில் தொடர்கிறது. இப்போதைய தலைமை ஆசிரியரான லலிதா பள்ளியின் முன்னாள் மாணவியே.

பிரம்மஞான சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த இலவசத் தனியார் பள்ளி இன்று சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் முன்னால் நிறுவப்பட்டபோது அன்றைய ஐரோப்பிய அல்லது அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அது நகல் எடுக்கவில்லை. ‘How We Teach The Pariah’ என்றே ஒரு நூல் எழுதப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தனித்துவமான பாடத்திட்டமும் வரையறுக்கப்பட்டது.

1906-ல் அப்பள்ளியின் கண்காணிப்பாளர் பொறுப்பை வகித்த கோர்ட்ரைட் என்ற பெண் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இப்பள்ளியை ஆங்கில வழிப் பள்ளியாக நடத்தலாமா, தமிழ் வழிக் கல்வியைக் கற்பிப்பதுதான் சிறந்ததா?, அன்றைய மெட்ராஸ் கல்விக் கோட்பாடு முன்மொழியும் கல்விச் சட்டத்தில் எதைப் பின்பற்றலாம், எதை மறுக்க வேண்டியுள்ளது?, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எத்தகைய கல்வி அளிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுப் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஓயாத ஆங்கில மோகம்

ஆரம்பத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்ட பஞ்சமர் பள்ளி ஆல்காட் இறப்புக்குப் பிறகு அடையாறில் ஒரே பள்ளியாக நிறுவப்பட்டது. ஆல்காட் நினைவுப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அன்னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில் செயல்படத் தொடங்கியது.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் பலர் இன்று இங்கு ஆசிரியர், அலுவலகக் காசாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சத்துணவுத் திட்டம், இலவச நோட்டுப் புத்தகங்கள் தவிர அரசாங்க உதவி ஏதுமின்றி இயங்கி வரும் இப்பள்ளியின் மாணவர்களுக்குக் காலையில் சத்துணவுக் கஞ்சி, 2 செட் சீருடை, பென்சில் பேனா போன்ற பொருட்கள், மாணவர் தங்கும் இலவச விடுதி, கட்டணம் இல்லாக் கல்வி உள்ளிட்ட பல சேவைகளை இப்பள்ளி அளித்துவருகிறது.

 

நான்கு ஆண்டுகள் முன்புவரை 600-க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்துவந்த இந்தப் பள்ளியில் தற்போது 374 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்துவருகிறார்கள். “ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளி இது என்பதாலும், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதாலும் இதைத் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளியாக நடத்த வேண்டும் என ஆல்காட் தன்னுடைய உயிலில் எழுதிய காரணத்தால் இன்றுவரை இதைத் தமிழ்வழிப் பள்ளியாகவே நடத்திக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் தரமான கல்வியும் சுதந்திரமான சூழலையும் மாணவர்களுக்கு வழங்கினாலும் தமிழ்வழிக் கல்வி என்பதாலேயே இங்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியை லலிதா.

அக்கறையும் சுதந்திரமும்

“ஆனாலும் நாங்கள் சோர்ந்து போகவில்லை. ஆங்கிலம் இன்றியமையாதது என்பதாலும், செயல்வழிக் கல்வி முக்கியம் என்பதாலும் வெவ்வேறு நிறுவனங்களின் உதவியோடு சிறப்பான பயிலரங்கம், சோதனைக் கூடம் போன்றவற்றை அமைத்திருக்கிறோம். முன்பைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இங்குப் படிக்கும் ஒவ்வொரு மாணவர் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்துவதையும் அதேநேரத்தில் அவர்களுடைய சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதையும் எங்களுடைய கொள்கையாகவே நடைமுறைப்படுத்திவருகிறோம்.” என்கிறார் பள்ளி இயக்குநர் சசிகலா ஸ்ரீராம்.

உயர்தரக் கல்வி வழங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் பெரிய தனியார் இருபாலர் பள்ளிகள்கூட மேல்நிலை அளவில் மாணவ- மாணவிகளைப் பள்ளி வளாகத்தில் நட்பு பாராட்ட அனுமதிப்பதில்லை, அதன் ஆசிரியர்கள் மாணவர்களைத் தோழமையோடு அணுகுவதில்லை. இத்தகைய கசப்பான நிதர்சனத்துக்கு மத்தியில் மேல்நிலை வகுப்பு மாணவ- மாணவர் ஒன்றுகூடி விளையாடுவதை ஊக்குவிக்கும், மாணவ-மாணவிகளைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக அணுகும், அவர்கள் எழுச்சி பெற தூண்டுதல் தரும் பெரும் பணியை நூற்றாண்டுக்கும் மேலாக ஆர்ப்பாட்டமின்றிச் செய்துவருகிறது ஆல்காட் என்கிற மாமனிதரை நினைவுகூரும் இப்பள்ளி.

யார் இந்த ஆல்காட்?

1832-ல் நியூ ஜெர்சியில் பிறந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். மேடம் பிளாவஸ்கியுடனான சந்திப்பு அவருக்குள் இருந்த தத்துவார்த்தத் தேடலுக்கு விடை அளிக்க இருவரும் இணைந்து பிரம்மஞான சபையை 1875-ல் நியூயார்க் நகரில் நிறுவினர்.

 

பின்னர் 1879-ல் சென்னை அடையாறு பகுதியில் பிரம்மஞான சபையை நிறுவினார். அடையாறு ஆற்றோரம் வாழ்ந்து வந்த தலித் மக்களின் சொல்லொணா துயரங்கள் அவர்களுக்காகப் பள்ளியை நிறுவும் எண்ணத்தை ஆல்காட்டுக்குத் தோற்றுவித்தது

WHATS APP ரகசிய குறியீடுகள்: நமது WHATS APP செய்திகளை பிறர் பார்க்க முடியுமா??

வாட்ஸ்அப் தனது பயனாளர்கள் பகிரும் செய்திகளை பாதுகாப்பதில் மிகவும் கண்டிப்புடன் உள்ளது. செய்திகளை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர யாராலும் அதை படிக்க முடியாது. காவல்துறை நினைத்தாலும் செய்திகளை எடுக்க முடியாது.


வாட்ஸ்அப்-இன் செய்தி தொடர்பாளர் கார்ல் வூக் இந்தியா வந்திருந்தபோது, சில குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ்அப் செய்திகளை அரசு கேட்டதற்கு, அவ்வாறு தருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

முன்னதாக, வாட்ஸ்அப் தனது வழிகாட்டு நெறிமுறைகளை, அரசின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு கொடுத்திருந்தது. அதில் வாட்ஸ்அப் பயனாளர்களின் செய்திகள் ரகசியக் குறியீடுகளாக அனுப்பப்படுவதால், அதை அந்த இருவரைத் தவிர யாராலும் படிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பும் செய்தி, அவருடைய கைபேசியிலிருந்து சர்வர் செல்வதற்குள் ரகசியக் குறியீடுகளாக மாற்றப்படும், பின்னர் பெறுபவரின் கைப்பேசிக்கு போகும் வரி, செய்திகள் ரகசியக் குறியீடுகளாகவே இருக்கும். அந்த ரகசியக் குறியீடுகளை வேறு யாரலும் படிக்க முடியாது. இதற்குப் பெயர் ‘எண்ட் டு எண்ட் என்க்ரிப்சன்’. 

மேலும் வாட்ஸ்அப் பயனாளர்களின் சில தகவல்கள் மெட்டாடேட்டா எனப்படும் தகவல்கள் மொத்தமாக சேமிக்கும் இடத்தில் இருக்கும். அதாவது, இந்த மெட்டாடேட்டாவில், பயனாளரின் கைப்பேசி எண், எந்த வகையான கைப்பேசி, கைப்பேசியின் சேவை நிறுவனம், யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்களின் எண்கள், வாட்ஸ்அப் மூலம் இணையதளத்தில் பயனாளர் பார்த்த இணையதளங்கள், சேட் செய்த நேரம், எவ்வளவு நேரம் சேட் செய்தார், ஐபி முகவரி, பயனாளரின் இடம் மற்றும் பயனாளரின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இருக்கும். இது போன்ற தகவல்களை மட்டும்தான் காவல்துறையினர் நினைத்தால் எடுக்க முடியும். ஆனால் பயனாளர்கள் அனுப்பும் செய்திகளை யார் நினைத்தாலும் படிக்க முடியாது என்று கார்ல் வூக் கூறினார்.

மேலும், வாட்ஸ்அப் மூலம் பகிரப்படாத செய்திகள் இருந்தால், அந்த செய்திகளும் 30 நாட்களில் தானாக அழிந்துவிடும். மேலும் எந்த பயனாளரின் செய்திகளையும் சர்வர் சேமித்து வைக்காது. வாட்ஸ்அப் சர்வர் செய்திகளை பாதுகாப்பாக அனுப்பும் ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுவதாகவும் வூக் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!