Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 29 August 2017

Swachh Bharath Swachh vidyalaya - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்துதல் - இயக்குநர் செயல்முறைகள்JACTTO GEO STRIKE - திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் - அறிக்கை வெளியீடு
JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு

*ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*

*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்*

*செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.*

*9&10 சனி ஞாயிறு விடுமுறை.*

*செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.*

BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS


TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS DIRECTOR PROCEEDING.JACTTO GEO SEP - 7 தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து

செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு.

செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு.

2017 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற இருக்கின்றன தோழமைகள்


*அறிவியலில் அசத்தும் அன்பழகன்
*ஆங்கிலத்தில் மாணவர்களை அருமையாய் உறை நிகழ்த்த வைத்த அண்ணப்பூரனா
*கணிதத்தை கற்கண்டாய் கற்றுத் தரும் ரூபி தெரசா
*கலைகளில் அரசன் கோபிநாத்
*தலைமை பண்புடைய ISO தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்
*மாணவர்கள் மனம் கவர்ந்த மணிமாறன்.
விருதுபெறவிருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் அனைத்து ஆசிரியர் தோழமைகளின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த ஆண்டு புதிய தலைமுறை மேடையை அலங்கரிக்கும் நவரத்தினங்களுக்கும் வாழ்த்துகள்
நாளைய நவரத்தினம் நீங்களாக இருக்கலாம்

How to link PAN card with Aadhaar online

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:

1.On the website, click on the link on the left saying Link Aadhaar.

2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.3.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. 

4.Enter the OTP and click on Save to continue.

5. You can also link the details after logging in to the income tax website. 

Log in as you normally would and then click on Profile Settings in the top menu.

6. Next, find Link Aadhaar.

7.Enter your Aadhaar number and click on Save to continue.

CLICK HERE TO GO TO AADHAR - PAN LINKING WEBSITE

This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

வருகையை கண்காணிக்க 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகம்

பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்கப்படும். அதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் மாணவர்களின் வருகையானது பதிவு செய்யப்படும். மேலும் இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

மேலும், இந்த ஸ்மாட் கார்டு திட்டம் வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார்.

GO 506 DSE DATE:22.08.17 - MODEL SCHOOL PAY ORDER UPTO 31.03.2018

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.

மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 

இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRBஅனுமதி.


முதுகலை ஆசிரியர்கள் தற்போது நடைபெறும் (28.08.2017 முதல்) சான்றிதழ் சரிபார்ப்பில் நீதிமன்ற உத்தரவின் படி "சேலம் விநாயகா மிஷன்" பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிஅளித்துள்ளது.

பணி நியமனம் நீதிமன்ற இறுதி தீர்புக்கு உட்பட்டது.

EMIS NEW FORM (2017 -18) FOR NEW STUDENTS ONLINE ENTRY 

கட்டட தொழிலாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இலவச அட்மிஷன்!!முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது!!ஜூன்-6 உலாவரும் வதந்திகள்???

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்-


*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள்உருவாக்கப்படும் எனத்தகவல்.

*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ்கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.


அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

இடமாற்றம்

 வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். 

பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், செயலராக இருந்த சபிதாவையும், பின், இயக்குனர்களையும் மாற்றினார். 

ஆலோசனை கூட்டம் : தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு, விடிய விடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற உத்தரவிட்டார். அதே போல், செயலர் உதயசந்திரனின் புதிய திட்டங்களுக்கு ஊக்கம் அளித்தார். ஐந்து மாதங்களில், பல்வேறு சாதனை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன.

அதிகாரபூர்வமாக

இந்நிலையில், ஆசிரியர்கள் இடமாற்ற பிரச்னையில், உதயசந்திரனின் அதிகாரம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய பள்ளிக் கல்வி முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், ஆக., 26ல் பொறுப்பேற்றார். நேற்று, அதிகாரபூர்வமாக நிர்வாகப் பணிகளை துவக்கினார். பள்ளிக் கல்விசெயலரின் மாற்றத்தால், கல்வித் துறை உயரதிகாரிகள், தங்களுக்கும் மாற்றம் வருமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், கல்வித் துறையின் இயக்குனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்வேறு அறிவுரைகளை, செங்கோட்டையன் வழங்கி உள்ளார்.

அறிவுரைகள் என்ன? :

l புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர, செயலர் உதயசந்திரனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

l நிர்வாகப் பணிகள் தொடர்பாக, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்

l 'இடமாறுதல் வரும், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் அச்சமடைய வேண்டாம். உங்கள்பணிகளை, நேர்மையாக, முதன்மை செயலரும், அமைச்சகமும் கூறியபடி மேற்கொள்ள வேண்டும்

l தற்போதைக்கு, அதிகாரிகள் இடமாற்றம் 

என்பது இருக்காது. அதனால், அவரவருக்கு வழங்கப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ளலாம்

l யாரும் கோஷ்டியாக செயல்படக் கூடாது. ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக, அமைச்சரவையின் ஆலோசனைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும்

l மாணவர்களின் முன்னேற்றத்துக்கு, அரசு அறிவித்த திட்டங்களில், எந்த சுணக்கமும் காட்டக் கூடாது. இவ்வாறு அறிவுறுத்தியதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உறுத்தல் :

அறிவுரைகளால் நிம்மதி அடைந்த அதிகாரிகள் சிலர், 'எங்களுக்கு, 'ரூட் கிளியர்' ஆனது மகிழ்ச்சி தான். இருந்தாலும், ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில், அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என்று சொன்னது, சற்றே உறுத்தலாக உள்ளது. 'இந்த அறிவுரையே, இவ்விவகாரங்களில் அரசியல் விளையாடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது' என்றனர்

வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.இப்படிப்புகளில், 2,820 இடங்கள் உள்ள நிலையில், ஜூன், 19 முதல், 24 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,156 இடங்கள் பூர்த்தியாகின.

 'நீட்' தேர்வு அடிப்படையிலே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், தற்போது, வேளாண் படிப்புகளில் காலியிடம், 1,627 ஆக அதிகரித்துள்ளது. இவற்றை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், 218 பேர் பங்கேற்றனர். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய அரசுக் கல்லுாரிகளில், ஓ.சி., - பி.சி., - எம்.பி.சி., பிரிவினருக்கான இடங்கள் பூர்த்தியாகி விட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 31ம் தேதி வகுப்புகள் துவங்குகிறது.

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு.

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவுஎடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப் பினர், இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்; சங்க நிர்வாகிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதன்பின், தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என, ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 2017 பள்ளிநாட்காட்டி

Last date extended to 30.09.2017 for online applications under the Pre / Post Matric Scholarship

DSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு ஆதார் எண் பெற்று தருதல் பணியை முழுமையாக முடித்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!