Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 31 August 2017

முதல்கட்ட கலந்தாய்வில் 4,546 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரம்பின: இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்.2-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.அன்றைய தினம் நடந்த சிறப்பு பிரிவினருக்கானகலந்தாய்வில் 14 மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.முதல் நாளில் 1,029 பேரும், இரண்டாம் நாளில் 1,260 பேரும், மூன்றாம் நாளில் 706 பேரும், நான்காம் நாளில் 743 பேரும், ஐந்தாம் நாளில் 606 பேரும் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் (எஸ்சிஏ) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங் கள் முடிந்துவிட்ட நிலையில், கலந்தாய்வுக்கு வந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.இதனால் கலந்தாய்வில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது. நேற்று நடந்த கலந்தாய்வில் 188 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் பெற்றனர்.

நேற்றுடன் அரசு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது.கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,731எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 4,546 இடங்கள் நிரம்பின.தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு 185 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் கல்லூரிகளில் சேராத மாணவர்களால் ஏற்படும் காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

DRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌


ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, 20 பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்நிலையத்தில் காணாமல் போனதற்கான சான்றுபெற்று உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. அதனால், ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்று பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு

ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.


ஆசிரியர்களின் திறமைகளை...

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித திறமைகளை கண்டறியும் நோக்கில் கணித ஒலிம்பியாட், அறிவியல் ஒலிம்பியாட் என பல்வேறு திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோன்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி கடந்த2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.

14 வகையான பாடங்கள்

14 வகையான பாடங்களை அவர்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். பாடத்தில் பெற்றுள்ள நிபுணத்துவம், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத்திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இந்த தேர்வு அமைந்திருக்கும்.அப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.2017-ம் ஆண்டுக்கான சென்டா ஒலிம்பியாட் போட்டியானது வரும் டிசம்பர் 9-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டிக்கான தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள் www.tpo-india.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டிக்கு, தி இந்து, சென்ட்ரல் ஸ்குயர் பவுண்டேஷன், வர்க்கி பவுண்டேஷன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ஆகியவை இணைந்து ஸ்பான்சர் செய்துள்ளன.

புதிதாக 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும். விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் - நேற்றைய கல்வி ஆய்வு கூட்டத்தில் முடிவு !!

மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை*


பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா 
பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (ஆக.30) தொடங்கியது. இந்தக் கருத்தரங்குக்கு புதுதில்லியில் உள்ள தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்துப் பேசியது:-

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அட்டையில் 'சிப்' ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இது அடையாள அட்டையாக மட்டுமின்றி பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*கணினி பயிற்றுநர்கள் நியமனம்:*

தற்போது 6,029 பள்ளிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்றுநர்களை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி அதன் பிறகு ஒரு மாத காலத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள மையங்களிலேயே தேர்வெழுதும் வகையில் புதிதாக 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும். விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.

*காலியாக உள்ள வகுப்பறைகள்...*

 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறையைக் கண்டறிந்து அங்கு அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

*தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்:*

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும் போது மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். ஆனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பதிவுத்தாள் ('ரெக்கார்டு ஷீட்') வழங்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாறிச் செல்லும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.


அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் பரிந்துரை குறித்து தலைவர்கள் கடும் கண்டனம் !!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தவுடனே பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை, நேரு உருவாக்கிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியதுதான். தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த நிதி ஆயோக் தான் மோடி அரசுக்குத் தேவையான அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது; வேளாண்மைத் துறைக்கான மானியங்கள், உணவுத்துறைக்கான மானியங்களை இரத்து செய்தல், பொது விநியோகத் திட்டத்தை அடியோடு மூடுதல், பொது சுகாரதாரத்துறைக்கு அரசின் முதலீடுகளை முற்றாக இரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தாரை வார்த்தல் போன்ற மக்கள் விரோத பரிந்துரைகளை நிதி ஆயோக் அளித்து வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்திட மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தற்போது கல்வித் துறையை தனியார் மயமாக்கிட ஆபத்தான ஒரு பரிந்துரையை நிதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கையை நிதி ஆயோக் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறது. இதில் “2010-2014 ஆம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளில் ஒரு கோடியே 13 இலட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 இலட்சம் மாணவர்கள் சேர்ககை அதிகரித்துள்ளது.

2014-15 ஆம் கல்வி ஆண்டில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பள்ளிகளில் வெறும் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கல்வித்துறை காவிமயமாகி வருவது மட்டுமின்றி, வர்த்தக மயம் ஆக்குவதற்கும் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்திலும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு
வருகிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2013-14 நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு மொத்த பட்ஜெட் தொகையில் 4.5 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2017-18 வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

1966 இல் கோத்தாரி ஆணையம் அளித்த பரிந்துரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 50 ஆண்டுகளாக அந்த இலக்கை இன்னும் அடைய முடியவில்லை. 2014 -15 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு மத்திய பா.ஜ.க. அரசு 45,722 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட 1,134 கோடி ரூபாய் குறைவு ஆகும். 2015-16 இல் 42,187 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதுவும் முந்தை ய ஆண்டைவிட 3,535 கோடி ரூபாய் குறைவு ஆகும்.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் மற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பள்ளிகளை தனியார் – அரசு பங்களிப்பு திட்டத்தின் மூலம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் நடைமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையை முழு சுயாட்சி அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்றி, தனியார் நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று நிதி ஆயோக் கூறி வருகிறது.

கல்வித்துறை மத்திய -மாநில அரசுகளின் பொது அதிகார பட்டியலின் கீழ் வருவதால், மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது மட்டுமின்றி, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவில், பா.ஜ.க. அரசு ஒரே கல்வி முறையை செயல்படுத்திடவும், ஏகபோக ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இன பட்டியல் இன மக்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை புறந்தள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தி தரம் உயர்த்திடவும், பொதுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை ஆசிரியை சசிகலா உதயகுமார் எழுதிய "இது எங்கள் வகுப்பறை" என்ற புத்தகம் செப்டம்பர் 1 இல் மதுரை புத்தகத்திருவிழாவில் பாரதி புத்தகாலயம் வெளியீடு


EMIS introduction video part-1



EMIS introduction video part-1

Click here

http://youtu.be/VyrWB_zmpaM


இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !!

தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ,பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது.
2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரெனநிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. 

இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது. அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது. 

எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

EMIS பதிவேற்றம் இனி முறையான த.ஆ. கூட்டத்திற்குப் பின்னரே செய்ய வேண்டும்





பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் படிவம்



DSE - TEACHERS DAY CELEBRATION - CLEANLINESSACTIVITIES IN SCHOOLS FROM 01.09.2017 - 15.09.2017 - DIR PROCEEDING



DEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு



G.O.(Ms) No.31 Dt: August 28, 2017  Welfare of Differently Abled Persons Department – Identification of suitable posts for Differently Abled Persons under Group A and B Categories as per section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016 – Orders - Issued.







DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை.


 Click here

Drivers to Carry Original Drivings License from 01.09.2017 -Reg



DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் மூன்றாம் பருவத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் கோருதல் சார்பு



எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!