Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 1 September 2017

TRB - PG POLYTECHNIC LECTURES EXAM - HALL TICKET Published
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges 2017 - 18  - Please click here to Download the Hall-Ticket

JACTTO GEO 22.08..2017 STRIKE ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு.

JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆனைவெளியீடு.  22-08-2017 ல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் நடத்தப்பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டுமென தமிழ்நாடு கருவூலக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை  அனுப்பட்டுள்ளது. சென்ற மாதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சான்று உண்டியலுடன் இணைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


JACTTO GEO பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அமைச்சர்கள் பட்டியல்

04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை 

*04.09.2017  அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,

☀பள்ளி கல்வித்துறை அமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை
அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்

☀ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

☀இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும்

☀பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி களப்பணி ஆற்றிட ஜேக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.


OFFICIAL LETTER-ஜாக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்று அழைப்பு.மேலும் JACTO -GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறதுநீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை!

உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கையானது இனி 'நீட்' தேர்வு மூலமாகத்தான் நடைபெறுமென்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு என்று 85% சிறப்பு இட இதுக்கீடு அளித்து  அரசாணை வெளியிட்டது.

ஆனால் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவினை மத்திய அரசு அனுமதியுடன் நிறைவேற்றவும் தமிழக அரசு முயன்று வந்தது.   

அதே நேரத்தில் 'நீட்'  தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டார். அங்கு நீட் தேர்வுக்கு எதிராக மாநில மாணவர்களின் தரப்பினை முன்வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசின் வழக்கும், அனிதா தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் அடிப்படையில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி அனிதா குழுமூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயினை இழந்து விட்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி ஆவார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய ஒரு  ஏழை மாணவியின்      வாழ்வானது, ஒரு தூக்கு கயிறில் முடிந்து போன சோகம் நிகழ்ந்துள்ளது

பசித்தவருக்கு உணவளிக்கும் குளிர்சாதனப்பெட்டி பெண் டாக்டரின் முயற்சி

967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி


தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலையில் இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் 'நாட்டா' எனப்படும் தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மாணவர்கள் பங்கேற்க முடியும்.தமிழகத்தில் ௩,௦௪௩ பி.ஆர்க்., இடங்களுக்கு, ௨,௦௦௯ பேர் மட்டுமே, நாட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றனர். எனவே, ௧,௦௦௦ இடங்கள் வரை காலியாகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நாட்டாவுக்குஇணையாக தமிழகத்தில் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மட்டும் நடத்தப்பட்டது; இதில் ௧,௧௨௨ பேர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தத்திற்கு பின் ௯௬௭ பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அந்த ௯௬௭ பேருக்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வழங்கலாம் என, அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது. அதனால் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில் காலியிடம் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு


தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளுக்கான, 2,820 இடங்களுக்கு, ஜூன் 19 முதல், 24 வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,157 இடங்கள் நிரம்பின. 'நீட்' தேர்வு அடிப்படையிலான, மருத்துவ மாணவர் சேர்க்கையால், காலியிடங்களின் எண்ணிக்கை, 1,627 ஆக அதிகரித்தது. இதற்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இறுதிநாள் கலந்தாய்வில் பங்கேற்க, 2,264 பேருக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில், 1,899 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். கலந்தாய்வில் பங்கேற்ற, 365 பேரில், 331 பேர் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.

வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது:இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்றோர், உரிய கல்லுாரியில், கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். அசல் கல்விச்சான்றிதழ்களை, வரும் 4 ம் தேதி வரை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. ஒதுக்கீடுஅரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளஅரசு ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என, 3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், 1,201 இடங்கள் உள்ளன.இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டைபூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி வருகின்றன.

ஜூலை, 30 வரை நடந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள் படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.உறுதிமொழிமேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம். மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.

இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா என்பது கண்டறியப்படும்.விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கைரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

50 சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெளியீடு - புக்ஸ் ஃபார் சில்ரன் செப்டம்பர் 1, காந்தி அருங்காட்சியகம், மதுரை, மாலை 5 மணி முதல்

1 பேசும் யானையும் பாடும் பூனையும் -  க.விக்னேஸ் - ரூபாய் 40
2 புதிய கண்டுபிடிப்புகங் - ஆத்மா.கே.இரவி - ரூபாய் 70
3 தாத்தா பூ எங்கே போகிறது - லின் சாங்யிங்- ரூபாய் 45
4 மந்திரக் குள்ளர்கள் - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 50
5 செவ்விந்தியக் கழுகு - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 40
6 ஆப்பிள் நரி - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 40
7 சிறு உயிரிகஙின் வாழ்முறை - ஆத்மா.கே.இரவி- ரூபாய் 25
8 பணம் வந்த கதை ஆத்மா.கே.இரவி- - ரூபாய் 25
9 உயிர்களும் தப்பிப் பிழைத்தலும் - ஆத்மா.கே.இரவி - - ரூபாய் 25
10 நரியும் பூரிக் கட்டையும் -  சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
11 சிவப்புக் கொண்டை சேவல்-  கொ.மா.கோ.இளங்கோ - ரூபாய் 45
12 அதிசயக்குதிரை -  சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
13 தங்கமீன் - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
14 தங்கத்தில் ஓரு பொடி டப்பா - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
15 வேட்டைக்காரன் மெர்கேன் - கொ.மா.கோ.இளங்கோ- ரூபாய் 45
16 மாயமான்- சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
17 அல்யோனுஸ்காவின் ஆட்டுக்குட்டி - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
18 பறவை டாக்டர் - ஆதிவள்ளியப்பன்- ரூபாய் 45
19 நாட்டாமை ஹீபர்ட் - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
20 கும்பிடிபூச்சியின் பயங்கரப் பசி-   ஆதிவள்ளியப்பன் - ரூபாய் 45
21 டோபோ நாய்க்குட்டி - ஆர்.பத்மகுமாரி - - ரூபாய் 25
22 யாரங்கே பாடுவது -  ஆதிவள்ளியப்பன்- ரூபாய் 45
23 அமைதிக்கு ஓரு சிற்றேடு கமலாலயன்- ரூபாய் 45
24 13 லிருந்து 19 வரை - என். மாதவன் - ரூபாய் 55
25 சார்லஸ் டார்வின் - என். மாதவன் - ரூபாய் 50
26 மருதபுரியில் ராட்சத காளான்கள் - வா.மு.கோமு - ரூபாய் 35
27 குருவி நரியாரும் காட்டு ராஜாவும் - வா.மு.கோமு - ரூபாய் 35
28 நகரும் நாவல் மரமும் நண்பனும் - வா.மு.கோமு - ரூபாய் 35
29 கட்டெறும்பு - வா.மு.கோமு  - ரூபாய்35
30 பேசும் எலியும் குழந்தைப் பேயும் -  வா.மு.கோமு - ரூபாய் 35
31 பணியார மழையும் பறவைகளின் மொழியும்- கழனியூரன்- ரூபாய் 110
32 எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் - மருதன்- - ரூபாய் 45
33 உணவு மழைத் தீவு ஆல்பர்ட் - ரூபாய் 50
34 கி.ரா.தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள் - கழனியூரன்- ரூபாய் 60
35 எப்படி வந்தேன் தெரியுமா? - இரா. நடராசன்- ரூபாய் 40
36 வைத்தியர் மாருதி - கொ.மா.கோ.இளங்கோ- ரூபாய் 50
37 காலப் பயணிகள் -  விழியன் - ரூபாய் 35
38 மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது.- மருதன் - ரூபாய் 25
39 என் கேள்விக்கு என்ன பதில்? - அ.வள்ளிநாயகம்- ரூபாய் 50
40 இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன் - இரா. நடராசன் - ரூபாய் 50
41 டிடெக்டிவ் ஆக வேண்டுமா? - மருதன் - ரூபாய் 45
42 கடல்ல்ல்ல் - விழியன் - ரூபாய் 40
43 வள்ளிச் சந்தம் - ஈரோடு தமிழன்பன் - ரூபாய் 50
44 வாசிக்கலாம் - இரா. நடராசன் - ரூபாய் 50
45 ஆங்கில வினைச் சொற்கள் - தே.இளவரசன்  - ரூபாய் 12
46 ராஜா வளர்த்த ராஜாளி - லியோ டால்ஸ்டாய்  - ரூபாய் 60
47 இது எங்கள் வகுப்பறை - சசிகலா உதயகுமார் - ரூபாய் 160
48 ஸ்பைடர் மேன் - க.சரவணன்  - ரூபாய் 70
49 அகிலாவும் பிரேசில் பெண்களும் - க.சரவணன் - ரூபாய் 150
50 கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா - ஸ்ரீரசா - ரூபாய் 110

சாலை பாதுகாப்பு வாரம் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்


ஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய படிவம்வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்

உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆதார் எண்ணை நலத்திட்டங்களில் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேஸ் மானியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 31 கடைசி தேதியாக இருந்தது. இப்போது டிச.31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்தி சிலர் வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக, ஆகஸ்ட் 31 தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், பான் கார்டு பெற ஆதார் எண் தேவை என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017- 18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்.

ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax, indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

PRESS RELEASE-Collectorate of Chennai - Local Holiday for Onam festival on 4th September 2017எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!