Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 September 2017

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முழுவதுமாக (animated mixing with image) வரிக்கு வரி விளக்கங்களுடன் மாணவர் எளிதில் புரிந்துக் கொண்டு 100% மதிப்பெண்கள் பெறும்படி தயாரிக்கப்பட்டுள்ளது

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முழுவதுமாக (animated mixing with image) வரிக்கு வரி விளக்கங்களுடன் மாணவர் எளிதில் புரிந்துக் கொண்டு 100% மதிப்பெண்கள் பெறும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. Smart class & தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மனப்பாட முறையை தவிர்த்து மாணவர் பார்த்து, கேட்டு, புரிந்துக் கொள்ளும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு - ப.சு.இறையருள் - 8220087326

Click Here video

22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத் 

தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 374 ஆசிரியர்களுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவுள்ளார்.

நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:

1.ஏ.எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

2.சி.வாசுதேவராஜூ - பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி, அத்திமஞ்சேரி, திருவள்ளூர்.

3.டி.திருமலைவாசன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவந்தண்டலம், காஞ்சிபுரம்.

4.பி.என்.அன்பழகன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை.

5. டி.ராமசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்.

6. ஜெ.மேரி வினோதினி - எம்.டி. கிரேன் நடுநிலைப்பள்ளி, நேரு தெரு, விழுப்புரம்.

7.எஸ்.தங்கசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்பரப்பி, அரியலூர்.

8.எம்.ஜான் பீட்டர் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, சாணார்ப்பட்டி, திண்டுக்கல்.

9.எஸ்.வெங்கடாசலம் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்.

10.பி.வாசுகி - சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, பெரியவெண்மணி, பெரம்பலூர்.

11.ஆர்.தாமோதரன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செங்கமலநாச்சியார் புரம், சிவகாசி.

12.கே.நரசிம்மன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி.

13.எஸ்.சுமதி - மெய்ப்பொருள் ஆரம்பப்பள்ளி, துர்காலயா சாலை, திருவாரூர்.

14.ஜி.விஜயராணி சுகிர்தாபாய் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பட்டர்புரம், திருநெல்வேலி.

15.ஏ.வாசுகி - பி.யு.பி. பள்ளி, சலங்கபாளையம், ஈரோடு.

16.டி.பாஸ்கரன் - சி.எஸ்.ஐ. போர்டிங் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.

17.ஜி.ஜெ.மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

18.ஆர்.சிவகுமார் - அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை.

19.பி.ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தல்லாக்குளம், மதுரை.

20.டி.சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டுவலசு, ஈரோடு.

21.ஆர்.பத்மநாபன் - ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.

22. ஏ.மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி


கிராமங்களுக்கு இணையதள வசதி!!!
நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 31,680 பஞ்சாயத்துகளுக்கு
மத்திய அரசு இணையதள சேவை வழங்கியுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார்.

2019 மார்ச் இறுதிக்குள் நாட்டின் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைப்பதே பாரத் நெட் திட்டத்தின் இலக்காக உள்ளது.

இதுகுறித்து அவர், “பாரத் நெட் திட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 31,680 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

2017 ஜூலை நிலவரப்படி, 1 லட்சத்துக்கு 299 கிராம பஞ்சாயத்துகளை இணைக்க 2,21,925 கி.மீ. தொலைவுக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 25,426 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழகக் கிராமங்களுக்கு ரூ.3,000 கோடி செலவில் இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


2017 ஆசிரியர் தின டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவின் அழைப்பிதழ் பத்திரிகை!!!


TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant in The Departments of Secretarit (other than Law and Finance)

காலியிடங்கள்: 54

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.5,2,600

தேர்வுக் கட்டணம்: ரூ.100

பதிவிக் கட்டணம்: ரூ.150. (ஒருமுறை பதிவை செய்யாதவர்களுக்கு மட்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_19_not_eng_Group_V_%20A.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத் 

தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 374 ஆசிரியர்களுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவுள்ளார்.

நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:

1.ஏ.எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

2.சி.வாசுதேவராஜூ - பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி, அத்திமஞ்சேரி, திருவள்ளூர்.

3.டி.திருமலைவாசன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவந்தண்டலம், காஞ்சிபுரம்.

4.பி.என்.அன்பழகன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை.

5. டி.ராமசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்.

6. ஜெ.மேரி வினோதினி - எம்.டி. கிரேன் நடுநிலைப்பள்ளி, நேரு தெரு, விழுப்புரம்.

7.எஸ்.தங்கசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்பரப்பி, அரியலூர்.

8.எம்.ஜான் பீட்டர் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, சாணார்ப்பட்டி, திண்டுக்கல்.

9.எஸ்.வெங்கடாசலம் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்.

10.பி.வாசுகி - சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, பெரியவெண்மணி, பெரம்பலூர்.

11.ஆர்.தாமோதரன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செங்கமலநாச்சியார் புரம், சிவகாசி.

12.கே.நரசிம்மன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி.

13.எஸ்.சுமதி - மெய்ப்பொருள் ஆரம்பப்பள்ளி, துர்காலயா சாலை, திருவாரூர்.

14.ஜி.விஜயராணி சுகிர்தாபாய் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பட்டர்புரம், திருநெல்வேலி.

15.ஏ.வாசுகி - பி.யு.பி. பள்ளி, சலங்கபாளையம், ஈரோடு.

16.டி.பாஸ்கரன் - சி.எஸ்.ஐ. போர்டிங் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.

17.ஜி.ஜெ.மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

18.ஆர்.சிவகுமார் - அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை.

19.பி.ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தல்லாக்குளம், மதுரை.

20.டி.சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டுவலசு, ஈரோடு.

21.ஆர்.பத்மநாபன் - ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.

22. ஏ.மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி


செல்போன், கணினி பயன்படுத்தும் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள்:பெற்றோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்


குழந்தைகள் செல்போன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ப்ளூ வேல்’ எனப்படும் மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டு, குழந்தைகள் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளி மாணவர்கள் இணையதளத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக மாணவர்கள் இணையதளங்களில் பயனற்ற, தேவையில்லாத மற்றும் மன அழுத்தம் தரக்கூடியவிளையாட்டுகளை விளையாடுவதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவது ஊடகங்கள் வழியாக தெரியவருகிறது. எனவே, மாணவர்கள் இணையதளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

* கணினி, செல்போன் வழி யாக இணையதளங்களில் உள்ள தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபற்றி அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிகளில் தினமும் நடைபெறும் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது தலைமை ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆலோசகர்கள் மூலம் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

* இணைய தளங்களில் தொடர்ந்து செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் உடல், மனரீதியிலான பாதிப்புகளைப் பள்ளி அறிவிப்பு பலகையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விளையாடுவது ஆகியவற்றில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

* தனிமைக்கு இடம்தராத வகையில், குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு, அவர்களோடு கலந்துரையாட வேண்டும். தனிமையில் இருக்கும்போதும், இணையதளம், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகும், அவர்களது நடத்தையில்மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* அளவுக்கு அதிகமான இணையதளப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இணையதளப் பயன்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். தனி இடத்தில் அமர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்துவது கூடாது. அருகில் பெற்றோரோ, ஆசிரியரோ சென்றால் இணையதள முகவரியை மாற்ற முயல்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

* புதிய செல்போன் எண்கள், புதிய இணையதள முகவரிகளை தொடர்பு கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். சரியான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மென்பொருளை கணினியில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை


புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்டக் குழுவும், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஜூலை, 20ல் கருத்தரங்கம் நடத்தி பணியை துவங்கியது.

சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை வல்லுனர்களிடம், ஆலோசனைகள் பெறப்பட்டன.

இதை தொடர்ந்து, ஆக., 21 முதல், பாட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது. கலைத்திட்ட குழுவின் பேராசிரியர்கள் கூடி, பொதுமக்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் அடிப்படையில், பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கையை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. வரும், 8ம் தேதிக்குள் சரிபார்ப்பு பணி முடிந்து, அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 1மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' : பள்ளிக்கல்விக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 1பொது தேர்வுக்கு, தேர்வுத்துறை சார்பில், 'புளூ பிரின்ட்' வினா வடிவமைப்பு குறிப்பை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 மத்திய அரசின் பல்வேறு நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால், பிளஸ் ௧ வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அனைத்து பள்ளிகளும், பிளஸ் ௧ பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல், பிளஸ் ௧ பொது தேர்வு அறிமுகம் ஆகிறது. பாடவாரியான மதிப்பெண், 200லிருந்து, 100ஆக குறைக்கப்பட்டுள்ளது. அகமதிப்பீட்டு மதிப்பெண், செய்முறை, வருகைப் பதிவுக்கு மதிப்பெண் என, பல விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்வில் எந்த பாடத்தில், எத்தனை மதிப்பெண் வினா இடம் பெறும் என்ற, 'புளூ பிரின்ட்' குறிப்பு முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் ௧ மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' முறை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என,ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சுரேஷ் கூறியதாவது: பிளஸ்1 வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயமாக்கியது வரவேற்கத்தக்கது. அதே நேரம், 'புளூ பிரின்ட்' முறை நீக்கப்பட்டுள்ளது.

அதனால், தேர்வுக்கு எப்படி தயாராவது என, அரசு பள்ளி மாணவர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பழைய பாடத்திட்டம், பழைய தேர்வு முறைப்படி, மாணவர்கள் தயார் ஆகி 

வந்தனர். பத்தாம் வகுப்பு வரை, 'புளூ பிரின்ட்' அடிப்படையில் தயாரானவர்கள், திடீரென 

புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை 

உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேர்வு முறையில் ஆறாம் வகுப்பிலிருந்து, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். ஆனால், நேரடியாக, பிளஸ் 1 மாணவர்களுக்கு சிக்கலான வினாத்தாள் 

முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, 'புளூ பிரின்ட்' வெளியிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

SCERT - STATE LEVEL POSTER PREPARATION COMPETION FOR 9th TO 12th STUDENTS - DIR PROC
நீட் தேர்வு மாணவர்கள் 104 என்ற எண்ணில் உளவியல் ஆலோசனை பெறலாம்!!நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கும், அவர்களுடைய
பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் வழங்கி வரும் 104 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் உளவியல் ஆலோசனைகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது


நீல திமிங்கல விளையாட்டுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது!!மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று வழக்குகளை
விசாரித்தனர். அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “இணையதளத்தில் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடி இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்“ என்று முறையிட்டார். ஆனால் இந்த பிரச்சினை குறித்து ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ–மோட்டோ) விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்யுமாறும், அதை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடுமாறும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவு வருமாறு:–

“புளூ வேல் விளையாட்டால் 19 வயது மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரஷியாவில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 ஆபத்தான கட்டளைகளை தாண்டி தற்கொலை என்ற கட்டளையுடன் விளையாட்டு முடிகிறது.

மதுரையில் இறந்த மாணவர் விக்னேஷ், பி.காம் 2–ம் ஆண்டு படித்துள்ளார். ‘புளூவேல் ஒரு விளையாட்டு அல்ல, விபரீதம்‘ என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதோடு விளையாட்டில் நுழைந்தால், அதிலிருந்து வெளியே வர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளனர். ஆனால் இந்த மாணவர் விதிவிலக்காக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புளூவேல் விளையாட்டை நடத்தும் நிர்வாகி, மாணவன் விக்னேஷின் வீடு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதற்கு ஏற்றதாக இல்லை என தெரிந்து வைத்திருக்கலாம். மதுரையில் இந்த விளையாட்டை 75 பேர் விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.

விளையாட்டில் நுழைபவர்களை அதன் நிர்வாகி மன ரீதியாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தற்கொலைக்கு தூண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இணையதளத்தில் குழந்தைகள் என்ன விளையாடுகின்றனர் என்பது கண்காணிக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் உள்ள இன்டர்நெட் மையங்களில் இணையதளம் மூலம் புளூ வேல் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக தெரிகிறது.

இந்த விளையாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் தான் இரையாக்கப்படுகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை நடத்துபவர்கள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டின் தொடக்கம் மகிழ்ச்சியானதாகவும், முடிவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி விடுகின்றனர்.

இதனால் இந்த விளையாட்டால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புளூவேல் விளையாட்டிலிருந்து மாணவர்கள், இளைஞர்களை பாதுகாக்க, அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போலீசாரும், சமூக ஆர்வலர்களும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

குழந்தைகள் கணினி, செல்போனில் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கடமையாகும். புளூவேல் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, செல்போனில் இருந்து இந்த விளையாட்டுகளை நீக்க வேண்டும். புற்றுநோய் போல் பரவி வரும் இந்த விளையாட்டின் கொடூர வளர்ச்சியை தடுக்க சரியான நேரம் வந்துள்ளது. இதில் பெற்றோரும், போலீசாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்த விளையாட்டை தடுக்க போதிய அமைப்பு முறை இல்லை. இதனால் பொதுமக்களின் நலனை கருதி கோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிடுகிறது. ஐகோர்ட்டு இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது.

இந்த வழக்கில், மத்திய தகவல்–தொடர்புத் துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை சைபர் கிரைம், சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை இயக்குனர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுத்தாக்கல் செய்யவும், இந்த வழக்கை வருகிற 4–ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்.“

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!