Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 7 September 2017

DGE - SSLC September/October 2017 Conduct ofScience Practical for Private candidates - Press Release

JACTTO - GEO வேலை நிறுத்தத்தை கைவிட தலைமைச் செயலாளர் வேண்டுகோள்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் கிரிஜா வேண்டுகோள்.


பிளஸ் 1 காலாண்டு தேர்வு புதிய விதிப்படி வினாத்தாள்!!

காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய வினாத்தாள் 

அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், அனைத்து வகுப்புகளுக்கும், 11ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கி, 23 வரை நடக்கிறது. பின், ஒரு வாரம், விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு நடத்தப் பட உள்ளது. இதற்கென, பாடவாரியான மதிப்பெண், 200லிருந்து, 100க்கு மாற்றப்பட்டு, புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே, வினாத்தாள் தயாரிக்கப்படும்.
அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் மாடல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்


JACTTO - GEO அனைத்து அலுவலகங்களின் வருகைப்பதிவேட்டை தலைமை செயலகத்தித்திற்கு அனுப்ப முதன்மை செயலாளர் உத்தரவு - ஆனை நகல்



ஆசிரியராக மாறிய சேலம் கலெக்டர்

ஆத்தூர்: ஆய்வுக்கு சென்ற இடத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சேலம் கலெக்டர் பாடம் நடத்தி அசத்தினார்.சேலம் மாவட்டம் கருத்தராஜாபாளையம் ஊராட்சி பகுதியில் துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். போராட்டம் காரணமாக 2 பேரும் இங்கு பணிக்கு வரவில்லை. இதனால், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தாங்களாக அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தனர்.அப்போது மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வுக்காக அங்கு வந்தார். மாணவர்கள் தாங்களாக படிப்படை பார்த்த அவர், சில விளக்கங்கள் கேட்டார். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் எளிய வாக்கியங்கள் அமைப்பது குறித்து பாடம் நடத்தினார். பள்ளி கரும்பலகையில் குறிப்புகள் எழுதி விளக்கம் கொடுத்தார். பின்னர், மாணவர்களின் லட்சியம் குறித்தும் கேட்டறிந்தார். கலெக்டர் பாடம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

JACTTO - GEO அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.


ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வந்தது.


வேலைநிறுத்தம்

இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் அந்த அமைப்பின் ஒரு பிரிவினர் தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.

ஆய்வு மேற்கொண்டார்

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் ரோகிணி ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடத்திய அவர் மாணவர்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

 முதல் பெண் கலெக்டர்

சேலத்தின் முதல் பெண் ஆட்சியரான ரோகிணி மாற்று திறனாளிகளிடம் கனிவோடு நடந்து கொள்வது, திட்டங்களை அதிரடியாக செயல்படுத்துவது என்று மக்கள் மனதில் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை தமிழில்...

பிறந்தது மகாராஷ்டிர மாநிலம் என்றாலும் அவர் மதுரை தமிழில் மக்களிடம் குறைகளை கேட்டு அசத்திவருகிறார். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், டீ கடைகள், ஹோட்டல்கள், டயர் பஞ்சர் போடும் கடைகள் உள்ளிட்டவரை ஆய்வு செய்து அகற்றவும் ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

 சீல் வைக்கப்படும்

நோட்டீஸ் வழங்கிய பிறகும் சுகாதார சீர்கேட்டை கடை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்றும் ஆட்சியர் ரோகிணி பல்வேறு அதிரடிகளை எடுத்துள்ளார். அதேபோல் மாணவர்களின் உயிரை குடிக்கும் ப்ளூவேல் விளையாட்டு விளையாடுபவர்களை மீட்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இது தியாகமல்ல.. ஆசிரியராக என் கடமை.. சபரிமாலா Exclusive

அரசுப் பள்ளி வேலையை ராஜினாமா செய்தது தியாகமல்ல, ஆசிரியராக அது என் கடமை என நீட் தேர்வை எதிர்த்தும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா, அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். 

அவர் 'ஒன் இந்தியா'வுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: ''அனிதாவின் மரணத்துக்குப் பிறகு என்னால் உறங்க முடியவில்லை. ஒரு நேரம் நிம்மதியாக உண்ணமுடியவில்லை. என் மனசாட்சியை உறங்க வைக்கவாவது நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் தான் இப்போராட்டத்தில் குதித்தேன்.

அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா? இது அனிதாக்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டு மொத்த தேசத்தின் கல்வி பிரச்சனை. பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு கல்வி மறுக்கப்படும் பிரச்சனை. அதற்கு தர்மத்தின் படி ஆசிரியர்கள் தான், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் வெகுண்டெழுந்து போராட வேண்டும்.

அரசு ஆசிரியர்கள் தான் போராட வேண்டும்

ஆனால், நம் ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டுள்ளார்கள்? சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்த தேதி குறித்துக் கொண்டுள்ளார்கள். ஆகையால் நான் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தில் தன்னந்தனியளாக போராடுகிறேன்.

கல்வி நம் உரிமை

வேலையை ராஜினாமா செய்ததற்கு நான் கவலைப்படவில்லை. கல்வி நம் உரிமை. அதற்காக போராட இந்த அரசு வேலைதான் தடை என்றால் அதை ராஜினாமா செய்வதுதானே முறை.

தீர்க்கமான முடிவு

இந்த முடிவை நான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை. என் கணவருடனும் குடும்பத்தாருடனும் பேசி, யோசித்து, தீர்க்கமாக எடுத்த முடிவுதான் இந்த ராஜினாமா. அதற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன்.

பெரிய மாற்றமே நம் இப்போதைய தேவை

பெரிய மாற்றங்கள் நடக்க வேண்டுமானால், சிறு தியாகங்கள் மிக அவசியம். நான் வாசித்த புத்தகங்கள், மாணவர்களிடம் இத்தனை நாட்கள் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னை இந்த போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

பின் விளைவுகளா?

நான் ரொம்ப பாதுகாப்பாக இருந்துகொண்டு, என்னை எல்லா வழியிலும் உயர்த்திக்கொண்டு நேரம் கிடைக்கும் போது போராடுவேன் என்று சொல்வது எப்படி அறப் போராட்டமாகும்? ஆகையால் தான் துணிந்து இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளேன். இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் சந்திப்பேன்.

தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி... என் லட்சியம்.

இனி, தேசம் முழுவதும் ஒரே கல்வி வேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னால் முடிந்த அளவுக்கு கிராமங்கள் தோறும் சென்று விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்வேன். பிறந்த பிறப்புக்கு ஏதாவது அர்த்தம் வேண்டாமா?'' - இவ்வாறு ஆசிரியை சபரிமாலா கூறினார்.

திட்டமிட்டபடி அரசு ஊழியர், ஆசிரியர் ஸ்டிரைக் : ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடாததால், இன்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் துவங்குகிறது என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் குறித்து, ஈரோட்டில் நிர்வாகிகளுடன் முதல்வர் பேசினார். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து உறுதியளிக்கவில்லை. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி, புதிய ஓய்வூதிய கமிட்டி தெரிவிக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் இன்று துவங்குகிறது. பத்து லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இன்று தாலுகா தலைநகரங்களில் மறியலும், நாளை மாவட்ட தலைநகரங்களில் மறியலும் நடக்கும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, செப்., 10 ம் தேதி, சென்னையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவு செய்யும், என்றார்.''இந்த போராட்டத்தில் மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்,'' என, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் தெரிவித்தார்.

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

சென்னை: 'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்காவும், 10ம் வகுப்பு முடித்து, நேரடியாக தனித்தேர்வாக எழுதவும், செப்., இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்காதவர்கள், 'தத்கல்' என்ற சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில், நாளை முதல், இரண்டு நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

கூடுதல் விபரங்களை, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம். சேவை மைய முகவரிகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பெற்ற தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் தேவையான அளவுக்கு ஏற்படுத்தப்பட வில்லை என்றும், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பள்ளி களில்,ஆசிரியர் நியமனம் குறித்து, வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன் விபரம்: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இந்த விதிகளை, பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, 1 - 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்க, ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளி யில் பயிற்சிகள் நடத்துவது அவசியம். 10 சதவீதத்திற்கு மேல் காலியிடங்கள் இல்லாமல், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 60 வயதில் ஆசிரியர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சென்னை; தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 

தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, ௮:௦௦ மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருப்பத்தூர் மாவட்டம் : 9ம் தேதி முதல்வர் அறிவிப்பு

வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி, ''வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்,'' என்றார்.

மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, வேலுார் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்துாரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். 

புதிய மாவட்டத்திற்கு, திருப்பத்துார் அல்லது ஏலகிரி மாவட்டம் என, பெயர் வைக்கப்படும்.

புதிய மாவட்டத்தில், திருப்பத்துார், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு தாலுகாக்கள் சேர்க்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு (3 மாதம்) தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்ப்புகளையும் பெறலாம்.

இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இலவச அழைப்பானது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

அதிரடி இணைய சேவை மற்றும் அளவில்லா அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக வழங்கியதை அடுத்து ஏற்பட்ட தொழில் போட்டியால், இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிரடி சலுகைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

TRB - சிறப்பாசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு காரணமாக 10,11,12ம் வகுப்பு -  காலாண்டு பொதுத் தேர்வில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!