Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 9 September 2017

TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கொள்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த ஒரு பொதுத்தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும்வகையில், இம்மாதம் இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இதற்காக, சென்னை தலைமையிடமாக கொண்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை ரூ.432 கோடி மதிப்பில் கணினி மையமாக மாற்றப்படும். முதுநிலை ஆசிரியர்கள் 3336 பேரும், 748 கணினி ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு, இதுபோன்ற நிலைமைகள் வருகிற திங்கள்கிழமைக்கு மேல் இருக்காது என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் வேறுபட்டகருத்துகள் உள்ளன. 2013-14-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மதிப்பெண்களில் வித்தியாசம் உள்ளது. அப்போது 70 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலே, வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 85 முதல் 95 சதவீதம் பெறுகிறார்கள். வெயிட்டேஜ் என்கிற நிலை இருக்கிறது. அவர்களுடன் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒத்துழைப்பு தந்தால், பழைய பாடத்தைப் படித்துவிட்டு கல்வியாளர்களாக இருக்கின்றவர்களின் எதிர்காலம் இல்லாத நிலையை மாற்றுவதற்கு ஒருகுழுவை அமைத்து, அந்த குழுவின் மூலம் பரிசீலனை செய்து இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம் - போராட்ட வியூகம் :📌11.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

📌12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்

📌13.9.2017 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்

ஜேக்டோ ஜியோ போராட்டம் தலைமைச்செயலக சங்கம் மற்றும் நீதித்துறை சங்கம் உட்பட 92 சங்கங்கள் பங்கேற்பு.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப உத்தரவு


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு 

"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு தேறமாட்டான் என்று வெளியேற்றிய பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றேன்..." - டிஸ்லெக்ஸியாவை வென்ற ஹரீந்திரன் #InternationalLiteracyDay


"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லி என்னை வெளியேத்துன ஸ்கூல்லயே, கெரியர் கவுன்சலிங் கொடுக்கச் சொல்லிச் சிறப்புப் பேச்சாளரா என்னைக் கூப்பிட்டாங்க, டிஸ்லெக்ஸியா ஒரு நோய் அல்ல. எழுத்துகளை மெதுவாகக் கற்றுக்கொள்ளும் குறைபாடு மட்டுமே" என்கிறார் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இன்று வழக்கறிஞராகவும், தொழிலதிபராகவும் சுழன்று கொண்டிருக்கும் ஹரீந்திரன்.
இன்று உலக எழுத்தறிவு தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகில் எழுத்தறிவின்மையைப் போக்கும் எண்ணத்தில், 1965 செப்டம்பர் 8 ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாநாடு ஒன்றை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். உலகளவில் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1965 நவம்பர் 17-ம் தேதி, 'செப்டம்பர் 8 -ம் தேதி'யை  உலக எழுத்தறிவு தினமாகக் கடைபிடிப்பது என பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அடிப்படை எழுத்தறிவை போதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் சிறுவயதில் எழுத்தறிவைப் பெற முடியாமல் போனவர்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவைப் போதிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எழுத்து ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்கிறார் ஒளவையார். ஆனால் பள்ளிக்கூடங்களில் சில குழந்தைகள்  எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தவறாகவே சொல்வார்கள். 'D'-ஐ  ' B' என்பார்கள். 'ஆ'- வை 'இ' என்பார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தக் கற்றல் குறைபாட்டுக்கு 'டிஸ்லெக்ஸியா'என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் தடுமாறுவார்கள்

அப்படி டிஸ்லெக்ஸியாவில் பாதிக்கப்பட்டு, இவனால் கற்றுக்கொள்ளவே முடியாது என்று நிராகரிக்கப்பட்டு, படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல பள்ளிகளிக்குச் சிறப்புப் பேச்சாளராக சென்று கொண்டிருக்கிறார் ஹரீந்திரன். 


" 'டிஸ்லெக்ஸியா' என்பது ஒரு நோய் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அது உண்மையில்லை. டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவான கற்றல் திறன் (Slow learning) உடையவர்களாக இருப்பார்கள் அவ்வளவுதான்.  நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எழுத்துகளை வாசிக்க, எழுத மிகவும் சிரமப்படுவேன். பிறரிடம் போய் பேசக்கூட  தயங்குவேன். பெரும்பாலும் தனியாகவே இருப்பேன். அதனால் நான் படித்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். 

பிறகு  தி.நகரில், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் பள்ளியில் என் பெற்றோர் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறை சிறப்பாக இருந்தது. தவறாக வாசித்தாலோ எழுதினாலோ. 'நீ மக்கு, எதுக்குமே லாயக்கு இல்லை' என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். மிகவும் கனிவாகப் பேசி மீண்டும் மீண்டும் சொல்லிப் புரியவைப்பார்கள். அதனால் பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றேன் . இன்று பி.காம், பி.எல் முடித்து விட்டு வழக்கறிஞராக இருக்கிறேன். அதுபோக, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். என்னிடம் 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுபோக பல பள்ளி, கல்லூரிகளில் கேரியர் கவுன்சலிங் கொடுக்கிறேன். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயாளியாகக் கருதாமல் அவர்களைச் சரியாக ட்யூன் செய்தால் வழக்கமான மனிதர்களை விட சிறப்பாக உருவாவார்கள். 

'டிஸ்லெக்ஸியா' -வால் பாதிக்கப்பட்டவர்கள் தனித் திறனுடையவர்கள். அவர்களால் குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் இருக்கமுடியாது. ஒரே வேலையைச் செய்ய விரும்ப மாட்டார்கள். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பலர் இன்று இசையமைப்பாளராக, சவுண்ட் இன்ஜினீயர்களாக,  பத்திரிக்கையாளர்களாக, எப் 3 ரேஸர்களாக இருக்கிறார்கள்... "என்கிறார் அவர்.."கற்றல் குறைபாடு மரபு வழியாக ஏற்படலாம். நரம்பியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் ஏற்படலாம். இதை வருமுன்னே தடுக்க முடியாது. ஆறு வயதுக்கு மேல்தான் தெரிய வரும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்க முடியாது. 'மல்டி சென்சரி' (Multi sensory) அணுகுமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும். 

அதாவது,  கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு உணரவைத்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு 'மல்டி சென்சரி' என்று பெயர். இம்முறைப்படி, கற்றுக் கொடுத்தால், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

முன்பு, குழந்தைகளின் விரல் பிடித்து மணலிலோ அரிசியிலோ எழுதக் கற்றுத் தருவார்கள். இதற்கு,  `நுண் நரம்பியல் பயிற்சிகள்’ என்று பெயர். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த முறைப்படி கற்றுத்தர வேண்டும். இந்தக் குழந்தைகளை மேம்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களைக் கண்டறிய வேண்டும். அத்திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடிக்கடி உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.  இது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

பள்ளிகளில் யாருக்கேனும் இதுபோன்ற குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தால், ஆசிரியர்கள்  உடனே அக்குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னால் அவர்களை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.  அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அன்போடும், பக்குவமாகவும் சொல்லிக் கொடுத்தால்,  இதற்கான சிறப்புப் பள்ளிகளே தேவைப்படாது..." என்கிறார் மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன்.

20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோ பிக்காசோ அலெக்சாண்டர் கிரகாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பலர் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. இவர்கள் புரிந்த சாதனைகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான பயிற்சியும், ஊக்கமும் அளித்தால் சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Panchayat Union Primary School excels in Carom tournament
Panchayat Union Primary School, Havoor near Kothagiri, bagged the overall champion in the District Level Carom Tournament.

According to sources, 140 students from 26 schools from Nilgiris district participated in the tournament organised by the Sports Development Authority of India. The tournament has been organized under four different categories Boys Singles and Doubles, Girls Singles and Doubles under junior and senior level.

The Students from Panchayat Union Primary School, Havoor bagged first places in all the four categories – boys (singles and doubles) and girls (singles and doubles). The winners would participate in the State-level carom tournament.

H.T. Kumar, District Sports and Youth Welfare Officer inaugurated the tournament. K Pitchaippan, District Chief Education Officer distributed the prizes.

The Principal of the school, J. Ravikumar, told The Covai Post that their students have been representing the district in the State-level tournament for the last six years. “We have been giving them intense coaching to the students, who have also shown keen interest in the game. Realising the importance of sports, parents are also extending full cooperation to us. Some of them have even purchased carom boards for their kids at home,” he said.

He also lauded the students for excelling in debates, that have gone viral. He thanked his teachers for encouraging the students and shaping them up well. Impressed over the students’ skills, two German students Adriana Browne and Tim Altendorf from the Martin Luther Schule in Rimbach organised a fund raising programme in their country and handed over Rs 6.25 lakh to the school through Kotagiri Island Trust, the Principal said. The panchayat union school is looking for sponsors to buy a van of its own to take its children to places where competitions are held.

அமைதியாகப் போராடலாம், சட்டம்-ஒழுங்கு பாதித்தால் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் அரியலூரைச் 
சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும்  'நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என்று கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அதில், தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சாலை மறியல், கடை அடைப்பு உட்பட பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.

மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

*இந்நிலையில், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்*. அந்தப் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

இவ்விவகாரத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு பிரச்னைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது.


JACTTO-GEO 2வது நாளாக போராட்டம்: நாளை உயர்மட்டக் குழு கூடுகிறது

ஜாக்டோ-ஜியோ அறிவித்த வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நேற்றும்  நடந்தது. நாளை சென்னையில் உயர் மட்டக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க  உள்ளனர்.  ஜாக்டோ-ஜியோ சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 22ம் தேதி ஒருநாள்  அடையாள வேலை நிறுத்தம் நடத்திய பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்படாத நிலையில் ஜாக்டோ-ஜியோ இரண்டாக பிரிந்தது. புதிய அணிக்கு  சுப்ரமணியன், மாயவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

புதிய அணியினர் 7 மற்றும் 8ம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்துவது, 10ம்  தேதி சென்னையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவித்தனர். அதன்படி,  முதற்கட்ட வேலை நிறுத்தம் 7ம் தேதி நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் 7  லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்கள்  கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். 

இதற்கிடையே,  மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதித்தது.  அரசும் அதிரடி உத்தரவு போட்டு வேலை நிறுத்தத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்றும்  தெரிவித்தது. ஆனால், புதிய அணியினர் அறிவித்தபடி நேற்றும் இரண்டாவது நாளாக  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு நாள் போராட்டத்தால்  அரசுப் பணிகள், பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டம் நீடிக்குமா அல்லது வாபஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன் ஆகியோர் கூறியதாவது: ஈரோட்டில்  முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு 7, 8ம் தேதிகளில் வேலை  நிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவோம் என்று அறிவித்தோம். தொடர் வேலை  நிறுத்தம் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. அதனால் அறிவித்தபடி இரண்டு  நாட்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது.

 இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்ற  கிளை எங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து இருப்பதாக தகவல்  வந்துள்ளது.  இதுவரை எங்களுக்கு நீதி மன்றத் தரப்பில் இருந்து நோட்டீசோ,  தடையின் நகலோ வரவில்லை. மேலும், 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய  வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாகவும் எங்களுக்கு நோட்டீஸ்   அல்லது நீதிமன்ற தகவல் வரவில்லை. இருப்பினும் நேற்று ஒருநாள் வேலை  நிறுத்தம் செய்தோம், இன்றும் செய்கிறோம். 

நாளை (10ம் தேதி) சென்னையில்  அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க உள்ளது.  அடுத்தகட்ட போராட்டம் குறித்தும், நீதிமன்ற உத்தரவு குறித்தும் ஆலோசிக்க  இருக்கிறோம். அதற்கு பிறகு முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அன்பரசு, மாயவன் தெரிவித்தனர். இதனால், ஜாக்டோ-ஜியோ போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தொடருமா என்பது இன்று மாலையில்தான் தெரியும்.

7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.


கிருஷ்ணகிரியில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங் கோட்டையன் பேசிய தாவது:

மலை கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, 7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்.

மத்திய அரசின் எந்த ஒரு போட்டி தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

சென்னையை தலைமை யிடமாக கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறந்தகல்வியாளர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இதை, இணைய தளம் வழியாக மாணவர்கள் கற்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், அடுத்த மாதம், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

RTE : தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளை சேர்க்க 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை தெரிவு செய்யும் பணி கடந்த மே மாதம் அனைத்து  பள்ளிகளிலும் நடந்தது. அப்படி தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் குறிப்பிட்ட பள்ளியில் சேர்வதற்கு வரவில்லை.

அதனால் ஏற்பட்ட காலியிடங்களில் மீண்டும் குழந்தைகளை சேர்க்க ஜூலை மாதம் நேரடி சேர்க்கை வழங்கப்பட்டது. அதற்கு பிறகு ஜூலை மாதமும் சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இதற்கு பிறகும் 41 ஆயிரத்து 832 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு கருப்பசாமி தெரிவித்துள்ளார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!