Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 September 2017

ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு.


செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதேபோல, செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அப்படி இணைக்கபடாத சிம் கார்டுகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2018 பிப்ரவரியில் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.


விழாவின் தொடக்கமாக காலை 9 மணி அளவில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சியும் நடந்தது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நிலோபர்கபில் மற்றும் கலெக்டர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

மாணவ- மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கவும், எவ்வாறு கல்வி போதிப்பது என்பது குறித்தும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவ- மாணவிகள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கொள்கை முடிவு. இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசு. எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

மத்திய அரசு கொண்டு வரும் எந்த போட்டிதேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த சிறந்த பேராசிரியர்களை கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்க இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப் படும். கற்றல் திறன் குறைவுடைய மாணவ-மாணவிகள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்காக புதிய திட்டம் தீட்டப்பட்டு அந்த திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.

மாணவ- மாணவிகள் படித்ததை மறந்து விடுவதை தவிர்க்க வழிவகைகள் செய்யப்பட உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்பு’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு சென்னை மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ் உளவியல் ஆலோசனை வழங்கினார்.

அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம்அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். நடவடிக்கைஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிர
மணியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூடி, ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளுடன், தற்போது, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்
பதையும் இணைத்து, 11ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

அன்று அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; 12ம் தேதி மறியல்; அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
போராட்டத்தோடு நீதிமன்ற வழக்கையும் சந்திப்போம். 28 ஆசிரியர்கள் சங்கம், 64 அரசு ஊழியர் சங்கம் என, மொத்தம், 92 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு


மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் ௧ முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். பள்ளிகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.'இந்தாண்டுக்கான, மாநில அளவிலானதேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் துவங்கும்' என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'

அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், 2.4 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். 
அவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் நிர்ண
யிக்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. இதுவரை, 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, பல்லவன் இல்லத்தில், அதிகாரிகள் அடங்கிய துணைக் குழுவினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அரசுக்கு, 'ஸ்டிரைக் நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:அரசு போக்குவரத்து கழகங்கள், நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. அதனால், காலாவதியான பஸ்கள் தான், அதிகளவில் இயக்கப்படுகின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு
சங்கங்களுக்கான பிடித்தம் உள்ளிட்ட, 5,500 கோடி ரூபாயை, நிர்வாகம் செலவு செய்து விட்டது; தற்போதும் செலவு செய்து வருகிறது.

செலவு செய்த தொகையை வழங்குவது,
போக்குவரத்து கழகத்தின்
நஷ்டத்தை ஏற்பது, 13வது ஊதிய ஒப்
பந்தத்தை நிறை
வேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை,
அரசுக்கு பலமுறை
தெரிவித்துள்ளோம். அவற்றுக்கு தீர்வு காண, அரசு, இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மேலும், சிறிய தொழிற்சங்கங்களை இணைத்து, அரசுக்கு சாதக
மான வகையில், ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்ய, அரசு திட்டமிடுகிறது. அதுபோன்ற சங்க நிர்வாகிகளுக்கு, சலுகை காட்டுகிறது. அதனால், வரும், 24ம் தேதியிலோ, அதற்கு பின் வேறு தேதியிலோ, வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்து
உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

JACTTO -GEO- இன்றைய 09.09.17 கூட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு வெளியீடு "NEET ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை சேர்த்தது JACTTO-GEO"எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!