Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 September 2017

DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்புசாரண- சாரணிய இயக்க தலைவர் தேர்தலில் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி

தமிழ்நாடு சாரணர்- சாரணியர் இயக்க தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சாரண- சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா தோல்வியடைந்தார்.தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50சதவீதமாக உயர்வு: கே.பாண்டியராஜன்

தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம்50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த அளவைவிட இரு மடங்கு அதிகம் என தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
தேசிய மனிதவள மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்) சார்பில் ""நேட்கான் 2017-' என்ற தேசிய அளவிலான மனிதவள மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உயர் கல்வித் துறையில் அரசு, தனியார் கூட்டு பங்களிப்பு (பி.பி.பி.)நடைமுறையை அறிமுகம் செய்தார். இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தமிழகம் இன்று இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.உதாரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 22 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.அதுபோல, பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம், இன்று நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தை ஆண்ட அரசர்கள், குடிமராமத்துப் பணிகளை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தினர். இன்றும் நாம் அதைப் பின்பற்றி வருகிறோம். இப்போது தமிழக அரசின் உத்தரவின் பேரில் 2000 நீர் நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோல, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் பல்வேறு இடையூறுகள், சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதனை, மனிதவள மேம்பாட்டுத் துறையினர் திறமையாக எதிர்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இப்போது, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, 2009 முதல், 2014 வரையும், அடுத்து, 2014 முதல், 2019 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், கட்டாய கல்வி உரிமை சட்டம்அமலான பின், பணியில் சேர்ந்துஇருந்தால், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், பல லட்சம் ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் உத்தரவுக்கு, தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில், புதிதாக இரண்டு ஆண்டு டிப்ளமா ஆசிரியர் கல்வியியல் படிப்பு துவங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019க்குள் இந்த படிப்பை முடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

படிப்பில் சேர, www.nios.ac.in என்ற இணையதளத்தில், செப்., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும், பல லட்சம் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் முயற்சித்ததால், இந்த இணையதளம் முடங்கியது. இதுகுறித்து, என்.ஐ.ஓ.எஸ்.,சுக்கு புகார்கள் வந்ததால், ஆசிரியர் தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி

டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

 

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.

இப்போது புதிதாக ஒரு திட்டத்தோடு களமிறங்கியுள்ளது, மத்திய அரசு. டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று பேசுகையில், டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், ஒருவரின் டிஜிட்டல் அடையாளத்தையும், அங்க அடையாளத்தையும் ஒப்பிட முடியும் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இப்படி ஒருபக்கம் டிஜிட்டல்மயமாகிக்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என அரசு நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல, அரசு தான் முழு காரணம். அரசு எங்களை 14 ஆண்டுகாலம் அலைக்கழித்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இறுதியாக, நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் துணைபுரிகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்த முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.

முதல் வெற்றி

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி, அவரிடம் உங்களுடைய கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது? என்று கேட்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு எங்களுடைய நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட முடியாது. 21-ந்தேதி தலைமைச் செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி என்ன சொல்கிறார் என்று தெரியும் வரை கோர்ட்டு மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி, தற்காலிகமாக எங்களுடைய போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை 21-ந் தேதி வரை ஒத்திவைத்து பணிக்கு செல்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

உயர்மட்டக்குழு கூடுகிறது

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது. அதில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து முடிவு எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.

அவைகளை அந்தந்த துறை வாபஸ் பெறுவது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை - JACTTO GEO வழக்கில் நீதிபதிகள் வேதனை

ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர். 

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 9வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இதனிடையே மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 4 சங்கங்களின் நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இந்தநிலையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் தாஸ், தமிழ்நாடு துவக்க பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் மோசஸ் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தனர். 

மனுவில், ‘‘கடைசியாக 2006ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. 10 ஆண்டுக்கு மேலாகியும் புதிய ஊதிய உயர்வு அமலாகவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒன்றரை லட்சம் பேரை திரட்டி சென்னையில் பேரணி நடத்தினோம்.

  

இதையடுத்து, முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். இதன்படி செப். 6ல் ஈரோட்டில் முதல்வரை சந்தித்தோம். ஆனால், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் எங்களை போராட்டத்தில் தள்ளியது. 

நீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டுமென்பது எங்களின் நோக்கம் அல்ல. இதை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் எந்த அடிப்படையில் போராட்டத்தை தொடர்கிறீர்கள். 

மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை. உங்களது போராட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும்’’ என்றனர். இதற்கு சங்க நிர்வாகிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.ஜி.பிரசாத், ‘7வது சம்பள கமிஷன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்கள் சட்டரீதியாக பிரச்னையை அணுகலாம். தடை இருந்தும் எப்படி போராட்டத்தை தொடர்கிறீர்கள்? உள்ளேயே சமைத்தும் போராடுகிறீர்கள்.

அரசு அலுவலகங்களுக்குள் போராடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தடை உத்தரவை மீறி நடக்கும் உங்கள் போராட்டம் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. எந்தவித நிபந்தனையும் இன்றி போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’’ என்றனர். நீதிபதிகள் எச்சரிக்கை: 

இதற்கு மூத்த வக்கீல் என்.ஆர்.ஜி.பிரசாத், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்க வேண்டும். அதுவரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். 

ஒரு மணி நேரத்திற்குள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டி வரும். உங்கள் பிரச்னைக்கு தலைமைச்செயலர் மூலம் தீர்வு காணலாம்’’ என்று கூறினார்கள். ‘எந்த உத்தரவாதமும் இல்லாமல் எப்படி போராட்டத்தை விலக்கி கொள்ள முடியும்’ என்று மூத்த வக்கீல் கேட்டார். அரசு தரப்பில், ‘தலைமை செயலாளரை சங்கத்தினர் தனியாக சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியக்குழு அமல்படுத்துவது குறித்த குழுவின் அறிக்கை பெற்று ஆய்வில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதற்கு மூத்த வக்கீல், ‘அரசு அதிகாரிகளுடன் பலமுறை பேசியும் பலனில்லை’ என்றார்.

போராட்டத்தை விலக்கினால் தீர்வு: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘போராட்டத்தை உடனடியாக விலக்கி கொண்டால் தலைமை செயலரை நீதிமன்றத்துக்கு வரவைத்து தீர்வு காணலாம்’ என்றனர். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை விலக்கி கொள்வதாக போராட்ட குழுவினர் சார்பில், நீதிபதிகளிடம் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:  

அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கான இடையூறு தொடர்கிறது. அரசு அலுவலகங்களை தனிநபர் சொத்து போல பாவித்துள்ளனர். போராட்டத்தை இரவிலும் தொடர்ந்துள்ளனர். அரசு அலுவலகங்கள் அவர்களது ஓய்வு அறை அல்ல. மக்கள் தங்களது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். 

21ம் தேதி ஆஜராக உத்தரவு: தற்போது தமிழகத்தில் கடும் வறட்சியான நிலை உள்ளது. இதனால், தங்களின் குறைகளுக்கு தீர்வு காண அரசு அலுவலகங்களுக்குள் மக்களால் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். எனவே, தமிழக தலைமை செயலாளர் செப். 21ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்படுகிறது. அவர், அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆஜராகி, அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பணிக்கு திரும்பினர்: இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். 

‘அரசு முடிவு காணவேண்டும்’

வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீதிமன்றம் எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறியுள்ளது. இதற்காக தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று எங்களது காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி பணிக்கு திரும்புகிறோம். எங்களது பிரச்னைக்கு அரசு முடிவு காணவேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. 

இந்த தேர்வு எழுத செப்டம்பர் 14ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது, விண்ணப்பிக்கும் தேதி 18ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்படுகிறது. இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!