அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு; மாலை 4.30 மணிக்கு பதில் 3.45 மணிக்கே பள்ளி நேரம் முடியும்
2 மணி வரை இருந்த உணவுஇடைவேளை 12.25 மணி-1.30 என அரைமணிநேரமாக குறைப்பு; நேரமாற்றம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே என புதுச்சேரி அரசு அறிவிப்பு
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு; மாலை 4.30 மணிக்கு பதில் 3.45 மணிக்கே பள்ளி நேரம் முடியும்
2 மணி வரை இருந்த உணவுஇடைவேளை 12.25 மணி-1.30 என அரைமணிநேரமாக குறைப்பு; நேரமாற்றம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே என புதுச்சேரி அரசு அறிவிப்பு
செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள்
ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?
மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்களின் பதில்:
வெயிட்டேஜ் முறை தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளதாகவும் அதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் ஆலோசனையை பெற்று முதல்வரிடம் அனுமதி பெற்று பணி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆதாரம்: மாலைமுரசு 17-9-2017
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த
விழாக்கால போனஸை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் காலதாமதமின்றி வழங்கப்படும் என அமைய்ச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
IFHRMS DIGITIZATION BOOKLET பணிப்பதிவேட்டை பார்த்து நிரப்பவும்:
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்
பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்
பக்கம்-7 துறை தேர்வு விவரம்
பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி
பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்
பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம்
பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு
பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம்
பக்கம்-21 ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுதல் நியமனம்
பக்கம்-25 ஈட்டிய விடுப்பு இன்றைய இருப்பு விவரம்
பக்கம்-26 மகப்பேறு விடுப்பு விவரம்
பக்கம்-27 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் மருத்துவ சான்றின் மருத்துவ விடுப்பு
பக்கம்-28-29பதவி உயர்வு மூலம் ஊதிய மறுநிர்ணயம் மட்டும்
பக்கம்-30-32 ஊதிய குழு நிர்ணயம்
பக்கம்-31-33 இடைக்கால நிவாரணம்
பக்கம்-34 இளையோர் மூத்தோர் ஊதிய விவரம்
பக்கம்-35-44 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-45 ஊக்க ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-46 தேர்வு/ சிறப்பு நிலை ஊதியம்
பக்கம்-47 உயர் கல்விக்கான துறை அனுமதி
பக்கம்-55-58 வாரிசு நியமன விவரம்
பக்கம்-61 பணி சரிபார்ப்பு
விவரம்
ஓ.மு L.Dis
மூ.மு K.Dis
ப.மு D.Dis
நி.மு R.Dis
செமுஆ Proc
ந.க R.C
அரசாணை G.O
இரு Standing Order No.
பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்
*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.
1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.*
*[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும்* *உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.*
*NIOS*
*தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்*
*சுருக்கம் NIOS*
*உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்டுகளுக்கு முன்னர்)*
*வகை அரசு பள்ளிக் கல்வி வாரியம்*
*தலைமையகம் நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா*
*அமைவிடம்*
*A-24/25,* *இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் - 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் - 201 309*
*ஆட்சி மொழி*
*இந்தி & ஆங்கிலம்*
*தலைவர்*
*ஜே, ஆலம்*
*தாய் அமைப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)*
*வலைத்தளம் www.nios.ac.in*
*இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக திகழ்கிறது.*
*தற்போது தமிழில் தேர்வு எழுதலாம்*
*குறிப்பாக 3ம் வகுப்பு முதல் மருத்துவம் வரை இங்கே பயிலலாம் பள்ளி இடை நின்றவர்கள் 10, 12 வகுப்புகளும் படிக்கலாம்.*
EMIS தற்போது புதிய வடிவில் திறக்கப்பட்டுள்ளது.
நாம் செய்ய வேண்டிய பணிகள்
User name: dise code
Password: ssa officeல் பெறப்பட்டது
Google - emis - tnschool education department -
Enter your school username & password
பின்பு SIGN IN யை கிளிக் செய்க.
Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில் உள்ளதாக இருக்கனும்
School mobile: HM mobile no கொடுத்தவுடன் save மை கிளிக் செய்யவும்.
Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.
Step 3:
Student list - student profile (கிளிக் செய்யவும்) - student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் - பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student's) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.
தற்போதைய தளத்தில் புதிய சேர்க்கைக்காக இன்னும் தரவுகள் கொடுக்கப்படவில்லை.. மாறுதல் பணி முடித்ததும்
விரைவில் சேர்க்கைக்காக திறக்கப்படும்.
Steps for New student entry:
EMIS site ல் dashboardற்க்கு அடுத்து உள்ள student என்பதை கிளிக் செய்யவும். பின்பு create student யை கிளிக் செய்யவும்.
Student registration form தோன்றும். இப்படிவம் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் எளிமை படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக student photo தேவையில்லை.
கோரப்பட்டுள்ள தகவல்களும் குறைவு (எளிமை).
1.student name
2.adhaar no
3.D.O.B
4.Gender
5.religion, community, sub caste
6.Mother tongue
7. Father/ mother name, occupation, income
8. Mobile no & address
9. Class, section, previous class, admission no, D.O.J, Medium ஆகிய தகவல்கள் மட்டும் போதுமானது
Submit யை கிளிக் செய்யவும்.
EMIS New registration ஒரே பக்கத்தில் முடிந்து விடும்
EMIS தளத்தில் நீல வண்ணத்தில் வரும் எழுத்துகள் மீது கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்
வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு வந்த மாணவரை admit செய்யும் முறை
EMIS site ல் student - student search என்ற வழிமுறையில் மாணவரின்
1. Emis no
2. Adhar no
3.mobile no
4. Last studied school dise code, class
5. Last studied school postal pincode, D.O.B இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் போதும் admit செய்து விடலாம்.
குறிப்பு : தற்போது transfer செய்யும் பணி மட்டுமே. Admit செய்யும் பணி அறிவித்த பின்பு மேற்கொள்ளலாம்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் திருப்பதி ஜீயர் தலைமையில் மகாபுஷ்கர விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 20 ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி இருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் என்று கூறி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கிருபாகரன், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன? இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தி உள்ளனர்? அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா?
மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை? இதுதொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார் அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?
‘நீட்’ தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழக அரசு மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏன் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது?
‘நீட்’ தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரம் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் உள்ளன. அத்தகைய கேள்விகள் அடங்கிய புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு இன்று(புதன்கிழமை) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தைவிட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளிதேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில்பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம்சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.அதாவது, நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதா? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? தனியார் அமைப்புகள் ஏதும் நீட்டுக்கு எதிராக போராட தூண்டியுள்ளதா? வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாதா?நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? என சரமாரியாக பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.மேலும் இத்தகைய கேள்விகளுக்கு நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கல்வியில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வந்து இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வருகிற எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கின்ற அளவுக்கு இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இதற்காக 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மாதத்திலே அங்கு பயிற்சிகள் தொடங்கப்படும்.தமிழக மாணவர்களுக்கு சந்திர மண்டலத்தை எட்டிப்பிடிக்கிற வகையிலே திறமை இருக்கிறது. அவர்களை ஊக்கப்படுத்தவும், ஆக்கப்படுத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மடிக்கணினி தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.
‘ஸ்மார்ட் வகுப்பு’ கொண்டு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிற வகையில் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.437 கோடியில் பள்ளிகளில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு உலக செய்திகளை அவர்கள் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் தமிழக மாணவர்களை மிஞ்ச முடியாது என்ற நிலையையும் அரசுஉருவாக்கும்.பாடத்திட்டத்தை மாற்ற உள்ளோம். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய அளவுக்கு பாடத்திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம்.
இந்த மாத இறுதிக்குள் அதை அறிவிப்போம். கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வருவதால் அனைவரையும் கல்வியாளர்களாக மாற்றிக்காட்டுவோம். மாணவர்கள் எதிர்காலத்தில் விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று பணிகளை செய்கின்ற வகையில் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன.
எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், ௬௯௦ பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பி.எட்., சேரும் பலர், பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபடியே படிப்பது வழக்கம். இதை, சில கல்லுாரிகள் தவறாக பயன்படுத்தி, 'வகுப்புக்கே வர வேண்டாம்; பட்டம் தருகிறோம்' எனக்கூறி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை:அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., சேருவோர், ஆண்டுக்கு தலா, ௨௦௦ நாட்கள் வகுப்புக்கு வர வேண்டும். ஆனால், சில கல்லுாரிகளின் பிரதிநிதிகளும், ஏஜன்ட்களும், 'வகுப்புக்கே வராமல், தேர்வு மட்டும் எழுதினால் போதும்' எனக்கூறி, மாணவர்களை சேர்க்கின்றனர். இதற்காக, கூடுதலாக கட்டணம் பெறுவதாக, பல்கலைக்கு தகவல்கள் வருகின்றன.
பல்கலை விதிகளுக்கு மாறாக, கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை சேர்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம். எனவே, பொய்யான வாக்குறுதியை நம்பி, தனியார் கல்லுாரிகளில் சேர வேண்டாம். அப்படி சேர்ந்து, பட்டம் கிடைக்காவிட்டால், அதற்கு பல்கலை பொறுப்பாகாது. மேலும், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் நீக்கப்படுவதுடன், அந்த கல்லுாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவிவழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும்புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், ௨௫ ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இந்த நிதியில், நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத புத்தகங்களை, தனியாரிடம் வாங்கி கொடுத்ததால், பண விரயம் ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி சரியாக கிடைக்கவில்லை.
இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,இந்த ஆண்டு, அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகங்களை வழங்க,அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது.
2011 முதல் இதுவரை, 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொள்முதல் சிக்கல் காரணமாக, 2016 - 17ல், வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, 'டெண்டர்' தொடர்பான சிக்கல்கள் தீர்ந்ததால், 'லேப் - டாப்' கொள்முதல் துவங்கி உள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில் தர வேண்டிய மாணவர்களுக்காக, ஐந்து லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்ய, டெண்டர் இறுதியானது. அதில்,'லெனோவா, டெல்' ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, விரைவில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, வினியோகம் துவங்கும். மீதமுள்ள, 3.5 லட்சம், 'லேப் - டாப்'கள் சில மாதங்களில் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்து உள்ளது. இதன்படி மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைத்துள்ளது.
இந்தகட்டண குறைப்பு வரும் அக்.,1-ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2020 ஆண்டு முதல்அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை எனவும் டிராய் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது.
இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான்.இந்த வைரசை மழைக் காலத்தில் போலியோ சொட்டு மருந்துபோலஒரேநேரத்தில் வழங்கினால் அழிக்க முடியும். இதனால் ரோட்டாவைரஸ் சொட்டு மருந்தை செப்.7ம் தேதி காலை 7:00 மணி முதல் கொடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் செப்.6ம் தேதி நள்ளிரவில் சொட்டு மருந்தைவழங்க வேண்டாம் என திடீரென உத்தர விடப்பட்டது. இந்நிலையில் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு இன்று முதல்(செப்.20) வழங்கப்பட உள்ளது. இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.