Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 21 September 2017

கிராமக்கல்விக் குழுவை பள்ளிமேலாண்மைக் குழுவாக மாற்றித் தலைவர்களை நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுரை!!



 





அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை - உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு !!

உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு



அனைத்துதுறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன- அரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அரசின் அலட்சியத்தால் 7 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு என முறையீடு

அரசு ஊழியர் கோரிக்கை தொடர்பாக செப்.30க்குள் அறிக்கை தாbக்கல்- தமிழக அரசு

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:
 
அரசு பரிசீலிக்கிறது

அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.

செப்.30க்குள் அறிக்கை
இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.
 
இடைக்கால உத்தரவு
அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.
 
5 மாத அவகாசம்

இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.


ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .

ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம் நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது . இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது,   எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .

இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால் மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள 1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .

உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.

2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது

4. வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது

5. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்

6 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

தேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?

ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.

"தேசிய சைபர் ஒலிம்பியாட்":

தேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே  கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட  பிரச்சினைகளை  புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தகுதி

சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இந்த தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்துகொளளலாம்.9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு  மாணவர்கள் தங்கள் வருங்கால தொழிலாக கலை, வணிகவியல், விஞ்ஞானம் இவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் இந்தப் போட்டிகளின் நோக்கமே  மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன்களை சோதிப்பது

 

பண்டிகை முன்பணம்( FESTIVAL ADVANCE ) கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-


CLICK HERE FOR APPLICATION

COURT ORDER COPY: BRTE convertion - 8 வாரங்களுக்குள் செயல்படுத்தவும் : உயர்நீதிமன்ற.மதுரைக்கிளை உத்தரவு !!!

☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.*


*☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் 
வழிகாட்டியிருந்தது.*

*☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.*

*☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,*

*☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.


பேனாவால் எழுதப்பட்ட புதிய 500 / 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுக்க கூடாது - இந்திய ரிசர்வ் வங்கி



ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்


பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார். 
இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். 
அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ முன்வைத்துள்ளது.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாகபல்வேறு கட்டப் போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

 வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும், இந்தப்பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 21 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை ஆஜராகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ்சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவந்தன.ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும்,ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசுநீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது

.எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.
செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால்வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.

ரூ.5,400 கோடி

வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவிஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள்வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு,காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

முறைகேடுகளுக்கு முடிவு

இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்துகண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும். ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!