Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 22 September 2017

உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதித்த தடை நீக்கம்.

நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை நீக்கம்.இடைக்கால தடை நீக்கத்தை அடுத்து நாளை வழக்கம் போல் தேர்வு நடைபெறும்.


இன்றைய JACTTO GEO கூட்ட முடிவுகள்

07.10.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும் காலை நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்ககூட்டம்
23.10.2017 வரை போராட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு


24.10.2017 அன்று அடுத்த ஜேக்டோ ஜியோ கூட்டம் நடைபெறும்


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன். இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின் பாடத்திட்டம். 

ஆனால் மாநிலத்தில் பின்பற்றப்படுவது எந்த விதமான சிலபஸ் என்றே பெற்றோர்களுக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. இன்று சென்னையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பல பள்ளிகள் செயல்படுகின்றன. அத்தனை பள்ளிகளும் பின்பற்றுவது சிபிஎஸ்இ சிலபஸைத்தான் என்றால், ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் பாடங்கள் வெவ்வேறு விதமாக இருக்க வேண்டும்.

சில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக் காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான சுமையின்றி வேறென்ன? முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி மரங்களாக்கும் முயற்சிதான் இது!

எண்களை மட்டுமல்ல சில பள்ளிகளில் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் என்ற பெயரில் குட்டிக் குட்டி சொற்களையும்கூட யூகேஜி வகுப்புகளுக்கான தேர்வுகளில் எழுதச் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னொரு சோகம் என்னவென்றால், ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை. பெரும்பாலான அம்மாக்களுக்கு ஃபோனிக்ஸ் முறையில் கற்பித்தல் என்றால் என்னவென்றே விளங்குவதில்லை. வகுப்பு ஆசிரியைகளிடம் கேட்டால், நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள் யூடியூபில் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக் கொடுத்து பிராக்டிஸ் எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். அப்போதுதான் தேர்வு சமயத்தில் எளிதாக இருக்கும் என்கிறார்கள். அந்த ஆசிரியைகளைச் சொல்லியும் பலனில்லை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்?!

ஆனால், இவ்விஷயத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறைப்படி வீட்டில் கற்பிப்பது எப்படி? என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்! ஏனென்றால், இன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பேறு கொண்ட குழந்தைகள் அத்தனை பேரின் அம்மாக்களும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் அல்ல. அவர்களில், கிராமத்துப் பள்ளிகளில் ஆங்கில இலக்கண வாடையே தெரியாமல் படித்து, திக்கி, முக்கித் திணறி நகர வாழ்க்கைக்குள் வந்து, தாங்கள் அடைந்த துயரம் தங்களது பிள்ளைகளும் அடையக் கூடாது என்ற நோக்கில், தரமான கல்விக்காக உங்கள் பள்ளிகளில் தம் வாரிசுகளைச் சேர்த்துவிட்டு, உங்கள் கற்பித்தல் முறையை விளங்கிக்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களும் பலர் இருக்கலாம்.

அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாக புருசோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம் எனக் கூறி, அதைக் குறைக்கச் சொல்லிக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குழந்தைகள் விளையாட வேண்டிய வயதில் அவர்களைப் பாடங்களால் திணறடித்து மெளனிகளாக்கி துன்பப்படுத்துகிறோம். அவர்களது பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். புருசோத்தமனின் கோரிக்கை குறித்து சிபிஎஸ்இயும், மத்திய அரசும் உடனடியாகப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.

வாரமொருமுறைகூட விளையாட அனுமதிக்கப்படாமல், அப்படியே அனுமதி இருந்தாலும் அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டாக இல்லாமல் பன்னிஸ் என்ற பெயரிலோ, ஸ்கவுட் என்ற பெயரிலோ மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைக்கப்படும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் சோகம், இவரது உத்தரவின் மூலமாகவாவது தீர்ந்தால் சரி!

தரமான கல்வி என்றால் கஷ்டப்பட்டுத்தான் பயில வேண்டும் என்று யாராவது சொல்லிவிடாதீர்கள். இதைவிடக் கடினமான பாடத்திட்டங்களைக்கூட செயல்முறையில் மிக எளிதாக்கி தங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து சாதனையாளர்களாக்கும் நாடுகளும் இந்த உலகில்தான் இருக்கின்றன. அங்கிருந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்க முடியாது.

முதலில் உங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பிக்கும் பெற்றோர்கள், தங்களுக்கு பாடத்திட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் என்று உங்களை அணுகினால், எல்லோரிடமும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் தேடுங்கள் என்ற பதிலைச் சொல்லி வாயை மூடாமல், குறைந்தபட்சம் எல்லாப் பெற்றோர்களுக்கும் மாதம் ஒருமுறையாவது பாடத்திட்டம் குறித்த சந்தேக நிவர்த்திக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பாருங்கள். பெற்றோர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள்.


அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் : பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தேர்வுமுடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-2315 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணியானது வெறும் 40 நாளில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம்.மாணவர்கள், பள்ளிகள் இடையே தேவையற்ற வேறுபாட்டு உணர்வை ஏற்படுத்தக்கூடிய பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ரேங்க் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் எழுதிய 19 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ்மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பினோம்.தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதியில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளுக்கு கணினிஆசிரியர்கள் (748 காலியிடங்கள்) 2 மாதத்தில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதற்காக நடத்தப்படும் தேர்வின் முடிவு ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டும். மேலும் கற்றல்குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.

நீட் போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சியானது வெளிமாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் அளிக்கப்படும். இதற்கான சிறப்பு நிகழ்ச்சி அண்ணா நூலகத்தில் நடைபெறும். மேலும், மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக பள்ளிகளில் இந்த மாத இறுதியில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்” என்றார்.

JACTTO-GEO போராட்டம் : சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு

சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும் 

நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கதது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
போராட்டக் காலத்தில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுழப்பியுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை, போனஸ் சட்டத் திருத்தம் 2015–ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும்.

முன்னதாக ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே மாத ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாநில போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை உற்பத்திக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வன பயிர்க் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான போனஸ் அறிவிப்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் கடந்தாண்டு வழங்கப்பட்டதுபோல தனியாக வெளியிடப்படும்.

ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் தொடர்பாக தனியாக ஆணைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?

✅இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக

ஆசிரியர் களுக்கு பொருந்தாது.

✅கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது

✅ ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்

✅ உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.

✅நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.

✅மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.

✅DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.


நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை

நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேர்வுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் 2வது அட்டவணைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை; பொதுவான தகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என வழக்கு


ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?

ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?
இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக ஆசிரியர் களுக்கு பொருந்தாது.
கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது
ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்
உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.
நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.
மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.
DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
தகவல்
கே.பி.ரக்‌ஷித்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!