எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Sunday, 24 September 2017
NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள்
பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.
இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்
NCERT புத்தகங்கள் மனுவை பரிசீலிக்க உத்தரவு
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி குழு புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன், தாக்கல் செய்த மனு:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ளகுழந்தைகளுக்கு, மூன்றுஅல்லது நான்கு பாடங்கள்கற்பிக்கப்படுகின்றன.இந்த குழந்தைகளுக்கு,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6ம் வகுப்பில் இருந்து, வெவ்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை, தனியார் பள்ளி களில் அனுமதிப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு மனு
அனுப்பினேன்.அதற்கு, ௨௦௧௭ ஜன., முதல், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டும் வாங்க, தனியார்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அறிவுறுத்திஇருப்பதாக, பதில்அளிக்கப்பட்டது.என்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடங்களைமட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிற்றுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை வாங்கும்படி, பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்கும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன்முன், விசாரணைக்குவந்தது. மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை பாழாக்குவதாக, நீதிபதி வேதனை
தெரிவித்தார்.என்.சி.இ.ஆர்.டி.,புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில்பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்தியஅரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், நீதிபதிஉத்தரவிட்டார்.மனு குறித்து, மத்திய அரசு, உதவி சொலிசிட்டர் ஜெனரல், சீனிவாசன் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.
NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு
இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது.
அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.
இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு
உள்ளது.
அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், ௨௦௧௯க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், ௧,௨௦௦ மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், ௫௦ சதவீதமான, ௬௦௦ மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆய்வின் முடிவில், ௫௦ சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க,
கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும், ௫௦ சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது.
அதனால், 'பிளஸ் ௨ சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்
DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது பணிப்பதிவேடு உள்பட அனைத்து பதிவேடுகளும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து, டிஜிட்டல் முறையில் பராமரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் எவ்வித விடுதலும் இல்லாமல் பதிவுகள் சரி செய்யப்பட வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்களிடம் பதிவேடு வழங்கப்பட்டு விடுதல்களை சரி செய்யும் முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பதிவுகள் விடுபட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதிவுகள் இல்லாத காலக்கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான், பதிவுகளை சரி செய்து தர வேண்டுமென உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை பதிவுகள் சரி செய்யும் பணியே முடிவடையவில்லை. இதனால் கருவூலம் மூலம் கணினிமயமாக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை நிலவுகிறது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘பணிப்பதிவேடு என்பது ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு, கல்வித்தகுதி, வாரிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். அதில் பதிவுகள் விடுபட்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. 6 மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டை முறையாக பெற்று நகல் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. எனினும் பல்வேறு அலுவலகங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் விடுதல்கள் அப்போதே சரி செய்யப்பட்டிருக்கும். எனவே, விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். கணினிமயமாக்கலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்
புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும், இத்துறை தேர்வுகளுக்கான பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், டிச., 23 - 31 வரை, அரசு துறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நேற்று துவங்கி உள்ளது. தேர்வெழுத விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். அக்., 31 வரை, விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. டிச., 17 முதல், 'ஹால்டிக்கெட்'டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது