Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 26 September 2017

5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளிகளாக இருந்து மீட்கப்பட்ட 21 ஆயிரத்து 622 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என டெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், ''கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 627 ஆய்வுகள் நடத்தப்பட்டதில், 425 ஆய்வுகளில்விதிமீறல் கண்டறியப்பட்டது.

அதன் மூலம் 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், ரூ.24 லட்சத்து 53 ஆயிரத்து 825 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 622 குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கையெழுத்து இயக்கம்,முகநூல் பக்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது''என்று அமைச்சர் நிலோபர் கபில் பேசினார்


NATIONAL CONFERENCE 2017 - ON ELT

01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! !PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.
ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (139%) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

கண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவி பெறும் பள்ளிகள்?

தமிழக அரசின்உதவியோடு செயல்பட்டு வரும் உதவிபெறும் பள்ளிகள், விதிமுறைகளை மீறிசுயநிதிப் பள்ளிகளைப் போல்செயல்படுவதை தடுக்க தமிழக அரசுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1950-களின் பிற்பகுதியில் தமிழகத்தில்உள்ள அனைத்து சிறுவர்களும் கல்விஅறிவு பெற வேண்டும் என அப்போதையதமிழக அரசு சார்பில் தீவிர முயற்சிமேற்கொள்ளப்பட்டது. அன்றையநிலையில் அரசுப் பள்ளிகள் அதிகம்இல்லாத காரணத்தால், அந்தந்தபகுதிகளில் உள்ள செல்வந்தர்களின்உதவியுடன் அரசு உதவி பெறும்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும்வழங்கப்பட்டது. உதவி பெறும்பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்புமட்டும், அந்தந்த தாளாளர்கள் வசம்ஒப்படைக்கப்பட்டது. இந்த நடைமுறைஇன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி,மெட்ரிக், சுய நிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இபாடத்திட்ட பள்ளிகள் என பல்வேறுநிலைகளில் கல்விக் கூடங்கள்வளர்ச்சிப் பெற்றுள்ளன. இந்த சூழலில்அரசின் அனைத்து வகையானஉதவிகளையும் பெற்று இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு அரசு உதவிப்பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளைப்போல் கட்டணம் வசூலித்துக் கொண்டும்,அரசின் விதிமுறைகளை மீறியும்செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நுழைவுவாயிலில் உள்ள பெயர்பலகையில் தனிநபர் பெயருடன் அரசுஉதவி பெறும் பள்ளி என்ற வார்த்தையும்இடம் பெற்று வந்தது. ஆனால்,காலப்போக்கில் அரசு உதவி பெறும்என்ற வார்த்தையை பயன்படுத்துவதைகௌரவக் குறைச்சலாக கருதிபெரும்பாலான நிர்வாகிகள் தவிர்த்துவிட்டனர். இதனால், மக்கள்வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் இந்தபள்ளிகள் சுயநிதிப் பள்ளிகளாகசித்தரிக்கப்பட்டு, மாணவர்களிடம்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதேபோல் அரசு ஊதியத்தில்நியமிக்கப்படும் ஆசிரியர்களையும்சுயநிதி பிரிவுகளில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இதுபோன்ற மாறுதல்கள் காலத்தின்கட்டாயம் என்பதை உணர்ந்து, தமிழகஅரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்றார்.


பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்

"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார். தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார்.

கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்.

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.

மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!


மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் 
அளிக்கத்தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம்நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத்தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம்நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!