Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 28 September 2017

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு இயக்குனர் செயல்முறைகள்!



எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை : சென்னை உயர்நீதிமன்றம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தடையை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே விதித்த தடையை உறுதிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 


நாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்!

நாடு முழுவதும் 20 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் வகையில் தேசிய அளவிலும், மாநிலங்களிலும் உள்ள 20 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

இதன் தொடக்கமாக மத்திய அமைச்சகங்கள் கீழ் உள்ள 244 பொதுத் துறை நிறுவனங்களிலும், ரயில்வேயில் மட்டும் உள்ள 2 லட்சம் காலி பணியிடங்களையும் நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், காலி பணியிடங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மத்திய அரசு நிறுவனங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சகங்களின் கீழ் 6 லட்சம் காலிபணியிடங்கள் இருப்பதாகவும், இதேபோல் மாநில அரசுகளும் முயன்றால் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கவும், அவர்களது செயல்பாட்டினைக் கண்காணித்து டெங்கு ஒழிப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அறிவுறுத்தல்களின் விவரம்: பள்ளி வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். குடிநீர்ப் பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருள்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்க வேண்டும்.
மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென எடுத்துக் கூற வேண்டும். அதேபோன்று பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் காலை இறை வணக்கக் கூட்டத்தின்போது, மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்த, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீதஇட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் (www.jat.tnausms.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய ‘ஆபீஸ் ஆட்டோமேசன்’ என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமைஅளிக்கப்படும்.வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி,எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு), நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் பொது அறிவு பகுதியில் 60 கேள்விகள், நுண்ணறிவுத் திறன், கணிதத்திறன் பகுதியில் 20 வினாக்கள், பொது தமிழ், ஆங்கிலம் பகுதியில் 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 20 மதிப்பெண். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.jat.tnausms.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள 129 காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, அதன் பிரிண்ட் அவுட் பிரதியை தேர்வுக் கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அக்டோபர் மாதம் 31-ம்தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்களுக்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.




7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது.  இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

 இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.

 கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை  அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை  நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்தரம் குறித்து உலகவங்கி கவலை !!

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்தல்- புதிய நடைமுறை...அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு



JACTO-GEO STRIKE-Implementatiom of the orders of the Madurai Bench of Madras High court-Instruction Issued - தலைமைச்செயலாளர் கடிதம்




மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டது தொடர்பாக அரசு சார்பில் நாளை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!