Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 1 October 2017

அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு???

மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 நாடு முழுவதும், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி 
மாணவர்களுக்குகதர் சீருடைகள் வழங்க வேண்டும்;

அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணிய வேண்டும்' என, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள், அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 ரயில்வே, விமான ஊழியர்கள் கதர் ஆடைகள் வாங்க வேண்டும் என, மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.இந்தியாவில், பிரபலமான தனியார் ஆடை விற்பனை நிறுவனங்களுடன், கதர் ஆடை விற்பனைக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவர்கள் கதர் சீருடை அணிய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நடைமுறையை, தமிழகத்திலும் கடைபிடிக்க வேண்டும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டாவது, இந்த அறிவிப்பை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.அனைத்து அரசு ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிய உத்தரவிட வேண்டும். இதனால், மக்களிடம் தேசப்பற்று வளர்வதோடு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி!!!

தமிழகத்தில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2016ஆம் ஆண்டுஅக்டோபரோடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாகத் தேர்தல் நடப்பது பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது. வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத் தேர்தல் ஆணையமோ இதுகுறித்து நீதிமன்றத்திடமே விளக்கம் கோரியுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய 4,000 கோடி ரூபாய் நிதியைத் தர மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் அரசாங்கம் என அழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கிக் கிடக்கின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவ. இளங்கோ.

“மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12,528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 4,000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் மத்திய அரசு இத்தொகையை தர மறுக்கிறது. பலமுறை டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த நிதியை பெற எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

இந்நிதியின் மூலம் கோவை மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய 60 கோடி ரூபாய் கிடைக்காததினால் 500 துப்பரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தர முடியாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் தேர்தலை எதிர்நோக்கி பல இடங்களில் அளவுக்கு மீறி பணம் செலவழிக்கப்பட்டதால் தற்போது ஊழியர்களின் சம்பளத்துக்கே திண்டாட வேண்டியுள்ள நிலை நிலவுகிறது. அதிகபட்சமாகச் சென்னை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, மத்தியத் தணிக்கைக் குழு சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் ரூ.2,000 கோடி (17 வருடங்களுக்கு) வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது” என்ற சிவ.இளங்கோ உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் சுகாதார நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.

“சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த வேளையில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும் கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறது. தேர்தல் நடந்து உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் இருந்திருந்தால் அடுத்தத் தேர்தலுக்கு அஞ்சி ஓரளவுக்காவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களுக்கு கிராம மக்களோடு எந்தப் பிணைப்பும் இல்லாததால் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2005இல் குஜராத் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் குஜராத் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நடந்த வழக்கில், தேர்தலை எக்காரணத்துக்காகவும் (delimitation பிரச்னை உட்பட) தள்ளிவைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 73ஆவது அரசியல் சாசன திருத்தத்தின்படி கட்டாயமாக ஐந்து வருடத்துக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மேலும், வருடத்துக்கு நான்கு முறை கட்டாயமாகக் கிராமசபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராமசபைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராமசபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்துகொள்ளவிட்டாலும் பொய் கையெழுத்துப் போட்டு கிராமசபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. எனவே உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் சிவ.இளங்கோ.

தமிழகம் ரூ.4 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், இந்த 4000 கோடி ரூபாயைத் தமிழக அரசு முறையாகப் பெற, உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா?

CM CELL : 2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள்,ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. 
இதன்படி, ஆக.,௩௧ நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள், உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இதன்படி, தமிழ், ௧௮௦; கணிதம், ௧௨௧; இயற்பியல், ௨௪௧; வேதியியல், ௨௪௭; உயிரியல், ௩௩; தாவரவியல், ௯௬; வரலாறு, ௯௧;பொருளியல், ௨௦௮; வணிகவியல், ௩௮௩ இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்,இளங்கோவன் பிறப்பித்து உள்ளார்.

Part Time Teachers - நிரந்தர பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

பகுதி நேர சிறப்பாசிரியர்களை  பணி நிரந்தரம்  செய்ய வேண்டி பலகட்டங்களாக போராட்டம் நடத்தியும்,   அரசு பணிநிரந்தரம்  செய்ய வாய்ப்பு இல்லை என்று  கூறி விட்டது.

ஆனால் அதன் பின்னர் போட்டித் தேர்வின்  மூலமாக மட்டுமே நிரந்தரப் பணியிடம் நிரப்பப்படும்  என்று கூறி 1370 சிறப்பாசிரியர் பணியிடம் தோற்றுவித்து இந்த மாதம் 23-09-2017 அன்று தேர்வு நடைபெற்றன.          

         

         இதில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 40/- ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்40/- மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் அதேப் பள்ளியில் நிரந்தர பணியிடமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக  கேட்டுக் கொள்கின்றோம்.

By - Mr. Gurusaran.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை மத்திய அரசு முடிவுஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, ௯ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆண்டு தோறும், 1,௦௦௦ ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோர் கூறுகையில், '௨௫ ஆண்டுகளில், விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும், 1,௦௦௦ ரூபாய் மட்டுமே உதவி தொகையாக தரப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க, வேண்டும்' என்றனர்.


விஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.


ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு

ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல்மூலம் 39,000 தெலுங்கு மீடியப் பள்ளிகள் ஆங்கில மீடியத்துக்கு மாறவிருக்கின்றன.

ஆந்திர அரசு

ஆந்திர அரசு, ஏற்கெனவே மாநகராட்சிப் பள்ளிகளை ஆங்கில மீடியத்துக்கு மாற்றியமைத்திருக்கிறது. ஆரம்ப வகுப்புப் பள்ளிகளையும் ஆங்கில மீடியத்துக்கு மாற்றுவதன்மூலம், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது ஆந்திர அரசு.

'இந்த மாற்றத்தைக் கொண்டுவர கடந்த ஓராண்டாகத் திட்டமிட்டோம். மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால், மாநகராட்சிப் பள்ளிகளை மாற்றியபோது எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்பதால், தற்போது ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றியமைக்க முடிவுசெய்திருக்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள், தனியார் ஆங்கிலப் பள்ளியை நாடிச் செல்கிறார்கள். இனி, அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலப் பள்ளிகளாக மாற்றுவதன்மூலம், அரசுப் பள்ளியை நாடி வருவார்கள். தற்போது, தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதியையும் வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம்.

முதல்கட்டமாக, மாவட்டத் தலைநகரிலும் நகராட்சிகளிலும் உள்ள பள்ளிகளை மாற்றியமைக்க இருக்கிறோம். ஏற்கெனவே, தெலுங்கு மொழியில் பாடம் நடத்திவரும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்துவருகிறோம்' என்கிறார்கள், ஆந்திர பள்ளிக் கல்வித்துறையினர்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!