Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 2 October 2017

546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது!!

546 ஆசிரியர்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு
வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 546
பணியிடம்: தில்லி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182
1. Hindi - 25
2. English - 20
3. History - 18
4. Economics - 28
5. Geography - 17
6. Physics - 30
7. Chemistry - 20
8. Maths - 24

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
வயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144
9. Hindi - 25
10. English - 20
11. Sanskrit
12. Social Studies
13. Maths
14. Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

III. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்


TET - வெயிட்டேஜ் முறையில் மாற்றம் எப்போது? பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Puthiya Thalaimurai Video

Tamil Nadu: Headmaster Chockalingam does it again


The kids were garlanded by the temple priest and the teachers pooled in money for paying the nadaswaram-thavil players for the procession.


 The nine newly enrolled kids are garlanded and taken in procession by students and staff to create awareness about the need for education (Photo: DC)


Sivagangai: It’s Vijayadasami today and the urban elite take their toddlers to the nearest big temple to make those tiny tender fingers scrawl ‘aana’, ‘aavanna’, on grains of rice spread on silver plates to symbolise their aksharaabhyasa. There’ll be great cheering, photos taken and payasam fed in liberal helpings to the guests. The bewildered kid struggles to convey (s)he would rather get back quickly to play at home; luckily, that’s the age of pure innocence when the campus pressures, parents’ chiding and the ‘monstrous’ Neet are still far away. 

In rural Devakottai some 50 km from here, headmaster Chockalingam decided he too must create some buzz for announcing the aksharaabhyasa to the newly enrolled class-one students at his government-aided ‘Chairman Vanickavasagam Middle School’. He got his teachers and students, along with a few parents, to take the nine newly enrolled children, including five girls, in a procession from a Mariamman temple to the school. The kids were garlanded by the temple priest and the teachers pooled in money for paying the nadaswaram-thavil players for the procession.

“We took the procession through the Dalit colony to create awareness about enrolment in school. There was much enthusiasm”, said the proud HM. Stating that the new students included four Dalits and two from the dhobi community, he said the school promoted egalitarianism among its students and staff while pursuing high goals in education despite heavy odds—such as lack of funds.

“Our children have participated in inter-school and inter-district competitions in sports and debates, and won many prizes. We have excellent teachers, who often volunteer not just time for extra coaching but also money from their frugal earnings to fund the students’ trips and extra-curricular activities such as field trips”, said Chockalingam. 

Among his many initiatives to not only upgrade the students’ academic skills but also trigger their social commitment was the recent mock parliament election, where the kids went through the entire process of nominations, withdrawals and ballot papers and booths, after which the winners undertook tasks connected with the school’s general upkeep. “We make sure that all our kids partake their free mid-day meals at school. And our students of classes 7 and 8 parent the juniors to ensure they have their lunch without wasting food”, said the HM.

“We had a function recently to mark the completion of 52 weeks of showing to our students the Tamil version of the Cambridge University DVD dealing with interesting topics in mathematics, physics and chemistry enacted by popular Hollywood stars. The DVDs were gifted by the US-based World Tamil Foundation after assessment of the good work done here”, he said with justified pride.

Tags: chockalingamaksharaabhyasavijayadasamimariamman temple

Location: IndiaTamil NaduSivagangai

CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் - ஜாக்டோ-ஜியோ ( கிராப்)

ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பினர் உடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை


சென்னை : ஜாக்டோ-ஜியோ- GREAF அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது (02.10.2017 -12.00 மணி முதல் 1.00 மணி வரை) ஆலோசனை நடத்தி முடித்தார். 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய  மாநிலத் தலைவர் திரு.இரா.சண்முகராஜன்,
தலைமைச் செயலக சங்க தலைவர் திரு.ஜெ.கணேசன், தொடக்கப் பள்ளி  ஆசிரியர் கூட்டனி தலைவர் திரு.பெ.இளங்கோவன் | த.நா. அ.அலுவலக உதவியாளர் (ம) அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் திரு.கே.க கணசன், த.நா. அரசு அனைத்துத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் திரு. அ. ஜ.பாலமுருகன், உள்ளிட்ட ஆசிரியர்  அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.  7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துதல், மற்றும் உடனடி தீர்வாக இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும், Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜாக்டோ-ஜியோ ( கிராப்)


அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்படலாம்அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்3ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம்!!!10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட் மற்றும் போட்டி தேர்வு தகவல்கள் சேகரிப்பு

கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும் எளிதாக்கி வருகிறது.இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜ

முருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான், குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபாத், நரேஷ் - ஆந்திரா, பாஸ்கரசேதுபதி - அகமதாபாத் மற்றும் கேரளாவில் கொச்சி உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தினர்.அங்கு தனியார் பயிற்சி மையங்கள் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., உட்பட நுழைவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு எந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. எவ்வகை பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த முழு தகவல் சேகரிக்கப்பட்டன.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுஉள்ள பாடத்திட்டம் தரமானவை தான். ஆனால் நீட் தேர்வு அமலுக்கு பின் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களையும் தாண்டி, வெளி நாடுகள், பிற மாநிலங்களில் எவ்வகை பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிறந்த பகுதிகளையும் புதிய பாடத்திட்டத்தில் இணைக்க பாடத் திட்டக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி பத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படும் தனியார் கோச்சிங் மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்த தகவல் திரட்டப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிளஸ் 1 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., ஜே.இ.இ., படிப்புகளுக்கான நுழைவு 

தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறை குறித்தும் தகவல் பெறப்பட்டது.

இதுதொடர்பாக கல்வி செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் குழுவுடன் அக்.,2ல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு ஆலோசனை நடத்துகிறார்,

என்றனர்.

மாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டி

நாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது.

ஹரியானாவில் உள்ள, ரையான் சர்வதேச தனியார் பள்ளியில், பள்ளி வேன் உதவியாளர் ஒருவன், 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து, கொலை செய்தான். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது. நாடு முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க, சி.பி.எஸ்.இ., சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 'இந்த கமிட்டியினர், உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து, மாணவர் பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துவர். அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர், ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமைத்த பாடத்திட்ட வரைவு அறிக்கை விரைவில் வெளியாகிறது

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம்

இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில், பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.

எனவே, பாடத் திட்டத்தை மாற்ற, தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்ற தமிழக அரசு, ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான, பாடத் திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், வல்லுனர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் பாடத்திட்டம்குறித்து, கருத்துக்கள்பெற்றுள்ளது.தற்போது, பாடத்திட்டத்துக்கு முந்தைய, கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. ௬௦ பக்கங்களில் உருவான, அந்த அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன. 

இந்த அறிக்கைப்படி, பாடத்திட்ட வரைவு அறிக்கையும் தயாராகிறது.

பள்ளிகளில் "கொடுத்து மகிழும் வாரம்" நாளை முதல் பள்ளிகளில் கொண்டாட உத்தரவு!!

10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு


காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., 22ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.


இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்


இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் தூய்மையான கோவிலாக தேர்வாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு விருதினை வழங்க உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் மற்றும் மாநகர கமிஷனர் அனீஷ் சேகர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் இருந்து நாளை இந்த விருதினை பெற உள்ளனர். சுவிட் ஐகானிக் ( Swachh Iconic Place s) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து 10 கோவில்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்து மத்திய அரசு கண்காணித்து வந்தது.

மேலும், 2018 மார்ச் மாதத்திற்குள் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி மூல வீதி மற்றும் வேலி வீதிகளை பிளாஸ்டிக் இல்லா வீதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி

நாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும் பட்டதாரிகள், அனைத்து மாநிலங்களிலும், வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், அவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு, ஹிந்தியை அறிமுகம் செய்கிறது. முதற்கட்டமாக, சென்னை பல்கலையில், ஹிந்தி திட்டம் அமலுக்கு வர உள்ளது. இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையின் மேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் துரைசாமி, ''ஆங்கில மொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது மாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய மொழியும், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இதை, விருப்ப மொழியாக மாணவர்கள் எடுக்கலாம்,'' என்றார்.

இது குறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய மொழி என்றால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்' என்றனர்.


விரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: அமைச்சர்

திருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். 

சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், சிறப்பு பிரிவில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின், அவர் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, டாக்டரின் நேரடி கண்காணிப்பில், ஒரு வாரம் வரை சிகிச்சை பெற வேண்டும். ரத்த பரிசோதனை செய்து, டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட, 179 பேர் சிறப்பு பிரிவில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில், 12 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தடுப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை கண்டறிய, திருச்சி அரசு மருத்துவமனையில், மூன்று உட்பட, தமிழகத்தில், 23.50 கோடி ரூபாய் செலவில், 833 செல் கவுண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, டெங்கு பாதிப்பை கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.
மருத்துவத் துறை பணியை வேகப்படுத்தும் விதமாக, விரைவில், 744 டாக்டர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!