Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 3 October 2017

5TH STD TERM - 2 SABL ALL TEACHING MATERIALS WITH LESSON PLAN"

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளும் முதல் பருவ திருத்திய விடைத்தாளை அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவுதமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,


மாண்புமிகு அமைச்சர்  திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,

பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்

இளைஞர் நலத்துறை அமைச்சர்

தமிழ்நாடு.

தமிழக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சர்வதேச கல்வித் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முழு முயற்சியாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது. 

இதனைக் கொண்டுவந்தமைக்காக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் , உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களுக்கும், 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும், தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும்,  அரசு பள்ளிகளில் பயிலும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்வாதார கோரிக்கைகள்...

1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

 

 3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.

 அரசு பள்ளிகளில் கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெ.குமரேசன்,

9626545446 ,

மாநிலப் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

 
இதன்படி, ஆகஸ்ட், ௩௧, நிலவரப்படி, அரசு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, உபரியாகஉள்ள இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33; தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 383 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறினார்.

மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம் மற்றும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கற்றலில் குறைபாடு வார விழாவை திங்கள்கிழமை தொடங்கின. அக். 7-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வுகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஓவியம், நெருப்பில்லாத சமையல், கோலம், கழிவுப் பொருள்களில் இருந்து கலை, நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பாக மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 கோடி மாணவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு கற்றலில் குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளது. அதாவது 40 பள்ளி மாணவர்கள் உள்ள வகுப்பில் 4 அல்லது 5 பேருக்கு இந்தக் குறைபாடு காணப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாவதற்கு கற்றலில் குறைபாடும் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.

மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறியது: கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாகக் காணப்படும். ஆனால் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் சிரமப்பட்டாலும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் படிப்பில் மதிப்பெண் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிற துறைகளில் அவர்களுக்கு உள்ள திறமை ஊக்குவிக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அந்தக் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும் 'ஜாக்டோ - ஜியோ கிராப்' வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 
'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பினர் வலியுறுத்தினர்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, செப்., 27ல், தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன்படி, விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க உள்ளது.அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பின் நிர்வாகிகள் சண்முகராஜன், இளங்கோவன், கணேசன் உள்ளிட்டோர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.

இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன் கூறியதாவது:முதல்வர் அறிவித்தபடி, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்த குழுவிடம், தமிழக அரசு அறிக்கை பெற்றுள்ளது. இதற்காக, முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஊதியக்குழு பரிந்துரைப்படி, இந்த மாதம் முதல் புதிய ஊதியம் வழங்க வேண்டும்; இதற்கான அறிவிப்பை, தீபாவளிக்கு முன் வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். தாமதமானால் இடைக்கால நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என, மனு கொடுத்துஉள்ளோம்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நவ.,3௦க்குள், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். 

மேலும், 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பு சார்பில், சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்க, மாநாடு நடத்த உள்ளோம். இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

SOME IMPORTANT WEBSITES FOR TEACHERS

மாணவர் குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு 'செக்'பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்சென்னை: பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக
மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.


OBC - வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு.

ஓ.பி.சி. வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணியை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

குழுவின் உறுப்பினராக ஜே.கே.பஜாஜை நியமித்து ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓ.பி.சி. வகுப்பினர் தெரிவிக்கும் குறைகளை குழு ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளிக்கும் என்றும், குழு தனது பரிந்துரைகளை குடியரசு தலைவருக்கு 12 வார காலத்திற்குள் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார். 


JACTO GEO - 08-10-2017 ஞாயிறு அன்று வேலை நிறுத்தமும்நீதிமன்ற நடவடிக்கைகளும் குறித்துமாவட்ட அளவிலான கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல்மாவட்ட வாரியாக!எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!