Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 6 October 2017

தொடக்க கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2017 | 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "ஓவியப் போட்டி" நடத்துதல் சார்ந்து - இயக்குனர் செயல்முறைகள்!!
ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பள்ளிகள் நியமித்துக் கொள்ளலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே? வட மாவட்டங்களில் ஏறத்தாழ 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம். 
அவர்களுக்கு 7500 மாத சம்பளம் வழங்கலாம். அதற்கான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.

முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றிருந்தும், பலருக்கு ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் இருந்தும் அதற்கான மதிப்பெண் வழங்காத நிலை உள்ளதே? இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கின்றன. ஒன்று வெயிட்டேஜ். மற்றொன்று அவரின் கல்வித் தகுதி. மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமித்துள்ளோம்.

அவர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள்தான் பணியாற்ற வேண்டும். அதனால் மதிப்பெண் வழங்கும் போது ஏற்காமல் இருக்கலாம். ஐசிடி பற்றி கூறினீர்கள். அதற்கான பணி எப்போது தொடங்கும்? அடுத்த வாரம் அதற்கான டெண்டர் குளோபல் முறையில் நடக்கும். இனி பள்ளிக் கல்வித்துறையில் எதுவாக இருந்தாலும் குளோபல் டெண்டர் மூலம்தான் நடக்கும். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெண்டர்களை முடிவு செய்வார்கள்.

அதன்பிறகு அந்த பட்டியல் அமைச்சரின் கவனத்துக்கு வரும். நவம்பர் மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடியும். புத்தகம் வாங்குவதில் 10 சதவீதம் கமிஷன் கேட்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதே? என்னைப் பொறுத்தவரையில் பதிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகங்களை தள்ளிவிடப் பார்க்கிறார்கள்.

கல்வி தொடர்பான புத்தகங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதனால் நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். மாணவர்களுக்கு பயிற்சி எப்போது தொடங்கும்? இந்த மாத இறுதிக்குள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி பதில் வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் மூலமும் வெளியிட உள்ளோம் என்றார்.

நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா?

JACTTO GEO வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய்யும் பணி நாட்களை அனுமதிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

☀இது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமானதே.

☀மேலும், உள்ளாட்சி & ஊரக வளர்ச்சித்துறைக்கு மட்டுமானதே.

☀இவ்வுத்தரவு பள்ளிகளுக்குப் பொருந்தாது.

☀ஆட்சியரின் உத்தரவை முழுமையாகப் பார்க்காமல் நுனிப்புல் மேய்ந்த கதையாக முழுமையற்ற தலைப்பு மட்டும் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.

☀நீங்கள் சார்ந்துள்ள மாவட்டத்தில் தங்களின் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்தால் மட்டும் அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லவும்.

☀ஏனெனில் அரசு அலுவலகங்களில் சார்ந்த துறை உயர் அதிகாரியின் ஒப்புதல் இன்றி விடுமுறை நாட்களில் பணிபுரிய முடியாது.

☀பள்ளிகளைப் பொறுத்தவரையில், பொதுவான ஈடுசெய் வேலைநாட்களினை வழங்கிட வாய்ப்பு குறைவே.

☀எனவே, உடன் ஈடுசெய்ய விருப்பமுள்ளோர் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து பள்ளியைத் திறந்து கொள்ளவும்.

அல்லது

☀முறையான அறிவிப்பு கல்வித்துறை மாவட்ட / ஒன்றிய அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் வரை பொறுமைகாக்கவும்.

Swachh Bharat Swachh Vidyalaya Puraskar 2017 - Mobile App Download and Instructions

தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி  2017 - 18 | பள்ளிகளைப் பங்கேற்கச் செய்தல்  திட்டத்தில் உங்களது பள்ளியினை பதிவு செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.


முதலில் கீழே உள்ள LINK சென்று

https://play.google.com/store/apps/details?id=com.glt.sv

என்ற Link ஐ Clik செய்து App ஐ Download செய்து கொள்ளுங்கள்.

App ஐ Open செய்து Register என்பதை Click செய்து உங்களது பள்ளியின் UDISE Number கொடுத்த பின் உங்களது பள்ளியின் பெயர் அதில் தெரியவரும்.

அதனை தொடர்ந்து கீழ் வரும் சில வினாக்களுக்கு பதில் அளித்து இறுதியில் Register என்பதை Click செய்யவும்.

இப்போது தங்களது பள்ளி பதிவு செய்யப்பட்டுவிட்டது.

சிறுது நேரத்தில் நீங்கள் கொடுத்த Mobile Number க்கு SMS மூலமாக PASSWORD வரும் அதனை கவனமாக SAVE செய்து வைத்துக் கொள்ளவும்.

மீண்டும் Appஐ Open செய்ய இந்த Password அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதிகளையும் Open செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த பின்பு நன்கு ஒரு முறை சரிபார்த்த பின்பு இறுதியில் Submit என்பதை Click செய்யவும்.

'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தணிக்கை தடைக்கு தீர்வு'

'கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், நிலுவையில் உள்ள, நிதிசார் செயல்பாடுகளின் தணிக்கை தடைகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில நிதி கட்டுப்பாட்டு அலுவலர் - பள்ளி கல்வி கார்த்திகேயன் தெரிவித்தார்.

மதுரையில், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறை அலுவலகம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நிதிசார் செயல்பாடுகள் குறித்த தணிக்கை, சென்னை, மதுரை, கோவை மண்டல கணக்கு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்டுதோறும், பள்ளிகள் மீதான, தணிக்கை தடைகள் அதிகரித்து வருகின்றன.

தற்போது, மதுரை மண்டலத்தில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 297 தணிக்கை தடைகள் உட்பட, மூன்று மண்டலங்களிலும், ஏராளமான தடைகள் நிலுவையில் உள்ளன. செலவினங்களுக்கான உரிய ரசீது மற்றும் ஆவணம் இணைக்காததால் ஏற்படும் தடைகள் தான் அதிகம்; இவை, எளிதில் தீர்க்கப்படும். இதற்காக, மண்டலங்கள் தோறும் கூட்டமர்வுகள் நடத்தி, ஒரே நாளில், ஆயிரக்கணக்கான தடைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

மதுரை மண்டல கணக்கு அலுவலகத்தில், 17 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்து, கருத்துரு வரப்பெற்றால், மாநில அளவில், நான்காவதாக, மண்டல கணக்கு அலுவலகம் உருவாக்க, பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

CPS - கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?

☀ கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?☀*

*பகுதி - 11*

*புதிய தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்மொழியும் சூதாட்டத் (முதலீட்டுத்) திட்டங்கள்*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில், இரண்டு அடுக்கு ஓய்வூதியங்களும், 3 நிதி மேலாளர்களால் தலா 6 பிரிவுகளில் 18 வகையான முதலீட்டுத் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

*☀அடுக்கு-1 (TYRE : I) :*

இது ஓய்வூதியக் கணக்குத் (PENSION ACCOUNT) திட்டமாகும். அரசு ஊழியர்கள் கட்டாயம் சேர்க்கப்படுவார்கள்.

இத்திட்டப்படி ஊதியத்தில் 10% (ஊதியம் + அகவிலைப்படி) தொகையினை ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். அதே அளவிற்குச் சமமான தொகையினை அரசும் வழங்கும். இத்தொகைக்கு அரசின் வரிச்சலுகை உண்டு.

*இக்கணக்கில் சேரும் தொகையினை ஓய்வு பெறும் நாள் வரை திரும்பப்பெற முடியாது.*

*☀அடுக்கு-2 (TYRE : II) :*

இது ஊழியரின் சுயவிருப்பத்தின் பேரில் செய்யப்படும் சேமிப்புக் கணக்குத் (SAVINGS ACCOUNT) திட்டமாகும்.

இத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் ஊதியத்தில் 2% முதல் உச்ச வரம்பின்றி எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

*ஆனால், இம்முதலீட்டிற்கு அரசின் பங்குத்தொகையும், வரிச்சலுகையும் கிடைக்காது.* இதில் சேரும் தொகையினை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், PFRDA இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. 

*01.05.2009 முதல் பங்குச்சந்தையினை அடிப்படையாகக் கொண்ட புதிய தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.*

*☀முதலீட்டுத் திட்டப் பிரிவுகள்:*

*PLAN E :*

அதிக ஆபத்திற்குட்பட்ட (HIGH RISK - HIGH RETURN) பங்குச் சந்தைப் பங்குகளில் Equity Market என்ற அடிப்படையில் முதலீடு செய்யப்படுவது

*PLAN C :*

தனியார் கார்பரேட் நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு (MEDIUM RISK - MEDIUM RETURN)

*PLAN G :*

அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு (LOW RISK - LOW RETURN)

SBI, LIC & UTI ஆகிய மூன்று நிதி மேலாளர்களும் 2 பிரிவுகளில் தலா 6 முதலீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளனர். அதன் இரண்டு பிரிவுகளின் விபரம் பின்வருமாறு:

*☀1. ACTIVE CHOICE:*

ஊழியர்கள் தானாக விரும்பித் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் ஒரு நிதி மேலாளரிடம் E - C - G ஆகிய மூன்று பிரிவுகளில் 50% + 30% + 20% என இருப்பில் உள்ள 100% தொகையினையும் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும்.

*☀2. AUTO CHOICE:*

ஊழியர்கள் முதலீடு செய்ய விரும்பாத போது அல்லது தெரியாத போது (தேர்ந்தெடுக்காத போது) நிதிமேலாளர்களே குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் E - C - G ஆகிய மூன்று திட்டங்களில் ஊழியரின் வயதின் அடிப்படையில் 100% தொகையும் முதலீடு செய்துவிடுவர்.

18 - 35 வயது வரை, E - C - G : 50%+30%+20% எனத் தொடங்கி,

55 வயது ஆகும்போது E - C - G : 10%+10%+80% என்ற விகிதத்தில் முதலீடு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊழியரிடம் பிடிக்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையும் பல்வேறு புரியாத திட்டங்களின் பெயரால், 0.1% உத்திரவாதம் கூட இல்லாத பங்குச்சந்தைச் சூதாட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஊழியருக்கு உள்ளது.

ஊழியர் இதை மேற்கொள்ளாத சூழலில் தானாகவே ஏதேனும் ஒரு சூதாட்டத் திட்டத்தின் கீழ் தானாகவே சேர்க்கப்பட்டு விடுவர்.

*நீருக்கு நெய் எனப் பெயரிட்டுத் தீயில் வார்க்கும் யாகசாலைச் சூதுகள்* நிரம்பிய புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சூதுகள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து வெளிக்கொணரப்படும். . .

அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும்,தமிழக அரசுஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி வாரியாக 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு உண்மை தன்மை பெறா தவர்கள் படிவம் 1,2 மூலம் பூர்த்தி செய்து 2 நகலில் விண்ணப்பிக்கவும்!!!

JACTTO GEO Strike - போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!! பணி செய்ய வேண்டிய"சனிக்கிழமைகள்" விவரம்!!

JACTO GEO - Strike | 07.09.2017 மற்றும்11.09.2017 முதல் 15.09.2017 வரை (6 நாட்கள் ) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!!


பணி செய்ய வேண்டிய "சனிக்கிழமைகள்" விவரம்!!


அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
பள்ளிக் கல்வித்துறையில் சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

 ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் உள்ளது என்று தொடச்சியாகப் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதையடுத்து, பாடத்திட்டங்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பாடத்திட்டம் மாற்றம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.நவம்பர் மாத இறுதிக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். வரைவுப் பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள்கள் வரை மக்கள் கருத்து கூறலாம்.

அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக் கன்றுகள் நட்டால், 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அரசின் அனைத்துப் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

பாரதியார் தொலைதூர பல்கலைக்கழகத்தில் படித்த பட்டங்கள் செல்லாது என்று பத்திரிக்கையில் வந்த செய்திகள் தவறானது என்று அப்பல்கலைக்கழகம் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!