Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 7 October 2017

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் -2018-அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 2017 வரை நடைபெறுகிறது

2000 ருபாய்க்கு 4ஜி மொபைல்...Volte கால்கள்... ஜியோவுக்கு எதிரான ஏர்டெல் அஸ்திரங்கள்!!!!

Volte மொபைல்கள்தான் இப்போது டிரெண்ட். ஜியோ நெட்வொர்க் முழுவதும்

இந்த டெக்னாலஜியில் இயங்குபவை. இவை வழக்கமான வாய்ஸ் கால்களை விட தரமானவை; குறைந்த பேட்டரியையே எடுத்துக்கொள்ளும். காலை கனெக்ட் செய்ய தேவைப்படும் நேரமும் குறைவு என ஏகப்பட்ட ப்ளஸ்கள் Volte க்கு உண்டு.
Volte என்றால் என்ன?
வாட்ஸ்அப் போன்ற மெஸெஞ்சர் மூலம் நாம் செய்யும் வீடியோகால்கள் முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தி செய்யப்படுபவை. நமது வீடியோவையும், ஆடியோவையும் அது டேட்டாவாக மாற்றி டிரான்ஸ்மிட் செய்யும். ஆனால், இதுவரை நாம் மொபைலில் செய்யும் கால்கள் இணையத்தை பயன்படுத்துபவை அல்ல. அப்படிச் செய்ய உதவும் தொழில்நுட்பம் தான் Volte. இன்னும் எளிமையாக சொல்லலாம்.
முதலில் வாட்ஸ்அப் மெஸெஜ் மட்டுமே அனுப்ப முடிந்தது. வாட்ஸ்அப் நிறுவனம் ஓர் அப்டேட் தந்தது. அதன்பின் நம்மால் வீடியோ கால்கள் செய்ய முடிந்தது. டெலிகாம் நிறுவனங்கள் அப்படி நமக்குத் தரும் அப்டேட் தான் Volte என்று சொல்லலாம்.
ஜியோ நெட்வொர்க் வந்தபோது பல மொபைல்களில் அது வேலை செய்யாது என்றார்கள். காரணம், அவற்றில் Volte தொழில்நுட்பம் கிடையாது என்பதுதான். தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த ஜியோ மொபைல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.Volte மொபைல்களாக இருந்தாலும் அவற்றில் வாட்ஸ்அப் இயங்காது. அதன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வேறு என ஏகப்பட்ட குழப்பங்கள் வந்தன.
இந்தச் சூழலில்தான் ஏர்டெல்லும் Volte குளத்தில் குதித்திருக்கிறது. ஏர்டெல் இந்தச் சேவையை மும்பையில் அறிமுகப்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற டெலிகாம் சர்க்கிளுக்கும் விரைவில் Volte சேவையை ஏர்டெல் கொண்டு வரவிருக்கிறது.
ஏர்டெல் சோர்ஸ்களில் இதுபற்றி கேட்டபோது “Volte சேவைக்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் Volte சேவை கிடைத்துவிடும். ஹெச்.டி தரத்தில் வீடியோ கால்கள் செய்ய ஏர்டெல் உதவும். இதற்காக தனியே டேட்டா கட்டணம் எதுவும் இருக்காது. Volte மூலம் கால் செய்யும்போது இடையில் ஒருவேளை 4ஜி சிக்னல் கிடைக்காமல் போனாலும் 3ஜி அல்லது 2ஜி நெட்வொர்க் மூலம் கால் தொடரும். கட் ஆகாது” என்றார்கள்.
இந்தச் சேவையை பெற உங்கள் ஏர்டெல் சிம் கார்டு 4ஜி ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோரை அணுகலாம்.
Volte கொண்டு வருவதே ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்திதான். மேலும், ஜியோ நெட்வொர்க்குக்கு அவர்கள் தாவாமல் இருக்க உதவும். இதோடு நில்லாமல், தனது Volte வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த ஏர்டெல்லும் குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இன்னமும் சந்தைக்கு வராத இந்த ஏர்டெல் 4ஜி மொபைல் ஜியோ மொபைலை விட அதிக வசதிகள் கொண்டிருக்கும் என நிச்சயம் நம்பலாம். தீபாவளிக்கு முன்னரே இந்த மொபைலை விற்பனைக்குக் கொண்டுவர ஏர்டெல் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏர்டெல் மொபைலின் சிறப்பம்சங்களாக கீழ்கண்டவை இருக்கலாம் என ஏர்டெல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-ஆண்டிராய்டு ஓ.எஸ்
-4 இன்ச் திரை
-1600 Mah பேட்டரி
-1 ஜிபி ரேம்
-முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள்.
ஆண்டிராய்டு ஓ.எஸ் இருப்பதால் அனைத்து ஆண்டிராய்டு ஆப்களையும் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும்.
தொழில்நுட்ப அடிப்படையில் ஏர்டெல்லும் ஜியோ போல மாறுவது சரிதான். டேட்டா பேக் விலை எப்படி இருக்கும் என்பதுதான் அடுத்தக் கேள்வி.


நாளை தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்போட்டித் தேர்வுமூலம் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு!!!521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் மற்றும் கலெக்டர்களிடம் பரிந்துரைக்கடிதம்!!EMIS ONLINE ENTRY- STEP BY STEP PROCESS - VIDEO [NEW SOFTWARE]

பள்ளி மாணவர்களுக்குவழங்கிய இரண்டாம் பருவ பாடபுத்தங்களில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' !!!கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும் அதில் பச்சை நிற புள்ளி இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் தொட்டால் live Radio without earphone ல் கேட்க முடியும் !!!

JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - அரசு முதன்மை செயலாளர் செயல்முறைகள் (06.10.2017)உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் செய்துக்காட்டும் அனைத்து சோதனைகளையும் தொடக்கப்பள்ளியில் செய்து காட்டும் பெரியதெற்குக்காடு பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் கடைகோடியில் உள்ள எங்கள் பள்ளி

செ.இராமநாதன்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பெரியதெற்குக்காடு
பேராவூரணி ஒன்றியம்
தஞ்சாவூர் மாவட்டம்

சொந்த ஊர் ஊட்டி
இப்பள்ளியில் 04.12.06 முதல் பணியில் உள்ளேன் எந்த பாடம் நடத்தினாலும் நேரடி அனுபவம் மட்டுமே

 இதுவரை பெற்ற விருதுகள்
1.ஜாஸ்மின் அறக்கட்டளை கலிபோர்னியா வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது
2.மக்கள் சட்ட உரிமை கழகம் வழங்கிய நல்லாசிரியர் விருது
3.கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் ஜம்புகேஸ்வரர் ரோட்டரி சங்கம் வழங்கிய நம்பிக்கை 2018 விருது
4.Grabs Educational trust வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது
5.டெல்லியில் பாரதிய தலித் சாகித்ய அகாடமி வழங்கிய அம்பேத்கர் விருது
6.சென்னை காந்திமதி அறக்கட்டளை வழங்கிய அப்துல் கலாம் விருது

பள்ளியில் என்னுடைய செயல்பாடுகள்
1.அனைத்து முக்கிய விழாக்களையும் கொண்டாடுதல்
2.சுற்றுச்சூழல் தினங்களில் போட்டிகள் நடத்துதல்
3.JRC விழா கொண்டாடுதல்
5.களப்பயணம் அழைத்து செல்லுதல்
6.ஒன்றிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் மாணவர்களை தயார் செய்து பரிசு பெற்று வருதல்
7.அனைத்து கல்வி அதிகாரிகளும் பாராட்டி செல்லுதல்
8.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் செய்துக்காட்டும் அனைத்து
சோதனைகளையும் தொடக்கப்பள்ளி செய்து காட்டுதல் . உள்ள கருத்திற்கு ஏற்ப
9.நீர் ஆவியாதல் நேரடியாக வகுப்பறையில் செய்து காட்டுதல்
10.கால்வாய் பாசனம் நேரடி அனுபவம்
11.திட,திரவ,வாயு பொருள்கள் விளக்கம்
12.மனித எலும்புக்கூடு மாணவர்கள் பார்வைக்கு காட்டுதல்
13.ஒன்றியத்தில் முன்மாதிரி பள்ளிஇன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'

'இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார். ...


Part Time Teachers-க்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"!
21 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம்:கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு!!!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக வெங்கட பிரியா நியமனம்.

வணிகவரித்துறை இணையாக சிவராக நியமனம். சுகாதார முறை திட்ட இயக்குநரானார் உமா.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அருங்காட்சியாக இயக்குராக கவிதா ராமு நியமனம். ஆவணக்காப்பக  இயக்குநராக அன்பழகன் நியமனம்.

சேகோசர்வ் மேலான் இயக்குனராக கஜலட்சுமி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தாட்கோ மேலான் இயக்குராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் அலுவலக துணை செயலாளராக இருந்த பொன்ராஜ் ஆலிவர், மறுவாழ்வு துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக துறை கூடுதல் ஆணையர் ராஜாராமன், மருத்துவ சேவை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்


TRB - POLYTECHNIC EXAM 2017 Official Key Answer Published!!!

PLEASE CLICK HERE REPRESENTATION FORMAT


அகவிலைப்படி உயர்வு எப்போது?

உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. 

இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, 

அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு 

ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது:

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது.

மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான  சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!