Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 8 October 2017

திண்ணை விருதுகள் 2017


விழா மேடையில்

திரு .பொன்குமார்
இணைஇயக்குநர் S.C.E.R.T , சென்னை

நீதியரசர் ப.மதுசூதனன்
மாவட்ட நீதிபதி, வேலூர்

திரு.பொன்ராஜ்
பாரத்ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களது அறிவியல் ஆலோசகர்

திரு.பாஸ்கர் சக்தி
எழுத்தாளர், வசனகர்த்தா, சென்னை

பேரா.பொ.இராஜமாணிக்கம்
ஆசிரியர். விஞ்ஞானச்சிறகு

திருமிகு. திருச்செந்தூரான்
தலைவர், VISION INDIA MOVEMENT

இந்தியாவின் முதல் பெண்ணாசிரியை சாவித்திரிபாய் பூலே நினைவாக
சிறந்த பள்ளிகளுக்கான விருது

கர்னல் பென்னிகுக் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது

மாமனிதர் ஜேம்ஸ் கிம்டன் நினைவாக ஆற்றல்மிகு பேராசிரியர் விருது.

கர்ம வீரர் காமராசர் நினைவாக நேர்மையாளர் விருது.

பாரத்ரத்னா ஏ. பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக நல்லாசிரியர் விருது

என மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன.விருதாளர்களுடைய தேர்வில் தனிமனித வெளிச்சம் கவனமாகத் தவிர்க்கப்பட்டு செயல்பாடுகளே முக்கியத்துவம் பெற்றன.

சாதியைக் கேடயமாகவோ ஆயுதமாகவோ பயன்படுத்தமாட்டேன் என்றுரைத்த நீதியரசர் தான் தற்கொலைக்கு முயன்றதையும் விடாமல் போராடி வெற்றி பெற்றதையும் விளக்கிய போது அரங்கமே அமைதியில் உறைந்தது.

நல்லாசிரியர் ,நேர்மையாளர் என்னும் பதங்களே தவறு. ஆசிரியர்கள் என்றாலே நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் என்றாலே நேர்மையாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என பாஸ்கர் சக்தி பேசியது அனைவரையும் ஈர்த்தது.

அப்துல் கலாம் அவர்களது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு தான் அதிகம். ஆசிரியர்கள் நினைத்தால் மட்டுமே நல்லதொருசமுதாயம் உருவாகும். அரங்கம் அதிரும் கைதட்டல்களோடு பொன்ராஜ் தனது உரையை முடித்தார்.

பேரா. பொ.இராஜமாணிக்கம் அவர்களது உரையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் விதைக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்துகளே மேலோங்கி காணப்பட்டன.

இணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் தனது இளமைக்கால வாழ்க்கையையும் சுவையான பள்ளி சார்ந்த அனுபவங்களையும் நகைச்சுவையாக கூறி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழத்தினார். உலகிலேயே சிறந்த பள்ளி எதுவென்றால் அது தான் பணிபுரிந்து வரும் பள்ளி தான் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும்  தோன்ற வேண்டும். நினைப்பதுடன் நிஜமாக்கவும் முயல வேண்டும் என பேசியது ஆசிரியர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.

விருதாளர்களுடைய விபரங்கள் புகைப்படத்தோடு திரையிடப்பட்டன. மிகச்சிறந்த அறிமுகத்தோடு விருதுகள் வழங்கப்பட்டன.

திண்ணையின் தன்னார்வத் தோழர்களின் கனிவான உபசரிப்புடன் பரிமாறப்பட்ட மதியஉணவு கூடுதல் சுவையாக இருந்ததாக அனைவரும் கூறியது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்வளித்தது.

கலகல வகுப்பறை சிவாவும் மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும் இணைந்து கோமாளிகளின் குதிரை நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.
 
கனவு பள்ளி
கனவு ஆசிரியர்
கனவு சமுதாயம்

எனும் தலைப்பில் கோமாளிகளின் கிண்டல்களுக்கும் கேளிகளுக்குமிடையே உரையாடல் துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இருநூறு ஆசிரியர்களும் பங்கேற்றனர். கால நெருக்கடி காரணமாக விரிவான கலந்துரையாடல் நடைபெறவில்லை.
புதிய முயற்சி முழுவெற்றியடையவில்லை எனினும் தேனி மாவட்டத்தில் முற்போக்காக செயல்படும் இருநூறு ஆசிரியர்களை மிகச்சிறந்த ஆளுமைகளுடன் ஒரு நிகழ்வில் இணைத்து அவர்கள் மேலும் வலுவாக பணிசெய்யும் அளவிற்கான ஊக்கத்தை வழங்குவதாக நிகழ்வு நடந்தேறியது.

இணைஇயக்குநர் பொன்குமார் அவர்களது விருப்பப்படி திண்ணையின் பயிற்சி மாணவர்களுக்கு இரவு ஏழு மணிவரை போட்டித்தேர்வுகள் சார்ந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மடைதிறந்த வெள்ளம் போல் பாடப்பொருள் ,படிக்கும் முறை ,தேர்வினை அணுகும் முறைகள்,உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து இணைஇயக்குநர் அவர்கள் மிகச்சிறந்த உரையை வழங்கினார். நடமாடும் பல்கலைக் கழகமாகவே மாணவர்கள் அவரைக்காணத் துவங்கினர். மாணவர்களுடைய மனதில் நம்பிக்கை நாயகனாக இணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் இடம்பிடித்தார்.

ஆகச்சிறந்த செயல்பாட்டாளர்களை மிகச்சிறந்த ஆளுமைகள் வாயிலாக கொளரவப்படுத்தும் வாய்ப்பினை திண்ணை விருதுகள் 2017 வழங்கியுள்ளது.

"ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்துவிட அனுமதியோம் "

நன்றியுடன்

திண்ணை மனிதவள மேம்பாட்டு மையம்
தேனி.
கனவு பள்ளி

TRB + CM CELL : கணினி ஆசிரியர்கள் தேர்வு நடத்துவது குறித்து TRB அளித்துள்ள பதில்.

2018 Tamilnadu Government Holidays List

பீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

கல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை அளிக்கக்கூடியது. குறிப்பாக, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்குப் பிரகாசமான வெளிச்சத்தைத் தருவது கல்விதான். 


ஆனால், பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காமல் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் கொடுமை இன்றும் நடந்துவருகிறது. அந்த மனநிலையில் இருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவரின் பெண் குழந்தை, தற்போது அரசுப் பள்ளியில் கல்வி ஒளி பெற்றுவருகிறது. 

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ளது, கட்டளை கிராமம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆர்.துளசி மற்றும் பிற ஆசிரியர்களின் பெரும் அக்கறையாலும் முயற்சியாலும் பீகாரைச் சேர்ந்த அ.ஜைனப் காதூன் கல்வி கற்றுவருகிறாள். முதலாம் வகுப்புப் படிக்கும் இவருக்குத் தமிழில் பேசவே தெரியாது. ஆனால், பள்ளி தொடங்கி நான்கே மாதத்தில் மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்போடு தமிழ் வார்த்தைகளைப் படிக்கிறாள். அ முதல் ஃ வரை, க் முதல் ன் வரை தடங்களின்றி படிக்கிறாள். இதை வீடியோவில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள். ஏனெனில், தமிழுக்கே உண்டான சிறப்புமிக்க, உச்சரிக்கச் சிரமமான வார்த்தைகளையும் அழகாகப் படிக்கிறாள். 'ழ்' எழுத்து அவர் நாவில் அவ்வளவு அழகாக நடனமாடுகிறது. 

ஜைனப் காதூன் பள்ளிக்கு வந்த சுவாரஸ்யமான கதையை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுகதேவ் சொல்கிறார். "ஜைனப் காதூனின் குடும்பத்தினர் பீகாரின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் அப்பா வேலை பார்க்கிறார். வீட்டின் செல்லக் குழந்தை ஜைனப் காதூன். அவளை முதன்முதலில் பார்த்ததும், 'பள்ளியில் சேர்க்கும் வயது. சேர்த்துவிடுங்கள்' என்று சக ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவள் அப்பா, அம்மாவுக்குத் தமிழில் பேசத் தெரியாது. இந்தி மட்டுமேதான் தெரியும். அதனால், அடுத்த நாள் நான் சென்றேன். என் அம்மா இந்தி பண்டிட் என்பதால், எனக்கு இந்தி தெரியும். ஜைனப் காதூன் வீட்டுக்குச் சென்று, அவளைப் பள்ளியில் சேர்க்கச் சொன்னபோது, அப்பா சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 

'எங்கள் ஊரில் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை பெண் குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்துவிடுவோம். அதனால், தேவையில்லாமல் படிக்கவைக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்' என்றார். நான் அவரிடம் பொறுமையாகப் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, அவர்தான் தினமும் காலையில் மகளைப் பள்ளிக்கு அழைத்துவருகிறார். பள்ளி முடிந்ததும் நானோ அல்லது வேறு ஆசிரியரோ கொண்டுபோய்விடுவோம்" என்கிறார் சுகதேவ். 

ஜைனப் காதூன் நான்கே மாதத்தில் இவ்வளவு தெளிவாகத் தமிழில் படிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி? 

"ஜைனப் காதூனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் நான்தான். ஏனென்றால், இந்தப் பள்ளியில் எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். அதனால், என்னோடு அதிகம் பேசுவாள். சேர்ந்த ஒரு மாதத்தில், தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்று வருத்தத்துடன் சொன்னாள். மற்றவர்களுக்கு இந்தி தெரியாது என்று நான் சொன்னதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாள்கள் செல்ல, செல்ல மற்ற மாணவர்களோடு பழக ஆரம்பித்தாள். ஒன்றாக விளையாடினாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசவும் கற்றுக்கொண்டாள். 

நான் என்ன சொல்கிறேனோ அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறாள். தமிழ் எழுத்துகளை உச்சரிக்கச் சிரமப்பட்டபோது, நான் உதவினேன். ஒவ்வோர் எழுத்தையும் முழுமையாக உச்சரிக்கிறாள். எழுத்துக்கூட்டி, தெளிவாகப் படிக்கிறாள். பார்க்கும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், கல்வியில் இருக்கும் அவளின் ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்த எனக்கு வியப்பாக இல்லை" என்கிறார் சுகதேவ். 

கல்வி வாழ்க்கையையே மாற்றக்கூடியது. ஜைனப் காதூனுக்குச் சரியான வயதில் கிடைத்திருக்கும் கல்வி, அவளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஒரு மாணவிக்குக் கல்வி கிடைக்க ஆர்வத்துடன் செயல்பட்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்!

மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்

புதுடில்லி: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு 

முறையை நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

இது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன.நாடு முழுவதும், ௨௦௧௮ முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்

துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.
2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.
3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.
4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.
6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.
7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.
8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது.


வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணி!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை

நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர்

பணியிடங்கள்: 131

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000/- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.750/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

கடைசித் தேதி: 25.10.2017.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய

வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 546
பணியிடம்: தில்லி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182
1. Hindi - 25
2. English - 20
3. History - 18
4. Economics - 28
5. Geography - 17
6. Physics - 30
7. Chemistry - 20
8. Maths - 24

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
வயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144
9. Hindi - 25
10. English - 20
11. Sanskrit
12. Social Studies
13. Maths
14. Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

III. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்


பள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை-டாக்டர்கள் வலியுறுத்தல்!!!ஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.

இந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


முதல் வகுப்பு..... வண்ண வண்ணப்பூக்கள் பாடல்

அரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்மை இந்தியா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்!

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முழு சுகாதாரத்தினை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு சுகாதாரத்தினை ஏற்படுத்தி சுகாதாரத்தில் தன்னிறைவு என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருவதுடன்,  ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கழிப்பறை இல்லா வீடுகளை கண்டறிந்து, தனி நபர் கழிப்பறை திட்டம், தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இத்தகைய தூய்மை இயக்கத்தினை பரவலாக்கும் விதமாக புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர்  சரவணகுமார் தன்னார்வத்துடன் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.  பலவகை வண்ணங்களில் தூய்மை இயக்கத்தினை காட்சி படுத்தும் இந்த மணல் சிற்பங்கள் மூலம் மக்கள் மனதில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாகும் எனவும், இது போன்ற காட்சி படுத்தலின் மூலம் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன், அலுவலர்களை கேட்டு கொண்டார்.


அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!