Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 13 October 2017

TNTET - 2013 இல் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பணி - Video

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்- ஜாக்டோ ஜியோ

G.O.No.301 : D.A FOR PENSIONERS PUBLISHED


CLICK HERE-G.O.No.301 (10.10.2017) - PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners


G.O No. 302 Dt: October 11, 2017-Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2017 - Orders - Issued


CLICK HERE-G.O No. 302 Dt: October 11, 2017

கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை சேகரிக்கும் கல்வித்துறை : விரைவில் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்பு...

பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கு நன்றி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் பகுதிநேர தொகுப்பூதிய வேலைசெய்பவர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வினை, இதய தெய்வம் அமரர் முன்னால் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் 2012ல் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர ஆசிரியர்கள் வரவேற்கிறோம்.

ஆரம்பத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டாலும், மாண்புமிகு அம்மா அவர்கள் 2014ல் ரூ.2000 ஊதிய உயர்வை முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் வழங்கினார்கள்.மேலும் தற்போதைய முதல்வர் அவர்களாலும் சென்ற மாதம் செப்டம்பர் 2017ல் ரூ.700 ஊதிய உயர்வை வழங்கப்பட்டுள்ளது.அதனால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் தற்போது ரூ.7700 தொகுப்பூதியமாக பெற்று பலனடைந்து வருகிறார்கள்.

ஜாக்டோஜியோ போராட்டங்களின்போதுஅரசின் உத்தரவை ஏற்று பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்துவருகிறார்கள் என்பதனை அரசின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஏழாவது ஊதிய மாற்றுக்குழுவில் டேக்டோ சார்பில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்து வேலைநாட்களிலும் பணிவழங்கி சிறப்பு காலமுறை ஊதியம் கேட்கப்பட்டது.இருப்பினும் தற்போது அரசு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியதை இருகரம்கூப்பி வரவேற்று அனைவரும் நன்றியினை ஒருமனதாக இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மாண்புமிகுஅம்மா அவர்களின் ஆசியில் தொடரும் தமிழக அரசுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியினை பணிவுடன் வணங்கி தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,தங்கள் உண்மையுள்ள,

சி.செந்தில்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு,
டேக்டடோ உயர்மட்டக்குழு உறுப்பினர்.


2017 TNTET CV - கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் 25.10.2017 அன்று வாய்ப்பு - TRB அறிவிப்பு - CV LIST PUBLISHED

ஜேக்டோ ஜியோ முடிவுகள் !!1) 20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை, அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்

2) 23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

ஜாக்டோ ஜியோ கிராஃப் கூட்டமைப்பு முதல்வருடன் சந்திப்பு

*ஜாக்டோ ஜியோ கிராஃப் கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர்  மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் இன்று நேரில் சந்தித்துஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டைக் களைந்து புதிய ஊதியம்* *நிர்ணயம் செய்திடவும்,

*அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியக் குழுவில் 21 மாத ஊதிய நிலுவையை வழங்கிடவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

TN 7th PAY COMMISSION - NEW CALCULATION SOFTWARE FOR ALL PAY BANDS


NEW CALCULATION SOFTWARE

சந்தேகம் இருப்பின்  அரசு G.O.   (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26  வரை பார்த்துக் கொள்ளவும்

PAY MATRIX TABLE

Pay Matrix கீழே இறங்க இறங்க ஒவ்வொரு level ம் 3%  increment ல் fix செய்யப்பட்டுள்ளது...

Increment வரும் போது அடுத்த லெவலில் இறங்கி விடும் வகையில் pay matrix அமைக்கப்பட்டுள்ளது...

ஆண்டு ஊதிய உயர்வு

பதவிஉயர்வு ஊதிய உயர்வு.  போன்றவைகளுக்கு 3% கணக்கீடுகள் தேவையில்லை.தேர்வு நிலை சிறப்பு நிலை (3%+3%).

ஆகியவற்றிற்கும் கணக்கீடுகள் தேவையில்லை..

அடுத்த level ல் இறங்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டியதுதான்...

தமிழகத்தில் உள்ள அரசூழியர் ஆசிரியர் அனைவரும் pay Matrix table ல் ஏதாவது ஒரு அடிப்படை ஊதியத்தில் இருப்பார்கள்...

PAY MATRIX TABLE 7 TH PAY COMMISSION TN GOVT 

தனியார் பள்ளிகளிலும்TET தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவு - கல்வியாளர்கள் கருத்துகள்

தனியார் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது பள்ளிக்கல்வித் துறை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கையையும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் `அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டே  பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் 31.03.2015-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், நான்கு ஆண்டுக்குள் அதாவது 31.03.2019-க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் சிலருடன் பேசினோம். 

தனியார் பள்ளிதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் `ஆயிஷா' நடராஜன்...


“கல்வி உரிமைச் சட்டம், 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆரம்பத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. மத்திய அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசுப் பள்ளிகளுக்கு மாநில அரசும் தேர்வை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் தேர்வு எழுதிட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆசிரியர்களாக தேர்வாகியிருப்பவர்கள் தேர்வு எழுதவேண்டியதில்லை என்றும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கலாம் என, தமிழக அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. கல்விக் கட்டணம் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியர்களின் தகுதிநிலை குறித்து கேள்விகேட்கும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உள்ளது. 

தனியார் பள்ளிகளில், +2 முடித்தவர்களே ஆசிரியர்களாக இருந்து, ஆரம்ப வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். பள்ளிகள் அங்கீகாரம் பெறும்போது தவறான தகவலைக் கொடுத்து அங்கீகாரம் பெறுகின்றன. கல்வித் துறை அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது, தனியார் தேர்வுப் பயிற்சி மையங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இந்த நிலையை அரசு மாற்றி, ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு பயிற்சி மையங்களைத் தொடங்கிட வேண்டும். 

தற்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்திருக்கிறது. தனியார் பள்ளிகளில் குறைந்தபட்ச சம்பளத்தையும் வேலை நேரத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும்" என்றார். 

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் “ஏற்கெனவே ஆசிரியராகப் பணியில் இருப்பவர்களை விட்டுவிட்டு, புதியதாக  பணியில் இருப்பவர்களுக்கு இந்த முறையைக் கொண்டுவரலாம். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை விட்டுவிட்டு இதர பள்ளிகளில் மட்டும் அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்கிறார்கள். அப்போது சிறுபான்மையினர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தகுதி குறைவாக இருந்தால் சரி என்று சொல்வதுபோல் இருக்கிறது. 

தற்போது ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பி.எட்., ஆசிரியர் பட்டயத்தேர்வு போன்றவற்றை எல்லாம் முடித்துவிட்டுத்தான் வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு தேர்வு நடத்தி வேலை வழங்க வேண்டும் என்கிறார்கள். `தனியார் பள்ளிகளில், அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சம்பளத்தை வழங்குவார்களா?' என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம் குறித்தும், அவர்களின் தகுதிநிலை நிர்ணயம் குறித்தும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் தர வேண்டும். 

இந்த ஆண்டு பி.எட் படிப்பில் 17,000 இடங்களில் 9,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து பி.எட் படிப்புக்கான வாய்ப்புகளும் ஆர்வமும் குறைந்துவருகிறது. இதுதவிர, தற்போது மத்திய அரசு திறந்தநிலை கல்வி மையத்தின் மூலம் பத்தாம் வகுப்பிலும், +2 வகுப்பிலும் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறது. இவை அனைத்தும் முரண்பாடுகளாகவே இருக்கின்றன. 

2013-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு முழுமையாக வேலை வழங்கியது. அதன்பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை குறைவாகவே இருந்துவருகிறது. தற்போது அரசுப் பள்ளியில் ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரப்படி பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் பெரிய அளவில் இருக்காது. ஆனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தனியார் பள்ளிகளில் தகுந்த சம்பளத்துடன் இவர்களை நியமிக்க வேண்டும்" என்றார் சாமிநாதன். 

நாகராஜன்நெட் செட் அசோஷியேஷன் சங்கப் பொதுச்செயலாளர் நாகராஜன், “அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள்  2019-ம் ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனச் சொல்வது நியாயமானது அல்ல. 

அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும்போது சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்களிப்பதும் தவறு. தேசிய தகுதித்தேர்வு (National Elegibility Test) முறையான கால இடைவெளியில் நடைபெறுவதைப்போலவே, ஆசிரியர் தகுதித்தேர்வும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். 

ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் உள்கட்டமைப்பை மட்டுமே பார்த்து அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படுகிறது. இனி ஆசிரியர்களின் தகுதி நிலையையும் பார்த்த பிறகு அங்கீகாரமும் அனுமதியும் வழங்க வேண்டும். இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் நாகராஜன். 

அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் தகுதியைப் பார்ப்பது நல்ல விஷயமே! அதைப்போலவே அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டியதும் அரசின் கடமை!

ஆசிரியர் பயிற்றுராக மாற்றுப்பணியில் பணிபுரிய விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் - இயக்குனர்

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நாள்தோறும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, நிலவேம்புக் குடிநீர் விநியோகிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைளை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 11,500 பேர் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.

மேலும், தமிழகம் வந்த மத்திய குழுவினர் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க ரூ. 256 கோடி நிதி தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

இந்நிலையில், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த ஆய்வறிக்கையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ஏழாவது சம்பள கமிஷனில் ஏமாற்றம் : அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பேட்டி!!!

மதுரை: மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் 

கூறியதாவது:
தமிழக அரசின் ஆறாவது சம்பள கமிஷனில் அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்
என்றோம். அதற்கு அரசு இன்னும் தீர்வு காணவில்லை. மத்திய அரசு டாக்டர்கள் 4 ஆண்டிற்குள் பதவி, சம்பள உயர்வு பெற்று விடுவர். அதே பதவி, சம்பள உயர்வு பெற நாங்கள் 11 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் சம்பளத்தில் 75 ஆயிரம் ரூபாயை இழக்கிறோம். அரசு கல்லுாரி, பல்கலை பேராசிரியருக்கு பல்கலை மானியக்குழு அறிவித்த சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களை விட குறைவான சம்பளத்தைத்தான் அரசு டாக்டர்கள் பெறுகின்றனர். இது போன்று பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் உயர்வு அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த அறிவிப்பை கூட 2016 ஜனவரியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் 21 மாத கால தாமதத்திற்கு பின் அரசு அறிவித்துள்ளது. தற்போது டெங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை தரும் பணியில் உள்ளோம். டெங்கு பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போம். டெங்கு கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் திறம்பட செயல்படவில்லை, என்றார்.


7th pay - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் திருத்திய ஊதிய விகிதம், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற பரிந்துரையின் அடிப்படையில், 
11.10.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே உரிய காலவரையறைக்குள் அமல்படுத்துவதை ‘குதிரை பேர’ அரசு, ‘அலுவலக கமிட்டி’ என்ற ஒன்றை நியமித்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்தது.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கி நான்கு மாதகால அவகாசமும், பிறகு ஜூன் மாதத்தில் மேலும் மூன்று மாதகால அவகாசமும் அந்தக் கமிட்டிக்கு அனுமதி கொடுத்து, ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கூடாது என்ற இயலாமை உணர்வில் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ‘குதிரை பேர’ அரசு திட்டமிட்டுத் தாமதம் செய்துவந்தது. இந்தநிலையில் தான், அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, கோட்டை நோக்கிய பேரணி நடத்தி, இறுதியில் காலவரையற்ற போராட்டத்தை கையிலெடுத்துப் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, காவல்துறை மூலம் தடியடி நடத்தி கைது செய்து, மாநில அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து, நிலைகுலையச் செய்தது ‘குதிரை பேர’ அரசு.

*சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தலைமைச் செயலாளரையே நேரில் ஆஜராக வைத்து, ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த உத்திரவாதம் பெற்றதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அதுமட்டுமின்றி, “அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்”, என்று காலநிர்ணயம் செய்து, தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது உயர்நீதிமன்றம்.*

இப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றால், காலத்தே வழங்கப்பட்ட  உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்புதான் அதற்குக் காரணமே தவிர, ‘குதிரை பேர’ முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ஆர்வமோ அக்கறையோ அல்ல என்ற உண்மை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.

*“உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்வடிவம் பெற்றுள்ள ஊதியக்குழு பரிந்துரைகளில் முரண்பாடுகள் இருக்கின்றன”, என்று ஏற்கனவே அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து முதல்நிலைக் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத்தொகை இல்லை, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 21 ஆயிரம் ரூபாய் மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை, வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப்படிகளில் ஏமாற்றம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி 30 சதவீத சம்பள உயர்வு இல்லை என்பது போன்ற பல்வேறு குறைகளும் குமுறல்களும் இன்னும் அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகின்றன. இதுதவிர, “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்”, என்ற அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைப் பற்றிப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி இன்னும் தன் அறிக்கையை கொடுக்காமல் தாமதிப்பது வேதனைக்குரியது.*

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்கும் நேரத்தில், அந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய குழப்பத்திற்கும் தீர்வு கண்டிருக்க வேண்டிய முதலமைச்சர், “எனது முடிவுகள்”, “நான் ஆணையிட்டுள்ளேன்”, என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல, தன்னைத் தானே கற்பனை செய்துகொண்டு, உயர்நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மறைத்து, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியிட்டுள்ள, 11.10.2017 தேதியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூட, புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் கமிட்டி என்றைக்கு அறிக்கை கொடுக்கும்? அதுபற்றிய தீர்வு எப்போது வரும்? போன்ற கேள்விகளுக்கான பதில், இந்த அரசு போலவே அந்தக் கோரிக்கையும் அந்தரத்தில் ‘தொங்கி’க் கொண்டிருக்கிறது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்கும் அறிவிப்பில், ‘பணியாளர் சீரமைப்புக்குழு’, ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறியுள்ளது அரசு. ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது.

ஆகவே, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் மாண்புமிகு நீதியரசர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு செய்யத் தவறியதை உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிருப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - ௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
'குரூப்-2' பதவிகளில் காலியாக உள்ள 1,094 இடங்களை நிரப்ப 2015 ஜூலை 26ல் முதல்நிலை தேர்வும், 2016 ஆக., 21ல் முதன்மை எழுத்துத் தேர்வும் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2,169 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அக்., 20- நவ., 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 துவங்கும் போது, 'லேப்டாப்' : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

''பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.கரூரில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில், 412, 'நீட்' மற்றும் போட்டி தேர்வு மையங்கள், வரும் நவம்பர் மாதத்திற்குள் துவக்கப்படும். இவை மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் அமைக்கப்படும்.இந்த மையங்களுக்கான, 54 ஆசிரியர்கள், ஆந்திரா மாநிலத்திற்கு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.இவர்கள் மூலம், 3,000 ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3,000 பள்ளிகளில் தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த, 12 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து, 2018 - 19 முதல் படிப்படியாக அனைத்து வகுப்பு பாட திட்டங்களும் மாற்றப்படும். கடந்த ஆண்டு, 'டெண்டர்' மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு துவங்கும்போது, லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளியில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில், 10 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வகுப்பில், 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அறிவியல் ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள, மேலை நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!