Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 14 October 2017

SCERT-தமிழகபள்ளிக்கலைத்திருவிழா (கலையருவி திட்டம் ) - 2017 - 18 ஆம் கல்வி ஆண்டு முதலாக போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் - அரசாணை மற்றும் நெறிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!!JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு

நேற்று (13.10.17) சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழுவின் அவசரக் கூட்டத்தில் 'தமிழக அரசின் ஊதிய மாற்ற அறிவிப்பு 2017' பற்றி விவாதிக்கப்பட்டது. 


☀JACTTO-GEO-வின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, 

☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய கோரிக்கையை அரசு பொருட்படுத்தாது,

☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காமல் ஊழியர்களின் ஊதியத்தைப் பறித்துக் கொண்ட ஏமாற்று வேலையைக் கண்டித்து, 

*☀அக்டோபர் 20 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஊதியக்குழு முரண்பாடுகள் & அரசின் ஏமாற்றுக் குணத்தை விளக்கிக் கண்டனக் கூட்டம்* நடத்துதல் என்றும், 

☀அடுத்தகட்ட நீதி மன்ற விசாரணை நாளுக்குள் ( *23.10.2017-ற்குள்* ), 

*☀இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் உட்பட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி* 

*☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காவிட்டால்,*

*☀24.10.2017-ல்* நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் *அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கை*யை இறுதி செய்வது என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது. 

7 வது ஊதியக்குழுவில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஊதிய நிர்ணயம் விவரம்.TN 7th PAY - New Fixation Form as per G.O 303 & Model Form (Filled)NMMS EXAM 2017 | NOTIFICATION & APPLICATION FORM...


CLICK HERE | NMMS EXAM - NOTIFICATION - 2017

CLICK HERE NMMS EXAM - APPLICATION FORM...

ஆதாரை கட்டாயமாக்கியதால் அரசுக்கு 58,500 கோடி மிச்சம்!!!ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து நவம்பர் மாதம் பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!!மௌலானா கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 10,000 தொகை பெறலாம் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூபாய் 12000 தொகை

மவுலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற அழைப்பு பெற மாணவரர்களு தர்மபுரி கலெகடர் அறிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்களுக்கான மௌனா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . இவ்வாண்டுக்கான கல்வி உதவித்தொகையை விண்ணப்பித்து பெறலாம் . ஒனபது , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பது முதல் 10ஆம் வகுப்பு வரை குறைந்த பட்சம் 55% மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும் . பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

மௌலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடைய மாணவியர்அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

விண்ணப்பிக்க இணையதள முகவரியை இணைத்துள்ளோம். இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் கையெப்பம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் இக்கல்வித்தொகையை பெற குடும்ப வருமாணம் இரண்டு லட்சதுக்குள் இருக்க வேண்டும். வருமான சான்றிதழில் தாசில்தார் கையெப்பம் அத்துடன் இருப்பிட சான்றிதழ் மேலும் பள்ளியில் தலைமையாசிரியர் அல்லது முதல்வரின் கையெழுத்து பெற்று புகைப்படம் அத்துடன் சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழ் இணைத்து வங்கிகணக்கு விவரம் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 10,000 தொகை பெறலாம் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூபாய் 12000 தொகை இரு தவணையாக அளிக்கப்படும். விண்ணப்பத்துடன் உரிய தகவலை இணைத்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து நிரப்பியவற்றை அனுப்ப வேண்டிய முகவரி

மௌலானா ஆஷாத் கல்வி அறக்கட்டளை,

மௌலானா ஆஷாத வளாகம்,

செம்ஸ்போர்டு சாலை,

ரயில்வே முன்பதிவு மையம் எதிரில் .

புதுடெல்லி 110055 என்ற முகவரி அனுப்ப வேண்டும் குறைந்தபட்சம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைந்து இருக்க வேண்டும்.

ஊதிய உயர்வு அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

2016 - உங்க சம்பளம் எவ்வளவுன்னு தெரியலையா இதோ உங்களுக்காக .....


IMPORTANT 

1.ENTER YOUR GPF/CPS NO...

2.ENTER YOUR SUFFIX CODE...

3.ENTER YOUR DATE OF BIRTH...

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன் விபரம்:

● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்

● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்

● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்கள் வாயிலாக ஆய்வு செய்து, முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

டிசம்பருக்குள் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்: செங்கோட்டையன் தகவல்

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம், "டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள் திறந்த உடனேயே, தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிகளில், மழை நீர் விழுவதாக புகார் வருகிறது. அது மாதிரி உள்ள பள்ளிகளில் விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும். இதற்காக, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும். பிப்ரவரி மாதத்துக்குள் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும். 2013-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளியில் காலிப் பணியிடம் இருந்தாலும், அதை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம்.

உடனடியாக அந்தப் பள்ளியில், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்படுவார். டிசம்பர் முதல் வாரத்தில், ஸ்மார்ட் க்ளாஸ் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இதற்காக 3,000 பள்ளிகளை தேர்ந்தெடுத்துள்ளோம். அந்தப் பள்ளிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் க்ளாஸ்களை அமைத்துள்ளோம், அதேபோல, 9, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணினி மூலம் கல்வி கற்பிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.

489 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் டிசம்பர் மாதம் முடியும்" என்றார்.

ஏர்டெல்: 50 ஜி.பி. டேட்டா சலுகை!தீபாவளியை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் 50 ஜி.பி. அளவிலான டேட்டாவை இலவசமாக

வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், சமீப காலமாகவே வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. அதற்குக் காரணம், முதலில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கிவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமேயாகும். தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை வழங்கி வருவதால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், சந்தையில் ஜியோவுடனான போட்டியை வலுப்படுத்தவும் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைத் தீபாவளியை முன்னிட்டு அறிவித்துள்ளது.

‘மை பிளான் இன்ஃபினிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்தத் திட்டத்தில் 999 கட்டணத்தில் 50 ஜி.பி. அளவிலான டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வரம்பற்ற அழைப்புகளை லோக்கல் மற்றும் எஸ்.டி.டி.யில் மேற்கொள்ளலாம் என்பதோடு ரோமிங் கட்டணமும் இத்திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜியோ போல தினசரி 1 ஜி.பி. டேட்டாவை மட்டுமே பயன்படுத்த இயலும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் இத்திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஏழாவது ஊதிய குழுவில் நிலுவைத் தொகை வழங்காததால் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புகள்.2800 முதல் 5400 வரை...TN 7th PAY - New Fixation Form as per G.O 303 & Model Form

PAY FIXATION FORM FOR 7th PAY COMISSION AS PER G.O 303- APPENDIX - II STATEMENT OF FIXATION OF PAY UNDER TAMIL NADU REVISED SCALES OF PAY RULES, 2017
PAY FIXATION MODEL FORMஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!