Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 21 October 2017

ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் மண்டலச் செயலாளர் பேராசிரியர் குமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.


கூட்டத்தில் பேசியவர்கள், "தமிழக அரசு அமைத்த ஊதியக்குழு, தனது பரிந்துரையை தமிழக முதல்வரிடம்  சில தினங்களுக்கு முன் அளித்தது. இதை ஆராய்ந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்குழு ஒப்புதல் தந்ததன் அடிப்படையில், ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

இதில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், பல்வேறு குறைபாடுகளுடன் அறிவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. ஜாக்டோ-ஜியோ சார்பாக குறைபாடுகளைக் களைந்து, துணை அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களையாமல் அறிவித்துள்ளதால், அடிப்படை ஊதியத்தில் 15 ஆயிரத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் என்று அறிவித்துவிட்டு, அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைவான ஊதிய விகிதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதைச் சரிசெய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். இல்லையேல், வரும் 23-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதுகுறித்து முறையிட உள்ளோம். 

நீதிமன்றம் சாதகமான பதிலை அளிக்கும் என நம்புகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், நீதிமன்ற அனுமதியுடன் அடுத்த கட்ட போராட்டம்குறித்து மாநில மையம் கூடி முடிவெடுக்கும்” என்றார்.

TN 7th PC - ELEMENTARY EDUCATION - PAY FIXATION OPTION FORM

Greetings from Space Kidz India!!!

Respected Sir/ Ma’am

Greetings from Space Kidz India!!!

It gives us immense pleasure to announce the Young Scientist India 2017 – 5th Edition. Interested Students can enroll their name along with full details.  Space Kidz India has been conducting the "YOUNG SCIENTIST INDIA", hunt to identify and nurture the Scientific talents among High School students, 9th std - 12th std and this is the 5th Year.
 A little introduction to Space Kidz India - an organization that creates International experiential learning and platform to Indian children in the field of Science, technology, Art and Culture. Ambassadors to NASA space Camp, Euro Space Centre and Star City, Moscow.

  Space Kidz India has been conducting the "YOUNG SCIENTIST INDIA", hunt to identify and nurture the Scientific talents among High School students, 9th std - 12th std and this is the 5th year to organize the event "Young Scientist India -2017" across all schools within India in a much larger scope.

The Govt School children will be assessed and prizes will be awarded seperately.

ZERO ENTRY FEES

 

CATEGORIES

·         AVIATION/SPACE

·         AGRICULTURE

·         ELECTRONICS

·         ROBOTICS

·         APP DEVELOPMENT

·         ELECTRICALS

 

REGISTRATION

ü  Registration opens from 25th October 2017 to 25th December 2017

ü  Last day of submission 25th December 2017

ü  Finalist names will be announced in the website on 5th January 2018 at 21.00 Hrs

ü  Finale 24th January 2018 at Chennai.

 

FINALS AND JUDGEMENT

Ø  A panel of Professors from reputed Educational Institutions' / Scientists will validate the projects based on the Innovation, Creation and Presentation of the project.

Ø  Top 100 Projects from Private Board and 100 Projects from STATE/ GOVT/ GOVT AIDED Board will be chosen by the eminent jury

Ø  These 200 Projects names will be published on a webpage on 5th January 2018 at 21.00 Hrs and finale will be on 24th January 2018. This is to showcase the Scientific talents of Indian Students to the World.

Ø  100 Finalists from private board and 100 finalists from the Government board will be invited to Chennai to exhibit their projects on the Finale -24th January 2018, live. 5 minutes time will be awarded to each student, to make a presentation to the jury. Q&A by the jury will take place.

Ø  25 Super Finalists from each board will be chosen and they will be given a common topic for which they need to speak for 2 minutes (Extempore Speech).

Ø  Based on the Extempore Speech and overall presentation of the Project, One Winner and One Runner up will be chosen from the private board and One Winner and One Runner up from the STATE/ GOVT/ GOVT AIDED Board will be chosen.

 

AWARDS

Q  One Winner will be chosen from the Private Board and One Winner from the STATE/ GOVT/ GOVT AIDED Board will be chosen and given a Space Workshop at the Russian Space Centre, GCTC.

Q  One Runner up from the Private Board and similarly One Runner up from the STATE/ GOVT/ GOVT AIDED Board will be given a Science Workshop at Malaysia.

Q  The Winner, Runners up, prizes will be awarded in the name of the great Scientist Dr. APJ Abdul Kalam

Q  The 25 Super Finalists from both the boards will be given - "Individual Trophies".

Q  All the Finalists will be awarded meritorious Certificates and Medals.

Q  Trophies will be awarded to all the Finalists.

Q  All the Participants will be awarded Certificates.

Looking forward to your students participate in this Wonderful journey of being the Budding Scientist of India.

Winning school Principal / Science teacher will be honored with Special Commendation.

Please kindly find attached the poster for the event and the complete details of the event on our website www.spacekidzindia.com

For further details Please contact 
Ms.Mohana Lakshmi.
7092212899
8838004242

Thanks and regards
Mohana Lakshmi

-- 

SPACE KIDZ INDIA
#1-B, Nutech Apartment
#48, Thirumalai Pillai Road T.Nagar
Chennai - 600 017
Phone -  044-48535376/984026576

களத்தில் குதித்தது வோடஃபோன்: 90ஜிபி, அளவில்லா அழைப்பு வெறும் ரூ.399க்கு அதுவும்..

டேட்டா போர் தொடர்கிறது என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆம் போட்டிப் போட்டுக் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.


ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக அளவில்லாத அழைப்பா? 100 ரூபாய்க்குக் குறைவாக டேட்டாவா என்று மின்சாரத்தில் கை வைத்தது போல அலறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்று சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜியோ வருகைக்குப் பின்பு சில நூறுகளுக்கு அளவில்லா அழைப்பையும், ஒரு நாளை ஒரு ஜிபியையும்  தாண்டி, எல்லா மாதங்களும் பிப்ரவரி மாதம் போல 28 நாட்கள் என்று அறிவித்து வந்தது இன்று தலைகீழாக மாறிப் போனது.

இரண்டு மாதம், 3 மாதங்களைத் தாண்டி தற்போது வோடஃபோன் 6 மாதத்துக்கான ரீ-சார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது.

ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் அறிவித்திருக்கும் சலுகை திட்டத்தில், வெறும் ரூ.399க்கு 90 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் வழங்கப்படும். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 6 மாதங்கள் வரை இந்த சலுகைக்கான கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சலுகை ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கா அல்லது புதிய வாடிக்கையாளர்களுக்கா என்பது குறிப்பிடப்படவில்லை. விழாக்காலச் சலுகையாக இந்த திட்டத்தை வோடஃபோன் அறிவித்துள்ளது.

இது குறிப்பிட்ட எண்களுக்கான சலுகை என்பதால், அனைவரும் உங்கள் எண்ணுக்கு இந்த சலுகை இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்பு ரிசார்ஜ் செய்து கொள்வது அவசியம்.

ஏற்கனவே 399 திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய நிலையில், அதே திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. ஆனால், அவர்களை எல்லாம் தாண்டி தற்போது வோடஃபோன் தனது புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இது தீபாவளி வரை மட்டுமே கிடைக்கும் சலுகையா அல்லது அதற்குப் பிறகும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும் தகவல் இல்லை.


7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்

ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================

 1) வளரூதியம்(Increment)
      ===================
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.

எனவே 3% Increment எணில் தற்போது பெரும் புதிய ஊதியத்திற்கு அடுத்த ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக எடுத்து கொள்ளவேண்டும்.

2)ஊக்கவளரூதியம்(Incentive)
    =======================
      ஊக்க வளரூதியம் எனில் 3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த இரண்டாவது ஊதியத்தை எ.டு;10 ம் Pay cell ஊதியம் பெற்றால் 12ஆம் Pay Cell ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

3)தோ்வுநிலை(Selectiongrade)
    =======================

4) சிறப்புநிலை(Specialgrade)
    =======================
         Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) அதாவது Level 1 முதல் 23 வரை நமது துறையைப் பொருத்தவரை OA முதல் Add.To &AO வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தோ்வுநிலை)20 ஆண்டுகள் (சிறப்புநிலை)பணிபுரிந்தால், வழக்கத்தின்படியே 3%+3%, ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே இதனையும் தனியே கூட்டிப் பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் (Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில்
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும்.

அதாவது 12 ஆம் Pay cellஐ அடிப்படையாக கொண்ட நபர் 14 ஆம் அணிஊதியத்திற்கு நகர்ந்து அதையே அடிப்படை ஊதியமாகப் பெருவாா்.

5)தேக்கவளரூதியம்(Stagnaton Increment)
     ========
                    
தரஊதியம் Rs. 6000முதல் 10000 அதாவது (Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.நமது துறையைப் பொருத்தவரை கரூவூல அலுவலா்&CAO பணியிடம் மற்றும் அதற்கும் மேல் உள்ள பணியிடங்களில்,ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்தால் ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு(Paycell) நகர்த்ப்படுவாா்.

6)வெகுமதி வளரூதியம்
 ========= ===========
(Bonus Increment)
===============
 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம்
ஆண்டு முடிவில் 3%Bonus Increment அனுமதிக்கப்படும். Paymarrix ல் உள்ள Paycellல் 15 ஆம் அணி(PayCell) ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா்.

7)கூடுதல் வளரூதியம்
    =================
    (Additional Increment)
    ==================
         01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 5200−20200 என்பதில் 20200
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

8)முத்தோா் இளையோா் ஊதிய முரண்பாடு
    ==================
(Junior get MorePay)
=======================

இதற்கு 3%Increment மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது இளையோரை விட
முதியவருக்கு Pay Cellல் ஒரு Cell அதிகரிக்கப்படும். இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்.

9)தனிஊதியம்( Personal Pay)
   =======================
        ஆசிரியர்,BDO, Thashiltar, போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. ஆனால் 6 ம் ஊதியக்குமு
போன்று 7 ம் ஊதியக்குமுவில் தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை 

எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரும் 24 ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளன. தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்தால் நீட் தேர்வுக்காக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடக்கும் பயிற்சியில் மாணவர்கள் பயிலலாம்.


2184 அரசு பள்ளிகளில் சுவர் சித்திரங்கள் வரைய ரூ 3.27 கோடி ஒதுக்கீடு - பள்ளிகளை தேர்தெடுக்க உத்தரவு.

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.


பெயர் சேர்க்கும் விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க விரும்புவோர் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். 2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 - 25 வயதிற்குட்பட்டோர் தவிர மற்றவர்கள் தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும். 'இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால் தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும் முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள,87 ஆயிரம் பள்ளிகளில், ௪௭ லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களில், ௧௮ லட்சம் பேர், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர். 

இவர்களில் பெரும்பாலானோர், தனியார் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களை விட, பொதுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர்; தேர்ச்சி விகிதமும் குறைவாக உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, அக்., ௨௩ முதல், அனைத்து பள்ளி களிலும், சிறப்பு வகுப்பு துவக்கப்படுகிறது. மாணவர்கள் சோர்வாகாமல் இருக்க, ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சுண்டல், பிஸ்கட் போன்ற சிற்றுணவு வழங்கப்பட உள்ளது.

பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?

பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதே போல, 1 - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 

இதனால், பிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல், உயர் கல்வி வாய்ப்புகளை இழக்கின்றனர். பாடத்திட்டத்தை மாற்ற, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பாலகுருசாமி ஆகியோர் அடங்கிய, உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இது தொடர்பாக, தமிழகத்தில், நான்கு முக்கிய நகரங்களில், பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. ஆனால், உயர் கல்வியில் முக்கிய அங்கம் வகிக்கும் மருத்துவத் துறையினர், கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டக் கல்லுாரி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. இந்த குறையை தீர்க்க, இ - மெயில் மற்றும், 'ஆன் - லைன்' வாயிலாக, கருத்து கூறும் வசதியை, உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இணையதளத்தில், இதற்காக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

'அதில் பயனீட்டாளர் குறியீட்டு எண் வழங்கி, ஒவ்வொருவரின் கருத்துக்களை, மின்னணு கோப்பாகவோ அல்லது பதிவாகவோ பெற வேண்டும்' என, பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 

எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!நிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து 
உள்ளனர். நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, சீனா, நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் ஜப்பான் நாடும் நிலவு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் நிலவில் 50 கி.மீ நீளத்திற்கு குகை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளது. ஜப்பானின் செலீன் விண்கலம் அனுப்பிய இதனை கண்டு பிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குகை சுமார் 31 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலவில் உள்ள மாரியஸ் என்ற எரிமலை வெடித்ததால் குகை போன்று தோன்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த ஆணை வெளியீடு.

G.O.(Ms) No.294 Dt: October 16, 2017 -கல்லூரிக் கல்வி- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த, நிர்வாக அனுமதியும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கு ரூ.105.39 கோடி மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ரூ.104.61 கோடி நிதி ஒப்பளிப்பும் அனுமதித்து-ஆணைகள் வெளியிடப்படுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!