Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 22 October 2017

அரசுப்பணி கனவை நனவாக்கும் ஆசிரியர்!!ஒப்பந்த ஊழியர் திட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு!!!5 ஆம் வகுப்பு அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்துக்கான பாடகுறிப்பு .

தாய் தந்தை சமாதி அருகில் ஆசிரியர் உடலை அடக்கம் செய்த மாணவர்!! நிமானது மாதா,பிதா, குரு...பதவி உயர்வுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது எப்படி?எவ்வளவு???2009 க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு என்ன தான் ஊதியமுரண்பாடு ?? இராமநாதபுரம், கடலாடி நண்பர்கள் கணக்கீடு....SSA-BRC LEVEL COMPETITION ( தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்புகளுக்கு பேச்சு,கட்டுரை,ஓவியப் போட்டிகள் குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!!)
PAY FIXATION பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் சீல்(SEAL) மாதிரி..

Madurai Kamaraj University (DDE) B.Ed Spot Admission 2017-2019

Madurai Kamaraj University (DDE) B.Ed Spot Admission 2017-2019100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு


சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம்பத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையின் பரிசு கொஞ்சம் வித்தியாசமானதுதான். 
தனது வகுப்பில் யார் 100 மதிப்பெண் வாங்கினாலும், அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

செல்வகுமாரியிடம் பேசினோம். “ வரைபடங்களில் விமான வழித்தடங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் இப்படியொரு பரிசை அறிவித்தேன். இதனால் மாணவிகள் ஊக்கத்துடன் படிப்பார்கள் என எதிர்பார்த்தேன். கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் வகுப்பில் ஒரே ஒரு மாணவி சரண்யா மட்டும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார். அந்த ஆண்டு ஆறு மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தனர்.

இதேபோல், மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மாணவி யமுனா ஆங்கிலத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார். எனவே, இந்த இரு மாணவிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றேன். என் சொந்த செலவில் என்பதால் அதற்குத் தகுந்தாற்போன்ற இடத்தைத் தேர்வு செய்தோம். கோவையில் ஒரு வாடகைக் கார் எடுத்து அங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தளங்களை சுற்றிப் பார்த்த பின்னர் ரயிலில் சென்னைக்குத் திரும்பினோம். இந்தப் பரிசுத் திட்டம் இந்தாண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கும் ஓர் ஊக்கமாக அமைந்துள்ளது" என்றார் நெகிழ்ச்சியோடு. 

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை

வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார் வழங்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

மலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.

'மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்'

''போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஈரோடு வந்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிக்கல்வித் துறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. மத்திய அரசின், 'அடல் லேப்' திட்டம், தமிழகத்தில், 12 இடங்களில் துவங்க, தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு, நிதி உதவி அளிக்கும்.

மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளை, தமிழக மாணவ - மாணவியர் எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும், 450 பயிற்சி மையங்கள், டிசம்பர் இறுதிக்குள் துவங்கப்படும்.

இப்பயிற்சிக்கு, பள்ளிக் கல்வித் துறை மூலம், 'வெப்சைட்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மாணவ - மாணவியர் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 

பயிற்சி எந்த நேரத்தில் நடக்கும் என்பது தெரிவிக்கப்படும். 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், சிறப்பான பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பொதுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில், சிறந்து விளங்கும் தனியார் நிறுவனத்துடன், செவ்வாயன்று, ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்நிறுவனம், ஓராண்டு வரை, இலவசமாக பயிற்சி அளிக்கும்.

ஐ.ஏ.எஸ்., போட்டி தேர்வை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், மாவட்ட நுாலகம் சார்பில், பயிற்சி மையம் துவங்கப்படும்.

ஈரோடு மாவட்டம், அரச்சலுாரில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம், அரசின் கவனத்துக்கு வரவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வர். அதன் பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வரும் விவகாரத்தில், தமிழக அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர் 'கட் ' - தமிழக அரசு அதிரடி உத்தரவு

டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, 'கட்' செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர். சேலத்தில், நேற்று, 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

  சுத்தம்,கடைபிடிக்காத,வீடுகளில்,குடிநீர்., 'கட் ' 

தமிழகத்தில், 'ஏடிஸ்' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலின் தாக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு பின், மக்களை மிரள வைத்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களிலும், குவிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், லட்சத்திற்கும் மேற்பட்டோர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50 பேர் வரை, பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

பகீரத முயற்சி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொது நல அமைப்புகளுடன் இணைந்து, பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டெங்கு பரவ, நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' கொசுக்களே காரணம் என்பதால், அவற்றின் உற்பத்தியை முற்றிலும் ஒழிக்க, நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.வீடுகள், கடை கள், காலி மனைகள், கட்டுமான பணியிடங்கள், சேமிப்பு கிடங்குகள், திரையரங்குகள், சுங்கச்சாவடிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

அங்கு, நன்னீர் தேங்கி, கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில், கழிவு பொருட்கள், உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை இருந்தால், அப்புறப்படுத்த உத்தரவிடப்படுகிறது.இதன்படி, சுத்தம் செய்யாவிட்டால், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்,தமிழக பொது சுகாதார சட்ட பிரிவு, 134 - 1ன்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. 

சென்னையில், 3,000 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 30 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, சுத்தத்தை பராமரிக்காத வீடு, கடை, நிறுவனங்களிடம் 

இருந்து, அபராதமாக, ஐந்து கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, சுத்தத்தை பராமரிக் காத வீடுகள், கடைகள், நிறுவனங் களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் பரவ, நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' கொசுக்களே காரணம். இதை, மக்கள் நன்கு உணர்ந்திருந்தாலும், தங்கள் வீடு, குடியிருப்பை சுத்தமாக வைத்திருப்பதில்லை. 

மக்களே தங்களை அறியாமல், கொசு உற்பத்தியை அதிகரிக்க வழி செய்து, டெங்கு பரப்ப காரணமாக இருந்து வருகின்றனர். எனவே, டெங்கு ஒழிக்க, வீடு வீடாக ஆய்வுகள் தொடர்கின்றன.மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளும், இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை, சுத்தம் பராமரிக்காத வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, குடிநீர் இணைப்பை துண்டிக்கும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மக்களுக்கு தண்டனை தர வேண்டும் என்பது, அரசின் நோக்கம் அல்ல. டெங்கு காய்ச்சலால், அடுத்த உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சேலத்தில் அதிரடி

இதன் தொடக்கமாக, சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. மாநகராட்சி கமிஷனர், சதீஷ் உத்தரவின்படி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மண்டலங்களில், 11 வார்டுகளில், மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 18 இடங்களில், டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், 56 ஆயிரம்ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில், கலெக்டர் ரோகிணி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார். நேற்று காலையும், அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, ஆண் நர்ஸ் கள் ஓய்வு அறையில், எலி இறந்து கிடந்தது; துர்நாற்றம் அடித்தது. மாணவியர் விடுதி, காசநோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ மனையை சுற்றிய பல பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியும், சுகாதார சீர் கேட்டுடன், கொசு உற்பத்தி மையமாக மாறி இருந்தது.

இதையடுத்து, துாய்மை பணிக்கான ஒப்பந்த நிறுவனத்தினரிடம், 100 சதவீதம் துாய்மை பணியை செய்ய உத்தரவிட்டார். 

'நோயாளிகளும்,பார்வையாளர்களும், டெங்கு ஒழிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, கலெக்டர் ரோகிணி வலியுறுத்தினார்.

கமிஷனர் பதற்றம்

ஈரோடு மாநகராட்சி சார்பில், டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், 'எங்கள் வார்டில் சுகாதாரப்பணி நடக்கவில்லை; சுகாதார ஆய்வாளரை பார்த்ததே இல்லை' என, முதியவர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதனால், கமிஷனர், சீனி அஜ்மல்கான் பதட்டமானார். பின் சுதாரித்து, 'கொசு ஒழிப்பில், அனைவரும் இணைந்து செயல்படுவோம்' எனக்கூறி, சமாளித்தார்.

சுங்கச்சாவடிக்கு அபராதம்

வேலுார் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், கலெக்டர் ராமன் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் நேற்று காலை, அதிரடி சோதனை செய்தனர். அப்போது, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், பழைய டயர்கள், இரும்பு கம்பிகள், பெயின்ட் டப்பாக்கள் தேங்கி கிடந்தன. அதில், மழை நீர் தேங்கி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன. இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட கலெக்டர், ராமன் உத்தரவிட்டார். 

சுகாதார திட்டத்தில் சாதித்தவர்

மஹாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், உப்பலாயி என்ற குக்கிராமத்தை சேர்ந்த விவசாயி, ராம்தாசின் மூன்றாவது மகள், ரோகிணி, 33. பி.இ., முடித்த இவர், 2008ல் தன், 23வது வயதில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, முதல் முயற்சியில், ஐ.ஏ.எஸ்., ஆனார்.

மதுரை மாவட்ட, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த, கூடுதல் கலெக்டர் ரோகிணி, இந்தாண்டு, ஆக., 28ல், சேலத்தின் முதல் பெண் கலெக்டராக பொறுப்பேற்றார். கணவர் விஜயேந்திர பிதரி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக, மத்திய அரசு பணியில் உள்ளார்.

மதுரையில்,கூடுதல் கலெக்டராக பணியாற்றிய போது, மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், அனைத்து கிராமங்களும் கழிப்பறை வசதி பெற வேண்டும் என்பதற்காக, முழு முயற்சி மேற்கொண்டார்.இதற்காக, மத்திய அரசின் பாராட்டு பெற்றார். 2016ல், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், 26 மாநில கலெக்டர்கள், கூடுதல் கலெக்டர்களை அழைத்ததில், தமிழகத்தில் இருந்து சென்றது, இவர் ஒருவர் தான். சேலத்தில் பொறுப்பேற்றது முதல், 'டெங்கு' ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சுத்தம் இல்லாத வீடுகள் மற்றும் நிறுவனங்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.  பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

திருப்பி அனுப்பும்

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், 'மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்' என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.'பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்' என, தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத வாய்ப்பு

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.

காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந்துள்ளன. 

தமிழகத்தில் சுமார் 8,395 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அரசுப்பள்ளிகளை போன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன.

கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு இப்பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் இப்பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சில பள்ளிகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். 

தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் 13 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அலுவலர்கள் இல்லாததால், ஆசிரியர்களே இலவச பாடப்புத்தகம், புத்தகப்பை, வரைபடம், செருப்புக்கான கால் அளவு எடுப்பது, தினந்தோறும் செய்யவேண்டிய அலுவலகப்பணிகள் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டியுள்ளது. 

இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிவதில்லை. பொதுத்தேர்வு நடக்கும் காலங்களில் தலைமையாசிரியருடன் சென்று வேறு பள்ளிகளில் தேர்வுப்பணி செய்ய வேண்டியுள்ளது. 

இதனால் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘நலத்திட்டம் வழங்கவும், அலுவலகப்பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே அரசு பள்ளிகளைப்போல், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!