Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 23 October 2017

TN 7th PC - ELEMENTARY EDUCATION PAY FIXATION FORM

டெங்கு - சுகாதார உறுதிமொழி

Some Important Words for Primary School Children:

Some Important Words for Primary School Children:

✅✅✅✅✅✅✅✅✅
a, about, above, across, act, active, activity, add, afraid, after, again, age, ago,agree, air, all, alone, along, already, always, am, amo unt, an, and, angry, another,answer, any, anyone, anything, anytime, appear, apple, are, area, arm, army,around, arrive, art, as, ask, at, attack, aunt, autumn, away.


B

baby, base, back, bad, bag, ball, bank, basket, bath, be, bean, bear, beautiful,beer, bed, bedroom, behave, before, begin, behind, bell, below, besides, best,better, between, big, bird, birth, birthday, bit, bite, black, bleed, block, blood, blow,blue, board, boat, body, boil, bone, book, border, born, borrow, both, bottle,bottom, bowl, box, boy, branch, brave, bread, break, breakfast, breathe, bridge,bright, bring, brother, brown, brush, build, burn, business, bus, busy, but, buy, by.

C

cake, call, can, candle, cap, car, card, care, careful, careless, carry, case, cat,catch, central, century, certain, chair, chance, change, chase, cheap, cheese,chicken, child, children, chocolate, choice, choose, circle, city, class, clever,clean, clear, climb, clock, cloth, clothes, cloud, cloudy, close, coffee, coat, coin,cold, collect, colour, comb, come, comfortable, common, compare, complete,computer, condition, continue, control, cook, cool, copper, corn, corner, correct,cost, contain, count, country, course, cover, crash, cross, cry, cup, cupboard, cut.

D

dance, dangerous, dark, daughter, day, dead, decide, decrease, deep, deer,depend, desk, destroy, develop, die, different, difficult, dinner, direction, dirty,discover, dish, do, dog, door, double, down, draw, dream, dress, drink, drive,drop, dry, duck, dust, duty.

E

each, ear, early, earn, earth, east, easy, eat, education, effect, egg, eight, either,electric, elephant, else, empty, end, enemy, enjoy, enough, enter, equal, entrance,escape, even, evening, event, ever, every, everyone, exact, everybody,examination, example, except, excited, exercise, expect, expensive, explain,extremely, eye.

F

face, fact, fail, fall, false, family, famous, far, farm, father, fast, fat, fault, fear,feed, feel, female, fever, few, fight, fill, film, find, fine, finger, finish, fire, first, fit,five, fix, flag, flat, float, floor, flour, flower, fly, fold, food, fool, foot, football, for,force, foreign, forest, forget, forgive, fork, form, fox, four, free, freedom, freeze,fresh, friend, friendly, from, front, fruit, full, fun, funny, furniture, further, future.

G

game, garden, gate, general, gentleman, get, gift, give, glad, glass, go, goat, god,gold, good, goodbye, grandfather, grandmother, grass, grave, great, green, grey,ground, group, grow, gun.

H

hair, half, hall, hammer, hand, happen, happy, hard, hat, hate, have, he, head,healthy, hear, heavy, hello, help, heart, heaven, height, help, hen, her, here, hers,hide, high, hill, him, his, hit, hobby, hold, hole, holiday, home, hope, horse,hospital, hot, hotel, house, how, hundred, hungry, hour, hurry, husband, hurt

I

I, ice, idea, if, important, in, increase, inside, into, introduce, invent, iron, invite, is,island, it, its.

J

jelly, job, join, juice, jump, just.

K

keep, key, kill, kind, king, kitchen, knee, knife, knock, know.

L

ladder, lady, lamp, land, large, last, late, lately, laugh, lazy, lead, leaf, learn, leave,leg, left, lend, length, less, lesson, let, letter, library, lie, life, light, like, lion, lip, list,listen, little, live, lock, lonely, long, look, lose, lot, love, low, lower, luck.

M

machine, main, make, male, man, many, map, mark, market, marry, matter, may,me, meal, mean, measure, meat, medicine, meet, member, mention, method,middle, milk, million, mind, minute, miss, mistake, mix, model, modern, moment,money, monkey, month, moon, more, morning, most, mother, mountain, mouth,move, much, music, must, my.

N

name, narrow, nation, nature, near, nearly, neck, need, needle, neighbour, neither,net, never, new, news, newspaper, next, nice, night, nine, no, noble, noise, none,nor, north, nose, not, nothing, notice, now, number.

O

obey, object, ocean, of, off, offer, office, often, oil, old, on, one, only, open,opposite, or, orange, order, other, our, out, outside, over, own.

P

page, pain, paint, pair, pan, paper, parent, park, part, partner, party, pass, past,path, pay, peace, pen, pencil, people, pepper, per, perfect, period, person, petrol,photograph, piano, pick, picture, piece, pig, pin, pink, place, plane, plant, plastic,plate, play, please, pleased, plenty, pocket, point, poison, police, polite, pool,poor, popular, position, possible, potato, pour, power, present, press, pretty,prevent, price, prince, prison, private, prize, probably, problem, produce, promise,proper, protect, provide, public, pull, punish, pupil, push, put.

Q

queen, question, quick, quiet, quite.

R

radio, rain, rainy, raise, reach, read, ready, real, really, receive, record, red,remember, remind, remove, rent, repair, repeat, reply, report, rest, restaurant,result, return, rice, rich, ride, right, ring, rise, road, rob, rock, room, round, rubber,rude, rule, ruler, run, rush.

S

sad, safe, sail, salt, same, sand, save, say, school, science, scissors, search,seat, second, see, seem, sell, send, sentence, serve, seven, several, sex, shade,shadow, shake, shape, share, sharp, she, sheep, sheet, shelf, shine, ship, shirt,shoe, shoot, shop, short, should, shoulder, shout, show, sick, side, signal,silence, silly, silver, similar, simple, single, since, sing, sink, sister, sit, six, size,skill, skin, skirt, sky, sleep, slip, slow, smoke, small, smell, smile, smoke, snow,so, soap, sock, soft, some, someone, something, sometimes, son, soon, sorry,sound, soup, south, space, speak, special, speed, spell, spend, spoon, sport,spread, spring, square, stamp, stand, star, start, station, stay, steal, steam, step,still, stomach, stone, stop, store, storm, story, strange, street, strong, structure,student, study, stupid, subject, substance, successful, such, sudden, sugar,suitable, summer, sun, sunny, support, sure, surprise, sweet, swim, sword.

T

table, take, talk, tall, taste, taxi, tea, teach, team, tear, telephone, television, tell,ten, tennis, terrible, test, than, that, the, their, then, there, therefore, these, thick,thin, thing, think, third, this, though, threat, three, tidy, tie, title, to, today, toe,together, tomorrow, tonight, too, tool, tooth, top, total, touch, town, train, tram,travel, tree, trouble, true, trust, twice, try, turn, type.

U

uncle, under, understand, unit, until, up, use, useful, usual, usually.

V

vegetable, very, village, voice, visit.

W

wait, wake, walk, want, warm, wash, waste, watch, water, way, we, weak, wear,weather, wedding, week, weight, welcome, well, west, wet, what, wheel, when,where, which, while, white, who, why, wide, wife, wild, will, win, wind, window,wine, winter, wire, wise, wish, with, without, woman, wonder, word, work, world,worry, worst, write, wrong

Y

year, yes, yesterday, yet, you, young, your.

Z

zero, zoo

ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!!

DEPARTMENTAL EXAM DEC 2017 - NEW SYLLABUS PAPERS LIST FOR TEACHERS

TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன*

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில்
மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

*Lab Assistant மற்றும் இதர கல்வித்துறை பணியாளா்கள்* எழுத வேண்டிய தாள்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
4.137_ The Account Test for subordinate Officers part II
5.172 - The Tamil Nadu Government Office Manual Test


தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் ஊதிய நிர்ணயம் குறித்து(Pay fixation for ele- hm) மான்யத் தொடக்கப்பள்ளி செயலரின் செயல்முறைகள்!!!

SSA--SMC Meeting ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் மற்றும் SMC MEETING வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - SPD PROCEEDINGSநமது அண்டை மாநிலமான (யூனியன் பிரதேசம்) பாண்டிச்சேரியின் 7வது ஊதியக்குழு ஊதிய அமைப்பு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12-ம் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பாண்டு முதல் உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.


வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டு தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.

வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதனைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் அப்டேட்டுகளுன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான். 

இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம் ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பி விட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Deletefor Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும்இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்து விட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள்என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும்.மேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள் தரப்படும். இந்த புதிய வசதியினை 'WhatsApp 2.17.295' என்ற பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள் 1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி

நிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது. அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.

தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.

இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நெடுஞ்சாலையில் 16 விமானங்கள் தரையிறக்கம்!!!

இந்தியாவில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா -

லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் மட்டுமே தரையிறக்கப்படும். ஏதேனும் அவசரம் என்றாலோ, இல்லை பேரிடர் காலங்களிலோ மட்டும்தான் மற்ற இடங்களில் தரையிறக்க அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புப்படை அதிகாரி கார்கி மாலிக் சின்ஹா கூறுகையில், “இந்திய விமானப்படையைச் சேர்ந்த 16 விமானங்களை ஒரே நேரத்தில் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24) தரையிறக்க முடிவு செய்யப்பட்டன. இதற்காக ஒரு போக்குவரத்து விமானமும், 15 போர் விமானங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஏ.என்-32 ரக போக்குவரத்து விமானம், 6 எஸ்.யூ-30 ரக விமானங்கள், 3 ஜாக்குவார் ரக விமானங்கள் மற்றும் 6 மிராஜ் 2000 ரக விமானங்களும் உள்ளன.

இதில் சி-130 ரக விமானத்தில் விமானப்படை கமாண்டோக்கள் எதிரிகளின் எல்லைக்குள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவதுபோல் ஒத்திகை நடக்கும். அதைத்தொடர்ந்து மற்ற விமானங்கள் தரையிறங்கி, பின்னர் வானில் பறக்கும், இறுதியாக முதலில் தரையிறங்கிய கமாண்டோ விமானம் மறுபடி வானில் பறந்ததுடன் இந்த ஒத்திகை நிறைவுபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி அருகே உள்ள யமுனா நெடுஞ்சாலையில் மிராஜ் 2000 ரக போர் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் ஆறு போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


TRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி

அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
தமிழக அரசு பள்ளிகளில்,ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, பல்வேறு சிறப்பு பாடங்களுக்கு, நிரந்தரமாக, ௧,௩௨௫ ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதற்கு, செப்., ௨௩ல், போட்டி தேர்வு நடந்தது; ௩௫ ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான, தற்காலிக விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில், வினாவும், விடையும் தவறாக உள்ளதாக, முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் அனுப்பிய புகார் வருமாறு: பத்தாம் வகுப்பைத் தேர்ச்சியாக கொண்ட, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே, பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியிட கோரியும், டி.ஆர்.பி., கண்டு கொள்ளவில்லை. இந்த தேர்வில், கவின் கலை கல்லுாரி பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வினாக்கள் இடம் பெற்றன. அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.வினாத்தாளில், கிடைமட்டக்கோடு என்பதற்கு, தவறான பதில் குறிப்பு தரப்பட்டுள்ளது. 'அஜந்தாவில், புத்தரின் ஓவியம் தீட்டப்பட்ட குகை எண் என்ன...' என்ற கேள்வியில், சரியான பதில் குறிப்பு தரவில்லை. 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்பதற்கு பதில், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' அமைந்துள்ள இடம் என, தவறாக கேட்கப்பட்டுள்ளது.

தந்த சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்றது என்ற வினாவுக்கு, நாயக்க மன்னர்கள் காலம் என, பள்ளிக்கல்வி, பிளஸ் ௨ தமிழ் புத்தகத்தில் பதில் உள்ளது. ஆனால், விஜயநகர மன்னர்கள் காலம் என, வரலாற்றையே மாற்றி, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு வினாக்களும், பதில் குறிப்புகளும் தவறுதலாக உள்ளதால், அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!!

கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் 

உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

சாலை விபத்துக்களின்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவரைவிட, பின்னால் இருப்பவரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 100 சி.சிக்கும் குறைவான 25% இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், பின் இருக்கைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 சி.சிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளுக்குத் தடை விதிக்க, கர்நாடக மாநில மோட்டார் வாகனச் சட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், அதை நடைமுறைப் படுத்தப்படவில்லை என கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விதி புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்குத் தான் பொருந்தும். அதன்படி, இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகன ஓட்டிகள் மட்டும் அமரும் வகையிலேயே இருக்கையை அமைக்க வேண்டும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது


ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, 
பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது. இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'எலைட்' சிறப்பு பயிற்சி திட்டம், 'பெஸ்ட்' மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.

 இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வுஅட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி

கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் ஆகிய வற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி என, 131 வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களின் ஓவிய போட்டியில், 'கொசு வந்தது, டெங்கு வந்தது; டெங்குவை பரப்பும் கொசுக்களின் வாழ் இடங்கள்' என்ற தலைப்பும், இடம் பெற்றுள்ளது.சுத்தமான வகுப்பறை, சூப்பரான வகுப்பறை; எனக்கு பிடித்த பெண்மணி, பாக்கெட் உணவுக்கு பை, பை போன்ற தலைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் பதுங்கியிருக்கிறதா 'ஏடிஸ்'? இங்குதான் உருவாகிறதா 'டெங்கு!'?

மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வீடுகள், அரசு கட்டடங்கள் என சல்லடை போட்டு, டெங்கு பிறப்பிடத்தை தேடும் மாவட்ட சுகாதாரத்துறை, ஒரு முக்கியமானஇடத்தை சவுகரியமாக மறந்து விட்டது. அந்த இடம்...பள்ளிகள்!போதிய பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் பள்ளிகளில் உருவாகும் 'ஏடிஸ்' கொசுக்கள், வகுப்பறைகளில் உள்ள மேஜை, இருக்கைகளை மறைவிடமாக கொண்டு, குழந்தைகளுக்கு நோயை பரப்பி வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவல் சேகரிப்பில், பள்ளியில் இருந்தே பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலுடன் வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 'டெங்கு' பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களில் திரண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள், கோவை மண்டலத்தில் அதிகமாக உள்ளது.கடந்த நான்கு மாதங்களில், வைரஸ் காய்ச்சலுக்கு, 15 ஆயிரம் பேரும், டெங்கு காய்ச்சலுக்கு, 7,500 பேரும், பன்றி காய்ச்சலுக்கு, 27 பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த காய்ச்சல்களால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால், நோய் தாக்குதல் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே, டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி சூழலை, உருவாக்குபவர்களுக்கு சுகாதாரத் துறை அபராதம் விதித்து வருகிறது.பெரும்பாலும், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளே, எளிதில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

அதிலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்கு காய்ச்சல் இருப்பது, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பல பள்ளிகளில் பயன்படுத்தாத பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை, வகுப்பறையின் ஓர் பகுதியிலோ, அல்லது பள்ளியின் வெளியே அமைந்துள்ள காலியிடங்களிலோ போட்டு வைக்கின்றனர். இருட்டான இந்த அறைகள், கொசுக்களின் இருப்பிடமாக மாறி விடுகிறது. 

பள்ளியின் வெளியே குவிக்கப்பட்டுள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில், மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியிடமாக மாறி விடுகிறது.மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள், பெரும்பாலும் வெளிச்சமின்றி காணப்படுவதால், டெங்கு கொசுக்கள் மாணவர்களின் கை, கால்களில் கடித்து நோயை பரப்புகின்றன. பள்ளி நிர்வாகங்களின் போதிய பராமரிப்பின்மையும், அலட்சியமும் நோய் காரணிகளாக அமைகின்றன. கொசுக்கடி வாங்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் தீவிரமடைகிறது.

இப்படி, நோய் தாக்குதல் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களோ, நிர்வாகிகளோ கண்டுகொள்ளாமலே உள்ளனர்.

இது போன்ற கல்வி நிறுவனங்களால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. எனவே, வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தும் சுகாதாரத் துறையினர் பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். 

பள்ளிகளுக்கு உத்தரவிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், டெங்கு கொசு உற்பத்திக்கு சாதகமான சூழல் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கவும் கல்வி அதிகாரிகள் தயங்கக்கூடாது. அப்போதுதான் குழந்தைகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வீடுகளில், ஆய்வு நடத்தி வருகிறோம். இதில், பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போதே, குழந்தைகள் காய்ச்சலுடன் வந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

தற்போது, வீடு, நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், கல்வி நிறுவனங்களில் ஆய்வில் இறங்குவோம்' என்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில்,''பள்ளிகளில் பயன்படுத்தாத கழிவறைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர்களிடம் வலியுறுத்துவதுடன், பள்ளிகளுக்கு 'மெயிலும்' அனுப்பி வருகிறோம். ஒவ்வொரு, புதன், வியாழக்கிழமைகளில் இப்பணிகள் நடந்து வருகிறது. ''வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியர்கள், இது குறித்து அறிக்கையும் அனுப்பி வருகின்றனர். தொடர்ச்சியாக பள்ளிகளில் ஆய்வும் நடத்தி வருகிறோம்,'' என்றார்.

இருண்ட பள்ளிகளில்வெளிச்சம் பரவட்டும்!டில்லி போன்ற வட மாநிலங்களில், மழை மற்றும் நோய் பரவும் காலங்களில் பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டையும், ஸ்கர்ட், டிரவுசர் அணிபவர்கள், பேன்ட்டும் அணிந்து கொள்வர். இதனால், கொசுக்கடி பாதிப்பு தடுக்கப்படுகிறது. 

இதுபோன்ற பாதுகாப்பு முறைகளை, தமிழகத்திலும் கொண்டு வந்தால், குழந்தைகள் மரணத்தை கட்டுப்படுத்தலாம். பெற்றோர் இதில் கவனமாக செயல்பட வேண்டும். இதே போல், அனைத்து வகுப்பறைகளிலும் மின் இணைப்பு ஏற்படுத்தி, விளக்குகள் அமைத்தும், கொசுக்கள் கூடாரமிடுவதை தடுக்கலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!