Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 25 October 2017

அரசுப்பள்ளி குழந்தைநேய கழிப்பறையை திறந்துவைத்த கலெக்டர்...

விழுப்புரம் மாவட்டம் எங்கள் பள்ளிகுளம் பள்ளிக்கு, இன்னிக்கி உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத நாள்தாங்க. ஏன்னுதான கேட்கரீ ங்க..

சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத் தொடக்கல்வி அலுவலர் அவர்கள் குழந்தைநேய கழிப்பறை'திட்டத்துல ஏற்கனவே உள்ள கழிப்பறையை நவீன படுத்திக்கொள்ள
ரூ 30,000  கொடுத்தாரு..
அதன்வேல நேத்துதா முடிஞ்சது.

தீடீர்னு அத சுத்தம் பன்றது ,இத சுத்தம் பன்றதுனு பள்ளிகுளமே பரபரப்பா இருந்துச்சி. என்னனு விசாரிச்சா விஷயம் தெரியாதா சார், நாளைக்கு நம்மூர்ல மனுநீதிநாள்,  கலெக்டர்  வாரங்கனு சொன்னாங்க..

நல்லதா போச்சு, கலெக்டர் கையாலயே குழந்தைநேய கழிப்பறையை திறந்திடலானு திட்டம் போட்டா, கழிப்பறையை திறக்க கலெக்டரா? அதலா வரமாட்டாங்கனு சிலர் சொன்னாங்க.
ஆனா இன்னைக்கு மனுநீநாள் முடிஞ்ச உடனே வந்திருந்த திண்டிவனம்  சார் ஆட்சியர் அம்மாகிட்ட ,விஷயத்த தயங்கி தயங்கி சொன்னோம்.

என்ன ஆச்சிரியம் School எங்க இருக்கு வாங்கபோலானு உடனே வந்து திறந்து வைத்ததோட,மாணவர்கள்கிட்டேயும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கழிப்பறையின் முக்கியத்துவம் தொடர்பா கொஞ்சநேரம் பேசிட்டு, எங்க ஊர் ஜெனங்க முன்னாடி பள்ளிய பத்தி ரொம்பவே பாராட்டியதோட என்ன உதவி வேணுனாலும் தயங்காம கேளுங்கனு சொல்லிட்டு போயிருக்காங்க.அவுங்களோட எளிமையும்,சுறுசுறுப்பும் இப்படிகூட ஒரு கலெக்டரானு எல்லோரையும் ரொம்பவே ஆச்சிரியப்படதா வெச்சது.

சார்  நம்ம பள்ளிகூடத்த நெனச்சா எங்களுக்கு  ரொம்ப பெருமையா இருக்குனு ,ஜெனங்கவந்து சொன்னபோது,கொஞ்சம் சந்தோஷமாதா இருந்தது...காலாண்டு லீவு(முதல் பருவம்) முழுவதும் கழிப்பறையில் பட்ட கஷ்டமெல்லாம், கலெக்டர் கையால திறந்தபோது காணாமலே போச்சு...

#நன்றி..
*சார் ஆட்சியர் அவர்கள்- திண்டிவனம்.*

*மாவட்டத்தொடக்கல்வி அலுவலர் அவர்கள்- விழுப்புரம்.*

உ.தொ.கல்வி அலுவலர்கள்  அவர்கள் -வல்லம்.
100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று அசத்திய அரசு பள்ளி ஆசிரியை(video)

Best Moral story collection for kids (video)

OPPOSITE WORDS | ANTONYMS | KIDS ANIMATED VIDEO ON OPPOSITES

தமிழ் பல்கலைக்கழகம்- தொலைதூரக்கல்வி- BEd இளங்கல்வியியல் - கற்றல் கற்பித்தல் பயிற்சி அமைத்தல் தொடர்பாக!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் "JACTO - GEO" வழக்கை விசாரிக்க மறுப்பு!!

புத்தகங்களை கொடையாக பெறும் திட்டம் துவக்கம்!!!ஜி.எஸ்.டி: ரூ.92,150 கோடி வரி வசூல்!

செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வரித் தாக்கலில் 

அக்டோபர் 23ஆம் தேதி வரையில் ரூ.92,150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜி.எஸ்.டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் (ஜூலை) ரூ.92,283 கோடி வசூலானது. இரண்டாவது மாதமான ஆகஸ்ட்டில் ரூ.90,669 கோடி வசூலானது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வரித் தாக்கலில் அக்டோபர் 23ஆம் தேதி வரையில் ரூ.92,150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.14,402 கோடி மத்திய ஜி.எஸ்.டி. மூலமும், ரூ.21,172 கோடி மாநில ஜி.எஸ்.டி. மூலமும், ரூ.48,948 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலமும் கிடைத்துள்ளது.

மேலும், இழப்பீட்டு வரி வருவாய் ரூ.7,988 கோடி கிடைத்துள்ளது. இதில் இறக்குமதி வரி ரூ.722 கோடியாகும். ஜூலை மாதத்தில் 64.42 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 68.20 லட்சம் பேரும் வரித் தக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி.ஆர். 3பி. ரிட்டன் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 42.91 லட்சமாக உள்ளது. ஜி.எஸ்.டி.ஆர். 3பி. ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. 

ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது.

இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை.

ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே தரவும், மற்ற பணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு கிடைத்தது.

தற்போது அரசாணை 181 & 90  போன்றவற்றைத் தாண்டி, சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.

ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர் பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி உள்ளது தெளிவாகிறது.

இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.

24-10-17ல் வந்த இந்த வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப் பார்வைபட்டால் மட்டுமே  யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.

23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப் பாதுகாப்பு தந்து  விரைந்து அரசாணை வெளிவிட்டு  இந்த வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options )* கவனிக்க வேண்டியவைகள் நான்கு:

1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது .

2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது .உதாரணமாக ஒர்

ஆசிரியரது ஆண்டு ஊதிய உயர்வு நாள் ஏப்ரல் அல்லது ஜூலை அக்டோபர் எனில் அவர் தனது புதிய ஊதிய நிர்ணயத்தை ஏப்ரல் ஜூலை அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும்.

3. 01.01.2016 க்கு பதிலாக, தேர்வு நிலை ,சிறப்பு நிலை பெற்ற நாளில் கூட விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

4. 01/01/2016 க்கு பிறகு பதவி உயர்வு பெற்றிருப்பின் 1.1.16 க்கு பதிலாக பதவி உயர்வு பெற்ற நாளில் கூட விருப்பம் தெரிவித்து ஊதிய நிர்ணயம் செய்ய முடியும் . ஏனெனில் 1.1.16 இல் ஊதிய நிர்ணயம் செய்வதை விட பதவி உயர்வு பெற்ற நாளில் ஊதிய நிர்ணயம் செய்தால் ( *இடைநிலை ஆசிரியர்கள் 2800 தர ஊதியம் பெற்றவர்கள் கவனிக்க* ) ஊதியம் கூடுதலாக கிடைக்கலாம் .

👆🏿👆🏿இந்த நான்கு வழிகளில் ஊதியம் நிர்ணயம் செய்து பார்த்து எது தங்களுக்கு அதிகபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தருகிறதோ அந்த ஊதிய நிர்ணயத்திற்க்கு விருப்பம் ( option ) எழுதி கொடுங்கள்

அடுத்த மாதமே வழக்கு ஜாக்டோ ஜியோ உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்

23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால் அடுத்த வாரம்தான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்ய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் நாளை முதல் வெள்ளி வரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைகள் மேற்கொள்வதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர் சசிதரன் அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதியரசர் சுவாமிநாதன்அவர்களும் இணைந்த அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக உத்தரவை பெற தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே அடுத்த வாரத்தில்தான் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை தேதி தெரியவரும்.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:

ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.

 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பாட்திட்டம் மாறுவதால், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று   பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்தது.

முன்னதாக இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து ரூ.1 லட்சம் மதிப்பு புத்தகங்களை வழங்கினார். சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் நூல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: 

பதிப்பகங்கள் மூலமாகவும், சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நூல்களை சேகரித்து கல்வி கற்றுத் தரும் பல்வேறு நிறுவனங்கள், அரிய நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இருந்து நூல்கள், ஆவணங்களை பெற்று, உலகத் தமிழர்களுக்கு வழங்கும்  திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் கல்வியாளர்களிடம் இருந்து  பெற்று டிஜிட்டல் முறையில் சரி செய்து நூல்களை வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதல்வரிடம் சிறந்த நூல்களை பெற்றுள்ளேன். அதற்கு பிறகு இந்த தொடக்க விழா நடக்கிறது. தமிழகத்தில் அரிய நூல்கள் சுமார் 3 லட்சம் அளவில் பெற உள்ளோம். அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அவற்றை எளிதாக கையாளும் வகையில்  எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். 

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ப்பதற்கான  இலக்கு என்று பார்த்தால் தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் முதல் 7 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மாநிலத்திலும் 15 சதவீதம் இடம் உள்ளது. எதிர் காலத்தில் அதை இந்த அரசு உருவாக்கும்.  இவ்வாறு அவர்  தெரிவித்தார். 

வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழாசிரியர்கள்: விழாவில் அமைச்சர் பேசும்போது, மலேசியாவின் கல்வி அமைச்சர் இங்கு  வந்தபோது சிறந்த தமிழாசிரியர்கள் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.  அதேபோல பல நாடுகளில்இருந்தும் தமிழாசிரியர்கள் வேண்டும் என்று  கேட்டுள்ளனர். அதற்காக தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என்றார்.

ஆந்திராவில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பயிற்சி மையங்களில் சேர விரும்பும்  மாணவர்களின் பட்டியல் பெறச் சொல்லியுள்ளோம். போட்டித் தேர்வு பயிற்சி மையம்,  தொடர்பாக தகவல்கள் தாமதமானால், மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு நாள்  வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்த வாரம் வரையும் காலம்  நீட்டிக்கப்படும். அவர்களுக்கு  அடுத்த வாரம்  அடையாள அட்டை வழங்கப்படும். நவம்பர்  இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி பணிகள் தொடங்கும். இதற்காக ஆந்திரா  சென்று 54 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். அவர்கள் நாளை  மறுதினம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறினார்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஜனவரி முதல் ரூ.486 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என சென்னை அசோக்நகரில் பள்ளி விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நவம்பர் 15-ம் தேதி முதல் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியத் திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாவட்டந்தோறும் மையங்கள் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் இதுசார்ந்த அறிவிப்பு மட்டுமே இடம்பெறுவதுதான் வழக்கம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை மேம்படுத்தப்பட்ட இணையதளம் வடிவமைத்த பின், அனைத்துக் கல்வித் துறை இணையப்பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் பொதுத் தேர்வு வினாத்தாள்களுடன், திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன.

கல்வித் துறை அதிகாரிகள், “கல்வி சார்ந்த அனைத்துச் சுற்றறிக்கைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்வையிட வேண்டும். திறனாய்வுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 1,000 பேருக்கு, ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!