Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 27 October 2017

TEACHERS WANTED - GOVT SALARY

DEE PROCEEDINGS- DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெறுதல் சார்புNMMS User Name & Password(Last Year)

DEE PROCEEDINGS- புதிய பள்ளிகள் தொடங்க புதிய கருத்துருக்கள் கோருதல் சார்பு2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏன் இந்த அவலநிலை ?? எதற்காக இத்தனை போராட்டம் ??SSA CEO,DEEO,AEEO,BRT குழு பள்ளி பார்வை செய்தல் அறிக்கை அளித்தல் சார்பான சுற்றறிக்கை
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை 

கண்காட்சி தலைப்புகள்

            ”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’

                  1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

                  2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு

                  3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

                  4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்

                  5. கணித மாதிரியாக்கம்

        இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.

                "The Green India"  ''Smart City''  ''Digital India''  ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.

🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

 (கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)

      

          மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க -             ரூ.11000

🔆  பரிசுகள் விபரம்

          பரிசுகள் -  தொடக்க நிலை-        முதல் பரிசு   - ரூ.   400

                                                                 இரண்டாம் பரிசு    - ரூ.   300 

                                                                 மூன்றாம் பரிசு   -     ரூ.   200 

           பரிசுகள் -  உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600

                                                                          இரண்டாம் பரிசு- ரூ.500 

                                                                            மூன்றாம் பரிசு - ரூ.400

        

சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு  தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300

சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300

        பேணர் மற்றும் சான்றிதழ் செலவு 

  (தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு)      -     ரூ. 500

கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள்

மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500

                                                                               மொத்தம்   -   ரூ. 16000/-

இத் தொகையினை  கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.

      

🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை

                        1. தொடக்கப் பள்ளி - ( I to V )   - 2 மாதிரிகள்

                        2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்

                                                                                                              ( VI to VIII) - 2 மாதிரிகள்]

                        3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - ()  - 2 மாதிரிகள்

NTSE EXAM NOV 2017 - HALL TICKET DOWNLOAD

நாகை மாவட்டத்திற்கு ( 16.11.2017 ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை

‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார். ஆனால், இந்தக் கல்வியாண்டில் நுழைக்கப்பட்ட நீட் தேர்வு அவரின் கனவைக் கலைத்தெறிந்தது. 
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் அனிதா. ஆனால், ஏதோ ஒரு தருணத்தில் தனது மருத்துவராகும் லட்சியம் நிறைவேறாது என்பதை உணர்ந்திருக்கிறார். அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொன்றார்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவர்கள் கல்வி நிலையங்களைப் புறக்கணித்துப் பல போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனால், பலரை வியப்புறச் செய்தது ஆசிரியை சபரிமாலா தனது அரசுப் பணியைத் துறந்தது. 

எளிய குடும்பத்தில் பிறந்த அனிதாவின் லட்சியம் தோற்றுப்போனதை மனம் தாளாமல், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் ஆசிரியை சபரிமாலா பள்ளி வளாகத்தில் தனது ஏழு வயது மகன் ஜெய சோழனுடன் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் வலியுறுத்த, தனது ஆசிரியர் பணியைத் தூக்கி எறிந்தார். அவரின் முடிவைக் கேட்டு, பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் இது அவசரப்பட்டு எடுத்த முடிவு என்றும் உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவு என்றும் விமர்சனம் செய்தனர். இவை நடந்து கிட்டத்தட்ட இரு மாதமாகப் போகிறது. இந்நிலையில் சபரிமாலா என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவரோடு பேசினோம். 

அனிதா

"ஏழை மாணவியின் லட்சியம் சிதறியதைப் பொறுக்க முடியாமல் என் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்தில் என் பணியை ராஜினாமா செய்தேன். சிலர் நான் அவசரப்பட்டு விட்டதாக நினைத்தனர். சில நாள்கள் கழித்து வருத்தப்படுவேன் என்றும் கூறினர். ஆனால், கிட்டத்தட்ட இரு மாதமாகிறது நான் எடுத்த முடிவை நினைத்து துளிகூட வருத்தமில்லை. சரியான முடிவு எடுத்திருப்பதாகவே நான் இப்பவும் நினைக்கிறேன். 

எனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுக்கச் சொன்னார்கள். அதேபோலச் செய்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் அரசு தரப்பில் யாரும் பேசவில்லை. அதை நானும் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதைப் பயன்படுத்தி, கல்வி சார்ந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறேன். 

அனிதாவின் வீட்டுக்கு நான் சென்றபோது, அனிதாவுக்கான முப்பதாம் நாள் படையலுக்குத் தயார் செய்துகொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய வீட்டைப் பார்த்தும், இங்கிருந்துதானே அவ்வளவு பெரிய கனவைக் கண்டிருக்கிறாள். அதை நிறைவேற்றிக்கொள்ள நொடியும் சோர்ந்திராமல் படித்தாள். 

ஆனால், அத்தனையும் வீணானதே என நினைத்துப் பெரும் அழுத்தம் மனதைச் சூழ்ந்துகொண்டது. அனிதாவின் அப்பா, 'உன் முகத்துல கூட அனிதாவோட சாயல் இருக்குமா!" என்றபோது நான் மூச்சற்று நின்றேன். அவரை 'அய்யா' என்று  பேசிக்கொண்டிருந்த நான், சிறிது நேரத்திலேயே என்னையுமறியாமல் 'அப்பா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டேன். ஊருக்கு வந்ததும் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு நாளில் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் தூங்கினாலே அதிகம். 

கல்வி சார்ந்து பயணத்தை நான் தொடர்வதற்கு என் கணவரும் முக்கியக் காரணம். என் வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் நான் பணியாற்றிய பள்ளியிருக்கிறது. அங்கேதான் என் மகனும் படித்துவந்தான். நான் வேலையை விட்டதும் அவனை அழைத்துச்செல்ல முடியவில்லை, அதனால் பள்ளியிலிருந்து நிறுத்திக்கொண்டோம். 

கிட்டத்தட்ட இரண்டு மாதமாயிற்று. அதற்கு அடுத்து அவனை வேறு பள்ளியில் சேர்க்கவும் இல்லை. அவனும் தன் கல்வியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, போராட்டத்துடன் ஒரு பகுதியாக என்னுடன் பயணிக்கிறான். அனிதா வீட்டுக்கு அவனும் வந்தான். ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்குக் கல்வியை என்னால் தந்துவிட முடியும் என்றாலும் அவன் வயது பிள்ளைகளோடு இணைந்து விளையாடும் வாய்ப்பைத் தர முடியாது அல்லவா... நிதானமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

மகனின் டிசி வாங்க, பள்ளிக்குச் சென்றபோது என்னிடம் படித்த மாணவர்கள் அழுதுகொண்டே பேசியபோது நெகிழ்ந்துபோனேன். கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன்." என்றார் சபரிமாலா. 

ஒருவரை உயர்த்துவதில் கல்விக்கே பெரும் பங்கு இருக்கிறது. அது, பேதமில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் நாள் விரைவில் வரட்டும்.

அரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி 
இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்துவைக்க வந்த ஒரு சப்-கலெக்டர் - அசத்திய அரசுப்பள்ளி

கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க, ஒரு சப்-கலெக்டர் வந்தார் எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்தப் பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? அரசுப் பள்ளிவிழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் இருக்கும் சிறிய ஊர்தான் பள்ளிகுளம். இங்கே இருக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் ஆசிரியர் தமிழரசன், ''மற்ற அரசுப் பள்ளிகள்போலவே சிறப்பான கல்வியை மாணவர்களுக்குத் தருகிறோம். கூடுதலாக, மாணவர்களின் நலன்சார்ந்த விஷயங்களிலும் அக்கறை காட்டுகிறோம். தமிழ்நாடு அரசு தரும் விலையில்லா காலணிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அளவுகளில் மட்டும் மாறுதல் இருக்கும். இதனால், சில மாணவர்கள் தங்கள் காலணிக்குப் பதில் வேறு ஒருவருடையதை அணிந்து சென்றுவிடுகிறார்கள்.

இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வண்ணம் கொடுத்தோம். பிறகு, வருகைப் பதிவேட்டில் உள்ளவாறு ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் எண் கொடுத்தோம். உதாரணமாக, இரண்டாம் வகுப்புக்கு நீல வண்ணம் கொடுத்து, அதில் படிக்கும் குணா என்ற மாணவனுக்கு 8 என்ற எண்ணையும் தந்திருக்கிறோம். அவன் காலணியில் குதிகால் பதியும் இடத்துக்கு மேல் பகுதியில், நீல வண்ணத்தில் 8 என எழுதிவிடுவோம். அந்தக் காலணி எங்கிருந்தாலும் இரண்டாம் வகுப்பு குணாவுடையது எனத் தெரிந்துவிடும். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு, 'டிஸைன் ஃபார் சேஞ்ச்' விருது கிடைத்தது'' என ஆச்சர்யப்படுத்திவிட்டுத் தொடர்கிறார்... 

“எங்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. பள்ளிக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உடனே தேடிவந்து பெற்றோர் செய்துகொடுக்கிறார்கள். பெற்றோர் நலன்மீதும் பள்ளி ஆசிரியர்களான நாங்களும் அக்கறை செலுத்துகிறோம். இது கிராமம் என்பதால், பலரது வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. அனைவரின் வீடுகளிலும் கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்தி, மாதம் ஒருமுறை விழிப்புஉணர்வு பரப்புரைக்குச் செல்கிறோம்.'கழிப்பறை கட்டுங்க; கால் பவுனு வெல்லுங்க' என்கிற திட்டத்துடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எந்தெந்த வீடுகளில் கழிப்பறை கட்டப்படுகிறதோ அவர்களிலிருந்து குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டு கால் பவுன் தங்கம் வழங்கப்போகிறோம். இந்தத் திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்கள் வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசுப் பள்ளி

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் கழிப்பறை வேண்டும் அல்லவா? இந்த நேரத்தில்தான், தமிழ்நாடு அரசின் மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளுக்கு அளிக்கும் 'குழந்தை நேயக் கழிவறை' திட்டம் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. அதற்கான முப்பதாயிரம் ரூபாயை, தலைமை ஆசிரியர் தனகீர்த்தி என்னிடம் கொடுத்துப் பொறுப்பை அளித்தார். இந்தத் தொகையில் ஆண், பெண் கழிப்பறைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் சீர்செய்ய முடியும். சென்ற ஆண்டில், ஆண்கள் கழிவறையை ஓரளவு சீர்செய்திருந்ததால், மாணவிகள் கழிவறையைச் சீரமைக்க முடிவுசெய்தோம். அந்தக் கழிவறை கட்டடத்துக்கு மேற்கூரையும் இல்லை. உடனடியாக வேலையில் இறங்கினோம். உள்ளூர் கொத்தனார்களைகொண்டே நார்மல், வெஸ்ட்ரன் டைப் என இரண்டு வகைக் கழிப்பறைகளைக் கட்டினோம். அழகான, உறுதியான மேற்கூரை அமைத்தோம். விடுமுறை நாள்களிலும், தீபாவளி அன்றும் வேலை நடந்தது. இறுதியாக வண்ணம் பூசும் வேலை. அதை நாமே செய்தால் செலவு குறையுமே எனப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் ஓவியங்களைத் தீட்டினேன். ஏற்கெனவே ஸ்மார்ட் கிளாஸ் அறையில் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். மாணவர்கள் வந்து பார்த்துவிட்டு, தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள். குறைகள் இருந்தால் அடுத்த ஓவியத்தில் திருத்திக்கொள்வேன். 

அரசு தந்த முப்பதாயிரம் ரூபாயைத் தாண்டி ஐம்பதாயிரத்தும் அதிகமானது. பள்ளிக்கூடத்தின் சேமிப்பில் இருந்த பத்தாயிரம், சக ஆசிரியர்களின் உதவியால் இதைச் சமாளித்துக் கழிவறையை நிறைவு செய்தோம். இந்த விஷயத்தையெல்லாம் சொல்லி, மாவட்ட சப் கலெக்ட்டர் எஸ்.சி.மெர்சி ரம்யா மேடத்தைச் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க வரமுடியுமா எனக் கேட்டோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்து வந்தார். 'மற்ற பள்ளிகளுக்கு முன்மாதியான செயலைச் செய்திருக்கிறீர்கள்' எனப் பாராட்டினார். தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் என அனைவரின் ஒருங்கிணைப்பால் இது சாத்தியமானது" என்றார் தமிழரசன். 

இதுபோன்ற அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள், பள்ளிகளின் எண்ணிக்கை பெருகட்டும்.

G.O 313 - TN 7th PAY COMMISSION - PENSIONERS G.O PUBLISHED

+1 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது எப்படி-அரசுத் தேர்வு இயக்குநர்!!!

பார்வையற்றோருக்கும் உதவும் செயலி சிவகங்கை மாணவர்கள் அசத்தல்!!!டெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுக்க வேப்பனஹள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்,

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், 

ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்று பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பளம் உயர்வு. மற்றொன்று முதலில் வகித்த பதவியில் சம்பள உயர்வு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம். இந்த இரண்டில் எந்த முறை என்பதை அரசு ஊழியர்களே தேர்வு செய்து கொள்ளலாம். (அ) பதவி உயர்வு பெறும் தேதியிலிருந்து கணக்கிடும் முறை:

ரூ.31, 300 அடிப்படை சம்பளம் பெறும் ஜூனியர் அசிஸ்டெண்ட் 8ம் நிலையில் இருந்து, அசிஸ்டெண்ட்டாக 10ம் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டால், முதலில் 8ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ.32,200 ஆக கருதப்பட்டு, பின் அவரது சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் ரூ.33,100 நிர்ணயம் செய்யப்படும்.

 அதேபோல் ரூ.85,800 அடிப்படை சம்பளம் பெறும் அதிகாரி 26ம் நிலையில் இருந்து 29ம் நிலைக்கு பதவி உயர்வு பெறும் போது, அவருக்கு 26ம் நிலைக்கான சம்பள உயர்வு சேர்க்கப்பட்டு அவரது சம்பளம் ரூ,88,400 ஆக கருதப்படும். பின் பதவி உயர்வு அடிப்படையில் அவரது சம்பளம் ரூ.1,23,400 ஆக நிர்ணயம் செய்யப்படும். (ஆ) சம்பள உயர்வு தேதியிலிருந்து கணக்கிடப்படும் சம்பள விகிதம்: ரூ.31,300 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர் 8ம் நிலையில் இருந்து 10ம் நிலைக்கு பதவி உயர்வு செய்யப்படும்போது, பதவி உயர்வு நாளில் இருந்து அடுத்த சம்பள உயர்வு தேதி வரை அவரது சம்பளம் ரூ.33,200 ஆக கருதப்பட்டு பின் 34,100 ஆக நிர்ணயிக்கப்படும். இது குறித்து விரிவான பட்டியலை அரசுத்துறையின் அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது


Revised Rate of House Rent Allowance!!பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்!!!பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு!!!

பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை,

பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.

குழப்பம் : பிளஸ் 1 பொது தேர்வில், முக்கிய பாடங்களுக்கு, 20 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், செய்முறை தேர்வு உண்டா; அதன் விதிகள் என்னவென்று, மாணவர்களும், பள்ளிகளும் குழப்பம் அடைந்தன.
இது குறித்து, நமது நாளிதழில், இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டை யன் உத்தரவின்படி, செய்முறை தேர்வுக்கான விதிகள் உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை தயாரித்து வருகிறது. தேர்வு அட்டவணைக்கு முன், செய்முறை தேர்வுடன் இணைந்த, அகமதிப்பீட்டு முறையின் விதிகளை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.

10 மதிப்பெண்கள் : அதில், செய்முறை தேர்வில், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீடாக வழங்க, நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன. அதை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை, சுற்றறிக்கையில் தேர்வுத்துறை இயக்குனர் குறிப்பிடவில்லை. விரைவில் தேர்வு அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!