Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 30 October 2017

சுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளுர்

பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளுர்


செயல் வழி கற்றலுக்கான வரைதலும் வண்ணம் தீட்டுதல் படங்கள் pdf வடிவில்

FLASH NEWS : TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TO SALARY - ORDERS ISSUED

Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regardingபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்

22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குறித்து முதன்மைச்செயலர் மற்றும் கருவூலங்கள் கணக்கு ஆணையர் உத்தரவு..

DEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உய்ர்கல்வி பயின்று பின்னேற்பு கோரியவர்க்ள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி அரசு செயலர் கடிதம்!.

BT & PG TEACHERS WANTED - GOVT SALARY

7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு

ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்

அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்கள்ஆய்வுக் கூட்டம் மதுரையில்நடந்தது.

துவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தலைமை வகித்தார். இணை இயக்குனர்கள் நாகராஜமுருகன், பாஸ்கர சேதுபதி முன்னிலை வகித்தனர்.மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்றார்.

கார்மேகம் பேசியதாவது: துவக்கக் கல்வியில் மாணவர்கள்சேர்க்கையை அதிகரிக்க,நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், பள்ளிகளில் பழமையான வகுப்பறைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் பயன்படுத்த முடியாத வகுப்பறைகள் குறித்து நவ.,15 க்குள் கணக்கெடுத்து, அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.டெங்குவை தடுக்க பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவிடாமல், 100 சதவீதம் துாய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும்.

துவக்க, நடுநிலை பள்ளிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில்3000 'ஸ்மார்ட்' வகுப்பறைகளைதுவங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும்'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தேர்வு செய்து, துவக்குவதற்கானமுன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார். மதுரை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஜெயபாலன், உதவி துவக்கக் கல்வி அலுவலர் ஜான்கென்னடிஏற்பாடுகளை செய்தனர்.

வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, தமிழக பள்ளிக்கல்வித் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பிளஸ் ௧க்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், முக்கியமானது. முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மேலும், 10ம் வகுப்பில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள், இடைவெளி இன்றி அடுத்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு முதல் முறையாக அறிமுகம் ஆவதால், மாணவர்களுக்கு வழிகாட்ட வினா வங்கி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்களை தாண்டியும், இன்னும் வினா வங்கி வெளியிடவில்லை; அரையாண்டு தேர்வும் நெருங்கி விட்டது. அதனால், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது தாமதமாகிறது. சரியான வழிகாட்டல் இன்றி, பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியுமா என, மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை, வினா வங்கியை விரைந்து வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளில், ௧௦ம் வகுப்பு முடித்து, பிளஸ் ௧ படிக்கும், வீட்டில் ஒரே பெண் குழந்தையாக உள்ள மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., சார்பில்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், ௨௦௧௬ல், பத்தாம் வகுப்பு முடித்த மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, www.cbse.nic.in என்ற இணையதளத்தில், நவ., 15 வரை பதிவு செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அதற்கான சான்றிதழ்களை, நவ., ௩௦க்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு

நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப்பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில்பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.பள்ளியின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், பள்ளி நிர்வாகம் உட்பட ஏழு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. மதிப்பெண்களின் அடிப்படையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நான்கு வகைகளாக தரம் பிரிக்கப்பட உள்ளன. அதனடிப்படையில், இந்தப் பள்ளிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத்துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த, தகுந்த பரிந்துரைகள் வழங்க,  அலுவலர் குழுவை, தமிழக அரசு அமைத்தது.

அக்குழு, செப்., 27ல், அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஏற்று, அக்., 11ல், புதிய ஊதிய உயர்வை, தமிழக அரசு அறிவித்தது.அதே போல், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், சம்பள உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டு உள்ளது.

ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்

ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், மக்களிடம், 'பயோமெட்ரிக்' முறையில் தகவல்களை பெற்று, பதிவு செய்தல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் ஏஜன்சிகள் மூலம் செய்து வருகிறது. இவை, தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

இதையடுத்து, அனைத்து ஆதார் பதிவு மையங்களையும், மத்திய, மாநில அரசு கட்டடங்கள், வங்கிகளின் கட்டடங்களுக்கு மாற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையாக, மக்களின் ஆதார் தகவல்களை பதிவு செய்யும்போது, அவற்றை, ஆதார் பதிவு மையம் அமைந்துள்ள, அரசு அலுவலகத்தை சேர்ந்த ஒரு ஊழியர், தன் விரல் ரேகையை, பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. 
இதற்காக, அனைத்து வங்கிகளும், தலா, 10 கிளைகளில் ஒன்றில், ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் தகவல்களில் திருத்தம் செய்யும் பணிகளை, வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு அலுவலக வளாகங்களில், பெரும்பாலும் மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது.


கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர்இயக்கம் அறிவிப்பு!!

மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு  மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது.இதுகுறித்து தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு உட்பட அனைத்து அகில இந்திய நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விளைபொருட்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல் பூர்வமான இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தாய்மொழி வழி கல்வியை போதிக்க வேண்டும் என்பது உட்பட25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் கல்வி உரிமை, காவிரிப்படுகை என்ற தலைப்பில் மாணவர் மாநாடு வரும் 2ம் தேதி நடக்கிறது.அன்றைய தினம் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து ஜான் வின்சன்ட் தலைமையில் பேரணி நடக்கிறது. இதைதொடர்ந்து தஞ்சை ராமநாதன் பஸ்ஸ்டாப் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கல்வி எமது சிறப்புரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. பின்னர் காவிரிப்படுகை எமதுதாய் நிலம் என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறதுஎன்றார்.

சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்

சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற தரமதிப்பீட்டு முறை, நடைமுறையில் உள்ளது. 
ஆனால், பள்ளிகள், கல்லுாரிகளில் தர மதிப்பீட்டு முறை மாறி, தற்போது, கிரேடிங் முறை அறிமுகமாகி உள்ளது.
இந்த முறையால், மாணவர்களிடையே மதிப்பெண் பாரபட்சம் மற்றும் வேறுபாடுகள் நீங்கும். மேலும், மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு ஏற்படும், மன அழுத்தமும் குறையும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டு நெறிமுறைகள், 2014ன் படி, சென்னை பல்கலையில், கிரேடிங் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை, செனட் கூட்டத்தில், பல்கலை துணைவேந்தர், துரைசாமி அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் ஒன்பது வகை கிரேடுகள் அறிமுகம் செய்யப்படும். ஆங்கிலத்தில், 'ஓ' கிரேடுக்கு, 10 புள்ளிகள்; ஏ பிளஸ், 9; ஏ, 8; பி பிளஸ், 7; பி, 6; சி, 5; பி, 4; எப், 0 ஏபி,0 என, கிரேடிங் முறை அறிமுகமாக உள்ளது. சென்னை பல்கலை, இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறை, முக்கிய பாடம் தொடர்பான விருப்ப பாடத்திட்டம், ஆன்லைன் படிப்புகள், தொலைநிலை கல்வியிலும், சி.பி.சி.எஸ்., என்ற விருப்ப பாட கிரேடிங் முறை என, பல, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, துணைவேந்தர் தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!