Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 31 October 2017

DSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின்"AADHAR" எண்களை உடனடியாக பெற வேண்டும் - பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்.
5th Standard - Term 2 - Lesson Plan - October 4th week

2017-18 பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (டி)எண் 651. நாள்-31.10.2017
Flash News : கனமழை - நாகை மாவட்டம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை (01.11.2017)


* நாகை மாவட்டம் மழை காரணமாக 
நாளை பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


SSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)யாக அனுப்ப இயலாது - RTI

DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்

பக்கம்-1 தற்போதைய விவரம்


பக்கம்-3 பணியாளர் சுய விவரம்

 பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்

பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்

பக்கம்-7 துறை தேர்வு விவரம்

பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி

பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்

பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம்

பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு

பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம்

பக்கம்-21 ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுதல் நியமனம்

பக்கம்-25 ஈட்டிய விடுப்பு இன்றைய இருப்பு விவரம்

பக்கம்-26 மகப்பேறு விடுப்பு விவரம்

பக்கம்-27 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் மருத்துவ சான்றின் மருத்துவ விடுப்பு

பக்கம்-28-29பதவி உயர்வு மூலம் ஊதிய மறுநிர்ணயம் மட்டும்

பக்கம்-30-32 ஊதிய குழு நிர்ணயம்

பக்கம்-31-33 இடைக்கால நிவாரணம்

பக்கம்-34 இளையோர் மூத்தோர் ஊதிய விவரம்

பக்கம்-35-44 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும்

பக்கம்-45 ஊக்க ஊதிய உயர்வு மட்டும்

பக்கம்-46 தேர்வு/ சிறப்பு நிலை ஊதியம்

பக்கம்-47 உயர் கல்விக்கான துறை அனுமதி

பக்கம்-55-58 வாரிசு நியமன விவரம்

பக்கம்-61 பணி சரிபார்ப்பு
விவரம்

ஓ.மு L.Dis
மூ.மு K.Dis
ப.மு D.Dis
நி.மு R.Dis
செமுஆ Proc
ந.க R.C
அரசாணை G.O
இரு Standing Order No.


அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்தை நவம்பரில் பெறும்போது ஊதிய உயர்வுடன் பெற வேண்டும்.
இந்நிலையில், நிதித்துறைச் செயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில், ‘நவம்பர் 20-க்குள், அக்டோபருக்கான புதிய ஊதிய நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் கணக்கிட்டுப் பெற்று வழங்க வேண்டும். நவம்பர் சம்பளத்தை டிசம்பரில் வழங்கும்போது, புதிய சம்பளம் வழங்கப்பட வேண் டும்’ என்று கூறியுள்ளார்

RTI - அரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் செயல்படுத்த இயலாது - RTI பதில்!!

SSA -SPD & DEE PROCEEDINGS-புதிய அணுகுமுறை கல்வி திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ,பெண் குழந்தைகள் , சிறுபான்மையினர் மற்றும் நகர்புற நலிவடைந்த சிறுவர்கள் - PBBB செயல்பாடுகள் - களப்பார்வை சார்பு


7th TNPC -OPTION FORM & PAY FIXATION FORM - தமிழில்....

நவம்பர் மாத பள்ளி நாட்காட்டிடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.

பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ளதா?

கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!


* விழுப்புரம்  மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு விடுமுறை 

* சென்னை மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு விடுமுறை 

* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு விடுமுறை 

* நாகை   மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு விடுமுறை 

* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை 

* காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

*தஞ்சாவூர்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

*திருவாரூர்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்- உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.

இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி 

தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளதுதடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 141 பேருக்கு, அடுத்த மாதம், 6,7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..


பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், நவ.,2 முதல், நவ., 4 வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!