Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 5 November 2017

நவம்பர் 3 அல்ல நவம்பர் 25 அன்று தேர்வுகள் நடைபெறும்!

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது


70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!பரிதவிப்பில் ஆசிரியப் பயிற்றுநர்கள்!!!அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்க வேண்டும்-அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!!குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நவம்பர் 12 ந் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியத்தில் மாணவர்களுக்கான ஓவியபோட்டி

அரசாணை -652 -நாள் 31.10.2017-BRTE's TRANSFER PROCEEDINGS
தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பொறியியல் பட்டங்கள் ரத்து -உச்சநீதிமன்றம் உத்தரவு!!!ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க


12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

 இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

 இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

 பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும்.

 அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.

 2017-ம் ஆண்டுக்கான 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது.

 தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக தமிழில் நடத்தப்படுகிறது.

 இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், இணையதளத்தில் (www.tpo-india.org) நவம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.

 தமிழ், தெலுங்கில் தேர்வு எழுதி வெற்றிபெறும் ஆசிரியர்கள் 2 பேருக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்படும்.

 தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு டெல் நிறுவனம் சார்பில் கணினியும் பரிசாக வழங்கப்படும்.

 'எடில் கிவ்' நிறுவனம் சார்பில், போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

நன்றி : தி இந்து


BRTE TRANSFER COUNSELLING 2017/18 - TRANSFER APPLICATION

TWO WHEELER LICENSE இனி கஷ்டம் விதிமுறைகளை கடுமையாக்க உத்தரவு

இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கும்படி, போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும், இருசக்கர வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கு, சாலை விதிகளை அறியாமல், இரு சக்கர வாகனங்களை இயக்குவதே காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், 'இருசக்கர வாகனங்களை விற்போரும், அதற்கான ஓட்டுனர் உரிமம் வழங்குவோரும், விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்' என, போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, சாலை விதிகள் குறித்து தெரிவதில்லை. அதனால், நாளுக்கு நாள் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதும், விபத்துக்கான காரணங்கள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கும், வாகன விற்பனையாளர்களுக்கும் புரிய வைப்பதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இரு சக்கர வாகன விற்பனையாளர்களுக்கு, போக்கு வரத்து கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவு:வாகனத்தின் தன்மை, சாலை விதி, மீறுவோருக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, குறும்படமாக வெளியிடும் வகையில், 'டிவி'யுடன் கூடிய, 'சாலை பாதுகாப்பு மையம்' என்ற அமைப்பை, விற்பனையகத்திலேயே, வரும், 10ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும்.

அம்மையத்தில், பயிற்சி பெற்ற பின், வாகன உரிமம் வழங்கலாம் என்ற, பரிந்துரைக் கடிதத்தை இணைத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இம்மையத்தை, வரும், 15ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு ரத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு

'வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை' என்ற, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர், செல்வம் கூறியதாவது:


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும், 'கிராம கணக்குகளும், நடைமுறைகளும்' என்ற தலைப்பில், 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில், இந்த கேள்விகள் இடம்பெறாது.குரூப் - 4 தேர்வுக்கு, 18 வயது நிரம்பினால் போதும்.

ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு, 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு, இரண்டு தேர்வையும் இணைத்துநடத்துவது, வி.ஏ.ஓ.,க்களை மேன்மைப்படுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல்.மண்ணையும், மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக, வி.ஏ.ஓ., உள்ளார். 

பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு, 21 வயது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து, 18 வயது என, அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால், 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர்.ஒவ்வொரு நபரும், விண்ணப்ப கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். 

அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வால் அரசுக்கு, 15 கோடி ரூபாய் செலவாகிறது என்பது முற்றிலும் தவறானது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் - 4 ஆகியவற்றை இணைத்து, தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

TNOU B.ED ADMISSION 2018

தமிழ்நாடு பல்கலையில், நவ., 3௦ வரை, பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


பல்கலை பதிவாளர்,விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

'இதன்படி, நவ., ௩௦ வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு

தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என 900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு

ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது. 
மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.

தொடர் போராட்டத்தில்
ஈடுபட முடிவு
இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!