Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 6 November 2017

தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 8 வது ஊதிய மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள்! | மற்றும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அட்டவணை!!பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் வரலாறு மற்றும் புவியியல் வரைபடங்கள் எளிய வீடியோ வடிவில்


1.) 📽 வரலாறு ஆசியா வரைபடம் வீடியோ..👇👇

https://youtu.be/lY_GoMDPJRM
 

2.) புவியியல் வரைபட வீடியோ 3 பகுதிகள்👇👇

📹 புவியியல் பகுதி 1

https://youtu.be/29dvgVx1Jsw

📹 புவியியல் பகுதி 2

https://youtu.be/GoHgb7mQ5Fw

📹 புவியியல் பகுதி 3

https://youtu.be/ik_kFZMy6eE

தயாரிப்பு: 

Thanks to 🙏

Mr. து.விஜயன் M.A., B.Ed.,
அரசு உயர்நிலைப்பள்ளி,
பெரியாக்குறிச்சி,
செந்துறை வட்டம்,
அரியலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் தகவல்களை தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் - RTI LETTER
ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அமைத்த "ஸ்மார்ட் வகுப்பு" சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

📚5 ஆம் வகுப்பு நவம்பர் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்பு அனைத்து பாடத்திற்கும் pdf வடிவில்

SSA-SPD PROCEEDINGS-கற்றல் விளைவுகள் பயிற்சி - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பு

Vinayaka Missions University- BEd course - Court order Copy Regarding2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!!புதுதில்லி: வரும் 2018 பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த 
வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்தப்படும் தேதியை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அதே அமர்வில் நடந்த வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்வுக் காலமான மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடத்த முடியாது. எனவே,தேர்தல் பணிகள் முழுவதையும் முடித்து மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மே 14 -ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்தனர். தேர்தலுக்கான நடைமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கி, ஏப்ரல் 14 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் ஏப்ரல் 3 -ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை; அதனால் தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மாநிலத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டார். புதிய ஆணையர் நியமிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். எனவே, தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், 15 நாளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது,

இந்த விசாரணையில் பதிலளித்த தமிழக அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரியில் தான் தொகுதி மறுவறையறை முடிவடையும், அதனால் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

15 நாளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் தொடர்ந்த அந்த பொதுநல வழக்கு திமுகவின் உள்ளாட்சி தேர்தல் வழக்குடன் இணைக்கப்பட்டது.


TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு - முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் தெரிவு செய்யப்படுவதில்லை - TRB விளக்கம்

மழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா? - பெற்றோர்கள் கவலை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.


வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று மழையால் 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக இன்று 7வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரமான சூழல் நிலவினால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

  

மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது என்றாலும் இரண்டாம் பருவம் மிகக் குறுகிய காலம் என்பதால் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்காவிட்டால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  

தள்ளிப் போன அரையாண்டு

கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் காரணமாக 40 நாட்கள் வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற கவலை பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. மழையால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் போலி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தல்வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி

மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை 

வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர்.
'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 2௫ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழகம் முழுவதும், ௩௦ இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.


'நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு!!!

சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில்,

ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.


பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி!!!

'பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் 

செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கனமழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 06.11.2017 )விடுமுறை

*சென்னை- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*திருவள்ளூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*திருவாரூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*விழுப்புரம்-பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*கடலூர்-பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்

மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளியளவில் முதலிலும் ஒன்றிய அளவில் அடுத்ததாகவும்
நடைபெறும்.
போட்டிகளில் முதல் இடம் பெறுபவர் அடுத்த நிலைப் போட்டியில் பங்கு பெறலாம்.

மதிப்பெண்-தரம்-மதிப்பு
70% - A - 5
60% - B - 3
50% - C - 1

போட்டி பிரிவுகள் : 
பிரிவு 1 > I - V
உட்பிரிவு 1> I - II
உட்பிரிவு 2> III -V
பிரிவு 2 > VI - VIII.

I -V வரை அனைத்துப் போட்டிகளும் பொதுவானவை. ஆண் பெண் பேதமில்லை. 
VI-VIII சில போட்டிகள் ஆண், பெண் தனித்தனியாய் அமையும்.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் 
வழங்கிட வேண்டும். 

*உட்பிரிவு I-II போட்டிகள் :*
* ஒப்புவித்தல் (தமிழ்) - மழலையர் பாடல்
*கதை கூறுல்
* பழமொழிகள் கூறுதல்
* ஆத்திச்சூடி ஒப்பித்தல்
*வண்ணம் தீட்டுதல்
* Rhymes Recitation
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting

*உட்பிரிவு III-V போட்டிகள் :*
*பேச்சுப்போட்டி
*கட்டுரைப் போட்டி
*நாட்டுப்புற நடனம்(குழு)
*பரதநாட்டியம் (குழு)
*வரைந்து வண்ணம் தீட்டுதல்
*மெல்லிசை - தனிப்பாடல்
*செவ்வியல் இசை - தனிப்பாடல்
*ஒருநபர் நாடகம்
*குழு நடனம் (7-9 நபர்)
தேசபக்திப் பாடல்கள்
*களிமண் பொம்மைகள்
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting.
*இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... இன்னும் பிற

*பிரிவு VI -VIII போட்டிகள் :*
*கதை எழுதுதல்
*Story Writing
*கவிதை புனைதல்
*கும்மி நடனம் (ஆண்)
*தனிநடனம்
*குழு நடனம் (7-9நபர்)
*தேசபக்தி பாடல் (7-9நபர்) - குழுப்பாட்டு
*நாடகம் (10நபர் வரை)
*பேச்சுப்போட்டி (தமிழ்)
*பேச்சுப்போட்டி (English)
*கும்மியாட்டம் (பெண்)
*திருக்குறள் ஒப்பித்தல்
*நகைச்சுவை வழங்கல்
*Poem Recitation
*மெல்லிசை - தனிப்பாட்டு
*செவ்வியல் இசை -தனிப்பாட்டு
*கிராமிய நடனம் (7-9நபர்)
*பரதநாட்டியம் (தனி)
*பரதநாட்டியம் (குழு)
*இயற்கை காட்சி வரைதல்
*ஒருநபர் நாடகம்
*வில்லுப்பாட்டு (1+4)
*கதை சொல்லுதல்
*களிமண் சுதை வேலைப்பாடு
*செதுக்குசிற்பம் (காய்கறி/ சோப்பு/ மெழுகு/ சுண்ணக்கட்டி போன்ற பிற பொருட்களில்)
* இசை - இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... தவில் கச்சேரி, பேண்டு வாத்தியம், ஆர்கெஸ்டிரா இன்னும் பிற

போட்டிகள் மாணவர் பங்கேற்கும் அளவிலானதாக அமைந்தால் போதுமானது. திரைப்பட பாடல்கள் தவிர்க்கவும். பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் போன்றவை நல்லது.
நாடகங்களில் தெருக்கூத்து, சமூக நாடகங்கள், ஓரங்க நாடகம், மிமிக்ரி மற்றும் பிற வகைகளில் இருக்கலாம்.

முதலிடம் பெறும் குழுவோ தனிநபரோ அடுத்த நிலைப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

கலைவிழா ஒரு பொதுநிகழ்ச்சி. பெற்றோர் & சமூக பங்கேற்போடு ஆசிரியர் மாணவர் குழுவாக செயல்பட்டு இதனை சிறப்பாக நடத்த வேண்டும். கூட்டுப் பொறுப்பும் கூட்டுச் செயல்பாடும் கலைத்திருவிழாவை செழுமைப்படுத்தும்.

கலைகளை
அறிமுகப்படுத்துவோம்!திறமைகளை
வெளிப்படுத்துவோம்!
மாணவர்களை
மேம்படுத்துவோம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக 
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!