Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 7 November 2017

பள்ளிக்கல்வி - பாரத சாரணர் சாரணியர் இயக்கம் | அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த மாவட்ட முதன்மை / மாவட்ட கல்வி / மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்/ மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!
நவம்பர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

👉 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (9-11-17)

👉கலைத்திருவிழா

👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்

👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்

👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.

👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)

👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)

👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய்வேலைநாள்

👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்

👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார்த்தல்,

👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,
தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்

👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன்படுத்துதல்

👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்

👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துத்துதல்

👉மேலும் அறிவிக்கப்பட உள்ளதை செயல்படுத்துதல்
-கல்விசிறகுகள்

TRB - Polytechnic Exam 2017 - Final Key answers and Individual Candidate Qurey and C.V List PublishedCLICK HERE...


DEE PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய சான்றுகள் கோருதல் சார்புசென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்

EMIS தகவல்
👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்
👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்
👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன
👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

CALENDER-2018(RL List)

இயன்முறை பயிற்சியாளர் பணி நியமனம்!!!அரசுப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த காரணத்துக்காக, பகுதி நேர ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பு இழப்பு.- அதிர்ச்சியில் பகுதி நேர ஆசிரியர்.நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்!!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'

என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.

தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்


வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' 
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள ஆர்கானிக் பேனா!

தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்ரியா, சங்கர், தமிழ்ச்செல்வன் ஆகிய பள்ளி மாணவர்கள் மக்காத வகையைச் சேர்ந்த பேனாக்கள் தங்களது பைகளில் நிரம்பியிருப்பதைக் கண்டு அதற்கான நிலையான மாற்றை கண்டறிவதில் முனைப்புடன் இருந்தனர். தமிழ்நாட்டின் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி மாணவர்களான இவர்கள் ஆர்கானிக் பேனாவை தயாரித்துள்ளனர். இந்த பேனாக்கள் அப்புறப்படுத்தும்போது ஆர்கானிக் உரமாக மாறிவிடும்.

வாழை இலை, வாழைத்தண்டு, தென்னை இலை, ஆமணக்கு தண்டு ஆகியவற்றைக் கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இதன் ட்யூப்பின் ஒரு முனை மைதா பசை கொண்டு மூடப்பட்டு இன்க் நிரப்பப்படுகிறது. இந்த பேனாவில் மக்காத ஒரே பகுதி அதன் கூர்முனை (nib). இவை சில மாதங்கள் வரை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேனாக்கள் பள்ளியில் சில நாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஏற்கனவே திறனாய்வு செய்யப்பட்ட இந்த கண்டுபிடிப்பு விரைவில் மதிப்புமிக்க 2017 தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று ஹோம்க்ரோன் அறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து தகவல்படி இந்த மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியரான எஸ் தினேஷ் குறிப்பிடுகையில்,

இந்த ப்ராஜெக்ட் 2017 தேசிய அறிவியல் மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. நடுத்தர பள்ளிகளில் செயல்படும் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டு இயங்கும் துளிர் இல்லம் யூனிட் கடந்த சில ஆண்டுகளாக தேசிய அறிவியல் மாநாட்டிற்காக வெவ்வேறு ப்ராஜெக்டுகளை சமர்ப்பித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும் பல கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதி கைகளால் உருவாக்கப்பட்ட சிகரெட் ஃபில்டர் டிப்ஸை உருவாக்கினர். இவை தூக்கியெறியப்படும்போது நிலத்தில் விதைகளை வெளியேற்றும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரெட்யூஸ், ரீயூஸ், க்ரோ என்கிற நிறுவனம் ஒரு காஃபி கப்பை வடிவமைத்தது. இது மக்கக்கூடியதாக மட்டுமல்லாமல் இதிலுள்ள விதைகளை நட்டு வைத்தால் சுவர்களில் படர்ந்து வளரும் செடிகளாகும் விதத்திலும் அமைந்துள்ளது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாஸ்கோ செல்லவும் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல வாய்ப்பு

முன் அரையாண்டு, பருவ தேர்வு வேண்டாம்: மாணவர்கள் கோரிக்கை!!!

ஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால்,

அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடைத்தேர்வு : தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு, இரண்டாம் இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 13ம் தேதி, முன் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இரண்டாம் இடைத்தேர்வில் வினாத்தாள் இடம் பெறும். ஆனால், முன் அரையாண்டு தேர்வுக்கு, பள்ளி துவங்கியது முதல், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

விடுமுறை : பருவ மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், பள்ளிக்கல்வி காலண்டர்படி, இதுவரை நடத்த வேண்டிய பாடங்கள், இன்னும் பாக்கி உள்ளது; அதை, நடத்த கூடுதல் நாட்கள் தேவை. எனவே, பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாததால், 13ம் தேதி இடை தேர்வை மாணவர்கள் எழுத முடியாத சூழல் உள்ளது.
அதனால், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முன் அரையாண்டு மற்றும் இடைத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாட்களில், கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.


பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது பள்ளிக் கல்வித்துறை தடை

தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!