Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 9 November 2017

Epay roll நவம்பர் ஊதியம் சற்றுமுன்

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: தமிழக அரசு

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு வருடம் தோறும் ஜூன் மாதம் நடைபெறும். 
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.

இந்த சூழலை தவிற்பதற்காக வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக முன்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதன்படி தற்போது இது அதிகார பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார். இதில் வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் சேர்க்கை செயலாளர் இந்துமதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக ரைமண்ட் உத்திரியராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் ஆணை

தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. லெட்டர் பேடு சட்டக்கலூரிகள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். 
மேலும் போலி வழக்கறிஞர்களை நீக்கிய பிறகே தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தெளிவுரை- தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியகளாக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதியம் கோருதல் சார்புதற்பொழுது சம்பள பட்டியல் சாப்ட்வேரில் ARREAR தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.நவம்பர் மாத சம்பள பட்டியல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் நலனுக்காக எத்தனை வழக்குகளையும் சந்திக்க தயார் - JACTO GEO

வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். 

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு விசாரணை விபரம் :

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.


விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.

நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.

பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.

மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.

நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய  எழுத்துப்பூர்வ  உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.

நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....

நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009 முன்பு ஒரு ஊதியம்  பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*

அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.
நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...
பின்னர்  அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள்  விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.

நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*

நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....

இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....

தகவல்

ஜே.ராபர்ட்
2009&TET போராட்ட ஒருங்கிணைப்புக்குழு
மாநில அமைப்பு

EMIS UPDATE NEWS . ABOUT PHOTO UPLOADING

EMIS  NEWS UPDATE 

.PHOTOS  SHOULD BE IN  MAXIMUM SIZE 20KB, 
AND IN JPG OR PNG FORMAT


PAY COMMISSION : புதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll தகவல்.

புதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll மூலம் ஊதிய நிர்ணயம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆண்டு ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க முடியும். தேர்வுநிலை, பதவி உயர்வு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு போன்றவை உள்ளீடு செய்ய முடியாது. 

இது குறித்து சென்னை Webpayroll மையத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தனர். மேற்படி பிரச்சினை இல்லாமவர்களுக்கு மட்டும் தற்போது ஊதிய நிர்ணயம் செய்யும்படியும் மற்றவர்களுக்கு Software சரிசெய்தவுடன் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்கள்.

இணையதளத்தில் பாலிடெக்னிக் பாடங்களை வீடியோ வடிவில் பார்க்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் 83 பதிவுகளை வெளியிட்டார்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக் மாணவர்களின் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக பிரித்து வீடியோவாக எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. 

அதில் முதல்கட்டமாக 83 வீடியோக்கள் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். கே.பி.அன்பழகன் இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைத்தார். DOTE, பாலிடெக்னிக் என்று யூடியுப்பில் பதிவு செய்து இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கலாம். நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைகழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,670 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக அந்த தொகை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் சரிபார்த்து இனிமேல் தான் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக அரசுத்தரப்பில் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 

நியாயமான முறையில் எங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்து சேரும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன்  உள்ளனர். ஆகவே தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, சரியான முறையில் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் சின்னம் எங்களுக்கு வந்து சேரும் என்று  நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!